நான் கடவுள்

என் பெயர் ஜியாங்போ ரியோ.

மானிடனே கேள். நான் உன்னைப் படைத்தவன்.நானே உன் இறைவன்

கருப்பன்      : நீ கடவுளா? வாயால் சிரிப்பதா அல்லது வேறு எதனாலுமா?

நான்         : ஏன்? என்னை உன்னுடைய கடவுள் என்று நம்பமாட்டாயா?

கருப்பன்     : என்னைப்போல சாதாரண மனிதனாக உள்ள உன்னை எப்படி கடவுள் என்று நம்ப முடியும்?

நான்         : சாதாரண மனிதனாக இல்லாமல் நான் வேறு எப்படி இருக்க வேண்டும்?

கருப்பன் : ஒலியாக, அல்லது ஒளியாக, ஏதோ ஒரு மாபெரும் சக்தியாக, கண்ணுக்குப புலனாகாத சூன்யமாக எப்படியானாலும் உருவமற்றவனாக இருக்கவேண்டும்.

நான் : எல்லாம் வல்ல இறைவனான நான் மனித உருவில் வந்துள்ளதாக நம்பமாட்டாயா?

கருப்பன்     : முடியாது! காரண காரிய விதிகள் எதுவரை எனக்கு தெரிகிறதோ அதனை நான் கடவுள் என்று நம்பமாட்டேன். என் அறிவுக்கு எட்டாத ஒன்றை மட்டுமே நான் கடவுளாக ஏற்றுக்கொள்வேன். அதுவும் ஒன்றே ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.

நான்        : மானிடா! நான் உனக்கு கொடுத்துள்ள வேதத்தைக்கொண்டு என்னைக் கடவுள் என்று நம்பமாட்டாயா?

கருப்பன்     : உன்னுடைய வேதமா? அது எப்படி இருக்கும்? நான்கோ ஐந்தோ வேதம் இருக்குன்னு சொல்லுவாங்க. உன்னுடைய வேதம் வேறு தனியாக உள்ளதா?

நான் : ஆமாம். ஆனாலும் அவைகளும் பல பகுதிகளுக்காக நான் அனுப்பிய வேதங்களே.

கருப்பன் : அப்படின்னா அதுதான் எற்கனவே இங்கே இருக்கத்தானே செய்கிறது. அப்புறம் எதுக்கு புதுசா ஒண்ணு?

நான் : அவைகளை ஆளுக்கு ஆள் திருத்திக் கொண்டு காளைக் கன்றையும், உருவங்களையும் கடவுளாக்கி விட்டார்கள். எனக்கு மகனென்றும் திருத்திவிட்டார்கள்.

கருப்பன்   : 50, 100 வருடத்திற்கப்புறம் இதையும்தான் திருத்திவிடப் போகிறார்கள். அதுக்கு ஏன் புதுசா ஒண்ண கொண்டு வந்து மல்லுகட்டுற?

நான்        : இதனை நான் பாதுகாக்கிறேன். யாரும் இதனை மாற்ற முடியாது.

கருப்பன்     : அவைகளையும் நீ பாதுகாத்திருக்கலாம் இல்லையா? இப்படி ஆளு ஆளுக்கு திருத்திக்கொண்டு என் கடவுள்தான் உன்மையான கடவுள் என்று ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு அநியாயமாக செத்துப்போயிருக்க மாட்டார்களே!

நான்        : விதண்டா விவாதம் செய்யாதே. விவாதத்தின் திசையை மாற்றாதே.

கருப்பன்     : நான் எங்கே திசைத்திருப்பினேன்? நீதானை பாதுகாக்கிறேன் அது இதுன்னு புருடாவிட்டாய்.

நான் : என்னிடம் விவாதம் செய்ய பயப்படுகிறாய். அதனால் திசை திருப்புகிறாய். நேரிலே விவாதத்திற்கு வர நீ தயாரா? அப்பொழுதுதான் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.

கருப்பன் : கோடிக்கணக்கான ரூபாய்க்கு இங்க மோசடியா பண்ணுறோம். ஒப்பந்தமெல்லாம் இருக்கட்டும். ஒரு புத்தகத்தைக் கொடுத்து இதுதான் உன்னுடைய வேதம் என்று நீ சொன்னா நான் நம்பனுமா? அது சரி. அதுல என்னதான் எழுதிவைச்சிருக்கே?

நான்       : மலைகளைப்போன்று கடலில் உயர்ந்து செல்லும் கப்பல்கள் எனக்கே உரியன. இதனை எவ்வாறு நீ பொய்யாக்குவாய்? அல்லது இதுபோல ஒரு வசனத்தையாவது உன்னால் கூறமுடியுமா?

கருப்பன் : என்ன சொன்னே? என்ன சொன்னே? எங்கே மறுபடியும் சொல்லு?

நான் : காது செவிடா உனக்கு. சரி மறுபடியும் சொல்றேன். கவனமா கேள். மலைகளைப்போன்று கடலில் உயர்ந்து செல்லும் கப்பல்கள் எனக்கே உரியன. இதனை எவ்வாறு நீ பொய்யாக்குவாய்? அல்லது

இதுபோல ஒரு வசனத்தையாவது உன்னால் கூறமுடியுமா?

கருப்பன் : கப்பல்களுக்கெல்லாம் கிளினடன், அம்பானி என்று வேறு வேறு முதலாளிகள் இருக்கிறார்கள் என்றுதானே கேள்விப்பட்டேன். நீ என்னடான்னா உனக்கு உரியது எனகிறாயே? அப்போ உன் வீட்டுக்கு பெட்டி பெட்டியா பணம் வரும்முன்னு சொல்லு.

நான்        : ஹஹ்ஹஹ்ஹா………   அப்பனே! நான் எந்த தேவையும் அற்றவன்.

கருப்பன்     : சோறு கூடவா?

நான்         : ஆமாம்.

கருப்பன் : அப்ப பொண்டாட்டி பிள்ளைங்க?

நான் : எதுவும் தேவை இல்லை. தேவை உள்ளவன் கடவுளாக இருக்க முடியாது நான் கூறியதை விளங்கிக் கொள்ளும் அறிவும் உனக்கு இல்லை.சிறந்த இலக்கிமான, கவித்துவமான எனது வேதத்தின் வரிகளை புரிந்துகொள்ள முடிவில்லையா?

கருப்பன்      : அய்யோ! குழப்புறியே! புரியம்படி தெளிவாச் சொல்லு.

தருமன்     : நான் சொல்றேன். “மலை போன்ற இவ்வளவு பெரிய கப்பலை கடலில் மிதக்கச் செய்தது அவனுடைய ஆற்றலால்” எனபதுதான் அதன் பொருள். அதனைக்கொண்டு முதலாளிகள் டாலர்களை பையில் நிரப்பிக்கொண்டாலும் அந்த ஆற்றலின் அற்புதத்திற்கு உரியவன் கடவுளே.

கருப்பன்     : நீ யாருப்பா? இடையில் வந்து ஒத்து ஊதுரது?

தருமன்      : நான் வேதத்தை விளங்கிக்கொண்டு புரியாத மடமைகளுக்கு விளக்கிச் சொல்லுபவன்.

கருப்பன்     : சரி. கப்பல் உனது அற்புதம். அதில் நான் என்னத்தை பொய்யாக்கனும்?

தருமன்      : அதெல்லாம் அவர் சொல்லமாட்டார். நீதான் பொய்யாக்கனும்.

கருப்பன்     : அதான் என்னத்தை பொய்யாக்கனும்னு கேட்கிறேன்.

தருமன்      : உனக்குத்தான் இதயத்தை படைத்து சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்துள்ளானே. அதனைக்கொண்டு சிந்தித்துப்பார். அதுமட்டுமல்ல. மழையைப் பெய்வித்து இறந்து கிடக்கும் விதையை முளைப்பித்து இந்த உலகில் உள்ள  அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கிறான்.

ஒரு துளி விந்துவில் உனது உயிரை அடக்கி உன்னை படைத்தான்.

இதில் எதை நீ பொய்யாக்குவாய்?

கருப்பன்      : இதில் என்னயா இருக்கு. நான் கூட இந்த மலையைப் படைத்தவன் நான் என்று ஒரு புத்தகத்தில் எழுதிக் காட்டமுடியுமே. அதை நீ பொய்யாக்கு பார்ப்போம் என்று சொன்னால் நீ என்ன செய்வாய்?

நகுலன்       : அய்யா! தருமன் சொன்னதில் தவறு உள்ளது. அதனால்தான் கருப்பனுக்கு புரியவில்லை. கடலில் மலைகளைப்போல் ஓங்கி உயர்ந்து ஓடும் கப்பல்கள் அவனுக்கே உரியன. இந்த அருட்கொடையில் எதனை பொய்யென கருதுகிறாய் என்றுதான கேட்கனும்.

நான்         : பார்த்தாயா? சரியா சொல்லறதுக்கு அடுத்து ஆளை அனுப்பிட்டேன். இப்போ சொல்லு. அது என்னுடையதுன்னு நான் சொன்னது பொய்யா?

கருப்பன்      : அப்போ கிளின்டன், அம்பானி எல்லாம்……

மிஸ்டர் கிரியோ: தமிழில் மொழி பெயர்ப்பவர்கள் சரி இல்லை.

நான்           : பார்த்தாயா இங்கிலீசுல ஆளனுப்பிட்டேன்.

கருப்பன் : மிஸ்டர் கிரியோ, தமிழில் மொழி பெயர்ப்பவர்கள் சரி இல்லை என்று எப்படிச் சொல்றீங்க?

மிஸ்டர் கிரியோ: அதல்லாம் தெரியாது. ஆனால் அது சரி இல்லை. அதெல்லாம் நான் படிக்க மாட்டேன்.

கருப்பன்        : சரி இங்கிலீஸ்காரன் என்னதான் சொல்றான்?

மிஸ்டர் கிரியோ: And His are the Ships sailing smoothly through the seas, lofty as mountains:

Then which of the favours of your Lord will ye deny? (by – Yousuf ali)

(மேலும் இருவரின் மொழிபெயர்ப்புகள் கீழே தரப்பட்டுள்ளது)

கருப்பன்        : அப்படின்னா என்ன அர்த்தம்?

மிஸ்டர் கிரியோ: தமிழ்ல எல்லாம் எனக்கு தெரியாது. தமிழ்ல சொன்னா தப்பா போய்விடும். அதனால இங்கிலீஸ்லதான் நீ புரிச்சிக்கனும்.

கருப்பன்        : எனக்கு இங்கிலீஸ் தெரியாதே.

மிஸ்டர் கிரியோ: அப்போ நீ முட்டாள். நீ எதனையும் புரிந்துகொண்டு திருந்தமாட்டாய். உன்னுடன் விவாதம் பண்ணமுடியாது. உனக்கு நரகம்தான்

கருப்பன்   : கொஞ்சம்விட்டா, அரபுல தான் படிச்சு புரிஞ்சிக்கனும்னு சொல்லுவபோல.

தருமனும்

நகுலனும் : ஹலோ மிஸ்டர் கிரியோ. தமிழ்ல மொழி பெயர்த்த எங்களை எல்லாம் முட்டாள்கள்னு சொல்றியா?

மிஸ்டர் கிரியோ: ஹி..ஹி..ஹி அப்படி சொல்லல. சரியா புரிஞ்சிக்கலேன்னு சொல்ல வர்ரேன்.

தருமன்         : ஏம்பா. நகுலன், என் மொழிபெயர்ப்பு தப்புங்றமாதிரி நீ புதுசா இல்லாததைச் சொல்ற.

நகுலன்         : ஆமாம். காலம் மாறும் போது அறிவியல் வளர்ச்சிக்கு ஏத்தமாதிரி மாத்திக்கிறனும்ல. அப்பத்தானே நம்மல மதிப்பாங்க.

நான்            : ஏய். இருங்கப்பா. நீங்களுவ ஆளுக்காளு அடிச்சிக்கிட்டு எனக்கு வில்லங்கமா ஆக்கிருவீங்க போலிருக்கே. கருப்பா! என் வேத புத்தகத்தை யாராலும் மாற்றமுடியாது.

கருப்பன் : சரி நீ யே சொல்லு.

நான்           : நீயாகவே சொல்லிவிட்டாய் உன்னுடையது புத்தகம் என்று. என்னுடையது புனிதமான வேத நூல். ஆனாலும் நீ எப்படிச் சொன்னால் எங்கே நீ அதை மீண்டும் படைத்துக்காட்டு என்றுதான கேட்பேன். அல்லது அதற்கு விஞ்ஞான விளக்கத்தை கேட்பேன்.

அதுவும் என் வேத புத்தகத்தில் இருக்கவேண்டும்.

கருப்பன்     : ஆங்.. வந்துட்ட வழிக்கு. அதையேதான் நானும் கேட்கிறேன். எங்கே நீதான் மீண்டும் ஒரு மலையைப் படைத்துக்காட்டேன்.

நான        : குருடனை பார்க்கவைத்தது, முடவனை நடக்கவைத்தது போன்ற வித்தைகளெல்லாம் எல்லாம் அப்பொழுதே செய்துகாட்டியாச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட அதான் 1400 வருடத்திற்கு முன்னாடிப்பா. சந்திரனைப் பிளந்தது, சூரியனை மறையவிடாமல் தடுத்தது, குதிரையின் கால்களை, மணலை புடிக்கச் சொல்லி ஓடவிடாமல் தடுத்தது, ஒரு ஆட்டில் கறந்த ஒரு செம்பு பாலை நூறுபேருக்குமேல் குடித்தது என்று அப்பப்போ செய்து காட்டியாச்சு. இனி அந்த வித்தையெல்லாம் செய்யமுடியாது.

கருப்பன் : நான் சொன்னா செய்துகாட்டுன்னு சொல்ரே. நீ சொன்னதே கண்ணை மூடிக்கிட்டு நம்பச் சொல்ற.

நான்         : மானிடா! நீ வீண்தர்க்கம் செய்கிறாய். ஆனாலும் நீ தர்க்கம் செய்யத்தான் செய்வாய். மனிதனை தர்க்கம் செய்பவனாகவே படைத்துள்ளேன்.

கருப்பன்      : தர்க்கம் செய்பவனாகவத்தானே படைத்துள்ளாய். பிறகு வீண் தர்க்கம் செய்வதாக என்னை குற்றம் சொல்கிறாயே!

நான் : நீ விதண்டா விவாதம் பண்ணுகிறாய் மானிடா.

கருப்பன்      : என்னய்யா இது! நீ சொல்றதுக்கு காரண காரியத்தைக் கேட்டால் வீண் தர்க்கம் செய்கிறேன் என்று சொல்ற. நீ சொன்னதை வச்சிகிட்டு உன்னால்தானே நான் தர்க்கம் செய்றேன்னு சொன்னா விதண்டாவிவாதம் செய்கிறேன் எனகிறாய். எப்படித்தான் விவாதம் பண்ணனும் எனகிறாய்?

நான்         : நான் உனக்கு சிந்திக்கும் ஆற்றலை கொடுத்துள்ளேன். அதனைக்கொண்டு சிந்தித்துப்பார்.

( அங்கிருந்த இருவர் தமக்குள் பேசிக்கொள்கின்றனர். “ஞ்சே. இங்க பாருஞ்சே. மப்பு இறங்கிப் போச்சு. இவங்க இரண்டு பேரும் பேசிக்கிறத கேட்கனும்னா மறுபடியும் ஆஃப் ஏத்திக்கினாதா இதை கேட்கலாஞ்சே”. டாஸ்மாக் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.)

கருப்பன்     : அய்யா இனிமேல் நான் கேள்வியே கேட்கல. வேறு என்னதான் உன் வேத புத்தகத்தில இருக்கு என்று சொல் கேட்போம்.

நான்         : இந்த உலகத்தை ஆறு நாட்களில் படைத்தேன். அதனை பரிபாலிப்பவனும் நானே.

தருமன்      : ஆமாம்! அவன் வல்லமை மிக்கவன்.!

நான்         : குன் என்று சொன்னால் போதும். எல்லாம் நொடிப்பொழுதில் எல்லாம் உண்டாகிவிடும்.

நகுலன்      : ஆமாம்! அவன் அனைத்தையும் மிகைத்தவன்!

நான்         : களிமண்ணில் மழையைப் பெய்வித்து பக்குவமாக பிசைந்து மனி உருவத்தை செய்தேன். அதனை சூளைபோட்டு, தட்டினால் சத்தம் வரும் பக்குவத்திற்கு வேகவைத்து பிறகு உயிர் கொடுத்தேன்.

தருமன்      : ஆமாம்! அவன் கருணையாளன்!

கருப்பன்     : அது ஏன் சாமி இவ்வளவு வேலை. குன்” ன்னு சொன்னாதா போதும்ல. (மனதுக்குள்.. அய்யோ! கேள்வியே கேட்கக்கூடாதுன்னு இருந்தாலும் இருக்க முடியலயே.)

நான்         : எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்தாலும் நீ திருந்த மாட்டாய். ஏனெனில் உன் இதயத்தை சுருக்கிவிட்டேன். உன்னை படைக்கும்போதே எனது கரும்பலகையில் நீ திருந்த மாட்டாய் என்று எழுதிவிட்டேன். என் விருப்பமில்லாமல் நீ திருந்த முடியாது.

கருப்பன்     : அப்புறம் எதுக்கு என்னோட விவாதம் பண்ண்னும்? வேத புத்தகமும் அத்தாட்சிகளும் எதுக்கு?

நான்         : நீ திருந்துகிறாயா இல்லையா என்று சோதிப்பதற்குத்தான்.

கருப்பன்     : கரும்பலகையில திருத்திவிட்டு என் இதயத்திற்கு திருந்த கட்டளை இடு அப்பொழுதுதானே திருந்த முடியும்.

நான்         : அது முடியாது. நீ மனம் திருந்தி கெஞ்சிக் கேட்டுக் கொண்டால்தான் கரும்பலகையில் திருத்துவேன்.

கருப்பன்     : போச்சுடா. பழையபடி ஆரம்பிச்சுட்டியா? ஆளை விடு சாமி. நான் ஓடிடுறேன்.

நான்        : கருப்பா! பயந்துகொண்டு ஓடாதே. நேரடி விவாததிற்கு வருகிறாயா? உனக்காக ஒப்பந்தம் எல்லாம் வைத்துள்ளேன். ஓடாதே கருப்பா ஓடாதே.

ஹாஹாஹா. வெற்றி! வெற்றி!! மாபெரும் வெற்றி!!!

குர்ஆன் வசனம்: 55.24
Maulvi Sher Ali (ra) : And His are the lofty ships reared aloft on the sea like mountains.

Which, then, of the favours of your Lord will you twain deny?

YUSUFALI                  : And His are the Ships sailing smoothly through the seas, lofty as mountains:

Then which of the favours of your Lord will ye deny?

PICKTHAL                  : His are the ships displayed upon the sea, like banners.

Which is it, of the favours of your Lord, that ye deny?

SHAKIR                      : And His are the ships reared aloft in the sea like mountains.

Which then of the bounties of your Lord will you deny?

மறுமொழிகள்

One thought on “நான் கடவுள்

 1. சாஹித் பாய் ,
  செம்ம கலக்கல் !!!

  மொழி பெயர்ப்பு என்ற பெயரில் சாதாரண மனிதனின் வாயை அடைக்கும் வேலை !!
  இது அரபியில் தெளிவாக உள்ளது , மொழி பெயர்ப்பு தான் குழப்புகிறது.
  அப்படி இப்படின்னு சொல்லி முடிவிலே நம்ம தலையிலே மொளக அரக்கிறாங்க !
  தமிழ் அல்லது வேறு மொழி பெயர்ப்பு சரி இல்லனா பின்ன ஏன்டா அனுமதி கொடுக்குறீங்க?
  குரானை பாதுகாக்கிறேன் அப்டீன்ன்ன முதல்ல பீஜெ , பிக்தால் கிட்ட இருந்து பாதுகாத்து இருக்கணும் என்ன அவனுங்க தான் முரண் படுரானுங்க , அர்த்தத்தை மாத்துறாங்க !!

  ////இதில் என்னயா இருக்கு. நான் கூட இந்த மலையைப் படைத்தவன் நான் என்று ஒரு புத்தகத்தில் எழுதிக் காட்டமுடியுமே. அதை நீ பொய்யாக்கு பார்ப்போம் என்று சொன்னால் நீ என்ன செய்வாய்?////
  சிந்திக்க வேண்டிய கேள்வி , ஏன்னென்றால் எவனுமே நிருபிக்கலே, எல்லாரும் ஏற்கனவே எழுதின பேபர் தான் காட்றான் !!

  லவ்ஹுள் மக்பூல் மாற்றப்படாதவரை எவனுமே ஈமான் கொள்ள மாட்டான் .
  அப்போ முதல்ல அல்லா தான் மாறனும் , அதை திருத்தனும்.
  பிறகு நாம மாறலாம் !!

  இன்ஷா அல்லாஹ் !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s