தமிழ் சினிமா என்பது நாமறிந்ததே. அது போல இயக்கங்கள் என்பதும் நாமறிந்த ஒன்றாகவே இருந்திருந்தால் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் போனதால் இயக்கங்கள் குறித்து சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது.

      இயக்கங்கள் என்பது இங்கே கட்சிகள், குறிப்பாக ஓட்டுக் கட்சிகள் என்று பொருள் கொள்ளக்கூடிய வகையில் தேசிய கட்சிகள், திராவிடக் கட்சிகள், பொதுவுடமைக் கட்சிகள் என்று மூன்று பெரும் பிரிவுகளாக கட்சிகளை பிரிப்பது வழக்கம்.

      ஆனால் இதில் இடம் பெறுகிற தேசியம், திராவிடம், பொதுவுடமை என்கிற சொற்கள் அவற்றின் சரியான அர்தங்களிலேதான் இக்கட்சிகளின் பெயராக இடம் பெற்றிருக்கிறதா? என்றால் . . . இல்லை

      இன்னொரு வகையில் சொல்லப் போனால், தேசியத்திற்காகவும் திராவிடத்திறகாகவும், பொதுவுடமைக்காகவும் இக்கட்சிகள் இருக்கின்றன என்பது பொய்யானது, தவறானது.

      எனவே இந்த கட்சிகளின் பெயாகளில் இடம் பெற்றுள்ள தேசியம், திராவிடம், பொதுவுடமை என்ற சொற்கள் உண்மையாக போலித் தேசியம், போலி திராவடம், போலி பொதுவுடமை என்றுதான் அழைக்க வேண்டும்.

      இருந்தாலும் இங்குள்ள பெரும்பான்மையான பார்வையாளர்களுக்கு ஏற்படும் எரிச்சலை தவிர்பதற்காகவும், இவைகள் போலிகள் என்று பரவலாக அறிந்து கொள்ளப் பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாலும், போலி என்ற முன் சொல்லைத் தவிர்த்துவிட்டு சொல்கிறேன்.

      அவ்வாறில்லாமல், இக்கட்சிகளை தேசிய, திராவிட, பொதுவுமைக் கட்சிகள் என்று உண்மையாகவே நான் குறிப்பிடுவதாகப் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

      தமிழ் சினிமாவை இக் கடசிகள் எப்படி பயன்படுத்திக் கொண்டன? அதுபோலவே. இக்கட்சிகளை தமிழ் சினிமா எப்படி பயன்படுத்திக் கொண்டது? என்பதைப் பார்க்கலாம்.

      தமிழ் சினிமா என்று நாம் இப்போது குறிப்பிடுவது பல சமயங்களில் தமிழ் சினிமாவின் முதலாளிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது என்பதால், பர்வையாளாகள் அவற்றை கடந்து கவனித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

முதலில் தேசிய இயக்கமும் தமிழ் சினிமாவும்

     தேசியம் என்பது குறித்து வரையறை, மற்றும் அதற்கும் இந்தக கட்சிகளுக்கும் உள்ள தொடர்பு – இவைகளெல்லாம் இந்த அரங்கிற்கு அவ்வளவு அவசியமில்லாததால் அதாவது ஏற்கனவே பார்வையாளர்கள் அறிந்திருப்பார்கள் என்பதால்-தவிர்க்கிறேன்.

      தேசிய இயக்கம் என்ற பிரிவில் முதலும் ஒன்றுமாக  இடம் பெறுவது காங்கிரஸ் கட்சிதான். கூத்து மற்றும் நாடகங்களின் கலைஞர்களே காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகள்தான் என்பதும், மேடைநாடகங்கள் மற்றும் அந்தக்காலச் சினிமாக்கலெல்லாம் ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் கட்சியின் தொடர்புடையவர்களின் பங்களிப்புடனேயே வெளிவந்தன என்பதும் நாம் படித்த விசயங்கள்தான்.

      அறந்தை நாராயணன் இது குறித்து செய்துள்ள பதிவுகள் முக்கியமானவை. காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள உறவுகளில் குறிப்பிடத்தக்க ஒரு விசயம் உள்ளது. அதுதான் சிவாஜி எனும் நடிகர் காங்கிரஸ் காரராக இருந்தது.

      எம்.ஜி.ஆர்.,  தி.மு.க.விற்கான பிரச்சார குறியீடாகவே மாறிக்கொண்டிருந்தபோது, அந்த அளவிற்கு இல்லையென்றாலும் தி.மு.க.விற்கு சில நேரங்களில் கம்யுனிஸ்ட்டுகளுக்கு எதிராக, காங்கிரஸ்  கட்சிக்கு ஆதரவாக தனது பிரச்சாரத்தை நமுட்டுத்தனமாகச் செய்து வந்தவர் சிவாஜி. காமராசரின் மறைவுக்குப் பின்னர் சற்று வெளிப்படையாகவே இதைச் செய்தார்.

      ஸ்தாபன காங்கிரஸ் இருந்த போது சிவாஜி அதில் இருந்தார். டி.ஆர்.மகாலிங்கம், குலதெய்வம் ராஜகோபால், சசிக்குமார், பிரேம் ஆனந் போன்ற நடிகர்களும் கூட சிவாஜியோடு உடன் சென்று பிரச்சாரம் செய்து வந்தனர்.

      எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜியின் உச்சக்கட்டமான அந்த நேரத்தில், ஸ்தாபன காங்கிரஸுக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. விற்கும் எதிராக இந்திரா காங்கிரஸில் இருந்து கொண்டு தமிழமெங்கும் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரே ஒரு நடிகர் சுருளிராஜன்.

      சிவஜியும் சுருளிராஜனும் அப்போதெல்லாம் இணைந்து நடித்ததில்லை. காமராசார் இறந்ததும், ஸ்தாபன காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் இணைந்ததும் இருவரும் இணைந்து நடித்தனர். அப்படி நடித்த படங்களில் ஒரு பாடாவதிப் படம்தான் “லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ சிவாஜி லாரி டிரைவராகவும் சுருளிராஜன் கிளீனராகவும் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் ஒரு காட்சி, சிவாஜி லாரி ஓட்டிக் கொண்டு போவார். அப்போது அருகில் இருக்கும் சுருளி, அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாகி இருந்த ஒரு பாடலைப் பாடுவர். அப்பாடலைக் கேட்கும் சிவாஜி என்ன பாட்டுடா இது, இனி பாடினா கீழேபுடிச்சி தள்ளிவிடுவேன் என்று கோபப்படுவார். அதற்கு சுருளி ”அண்ணே இது சினிமாப்பாட்டுண்ணே” என்பார். சிவாஜியை கொலை செய்யும் அளவுக்குத் தூண்டிவிடும் அந்தப் பாடல் எது? ”சக்களத்தி என்ற படத்தில் சமீபத்தில்தான் அறிமுகமாகி இருந்த இளையராஜா இசையமைத்துப் பாடியிருந்த, தமிழ் சினிமா பாடல்களின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றான ”என்ன பாட்டு பாட ? என்ன தாளம் போட ?” என்கிற பாடல்தான் அது.

இளையராஜாவின் அதிரடியான வெற்றிகளைக் கண்டு பயந்து, வயிற்றெறிசல் கொண்டோரின் பட்டியலலில் சிவாஜியும் இருந்தார். பின்னாளில் அவா் மாறியது வேறு கதை.

காங்கிரஸ் கட்சி – சினிமா நடிகா்களை ஆபத்தானவா்களாகப் பார்த்தது. இருப்பினும் புகழ் பெற்றுத்தரும் துறையாக இருப்பதாலும், சிவாஜியை விட்டால் வேறு நாதியில்லை என்பதாலும் அது பேசாமலிருந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் தி.மு.க.வின் சுனாமி தாக்குதலையும் தாண்டி அப்போதைய இளைய தலைமுறைக்கு காங்கிரஸ் கட்சியை நினைவுட்டிக் கொண்டிருந்த பாவங்களைச் செய்தவா் சிவாஜி.

      இது போன்ற தகவல்களில் மிக மோசமான விசயம், சிவாஜி சில படங்களில் செய்த பிரச்சாரம். ராஜபார்ட் ரங்கதுரை என்ற படத்தில் பகத்சிங் வேடமிட்டு பாடிக்கொண்டே வருவார். பாடலில் காந்தி வாழ்க என்றெல்லாம் வரும். சகிக்க முடியாத தருணங்களல் அதுவும் ஒன்று.

      போலிச் சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தமிழ் சினிமா என்பது பைனான்ஸ் செய்யும் இடமாக மாறிப்போனது. பல காங்கிரஸ் பிரமுகர்கள் பைனான்சியர்களாகவும், வினியோகஸ்தர்களாகவும், திரையரங்கு உரிமையாளாகளாகவும் இருந்தனர். மணிரத்தினம், ஜி.வி., இவர்களின் தந்தை கணபதி ஐயர்  கூட உதாரணம்தான்.

      இறுதியாக, காங்கிரஸ் கட்சி தமிழ்சினமாவை தனது ஓட்டுச் சீட்டு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த ஆசையிருந்தாலும், முடியவில்லை. சுயேட்சையான கலைஞராக இருந்த சிவாஜியின் தீவிரமாக காங்கிரஸ் பற்றுதல் போதுமானதாகவே இருந்தது. சற்று ஆழ்ந்து பரிசீலத்தால் சிவாஜி இல்லையென்றால் காங்கிரஸ் கட்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சிவாஜியின் உழைப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சி தமிழ் சினமாவைப் எப்படி பயன்படுத்திக்கொண்டது? அப்படி ஏதும் நடந்ததா? அங்கும் சிவாஜிதானே வரமுடியும். சிவாஜி வருகிறார். எம்.பி. பதவி கொடுக்கப்படுகிறது. மிகப் பிரமாதமான வேட்டி, சட்டை துண்டோடு பாராளுமன்றத்தில் கம்பீரமாக நடந்து போனார் சிவாஜி. வந்தது விணை. வழக்கம்போலவே வட இந்தியர்களின் சேட்டைகளையும், தமிழகத்தில் சில காங்கிரஸ் புள்ளிகளின் விசமத்தனங்களையும் இவற்றை கண்டுகொள்ளாமலிருந்த இந்திரா காந்தியின் நடவடிக்கைகளையும் கண்டு பொறுக்க முடியாமல் தனிக்கட்சி துவங்கினார் சிவாஜி. அப்போது வெளிவந்த படம் ”என் தமிழ் என் மக்கள்” சிவாஜி பிலிம்ஸ்ஸின் தயாரிப்பு இது. அப்போது சந்தான பாரதியுடன் இணைந்து படங்களை இயக்கிக் கொண்டிருந்த இப்போதைய சந்திரமுகி பி.வாசு – பாரதிவாசுதான் அதை இயக்கியிருந்தார்கள்.

      ஓட்டுக்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ்ஸின் போக்கு, கட்சித் தொண்டர்களின் மன நிலை  இவைகளை சுவாரஸ்யமாய் சித்தரித்த படம் அது. தமிழ் சினமாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான உறவில் தமிழ் சினிமாவிற்குக் கிடைத் ஒரு லாபம் இந்தப் படம்தான்.

  –குருசாமி மயில்வாகனன்

அடுத்தாக திராவிடக் கட்சிகள்   (இங்கு சொடுக்குக)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s