• எமது வெளியீடுகள்

  • பிஜேவின் கனவு

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • வெளியீடு 2

  • Blog Stats

    • 86,449 பார்வைகள்

கூடா நட்பு


எப்போதோ

ஒரு பயனற்ற நேரத்தில்

உன்னுடனான

என்னுடைய பழக்கம்

காட்டுத் தீயாய்

தொற்றிக் கொண்டது,

அப்பாவின்

கடுமையான கண்டிப்பு,

அம்மாவின்

அன்பான அக்கறை,

சகோதரிகளின்                       .

பரிவான வெறுப்பு,

சகோதரிகளின்

இதயம் உரசும் வேண்டுகோள்,

தொடர்ந்து… மனைவியின்

அரவணைப்பு கட்டளை,

 

எல்லாவற்றையும் மீறி

நீ

எனக்குள்

புற்றாய்

இதயத்தினுள் புதைந்த

நங்கூறமாய்…

 

என் இதயத்தை

உன் கரங்கள்

பிசைந்தெடுத்த போதும்.

நிறமாற்றிய போதும்,

வலிவேதனையை தூண்டிய

போதும்

உன் உதடுகளை

முத்தமிடாத இரவுகளில்

நட்சத்திரங்களை

எண்ணிக்கொண்டிருப்பேன்

விடிய விடிய…

 

உன் பற்றிய

வெளிப்படையான உண்மைகளை

ஆதாரத்தோடு

உலகம் வெளிப்படுத்திய போதும்.

அவ்வளவும்

புரளியே என எனக்குள்

இப்போதும்

எப்போதும்,

 

 

இதயக் கதறல்களை,

பிள்ளைகளின் அலறல்களை,

மனைவியின் புலம்பல்களை,

மீறி

புரியாமலும்

புரிந்தும்

என்னால்

புகை பழக்கத்தை

விட்டுவிட முடியும்…?

 

  – கோட்டக்குப்பம் அஜ்மல்.ஜி.

Advertisements

2 பதில்கள்

  1. கண்டிப்பாக முடியும்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில் :
    “நீங்க மரமாக போறீங்க…”

  2. உனக்காக நிரந்தர அலறல் உனது உறவு மூலம் வருவதை நீ விரும்பினால் அதை நீ தொடரலாம் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: