கர்பப்பை இல்லாவிட்டாலுமா!

ஆமாம் !  ஏன்?

ஏன் என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

இத்தா. சுமார் 1400 வருடங்களுக்கு முன் இஸ்லாமியர்களின் உருவமில்லா இறைவனால் அருளப்பட்டதாக அவனின் இறுதி தூதரான முஹம்மதால் கூறப்பட்ட பெண்களுக்கான சட்டங்களில் ஒன்றுதான் இத்தா. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், கணவன் இறந்த பின் அவனின் மனைவிகள் ஆகியோர் கட்டாயம் இத்தாவை கடைபிடிக்கவேண்டும். இத்தா என்ற அரபிச் சொல் தமிழில் காத்திருத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இறந்துபோன அல்லது தலாக் கொடுத்த கணவனின் கரு அவனது மனைவியின் கர்ப்பபையில் உருவாகியுள்ளதா என்பதனை அறிந்துகொள்வதற்காக பாதிக்கப்பட்ட பெண் 4 மாதம் 10 நாட்கள் காத்திருப்பதே இத்தாவாகும். இத்தாவின் காலகட்டங்களில் யாரையெல்லாம் ஒரு பெண்ணானவள் பார்க்க்க்கூடாது என்று இஸ்லாம் வரையறை செய்திருக்கிறதோ அவர்களையெல்லாம் பாராமல், எவ்வித அலங்காரங்களும் செய்துகொள்ளாது கணவனுடன் வசித்த வீட்டில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருக்கவேண்டும்.

குர்ஆன் வசனம் 2:234 – உங்களிலிருந்து எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்து விட்டால்,அவர்கள் தங்களுக்காக நான்கு மாதங்கள் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவேண்டும்..

மாதவிடாய் நின்றுபோன (முதிய வயது) பருவத்தில் இருக்கும் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் இத்தா காலம் மூன்று மாதம். கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை இத்தா இருக்கவேண்டும்.

வசனம் 65:4. “மேலும் உங்களுடைய பெண்களில் மாதவிடாயிலிருந்து நம்பிக்கையிழந்து விடுகிறார்களே அத்தகையவர்கள் (இத்தா விஷயத்தில்) நீங்கள் சந்தேகித்தீர்களானால், அப்போது அவர்களுடைய இத்தாவாகிறது மூன்று மாதங்களாகும். இன்னும் மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் (இவ்வாறேதான்). கர்ப்பிணிகள்-அவர்களுடைய தவணையாகிறது, தம் கர்ப்பத்தை அவர்கள் பிரசவிப்பதாகும்.

இத்தாவின் காலம் முடிந்தபிறகு அவர்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்துகொள்ளலாம்.

வசனம் 2:234. தம் (இத்தா) தவணையை அடைந்துவிட்டால், தங்கள் விஷயத்தில் நியாயமான முறைப்படி (அலங்காரம் எதுவும்) செய்துகொள்வதில் உங்கள் மீது எவ்விதக் குற்றமில்லை-அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கு அறிகிறவன்..

சுமார் 1400 வருடங்களுக்கு முன் அறியாமைக்காலத்தில் வாழ்ந்த ஒரு எழுதப் படிக்கத் தெரியாத மனிதனால் இதுபோன்ற சரியான சட்டத்தை கூறியிருக்க முடியுமா? அதுவும் ஆண், பெண் இருபாலருக்குமான உடலமைப்பிற்குத் தகுந்தவாறு அறிவியல் வளராத காலத்தில் கூறியிருக்க முடியுமா? முடியாது! எனவே இது இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனால் அருளப்பட்டதுதான். இக்கூற்று இதற்கு மட்டும் தானா? குரான் முழுமைக்கும் இது பொருந்தும், என்று இஸ்லாமியர்கள் வியக்கின்றனர். இவர்களின் வியப்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துபவைகள்.

உலகம் தட்டை என்று சொன்னதாகட்டும், கடலில் எண்ணற்ற அற்புதங்கள் உள்ளன என்று சொன்னதாகட்டும், மலைகளை முளைகளாக ஆக்கியிருக்கிறேன் என்று சொன்னதாகட்டும், தூண்களின்றி வானத்தை உயர்த்திருக்கிறேன் என்று சொன்னதாகட்டும், வானங்களையும்! பூமியையும் நாமே பிரித்தோம் என்று சொன்னதாகட்டும், தேனீக்கள் கனிகளை உண்கின்றன என சொன்னதாகட்டும், ஒரு ஆண் பல பெண்களை மணமுடித்துக் கொள்ளலாம் என சொன்னதாகட்டும் எதைப்பற்றித்தான் இறைவன் கூறவில்லை அல்லது இதில் எதுதான் அறிவியலுக்கு பொருந்தவில்லை!. 20ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளை 6ம் நூற்றாண்டிலேயே கூறியது வியப்பல்லவா! என்றும் வியக்கின்றனர். இவ்வியப்பில் நாமும் உடன்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இவ்வியப்புகளை ஏற்றுக்கொண்டால்தான் நேர்வழி பெறமுடியும் என்றும் விளக்குகின்றனர். வியப்புகள் இவர்களின் மூளையில் அபினைப்போல வேலைசெய்வதால் மூளையின் முன் பகுதி செயலிழந்து தடுமாறுகிறது. தடுமாற்றத்தினால், “நல்ல ஆலிம்களிடம் விளக்கம் கேளுங்கள்” என்று இவ்வியப்பில் உடன்பட மறுக்கும் நம்மைப் பார்த்து உளறுகின்றனர்..

எண்ணெய்க்காக அமெரிக்காவின் கவனம் முழுமையும் வளைகுடா நாடுகளையே சுற்றி வருவதுபோல அல்லாவின் தூதர்கள் அனைவரும் வளைகுடா நாடுகளையே சுற்றிவந்தது எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது, அல்லாவிடத்தினில் இருக்கும் ஏட்டில் நாடித்துடிப்பு, pregnant test pad, scanner மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய குறிப்புகள் எப்படி தவறியது என்று எண்ணும்போதும் எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை இக்குறிப்புகள் அப்பதிவேட்டில் இருந்திருந்தால் அல்லது இறைவன் இவற்றைப்பற்றி அறிந்திருந்தால் அல்லது முக்காலமும் உணர்ந்தவன் இறைவன் என்பது உண்மையானதென்றால் காத்திருத்தலுக்கான காலவரையறைக்கான சட்டம் மாறியிருக்கும். மாறியிருக்கவேண்டும். ஆனால் 4 மாதம் 10 நாட்கள் காத்திருக்கவேண்டும் என சட்டம் தெளிவாகவே சொல்கிறது. நவீன வாகனங்களைப் பற்றியெல்லாம் முன்னறிவிப்பு கூறிய இறைவனுக்கு நவீன கருவிகளைப் பற்றித் தெரியாமல் போனது எவ்வாறு என்றுதான் புரியவில்லை.

”இன்னும் மாதவிடாயே ஏற்படாப் பெண்களையும் மூன்று மாதம் காத்திருக்கவேண்டும்” என்கிறார் முஹம்மத். அதாவது குழந்தை திருமணத்தையும் இஸ்லாம் அனுமதிப்பதோடல்லாமல் மாதவிடாயே ஏற்படாத மணமான அச்சிறுமியும் கணவன் இறந்துவிட்டால் மூன்று மாதம் காத்திருக்கவேண்டுமாம். உலகம் அழியும் வரைக்குமான ஒரு நேர்வழி மார்க்கம் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறதா என்று, இன்று நீங்கள் வியக்கலாம். பூப்பெய்தாத அச்சிறுமி எங்ஙனம் கருத்தரிக்க முடியும் என்றும் நீங்கள் கேட்கலாம்? ஆண் துணையே இல்லாமல் மர்யம் கருத்தரிக்கவில்லையா! அதை நாங்கள் நம்பவில்லையா! என்று நம்மை வியப்பில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்வார்கள். இதைவிட சிறந்த மார்க்கம் வேறு இருக்கிறதா என்ன என்றும் வினவுவார்கள்!

4 மாதம் 10 நாட்கள் காத்திருப்பதினால் என்னவாகிடப் போகிறது ஒரு துக்கம் அனுஷ்டிப்பது போல் இருந்துவிட்டு போகலாமே என்கின்றனர். அந்த துக்கம் ஆணுக்கு கிடையாதா என்றால் ஆணின் உடலமைப்பும் உணர்வுகளும் வேறு பெண்ணின் உடலமைப்பும் உணர்வுகளும் வேறு என மீண்டும் வேதாளமாக முருங்கை மரமேறுகின்றனர். பெண்ணின் இச்சையை அடக்கிக்கொள்ளச் சொல்லும் இறைவன் ஆணின் இச்சையை அவ்வாறு அடக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கவில்லை. ஏன் அவ்வாறு கூறவில்லை? அல்லது கூறமுடியவில்லை? இங்கு நீங்கள் கேள்விகள் கேட்கலாம். சொல்லப்பட்டிருக்கும் பதிலுக்கு தகுந்தவாறுதான் நீங்கள் கேட்கவேண்டும். ஏனென்றால் பதில்கள் முன்பே சொல்லப்பட்டுவிட்டன. இங்குதான் இறைவனின் ஆணாதிக்கம் வெளிப்படுகிறது. இல்லை இறைவனை படைத்த ஆண்கிழவர்கள் தம் உண்மை முகம் வெளியில் தெரிய ஆணாதிக்க பெருமையுடன் உலா வருகின்றனர்.

காத்திருப்பதன் நோக்கம் பெண் வயிற்றில் கரு உருவாகியுள்ளதா என்பதனை அறிந்துகொள்வதற்குத்தான் என்றாலும் அக்குழந்தை ஆணிற்குச் சொந்தம் என்பதும், ஆணிடமே ஒப்படைத்து விடவேண்டும் என்பதுமே முக்கியமானதாகும். மேலும் தன் குழந்தைக்கு பாலூட்ட தாயை தந்தையிடமிருந்து கூலி பெற்றுக்கொள்ளச் சொல்கிறார் முஹம்மத். இதை வசனம் 65:6 உறுதி செய்கிறது. வசனம் 65:6-நீங்கள் குடியிருக்கும் இடத்திலேயே உங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அவர்களையும் (இத்தா இருக்கும் பெண்களையும்) குடியிருக்கச் செய்யுங்கள். அவர்கள் மீது நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். கர்ப்பிணிகளாக அவர்கள் இருப்பின் தம் கர்ப்பத்தை அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்யுங்கள். பின்னர் உங்களுக்காக (குழந்தைகளுக்கு) அவர்கள் பாலூட்டினால், அப்போது அவர்களுடைய கூலிகளை அவர்களுக்கு நீங்கள் கொடுத்துவிடுங்கள். உங்களிடையே நியாயமான முறையில் ஒருவருக்கொருவர் ஆலோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் சிரமமடைந்தால் அவருக்காக(தந்தைக்காக வேண்டி) வேறொருத்தி (குழந்தைக்கு) பால் கொடுக்கலாம்.

மக்கள் தனது அன்றாட வாழ்வின் பிரச்சினைகள், சந்தேகங்களை முஹம்மதின் முன் கேட்கப்படும்பொழுது கூறப்பட்ட விளக்கங்களே குர்ஆனும் ஹதீதும். குர்ஆனையும் ஹதீதையும் முழுதுமாக படிக்கும்பொழுது இதை உணரலாம். இங்கு இத்தா சட்டம் கூட முஹம்மதிற்கு முன்பே அரபிகளிடம் இருந்துவந்துள்ள வழக்கம் தான்.  விதவையானவள் தனது பழைய துணியை உடுத்திக்கொண்டு அலங்காரங்கள் செய்து கொள்ளாது ஒரு வருடம் வீட்டினுள் இருக்கவேண்டும். ஒருவருடம் கழிந்தபின் ஒட்டகச் சானத்தை ஒரு நாயின் மேல் வீச வேண்டும். அதன் பின்னே காத்திருக்கும் காலம் முடிவுக்கு வரும். முஹம்மது கூறிய காத்திருக்கும் காலம் இப்பழைய வழமையிலிருந்து சற்று முற்போக்கானது என வேண்டுமானால் கொள்ளலாம். இது இறைவனால் அருளப்பட்டதுதான் என வியப்பதற்கு இதில் ஒரு வெங்காயமும் இல்லை.

இங்கு முஹம்மது கூறிய காத்திருத்தலுக்கான காலவரையறை அன்றைக்கு சரியானததாக இருந்திருக்கலாம். அது அறிவியல் வளராதவரை. அது ஆறாம் நூற்றாண்டு வரை. அதுவே 21ம் நூற்றாண்டிற்கும் பொருந்தும் என இஸ்லாமியர்கள் அடம்பிடிக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது. 6ம் நூற்றாண்டில் மனிதனால் உருவாக்கப்பட்ட இறைவனுக்கு 20ம் நூற்றாண்டு மனிதனின் கண்டுபிடிப்புகள் தெரியாமல் போனதில் நமக்கு வியப்பில்லை. இல்லை அது வியப்புதான் என 21ம் நூற்றாண்டு மனிதனும் கூறுவதுதான் நமக்கு வியப்பாக இருக்கிறது. இவர்கள் வியப்புகளில் மயங்கியவர்கள். 21ம் நூற்றாண்டின் அறிவியலை நுகர்ந்துகொண்டே 6ம் நூற்றாண்டு மூடநம்பிக்கையை வியந்தோதும் இவர்களை என்னவென்று அழைக்கலாம்! இங்கு (இஸ்லாத்தில்) நீங்கள் கேள்விகள் கேட்கலாம், ஆனால் பதியப்பட்டிருக்கும் பதிலுக்கு தகுந்தவாறு! இங்கு நீங்கள் வியக்கலாம்! சிந்திக்கலாம்! விவாதிக்கலாம்! அனைத்தும் விசுவாசத்திற்குட்பட்டுத்தான்! நிபந்தனைக்குட்பட்டுத்தான்! அல்லது ஒப்பந்த்த்திற்குட்பட்டுத்தான்!.

இத்தா! காத்திருத்தல்! ஏன் இந்த காத்திருக்கும் அடக்குமுறைச் சட்டம் பெண்களுக்கு?

குழந்தை ஆணுக்கு உடைமையானது.

-கலை.

Advertisements

12 thoughts on “கர்பப்பை இல்லாவிட்டாலுமா!

 1. குர் ஆன் என்னவோ மாபெரும் அறிவியல் ஆராய்ச்சி புத்தகம் போல அதை தூக்கிக்கொண்டு ஆங்காங்கு விளக்கக்கூட்டம் வேறு, சொல்லப்போனால் மக்களை ஏய்க்க, தன்னை பெரியவனாக காட்டிக்கொள்ள அக்காலத்தில் எழுதப்பட்ட இந்தப் பொய்ப்புராணங்கள் எல்லாம் மனிதனின் உழைப்போடு இம்மியளவாவது தொடர்பிருப்பது போலத்தெரியவில்லை. ஆசான் மார்க்ஸ் சொன்னது போல மதம் ஒரு அபின், அந்த அபினை ருசித்து விட்டு சாசியாடுகிறார்கள் நம்ம ஷேக்குகள். கலகத்தில் ஏற்கனவே ஷேக்குகளிடம் கேட்ட கேள்விகளுக்கு யாரும் வந்து சாமியாட வில்லை, தோழர் செங்கொடியின் தளத்தில் தான் அடிக்கடி சாமியாடுவார்கள், அவர்கள் ஆட்டத்தை இனி இங்கேயும் பார்க்கலாம் போலிருக்கிறதே!.

  பார்ப்பன பதர்களிடம் எல்லாவற்றையும் அணைத்துக்கொண்டு நமாஸ் செய்வார்கள் .

  அடிச்சு நொறுக்குங்க தோழர் , சும்மா எவ்வளவு காலத்துக்கு இந்த ஆட்டத்தை பார்த்துகிட்டே இருக்கிறது. இவர்கள் அடங்கும், அடக்கும் ஒரே மந்திரவாதிகள் நக்சல் பாரிகள் மட்டும் தான்.

  கிளிக்கியவுடன் முதல் பக்கத்தில் கட்டுரையை வருவது போல செய்யுங்கள், மிகச்சிறப்பான கட்டுரை பலரும் படிக்க வேண்டியத்தேவை உள்ளது, தேடிப்பிடித்து இக்கட்டுரையை படிக்க வேண்டி இருக்கிறது.

  தோழமையுடன்
  கலகம்

 2. சிறப்பான இடுகை தோழர்,

  இந்த விவகாரத்தை விவாதிக்க யாரும் வரமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கே தெரியும் இது பிழையானது, காலத்தால் கரைந்து போனது என்று. வினவு தளத்தில் இஸ்லாமிய பெண்களின் நிலை குறித்த உங்கள் கட்டுரையில் புர்காவுக்குள் நுழைந்து கொண்டவர்கள் மற்றதை பற்றி மூச்சு கூட விடவில்லை.

  செங்கொடி

 3. தோழர்களே,இஸ்லாம் பற்றிய உங்களின் அனைத்து
  கேள்விக்கனைகளையும் எதிர்கொள்ள எத்தனையோ
  இயக்கங்கள் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும்
  ஏன் இதுவரை அதற்கான முயற்சிகள் செய்யவில்லை
  கம்யூனிசம் என்ற பெயரில் இயங்கும் போலி கம்யூனிஸ்டுகளின்
  செயல்களுக்கு எப்படி கம்யூனிசம் பொறுப்பில்லையோ,
  அதுபோல் போலி இஸ்லாமியர்களின் செயல்களுக்கும்
  இஸ்லாம் பொறுப்பல்ல.
  ஒரே வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் செய்வது இன்றுவரை
  அனைத்து மொழியிலும் உள்ளதுதான்.அதில் தமக்கு சாதகமானவற்றை
  மட்டும் அவரவர் எடுத்துக்கொள்கின்றனர்.

 4. ஒவ்வொருமொழியிலும் ஒருச்சொல்லுக்கு பல அர்தங்கள் இருக்கிறதென்பது உணைமைதான். அனால் ஏதாவது ஒரு அர்த்தத்தைதான் பொருத்த முடியும். அரபியில் உள்ளது போல் ஒரு சொல்லுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கும் அதிசயம் அரபியில் மட்டும்தான் உள்ளது. ஆகா எவ்வளவு அற்புதமான தேவமொழி என்று பார்த்தீர்களா!

 5. அருமை சாஹித் ,
  உங்கள் இடுகைகள் ஒவ்வொன்றும் இஸ்லாமிய கோட்பாட்டிற்கு அடிக்கப்படும் சாவுமணி.
  இஸ்லாம் என்றால் அது மடமை தனம்.

  இன்னும் மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் (இவ்வாறேதான்).
  குழந்தை திருமணத்தை உறுதி செய்யும் அற்புத வசனங்கள்… 🙂

  42:1 ஹா, மீம், 42:2 ஐன், ஸீன், காஃப் –
  (என்ன அர்த்தம்னு கேக்ககூடாது). இதன் அர்த்தம் ஒருவேளை முஹம்மது ஒரு மனக்கோளாறு உடையவர் என்று இருக்குமோ ?
  இந்த அர்த்தமற்ற அசை சொற்களை போலவே தான் முழு குரானும் !!!

 6. Hysterectomy:

  65:04. As for the women who have reached menopause, if you have any doubts, their interim shall be three months. And as for those whose menstruation has ceased by hysterectomy, and for those who are already pregnant, their interim is until their clinical/surgery/abortion/maternal parturition.

  quranist@aol.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s