பறையோசை

எம்மைப்பற்றிச் சில வரிகள்
பறையோசைப் பதிப்பகம்

தனி ஒருவரின் உடைமையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நாங்கள் ஒரு குழுவாக இயங்குபவர்கள். சமூக மாற்றத்திற்கான நல்ல நூல்களை வெளியிடவேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.
எங்கள் பதிப்பகத்திற்கான விளம்பரத் தளமாக இந்த பறையோசை இடுக்கை தொடங்கப்பட்டாலும் அதற்கு அப்பாற்பட்டு பல நல்ல செய்திகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் இவ்விடுக்கைகுள் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளோம்.
குட்டி முதாலாளித்துவம், நடுத்தர பொருளாதார குடும்பப் பின்னணியிலிருந்து மார்க்ஸிய கோட்பாட்டாளராக மாற்றம் பெற்றவர்கள் நாங்கள் என்பதால் இப்பின்னணியினரின் சிந்தனை மற்றும் நடைமுறையிலிருந்து மார்க்ஸிய கோட்பாட்டிற்கு இம் மக்களை வளர்த்தெடுப்பதற்கும், தொழிலாளர் வர்கம் இப்பின்னணியினரின் பொய் பித்தலாட்டங்களில் மயங்கிடுவதைத் தடுப்பதற்கும் எங்களை இப்பூவலைக்குள் இணைத்துக் கொண்டுள்ளோம்.
நாங்கள் மார்க்ஸிய கோட்பாட்டாளராக, நாத்திகர்களாக இருந்தாலும் எதிர் கருத்துள்ளவர்களும் தங்கள் கருத்துக்களை எழுத, விமர்சிக்க, அதன் மூலம் பலரும் கருத்தாய்வுகள் செய்ய ஏற்றவாறு இவ்வலைத்தளத்தை இயக்க விருப்பப்பட்டுள்ளோம்.
எனவே நண்பர்களே! தோழர்களே! உங்களின் கருத்துக்களை கட்டுரையாக, கவிதைகளாக, ஓவியங்களாக, பாடங்களாக, ஒலி – ஒளி வடிவங்களாக எவ்வகை வடிவங்களிலும் எழுதலாம். உங்களின் எழுத்துக்கள் நாகரீகமாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே எங்களது வேண்டுகோள். எழுத்துப் பழக்கம், முறைப்படுத்தி விவரம் தரும் பழக்கம் இல்லாதவர்களும் இதில் எழுதலாம். அதனை தங்களின் அனுமதியுடன் சிற்சிலத் திருத்தங்கள் செய்து பதிவு செய்கிறோம். அதன் மூலம் கிடைக்கும் விமர்சனங்களின் ஊடாக உங்களை நீங்களே நல்ல எழுத்தாளராக, சிந்தனையாளராக வளர்த்துக் கொள்ளலாம்.
வலைத்தளத்திற்குள் விமர்சனம் செய்ய வசதியற்றோர் அல்லது தட்டச்சு செய்வதில் பழக்கமற்றவர்கள் கடிதமாக எங்களுக்கு எழுதியனுப்புங்கள். நாங்கள் தட்டச்சு செய்து பதிவு செய்கிறோம்.
நன்றி!
இவண்,
பதிப்பகக் குழு.

எமது முகவரி:
பறையோசைப் பதிப்பகம்,
1/171, கடை வீதி,

பி.அழகாபுரி

கீழச்செவல்பட்டி, 630 205
சிவகங்கை மாவட்டம்,
தமிழ் நாடு.
இந்தியா.
மின்னஞ்சல்: paraiyoasai@gmail.com
அலைபேசி : 94879 85126.

Advertisements

15 thoughts on “எம்மைப்பற்றிச்சிலவரிகள்

 1. சபாஷ், வினவு தளத்த உங்க தோழர் இல்லைங்கறத நிரூபிக்கும் வகையில் உங்கள் புரட்சித்தளங்கள் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பது பாராட்டத்தக்கது.

 2. மூன்று கேள்விக‌ள்

  மனிதனையும் அண்ட சராசரத்தையும் கடவுள் படைத்தானென்றால், ஏன் இதனை படைத்தான்?
  இத்தனை‌யும் ப‌டைக்கும் முன்ன‌ர், அவ‌ன் என்ன‌தான் செய்தான்? திடீரென்று இந்த‌ ப‌டைக்கும் சிந்த‌னை எத‌ற்கு தோன்றிற்று?
  இத‌ற்கும் மேலாக, இத்தனையும் செய்வ‌த‌ற்கு ஆற்றல் வ‌ல்ல‌ க‌ட‌வுளை ப‌டைத்த‌து யார்?

 3. schoolboy, மேல் அக்டோபர்22, 2010 இல் 5:47 மாலை சொன்னார்:
  வாங்க சாகித் உங்க செங்கொடி ரிலேடிவிடி பத்தி பேசும்போது எங்க போயிருந்தீங்க……….படம் போட்டு விளக்குனது யாரு? வாயில வட சுட்டு தந்தது யாரு? அட அத வுடுமையா எதையும் பகுத்து அறியும் சாகித்தே நீ தயரா?

  //அல்லா இருக்கிறார், ஆனால் நான் நிருபிக்க மாட்டேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள்தான் நிறுபிக்க வேண்டும்// வாருங்கள்…………..!!!!சிகப்பு கலர்ல துண்டு கட்டிட்டு கொட்டு அடிச்சா பெரிய ________________ “ஆ”…………..வாரும் தாங்களாவுது வாய் பேச்சு பேசாமல் அறிவியல் பூர்வமான எழுத்து விவாதத்துக்கு விவாதத்துக்கு வாரும் இல்லை மூடிக்கொண்டு இரும்……

  schoolboy, மேல் அக்டோபர்25, 2010 இல் 6:19 AM சொன்னார்:
  இடுப்பில் சிகப்பு துண்டை கட்டி கொண்டு பறை அடிக்கும் உழைக்கும் வர்கம் சாகித்தே என் சவாலுக்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்.

  1. அய்யா ஸ்கூல்பாய் அவர்களே,
   தாங்கள் சார்பியல் கொள்கையை எல்லாம் கரைத்து குடித்தவர் என்பதால் தங்களை ஸ்கூல்பாய் என்று அழைக்க என்மனம் இடம் தரவில்லை. அதனால் யுனிவர்சிட்டிபாய் என்றே அழக்கிறேன். சார்பியல் பற்றி பாடம் எடுக்கவேண்டிய ஒன்றுக்கு வெற்மனே சின்ன சின்னதாக விவாதிக்க எனக்கு நேரமில்லை. பயந்துவிட்டேன், மலுப்புகிறேன் என்றெல்லாம் கூட வைத்துக்கொள்ளலாம். நீங்களே அறிவாளி என்றும் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் பின் வரும் கேள்விக்கு பதில தாருங்கள். முடிந்த அளவுக்கு தொடராக இக்கேள்வி குறித்து விவாதிக்கலாம்.
   என் கேள்வி….
   முகம்மதுநபி மிஹ்ராஜ் பயணம் சென்று அல்லாவை சந்தித்தாரா?

 4. சாஹித்,
  கலக்குறீங்க போங்க , வாழ்த்துக்கள்.!!
  நான் தற்போது நாத்திகன் மட்டுமே …. கம்யூனிஸ்ட் அல்ல.
  எனக்கு கட்டமைக்கப்பட்ட எந்த கொள்கைகளின் மீதும் நம்பிக்கையோ, எதிர்பார்ப்போ இல்லை.
  ஒரு கருத்து கட்டமைக்கபட்டாலே அது பாசிச தன்மையை உள்வாங்கும் என்பது என் எண்ணம்.
  தங்கள் படைப்புகளை குறிப்பாக இஸ்லாம் தொடர்பான புத்தகம் வாங்க வழி சொல்லுங்கள்.

  நன்றி ,
  காதர்.

 5. மன்னிக்கவும் பரயோசை ,
  இது
  பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை
  இந்த கட்டுரைக்கு நான் போட வேண்டிய கமெண்ட் !!

  முகவரி கொடுத்ததற்கு நன்றி !!!

 6. அறிவியல் – தூய அறிவு முன்னால் காய்தல் உவத்தலில்லை. எல்லோரும் சமம் ஒரு நிறை. அங்கே கட்சியில்லை நற் காட்சியுண்டு. நற் விசாரத்தறியுமறிவுண்டு.

 7. ஹலோ ஸ்கூல்பாய்,

  என்ன ஆளையே காணோம் , ஸ்கூலுக்கு போயிடிங்களா?
  சாஹித் கேட்ட கேள்விக்கு மூச்சு பேச்சையே காணோம் ?
  இது கேள்வி :::
  முகம்மதுநபி மிஹ்ராஜ் பயணம் சென்று அல்லாவை சந்தித்தாரா?

  வேறு யாரேனும் முஹம்மத் மற்றும் அவர் கடவுள் அல்லாஹ்வின் ஆதவாளர்கள் இங்கு வந்து பதில் தரலாம்.

  காதர் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s