நீ எதுக்குடா படிக்க வர்ர்ரெ……………..

எட்டாம் வகுப்பில் பெரும் முயற்சி எடுத்து ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்திருக்கிற புதிய மாணவன் நான். படிப்பில் அறிவாளியாக இல்லாவிட்டாலும் மற்றவிசயங்களிலும் சுமார்தான். சுருக்கமாக சொன்னால் ஆசை, பேராசை, பொறாமை, அதை அடைய முன்முயற்சி இல்லாதவன் ஆனால் தான்தோன்றியில்லை.

வகுப்பறையில் முதல் வரிசையில் உட்கார்ந்தால் வாத்தியார் பாடம் நடத்தும் பொழுது அவரை பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தால் கேள்விகேட்பார் “போர்டில் எழுதசொல்வார். பேந்தபேந்த முழிக்க வேண்டியருக்கும் .கடைசி வரிசை ரெம்ப மோசம். மத்தியில் உட்கார்ந்தால் ஓரளவு பாதுகாப்பு இருப்பதால் கதவு திறப்பதற்கு முன்பே காத்திருந்து இடம் பிடித்து கொணடேன்     பள்ளி திறந்த முதல்நாள் என்பதால் என்னைச் சேர்த்து ஒருசில மாணவர்களே சீருடையில் வந்திருந்தனர்

எனக்கு பள்ளி சீருடையே புதிய துணிமனியாக அமைந்துவிட்டது. ஒரு கால் ஏற்றியும் இறக்கியும் தையல்காரன் தைத்தது அப்போது எனக்குத் தெரியவில்லை சகமாணவன் கேலிசேய்த பிறகு தான் கவனித்தேன். தையல்காரனிடம் கேடடபோது நீ வளருவேயில்ல என்று சமாளித்தான்.

வகுப்பு ஆசிரியர் அறைக்குள் வந்தவுடன் மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்றனர். ஆசிரியர் சைகையால் எங்களை உட்காரசொன்னார். மாணவர்களின் வருகை பதிவேட்டிலுள்ள மாணவர்களின் பெயரை வாசித்தார். மாணவன் எழுந்து நின்றதும். தான் முன்பு படித்த பள்ளியின் பெயர். படிப்பின் நிலை. திறமை. ஆர்வம் கேட்டுக்கொணடே வந்தார். என்முறை வந்தது என் பெயரில் சில மாணவர்கள் இருந்தனர்.

சார். எனக்கு ஒரே அம்மா. அப்பா சார். நான் சிறுவனாக இருக்கும் போது அப்பா இறந்துட்டார் ’கூடப்பிறந்தது ஒரே அக்கா. சுமாராக படிப்பேன் சார் எனறேன். வகுப்பு லீடராக சக ஆசிரியர் மகனை நியமித்தார். அந்த லீடரோ நல்ல அழகாய் கலராய் இருந்தான் எல்லோரையும் அடக்கி ஆண்டான். அடங்காதவர்களை ஆசிரியரிடம் போட்டுக்குடுத்தான். என்னை அவனுக்கு கடைசி வரைக்கும் பிடிக்கவேயில்லை.

என் வீட்டிற்கும் பள்ளிகூடத்திற்கும் வெகுதுர்ரம் என்பதாலும். குண்டு அடிக்க. பம்பரம் சுத்த ஆர்வம் இருப்பதாலும். என் அம்மாவும் என்னை பள்ளியில் சேர்த்த ஆச்சியும். பள்ளியிலுள்ள இலவச விடுதியில் (ஆர்ப்பனேஜ்) தள்ளிவிட்டனர். என்அம்மாவுக்கு போதிய வருவாய் இல்லாததாலும். என் அம்மா வேலை செய்யும் முதலாளியம்மாவின் அம்மாவான ஆச்சி புகழ் பெற்ற அந்த உயர்நிலைப்பள்ளியில் என்னை சேர்க்க பட்ட கஸ்டத்தையும் நினைத்து விடுதியில் தங்கி படித்தேன்.

ஆச்சி அடிக்கடி சொல்லும, “டேய், பிள்ளையாரு!! ஒன்னய, இந்த பள்ளியில சேர்க்க பெரிய பெரிய துரைமார்களின் கைலகால்ல விழுந்து சேர்க்கிறேன்டா! நல்லா படிக்கனும்டா! ஒங்கம்மா, பாவம்டா! ஒங்கப்பன் ரெம்ப நல்லவனடா!! ஒங்கப்பனும் கொய்யாவும் போய் சேர்ந்திட்டங்க ஆச்சி கண்கலங்கும். நல்லா படிக்கிறேன் ஆச்சி என்பேன். பள்ளி விடுமுறை நாட்களில் ஆச்சி வீட்டுக்கு போகும் போது நல்லா படிக்கிறேன் எனபேன். ஆச்சியின் கணவர் அய்யாவும் என் அப்பாவும் இனை பிரியா நண்பர்கள். ஆச்சியின் கணவர் பெயரே என் பெயரும் இருப்பதால், கணவர் பெயரைச் சொல்லக் கூடாதுன்னு, பிள்ளையாரு!! பிள்ளையாறுன்னு ராகம் போடும்.

ஆச்சி கணவர் தமிழ் சைவபிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர், என் அப்பவோ ஆதிதிராவிட தமிழ் பறையர் வகுப்பைச் சேர்ந்தவர், எப்படி நண்பர்களாயினர் எனறு யோசிப்பதுண்டு, தன் நண்பர் பெயரை எனக்கு வைத்து விட்டாரா என நினைத்ததுண்டு.

பள்ளி இறுதித்தேர்வு முடிந்து தேர்ச்சி அறிக்கை வந்தது. என்னால் ஆச்சிக்கு பெயர் வாங்கித் தர முடியவில்லை. என்னை சேர்த்து பன்னிரெண்டு பேர் தேர்ச்சி பெறவில்லை. வகுப்பு ஆசிரியிடம் டீயுசன் படித்த மக்கு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். சகமாணவன் சொன்னான். ”டேய் வாத்தியார்கிட்ட் டீயுசன் படிச்சிருந்தா?? நாமளும் பாஸாயிருப் போம்ல்டா?,,…ஆங்கில வாத்தியார் என்னைப் பார்த்து அடிக்கடி சொல்வார்,”நீ எதுக்குடா படிக்க வர்ர்ர்ர”, “பேசாம எறுமைமாடு மேய்க்க போடா”.ன்னு. அவர்கிட்டே டீயுசன் படிக்காத்தனால் உளர்ராரு”.ன்னு அப்போ நெனச்ச்சேன்.

இப்பத்தான் வாத்தியாரு,சொன்னது என் மாநகர எறுமை மாட்டு மண்டைக்கு ஏறியிருக்கு, வாத்தியாரு உளரலடா? நிஜமாகத்தான் சொல்லியிருக்காருன்னு “இன்னிக்கு இருக்கிற நிலமையில எறுமை மாடு கூட மேய்க்க வழியில்லாம போச்சேன்னு வருத்தமாயிருக்கு.

இன்டர்நெட்டால் இந்த உலகமே? சுருங்கிவிட்டதாக, பெரிய பெரிய அறிவாளிகளெல்லாம் சொல்றாங்க!! அந்த இன்டர்நெட்டில் எனக்கு.“  எறுமைமாடு மேய்க்க்கூடவா,? இடமில்லாமல் போய்விடும்.  என்னங்க நான் சொல்றது????

-மாநகர் எருமை.

என்னைப்பற்றி

நான் 50வருடங்களை கடந்துவிட்டேன். என் தாய் தந்தையர் படிப்பறிவுல்லா பாமரர்கள். என்னால் டிப்ளமோவுக்கோ, டிகிரிக்கோ போகமுடியவில்லை. அரைகுறையுடன் முடித்துள்ளேன். குடியிருக்கும் வீட்டைத்தவிர (அதுக்கே உரிமைகோரி முப்பது வருடமாக கோர்ட்க்கு அலைந்து கொண்டு இருக்கிறேன்)      பட்டம், பதவி, சொத்து எதுவுமில்லை, தற்போது அல்சரைத் தவிர உழைப்பால் உயரமுடியாததால் டீ, காபி, புகை, பாக்கு, மது, மாது, பழக்கமில்ல.

இண்டர்நெட்டால் உலகமே சுருங்கி, அருகிவிட்டது என்றார்கள். அந்த இண்டர்நெட் மாதிரி மக்களின் மணமும் குணமும் சுருங்கிவிட்டாலும். எனக்கு இந்த இண்டர்நெட்டில் எருமைமாடு மேய்க்ககூடவா??? இடமில்லாமல் போய்விடும் முதல் முயற்சியுடன்…………………..!!!!!!!!!!!!!!

—மாநகர் எருமை.

2 thoughts on “நீ எதுக்குடா படிக்க வர்ர்ரெ……………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s