தையல் கேளீ ர் !

பெண் உரிமை பெண்ணியம் என வளர்ந்து கொண்டிருக்கும் சிந்தனைகள் நிலவும் இந்தக் காலத்திலும்கூட பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வதால்தான் ஆண்களுக்கு வேலை கிடைப்பதில்லை என அடி முட்டாள்தனமாய் பேசுபவர்கள் உண்டு. பெண்களுக்கு பெண்களே எதிரிகள் என மாமியார்-மருமகள் பிரச்சனைகளைச் சொல்லி பட்டிமன்றம் நடத்தும் பொய்யர்களும் உண்டு. பொறாமை அகங்காரம் அறிவின்மை ஆதிக்கம் இவற்றின் கலவையாய் இருக்கும் இன்றைய ஆணாதிக்கச் சிந்தனைகள்விரைவில் ஒரு நாள் இற்று விழத்தான் போகிறது.

பெண்கள் யார்?……….. அடிமைகளா?

பெண்கள் ஆண்களுக்குச் சமமா?

சமம் என்றால் எந்த வகையில் ஆணையும். பெண்ணையும் சமமாகப் பாவிக்க

முடியும்?

ஆணையும் பெண்ணையும் சமமாய்ப் பாவித்தால் வீட்டு வேலைகளை ஆணும்

செய்ய வேண்டுமா?

அப்படியானால்……………………………..

சமைப்பது யார்?

குழந்தைகளை வளர்ப்பது யார்?…

உணவு சமைப்பது குழந்தைகளை வளர்ப்பது இந்த இரு வேலைகளைக் காரணம் காட்டியே பெண்களை வீட்டு வேலையை செய்ய வைத்திருக்கின்றனர். இதற்கு இட்டுக்கட்டும் விதமாகத்தான் தாயன்பு மற்றும் கைப்பக்குவம் வீட்டுச்சமையல் என்றெல்லாம் இன்று வரையிலும் கூட சொல்லிக் கொண்டு வருகிறார்கள். முற்போக்கு சிந்தனைகளுடன் வேகமாக வளர்ந்து வரும் பெண்கள்கூட இந்த ஒரு இடத்தில் பலகீனமடைந்து விடுகிறார்கள். ஆனால் இந்த இடம்தான் பெண்களின் விடுதலைக்கு முதல் எதிரானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொண்டாலும் அதிலிருந்து மீள முடியவில்லை.

இது சரியானதா?

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் என்ன தீர்வு?

அல்லது

இந்தப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா? முடியாதா?

முடியும்!

ஆனால் அது யாரால் முடியும்?

இன்றல்ல நேற்றல்ல 1919ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி அதாவது 79ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேராத பெண்களின் நான்காவது மாஸ்கோ நகர மாநாட்டில் தோழர் லெனின் பேசிய பேச்சின் சில பகுதிகளை இங்கே கேட்கலாம்……..கேளுங்கள்

“தோழர்களே!

பெண்களை ஆண்களுக்குச் சமமாக ஆக்க வேண்டும். நாம் இப்படிச் சொல்லும் போது பெண்கள் செய்யக் கூடிய வேலைகளில் உற்பத்தி செய்யும் திறமையில் ஆண்களுக்குச் சமமான நிலையில் வைக்கப் போவதாக நாம் சொல்லவில்லை. பெண்கள் ஒரு நாளைக்குச் செய்யக்கூடிய வேலை நேரம் வேலை நிலைமைகள் இவைகளிளெல்லாம் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் வைக்கப் போவதாக நாம் சொல்லவில்லை. ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு மட்டுமே இருக்கக்கூடியதாக சொல்லப்படுகிற நிலமையைக் காரணம் காட்டி அதனாலேயே அவள் ஆணுக்குச் சமமாக மாட்டாள் என்று சொல்லி பெண்களை ஒடுக்கக் கூடாது என்பதையே நாம் குறிப்பிடுகிறோம்.

பெண்கள் முழு உரிமைகளைக் கொண்டிருக்கும் பொழுது கூட அவர்கள் உண்மையில் இன்னும் அடக்கி வைக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் எல்லா வகையான வீட்டு வேலைகளுக்ளுமே பெண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு வேலை என்பது பெரும்பாலும் மிக அதிக பயனில்லாததாக கடினமானதாக இருப்பது வீட்டு வேலைதான். ஒரு பெண்ணின் வளர்ச்சியை எவ்விதத்திலாவது ஊக்குவிக்கக் கூடிய ஒரு அம்சம் கூட அவள் செய்யும் வீட்டு வேலையில் இல்லை.

உணவு சமைப்பது குழந்தைகளை வளர்ப்பது என்ற வகையில் நெடுங்காலமாக இருந்துவரும் அலுப்புத் தருகின்ற வேலைகள் பெண்களை அவமானகரமான முறையில் உணர்ச்சிகள் மழுங்கிப் போகும் விதத்தில் அடிமையாக இருக்க வைத்திருக்கிறது.

சோசலிச இலடசியத்தைப் பின்பற்றி சோசலிசத்தைப் பரிபூரணமாக அமுலாக்குவதற்கு நாம் போராட விரும்புகிறோம். இங்கே பெண்கள் உழைப்பதற்குரிய விரிவான துறை ஏற்படுத்தப்படுகிறது.

பெண்களை குடும்ப வீட்டு வேலைகளிலிருந்து விடுவிக்கக்கூடிய குழந்தை நிலையங்கள் உணவுச்சாலைகள் முன் மாதிரியான அமைப்புகள் ஆகியவற்றை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவைகளை அமைக்கிற வேலைகளையும் பெண்களுக்கே பிராதானமாகக் கொடுக்கப்படும். குடும்ப அடிமைத்தனம் என்ற நிலையிலிருந்து பெண்களை விடுவிக்கக்கூடிய நிறுவனங்கள் மிகச் சிலவே இருக்கின்றன. சாத்தியமாக இருகக்கூடிய இடங்களில் இன்னும் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உழைக்கும் பெண்களே பாடுபட வேண்டும். தொழிலாளர்கள் விடுதலையைத் தொழிலாளர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்வது போலவே உழைக்கும் பெண்கள் விடுதலையையும் உழைக்கும் பெண்களாலேயே ஏற்பட வேண்டும். ஒவ்வொரு உழைக்கும் பெண்ணும் அரசியலில் பங்கெடுத்துக் கொள்வதைச் சாத்தியமாக்குவது நமது சோசலிச அரசாங்கத்தின் கடமை.

பெண்களுக்கு முழுச்சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது.” கம்யூனிஸ்ட் கட்சியில் இன்னும் சேராமல் இருக்கிற பெண்களுக்காக மாஸ்கோவில் நடந்த நாலாவது மாநாட்டில் லெனின் இவ்வாறு பேசியிருக்கிறார்.

சோசலிசம், லெனின் என்று சொல்லிச் சொல்வதால் இதெல்லாம் காலாவதியானது நடைமுறைக்கு ஒத்துவராதது. அல்லது ரஷ்யாவிலேயே தோற்றுவிட்டது என்று யாரேனும் சொன்னால் கவனித்துக் கொள்ளுங்கள்! அவர்கள் பெண்களுக்கு பெண் உரிமைகளுக்கு எதிரானவர் என்பதை ஒத்துக் கொள்ளாதவர்கள்.

பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள். ஆனால் அவர்கள் சமமாக ஆகக்கூடாது என்பதற்காக ஆணாதிக்க சமூதாயம் விதிக்கும் கட்டுபாடுகள்தான் வீட்டு வேலைகள். ஆனால் வீட்டு வேலைகள் என்ற உணவு சமைப்பது குழந்தை வளர்ப்பது என்று சொல்வதைக் கவனியுங்கள். குழந்தை பெறுவது என்று சொல்லவில்லை. காரணம் குழந்தை பெறுவது எப்போதும் பெண்கள்தான். அது பெண்களாலேயே முடியும். ஆனால் குழந்தை வளர்ப்பது என்ற  வேலையை  பெண்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கி இருக்கிறார்கள். இது போன்றவைகளை குடும்ப அடிமைத்தனம் என்கிறார் லெனின். பெண்களை இந்த வீட்டு வேளைகளிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்கிறார் லெனின். அவ்வாறு செய்தும் காண்பித்தார். சோவியத் ரஷ்யாவில் பெண்களை வீட்டு வேலைகளிலிருந்து முழு முற்றாக விடுதலை செய்து விவசாயம் தொழில் நிர்வாகம் மற்றும் இராணுவம் வரையிலான துறைகளில் பங்கேற்கச் செய்தார். சுயசிந்தனையும் பொருளாதார விடுதலையும் பெண்களுக்குக் கிடைத்தது. சோசலிசத்தினால் அதை நடத்த முடிந்தது.

ஆனால் இன்று சோசலிசத்தின் எதிரிகள் பெண்களை வேறுவகையில் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். அதற்கு பெண்களும் இரையாகி வருகிறார்கள். அடிமைப்படுத்த நினைக்கும் கருத்துக்களை அவைகள் எந்தவடிங்களில் வந்தாலும் அது தம்மை அடிமைப்படுத்த வருகிறது எனபதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்டுக்கல் போய் கிரைண்டர் வந்தாலும், அம்மி போய் மிக்ஸி வந்தாலும், துவைகல் போய் வாஷிங்மிஷின் வந்தாலும், விறகடுப்பு போய் கேஸ் அடுப்பு வந்தாலும் _ இவைகளெல்லாம் வீட்டு வேலைகளை சுலபமாக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டாலும் _ வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டியது பெண்கள் மட்டுமே. வடிவங்கள் மாறுகின்றன. ஆனால் விஷயங்களை அப்படியே வைத்திருக்கத்தான் வடிவங்களும் மாறியிருக்கின்றன என்பதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்று சொன்னோம் _ ஆனால் “ஆண்களோடு எங்களை ஏன் ஒப்பிடுகிறீர்கள்! நாங்களோ தனித்துவமானவர்கள்1 “ என உரத்த குரலில் ஊர்வலமாய்ப் பெண்கள் புறப்பட்ட காலம் எப்போதோ வந்துவிட்டது. தான் பழுதுபட்டாலும் தன் சந்ததியைப் பழுது நீக்குவதுதான் தாய்மையைத் தாங்கி நிற்கும் பெண்களின் தனித்துவம் எனவே தான் சொல்கிறோம். !

பெண்களே!

பெண் குழந்தையை பேணுங்கள்!

சுயமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

நல்ல நூல்களைப்படியுங்கள்!

வீட்டு வேலைகளிடமிருந்து விடுதலை பெறுங்கள்1

“ஃபேசன்” என்ற பெயரில் மேலிருந்து திணிக்கப்பட்டு

நம்மை அடிமைப்படுத்தும்

கருத்துகளிடமிருந்தும்

சாதனங்களிடமிருந்தும்

பொருள்களிடமிருந்தும் விடுதலை பெறுங்கள் !

அரசியலை கற்றுக் கொள்ளுங்கள்

தோழர் லெனினின் வார்த்தைகளிலேயே சொல்லி

முடிப்போம்.

“பெண்கள் விடுதலையடையாத வரையிலும்

மனிதகுலம் விடுதலையடைய முடியாது” !.

-குருசாமி மயில்வாகனன்

Advertisements

One thought on “தையல் கேளீ ர் !

 1. வெகுசில சலுகைகளை பெண்களுக்கு கொடுத்துவிட்டு நான் பெண்களை சமமாக நடத்துகிறேன் என திரிபவர்கள் கூட பெண்கள் அரசியல் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை ஏற்க மாட்டார்கள்.

  ஆம்.

  “பெண்கள் விடுதலையடையாத வரையிலும்

  மனிதகுலம் விடுதலையடைய முடியாது”

  தோழமையுடன்,
  செங்கொடி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s