ஒரு இலக்கியம், நாடகம், திரைப்படம் எதுவானாலும் மக்களுக்கானது என்றால் அது நடைமுறையில் இருப்பதைச் சொல்ல வேண்டும். அல்லது நடந்ததைச் சொல்ல வேண்டும். அல்லது ஒரு சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்று தமது கருத்தாகச் சொல்ல வேண்டும். இன்றைய இலக்கியம் என்பது நாளைய சமுதாயத்திற்கான வரலாற்றுப் பதிவுகள். இதில் பொய்களையும் புரட்டுகளையும் பதிவு செய்வது சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகமாகும்.

      திரைப்படத்தையோ அல்லது ஒரு இலக்கியத்தையோ பார்க்கும் அல்லது படிக்கும் ஒருவர் அதிலிருந்து என்ன புரிந்துகொள்ளகிறார் அல்லது புரிந்துகொள்வார் என்ற புரிதலில் இருந்து அதற்கான விமர்சனங்களைச் செய்வதே மக்களுக்கு பயன் தருதுவதாக அமையும். இந்த வகையில் திரைப்படங்கள் பெரும்பாலும் சமூகக் குற்றங்களையே செய்து வருகின்றன. 

சமூக நோக்கத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் சமூக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்று கூறிக்கொள்ளும் போலி முகங்களையும் அடையாளப் படுத்துவதற்கான பக்கம் இது.

1. பேராண்மை

 மசாலா என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது ஒரு இந்திச் சொல் மசாலாவை எங்களது கிராமத்தில், கூட்டிஅரைப்பது எனச் சொல்வார்கள். பலவிதமான பொருட்களைச் சேர்த்து அரைத்து, உணவில் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற ஒரு கலவைதான் மசாலா. பலர் நினைப்பது போல மசாலா என்றால் பலவிதமான சுவைகள் கொண்டதல்ல. அதற்குப் பெயர் மிக்சர். மசாலா என்பது ஒரு சுவையைக் கொண்டதுதான். இனிப்புமசாலா,

– குருசாமி மயில்வாகனன்

 

2. பேராண்மை

பேராண்மை-யை ஆதரிப்பதா? கூடாதா? இக்கேள்வியானது படம் பார்த்து முடித்த பலருக்கும் உடனடியாகத் தோன்றியிருக்கலாம். அல்லது படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு குழப்பத்தில் மனநிலையைச் செல்லவைத்திருக்கலாம். இந்தக் கேள்வியே படத்தை சரியாக பார்க்கவிடாமல் மனதைக் குழப்பிவிட்டிருக்கலாம் இன்னும் இரண்டையுமே மனதார ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கலாம். 

-சூரியப்பிரதமன்

 

3. உன்னைப்போல் ஒருவன்

என்னைப் போல் ஒருவன்
– ஆர்.எஸ்.எஸ்ஸைப் போல் பி.ஜே.பி
A wedness day எனும் இந்திப்படம் ஒரு R.S.S காரனோட படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதைத் தமிழில் கமல்ஹாசன் தயாரித்திருக்கிறார் என்றால் படம் எப்படி இருக்கும்? படம் பார்த்தவர்கள் என்ன சொல்லக்கூடும்?
அன்பே சிவம் கோஷ்டிகள் :-
மிகவும் முற்போக்கான படம் என்று சொல்லக்கூடும். (ஏன் ஒரு கம்யுனிஸ்டா இருக்கக்கூடாதுன்னு அறிவு ஜீவித்தனமாக கமல் சொல்லுறது நம்மளத்தான் தோழர்) 

– குருசாமிமயில்வாகனன்

4. இயக்கங்களும் தமிழ் சினிமாவும் 

           4 அ. இயக்கங்களும் தமிழ் சினிமாவும் (தொடர்ச்சி)

தமிழ் சினிமா என்பது நாமறிந்ததே. அது போல இயக்கங்கள் என்பதும் நாமறிந்த ஒன்றாகவே இருந்திருந்தால் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் போனதால் இயக்கங்கள் குறித்து சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது.

             இயக்கங்கள் என்பது இங்கே கட்சிகள், குறிப்பாக ஓட்டுக் கட்சிகள் என்று பொருள் கொள்ளக்கூடிய வகையில் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகள், பொதுவுடமைக் கட்சிகள் என்று மூன்று பெரும் பிரிவுகளாக கட்சிகளை பிரிப்பது வழக்கம்.

— குருசாமி மயில்வாகனன்

5. கள்ளும் பழசு, மொந்தையும் பழசு

இப்படத்தில் ஐந்து வகையான வாழ்வியல் தளத்திலிருந்து கதையை புனையும் இயக்குனர் க்ரீஷ்  ஒரு புள்ளியில் இணைத்து கதையை முடிக்கிறார். ‘தெய்வம் வாழ்வது தவறுகளை உணர்ந்த மனிதனின் நெஞ்சங்களில்‘ மற்றும் ‘பணம் என்பதே வாழ்க்கையின் அடிப்படைத்தேவை‘ என்ற தமது கருத்துக்களுக்கான கதைத் தளமாக இத்திரைப்டத்தை எடுத்துள்ளார். இடையிடையே அமைத்துள் சினிமாத்தனமான காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் ஒரு திரைப்படத்தின் உயிராதாரமான இறுதிக்காட்சியை இயல்பு மீறி காட்சிப்படுத்துவதன் மூலம் இதுவும் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் என்பதற்கு சான்றாக உள்ளது…

—சாகித்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s