இசுலாமியக் கோட்பாடும் கலாசாரமும் 1500 ஆண்டுகளுக்குமுன் இனக்குழுக்களின் அடிமைச் சமுதாயமாக வாழ்ந்த மக்களின் கலாசாரத்தினை கொண்டவையே. இன்றைக்கும் அது பொருந்தும் என்றோ நபி வழியில் நடக்கவேண்டும் என்றோ சொல்வது அறிவுடைமையாகாது. ஆனாலும் இசுலாமிய பிரச்சாரர்கள் ஆதாரங்களைத் திரித்தும் மறைத்தும் இசுலாம் ஒரு உயர்ந்த கலாச்சாரம் என்று புழுகி வருகின்றனர். முகம்மது நபி உட்பட இசுலாமியர்களுக்கும் அடிமைகளுக்குமான உறவுகளையும் பிரச்சாரர்களின் புழுகுகளையும் இந்நூலில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
சான்றுகளாகத் தரப்பட்டுள்ள நபி மொழிகளில் சில:
புகாரியின் நபிமொழி தொகுப்பு எண்: 2203
ஒரு பேரீச்சை மரத்தை விற்கும்போது அப்பேரீச்ச மரம் காய்த்து தரும் பலன் விற்றவருக்கா. வாங்கியவருக்கா என்று உறுதிசெய்து கொள்ளப்படாமல் விற்கப்பட்டிருந்தால் விற்றவருக்கே கனிகள் சொந்தம் என்று முகம்மது நபி கூறுகிறார்,
அக்கனிகள் போலவே அடிமை பெற்ற குழந்தையும் யாருக்குச் சொந்தம் என முன்கூட்டியே பேசப்படாவிட்டால் விற்றவருக்குச் சொந்தம் என்றும் முகம்மது நபி கூறுகிறார்,
புகாரியின் நபிமொழி தொகுப்பு எண்: 2229:
அபு ஸயீத் அவர்கள் கூறியதாவது.
நான் நபியவர்களிடம் அமர்ந்திருக்கும்போது அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர், அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் நாங்கள் அஸ்ல் செயலைச் செய்யலாமா? என்று கேட்டேன், அதற்கு நபியவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதை செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையில்லை ( அதாவது இதற்கு தடை இல்லை), ஆயினும் அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும், ஏனெனில் உருவாகும் என்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்,
அஸ்ல் என்பது உடவுறவு கொள்ளும் ஆண். கர்ப்பம் உண்டாகாமல் தடுக்க தன் விந்துவை கர்பப்பைக்குள் செலுத்தாமல் வெளியில் வெளியேற்றி விடும் செயலாகும்,
நபி மொழி தொகுப்பு எண்:1870 (புகாரி)
அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்துவடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் இல்லை, ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதினா புனிதமாகும், இதில் யாரேனும் ( மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால் அல்லாஹ்வுடைய மலக்குகளுடைய மற்றும் மக்கள் அனைவருமுடைய சாபம் அவன் மீது ஏற்படும், அவன் செய்த கடமையான வணக்கம் உபரியான வணக்கம் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, முஸ்லீம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே (மற்ற முஸ்லீம்கள் தரும் அடைக்கலத்திற்கு சமமானதாக கருதப்பட வேண்டியதே),,,,, விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்னை விடுதலை செய்த காப்பாளரின் அனுமதியின்றி பிறரை தன் காப்பாளராக ஆக்கிக் கொண்டால் அவன் மீதும் அல்லாஹ்வுடைய. மலக்குகளுடைய, மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகும், அவன் செய்த கடமையான வணக்கம் உபரியான வணக்கம் எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
உட்தலைப்புகள்
1. அடிமைகளும் ஆண்டைகளும்
1.1 சகோதரன் அடிமையான கதை
1.2 பிறப்பாலும் அவன் அடிமையே!
1.3 அடிமையின் பிள்ளை அடிமையா?
சகோதரனா?
1.4 ஆண்டை – அடிமை : தகுதியும்.
தராதரமும்
2. அடிமைகளின் அவலநிலைகள்,
2.1 அடிமை வியாபாரமும் அதன் புனிதமும்
2.2 பெண்ணடிமைகள் ஆண்டைகளின் காமக்
கிழத்திகள்
2.3 சரவணபவன் அண்ணாச்சிக்கு விடியல்
வெள்ளியின் சாம்பார்
2.4 கவிக்கோவின் புதுக்கவிதை
2.5 ஆணடிமையின் பாலுணர்வுக்கு இசுலாம்
காட்டும் வழி என்ன?
2.6 வளர்ப்பு பிராணியிலும் கீழானவர்களே
அடிமைகள்
3. அடிமைப்பெண்களும் பி,ஜே,யின் அற்புத
விளக்கமும்
4. அடிமையும் விடுதலையும்
4.1 அடிமையின் சொத்துக்கு வாரிசு யார்?
5. முகம்மது நபியும் அவரது அடிமைகளும்
5.1 மனைவியா? அடிமையா?
5.2 அடிமை பிலாலும் அவரின் சிறப்புகளும்
5.3 ஸைத் – அடிமையா? வளர்ப்பு மகனா?
6. அன்சாரிகள் ஆழ்வதில் என்ன குறை?
7. தொடரும் அடிமை முறைகள்
7.1 சடங்கின் புனிதம் பல்லக்கிலே மட்டும்
7.2 உள்ளம் உவக்கும் வீர விளையாட்டு
7.3 அரபு நாடுகளில் கூலி அடிமைகள்
7.4 தாலிபான்களின் அப்பழுக்கற்ற இசுலாம்
8. இசுலாமிய சுதந்திரமான பெண் சுதந்திரமா?
அடிமையா?
8.1 இராமனும் முகம்மது நபியும்
8.2 பர்தா – பாதுகாப்புத்திரையா?
அடிமைத்திரையா?
8.3 உழைப்பும் பெண்ணும்
8.4 இசுலாமும் பெண்ணுரிமைப்
போராட்டங்களும்
9. இசுலாமியக் கோட்பாட்டின் வர்கப் பார்வை
9.1 ஏழை. பணக்காரன் – அல்லா விதிக்கும்
தலைவிதி
9.2 உலகம் யாரின் உடமை?
9.3 கம்யூனிசம் தோற்றதாம், இசுலாம்வென்றதா?
9.4 ஸகாத் என்பது பிச்சையே !
9.5 அல்லாவினால் பாதுகாக்கப்பட்ட மதினாவும்
மதினாவின் மக்களும்
10. சமனிலைச் சமுதாயமா? சமனில்லாச்
சமுதாயமா?
10.1 முரண்களும் அப்துல் ரகுமானும்
10.2 முரண்கள் என்றால் என்ன?
10.3 முன்னேற்றமா? மாற்றமா?
10.4 பொருத்தமற்ற எடுத்துக்காட்டுகள்
10.5 அழித்துக்கொண்டு சமன் செய்
10.6 நிறுத்தல் அளவா? சமன் செய்யும்
தத்துவமா?
10.7 செல்வம் யார் கையில் உள்ளது?
10.8 வர்க்க அடிமையும் சாதி அடிமைதான்
10.9 மூலதனத்தின் முகவரி எது?
11. வீறு கொண்டு எழு. உடை. நொறுக்கு
12. பிரச்சாரமும் அதன் தேவையும்
13. சில கடிதங்களும் விளக்கமும்
13.1 விமர்சனக் கடிதங்கள்
13.2 இசுலாமியர்களின் விவாதம் குறித்த
பண்புகள்
மருது பாண்டியர்கள் யார்?
இன்றைய மறு காலனியாக்க சூழ்நிலையில் ஒரு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை நடத்தி சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமையும் வீரமிக்க போர்க்குணமும் இன்று நமக்கு தேவை. இந்த உணர்வை தரும் உந்து சக்தியாக 200 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த மருதிருவரின் காலகட்டம் உள்ளத்தையும். ஆந்த மரபை உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளத்தையும் உணர்ந்தோம். இந்த ஆவணப்படத்தை மையமாக கொண்டு எழுதுபட்டுள்ள மதிப்புரைகள், செய்திகள், விமர்சனங்களை தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவர எண்ணினோம். இந்த வெளியீடு அந்த அவசியத்தை நிறைவேற்றுவதற்காக முயற்சியாகவும் எண்ணுகிறோம்.
மருதிருவர் – தென்னிந்திய புரட்சி 1801 என்ற ஆவணப்படம் குறித்து பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள், விமர்சனங்ளின் தொகுப்பு.
விற்பனையில் இல்லை. தரவிறக்கம் செய்துகொள்ள கீழே சொடுக்கவும்
















NMH writer
மாவோ வின் வரலாறு அறிய
கலகம்
சர்வதேசியவாதிகள்
சூப்பர்லிங்க்ஸ்
செங்கொடி
முகவரி
வினவு! வினைசெய்!!
அடிமை இது அல்லாஹ்வின் ஆணை, அண்மையில் தான் படித்துமுடித்தேன். முதற்பதிப்பைவிட இரண்டாம் பதிப்பை விரிவாகவும், இலகுவாகவும் தெளிவாகவும் அமைத்திருக்கிறீர்கள். குறிப்பாக அப்துல் ரகுமானுக்கு நீங்கள் அளித்திருக்கும் பதில் பல விபரங்களை தொட்டுச்செல்கிறது. இஸ்லாதின் அடிமை முறை விடுதலை என்பது அன்றைய அரேபிய இனங்களான வணிகர்கள் நாடோடிகளில், வணிகர்களின் சார்பில் நாடோடிகளை கவரவும், அடிமைகளை சுரண்டுவதை தக்கவைக்கவும் செய்யப்பட்ட தந்திரமான சதி என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறீர்கள். உங்களுக்கு வந்த கடிதங்களில் எதுவும் நூலின் மையமான இதைப்பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து வேறு தலைப்புகளையும் எடுத்துக்கொண்டு எழுதுங்கள்.
சகோதரன் எனும் சொல்லைப்பற்றிய இன்னொரு குறிப்பு:
முகம்மதுவுக்கு முந்தைய அரேபியாவில் பதவிகள்(பதோயின்கள் அல்லது பதுக்கள்) குழுக்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தனர். இந்த குழுக்களுக்குள் மோதலும் போர்களும் சாதாரணம். இதன் பின்னான காலங்களில் குழுக்களிடையே ஒப்பந்தம் செய்துகொள்வது வழக்கத்திற்கு வருகிறது சில பல குழுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக ஆகினர், இவர்களுக்குள் தாக்கிக்கொள்வதுமில்லை, வெளியிலிருந்து தாக்குதல்கள் வந்தாலும் மொத்தமாக எதிர்கொள்வார்கள். இப்படி இதுபோன்ற அணியிலிருக்கும் அனைவரும் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இஸ்லாம் வந்தபோது சகோதரர்கள் என்ற பதத்தை முழு இஸ்லாமியர்களுக்குமானது என்று பயன்படுத்திக்கொண்டது என்றாலும் இதற்கு உடன்பிறப்பு என்று பொருளில்லை. ஆனால் இன்று மதவாதிகள் அடிமைகளையும் சகோதரர்களாக நடத்திய மதம் என்று தம்பட்டமடித்துக்கொண்டிருக்கின்றனர்.
தோழமையுடன்
செங்கொடி
Don’t be emotional in your arguments. Could you dare to challenge the below article from the brother hamza?
http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html
I really appreciate if you could come up with some logic and intelligence…
For more info: http://hamzatzortzis.blogspot.com/
http://www.facebook.com/h.a.tzortzis
I suggest u to see his debate videos with promenient athesit is UK and US , which will be available in this website.
முஹம்மதின் காலத்தில் அவர் அடிமைகளை கையாண்ட விதம் பற்றி இந்நூல் தெளிவாக விளக்குகிறது. நல்ல முயற்சி. 6ம் நூற்றாண்டில் தோன்றிய முஹம்மது அக்காலத்திற்குரிய சிந்தனையைத்தான் கொண்டிருந்தார் என்று நிறுவியிருப்பது அருமை. இப்புத்தகத்தில், நீங்களே நிறைய கேள்விகள் கேட்டு அதற்கு பதிலுரைத்திருக்கிறீர்கள். அடுத்த முறை இது போன்ற அமைப்பை தவிர்க்கவும்.
போரில் கைப்பற்றப்பட்ட அடிமைகளை வாங்கும் குறிப்பாக பெண்களை வாங்கும் இஸ்லாமியர்கள் அப்பெண்களை மணமுடிக்காமலே அனுபவித்துக்கொள்ளலாம். மணமுடித்தவளுடன் அல்லாது வேறொரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதென்பது விபச்சாரம். விபச்சாரம் ஹராம் என்கிறது இஸ்லாமிய சட்டம். ஆனால் அடிமைகள் எனும்போது சட்டம் வெளிநடப்பு செய்துவிடுகிறது. இதற்கு விளக்கம் கொடுக்கும் இஸ்லாமிய அறிவாளிகள், அடிமையென்றாலும் அவள் பெண்ணில்லையா அவளின் உடல் தேவைகளை பூர்த்திசெய்வதற்குத்தான் இப்படியொரு சட்டம் என்கிறார்கள். தொழிலாளிகளுக்கு வேலைகொடுக்கத்தான் தொழில் முனைகிறோம் என முதலாளிகள் கூறுவது போல அடிமைகளின் உடல் தேவைக்குத்தான் உறவு வைத்துக் கொள்கிறார்களாம். ஆண்டைகள் தங்களுக்கு தேவையானதை எப்பொழுதுதான் நேரடியாகக் கூறியிருக்கிறார்கள்! ஆனால் இதையே ஆண் அடிமைகளுக்குப் இவர்கள் பொருத்துவதில்லை. பெண்ணைவிட ஆணிற்கு உணர்ச்சிகள் அதிகம் என்பதாலேயே பலதார மணத்தை ஆணிற்கு இஸ்லாம் அனுமதிப்பதாக கதைக்கும் இவர்கள், ஆண் அடிமைகளுக்கு இவர்களுடைய பெண்களை மணமுடிக்க அனுமதித்ததில்லை.. அடிமைகள் விஷயத்தில் இதுதான் முஹம்மதின் புரட்சி.
ஆனால் சற்றேறக்குறைய முஹம்மதிற்கு 700 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஸ்பார்ட்டகஸ் எனும் அடிமை தங்களுடைய அடிமைத்தனம் நீங்கிட மிகப் பெரும் ரோமப்பேரரசிற்கு எதிராக கலகம் செய்தவர். மூன்றாம் அடிமைப் போரை தலைமையேற்று நடத்தியவர். தான் வெற்றி பெற்ற இடங்களில் உள்ள அனைத்தையும் பொதுவுடைமையாக்கியவர். இதனாலேயே போரில் ஸ்பார்ட்டகஸ் தோற்கடிக்கப்பட்டாலும் இன்றளவும் இவர் பெயரைக் கேட்டாலே ஆளும் வர்க்கம் அச்சத்துடனே நோக்குகிறது. இவரிடமிருந்து முஹம்மது கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. முஹம்மதிற்கு முன் 700 ஆண்டுகளுக்கு முன் தோன்றினாலும் இவருடைய சிந்தனை பொதுவுடைமைக்கானதாக இருந்தது கவனிக்கத்தக்கது. தன்னுடைய மதம் விரிவடைய பல போர்கள் புரிந்த முஹம்மதினால் அடிமைகளுக்காக அடிமை உலகை எதிர்த்து ஒரு போர் நடத்திட நினைக்கத் தோன்றவில்லை. உடலுறவு கொள்வதைத் தவிர மனிதனுக்கு வேறென்ன தேவையிருக்கிறது என்று கருதியிரிப்பாரோ!
வணக்கம் சாகித்,
உங்களின் “அடிமை அது அல்லாவின் ஆணை” பற்றி நான் அண்மையில் கேள்வி பட்டேன்… அதை வாசிக்க ஆர்வமாக இருகிறேன். நான் தற்போது டில்லியில் வசிக்கிறேன்.. அஞ்சல் மூலமாக நான் அதை பெற முடியுமா? அதற்கான வழி முறைகளை நீங்க கூறுங்கள் தோழரே..
தோழர்களே! இன்று மருது பாண்டியர்கள் யார்? என்கிற உங்கள் வெளியீட்டினை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தேன்,ஆனால் அவற்றின் எழுத்துரு சரியாக காணக்கிடைக்கவில்லை. இந்த வெளியீடு PDF வடிவில் கிடைக்குமா? நன்றி!
I need the book
அடிமை அது அல்லாவின் ஆணை:
Please tell me how do i get it ?
Regards,
Khader.K
I need the book of அடிமை அது அல்லாவின் ஆணை:tell me how to buy it…
nanba