நூல்     : ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

வெளியீடு: விடியல் பதிப்பகம்

முகவரி: 11.பெரியார் நகர்

மசக்காளிப்பாளையம்(வடக்கு)

கோயம்புத்தூர். 641 015

தொலைபேசி :  0422 2576772

மின்னஞ்சல் : sivavitiyal@yahoo.co.in.

 

நூலாசிரியர் :   ஜான்பெர்கின்ஸ்

தமிழ்மொழிப்பெயர்பாளர் : இரா.முருகவேல்

நான்காம் பதிப்பு           : 2008

நூலாசியரியர் பற்றிய சில……….

 

ஜான்பெர்கின்ஸ்
ஜான்பெர்கின்ஸ்

அமெரிக்கரான இவர் 1945 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்து யாங்கி வம்சத்தில் பிறந்தவர். தாய் ஒரு பள்ளி ஆசிரியை. தந்தை அமெரிக்க அரசின் கப்பற்படையின் லெப்டிடினன்ட்டாக இரண்டாம் உலகப்போரின் போது பணியாற்றியவர். பின்பு நியூ ஹாம்ஷயர் என்ற கிராமத்தின் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.

 

1965 பாஸ்டன் பல்கலைகழகத்தில் பொருளாதார பாடப்பிரிவில் இணைந்து பட்டம் பெற்றவர். ஹியர்ஸ்டன் ரெக்கார்டு அமெரிக்கன் மற்றும் சண்டேஅட்வர்டைசர் தலைமை ஆசிரியரின் தனி உதவியாளராகவும் பணியாற்றினார்.

 

1968ல் என்.எஸ்.ஏ.வால் (National Security Agency) பொருளாதார அடியளாக தேர்வு செய்யப்பட்டு பயிற்ச்சியளிக்கப்படுகிறார். 1971ல் பொருளாதார ஆய்வு நிறுவனமான மெயின் (MAIN) என்ற அமெரிக்காவில் உள்ள கங்காணி நிறுவனத்தில் இணைக்கப்பட்டார். 1972ல் தலைமைப் பொருளாதார நிபுணராக பதவி உயர்வு பெறுகிறார். 1980 களில் தனது வேலையின் குற்ற உணர்வால் மெயினிலிருந்து விலகி 1982ல் இன்டிபென்டனட் பவர் சிஸ்டம் இன் கார்ப்பரேஷன் (ஐ.பி.எஸ்) என்ற நிறுவனத்தை தொடங்குகின்றார். அதிலும் தனது குற்றச்செயலுக்கு மனநிறைவுஏற்படாததால் 1991ல் ஐ.பி.எஸ்_ஐ விற்றுவிட்டு தனது 45வது வயதில் ஓய்வுபெற்றார். மன உளைச்சலில் வாழ்ந்த ஜான்பெர்கின்ஸ் தனது மகள் ஜெஸிகாவினால் நம்பிக்கை ஊட்டப்பட்டு இந்நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரின் மகள் ஜெஸிகாவின் பதில்கவலை வேண்டாம் அப்பா! அவர்கள் உனக்கு முடிவுகட்டினால் நீ விட்ட இடத்திலிருந்து நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் நான் பெற்றுத்தரப்போகும் பேரக்குழந்தைகளுக்காக இதை செய்தே ஆக வேண்டும்.

நூலைப்பற்றிச் சில:

இந்நூலைப்பற்றி சிறு அளவில் அறிமுகம் செய்ய எப்பகுதியை இப் புத்தகத்திலிருந்து எடுத்தெழுதுவது என்பதில் குழப்பமே மிஞ்சியது. வரிக்கு வரிக்கு ஆவணமாக இருப்பதில் எப்பகுதியை மிக முக்கியமானது என்று தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால் முன்னுரையில் ஒரு பகுதியையும் முடிவுரையை முழுவதுமாக தந்துள்ளோம்.

எனினும் முதலாளித்துவ பொருளாதாரத்தையே பாடமாக படித்துள்ள இவர் மாற்றுப்பற்றிய கருத்துக்களை சிந்திக்காமல்  “இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பலன் அனைத்தும் உலக மக்களின் நன்மைக்குப் பயன்படுத்தப்பட்டால் உலகம் எவ்வளவு அற்புதமானதாக மாறிவிடும்! நைக், டொனால்டு, கொகோகோலா போன்ற நிறுவனங்கள் ஏழைகளுக்கு உணவளிப்பதையும் (இயற்கையை சீரழிக்காத வகையில்) உடையளிப்பதையும் தங்களது குறிக்கோளாக ஏற்றுக்கொண்டால் எப்படியிருக்கும்?” என்று கொள்ளையடித்தவனிடமே பிச்சை எடுப்பதை தீர்வாக முன்வைக்கிறார். இது உண்மைகளை உணர்ந்தாலும் முதலாளித்துவ சிந்தனையின் முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு தோல்வியை செரிக்க முடியாதவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

முன்னுரையிலிருந்து

பொருளாதார அடியாள்கள் என்று அனழக்கப்படுபவாகள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்னளயடிக்கும் பணிக்காக அவர்களுக்கு பெரும் பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு  வருகிறது . இவாகள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமேரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for International Development USAID) மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி “உதவி” அமைப்புகளில் குவிந்திருக்கும் பணப்பெட்டிகளுக்கும் இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டை பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை. மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம், மிரட்டி பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகளாகும். பேர்ரசு எவ்வளவு பலமையானதோ அதே அளவிற்க்கு இவர்களது தந்திரங்களும் பழமையானவைதான். ஆனால் உலக மயமாக்கல் முழு வீச்சில் நடைபெற்றுவரும் இன்றைய உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய, பயங்கரமான பரிமாணங்களை எட்டியுள்ளன.

நானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்.

 

ஒரு பொருளாதார அடியாளின் மனசாட்சி என்ற பெயரில் – 1982ல் நான் எழுத திட்டமிட்டிருந்த நூல் இப்படித்தான் தொடங்கியது.

 

இந்தநூலை ஈக்வடாரின் குடியரசுத் தலைவரான ஜெய்மே ரோல்டோஸீக்கும் பனமாவின் அதிபரான ஓமர் டோரிஜோஸீக்கும் அர்ப்பணித்திருந்தேன். இவர்கள் இருவரும் எனது வாடிக்கையாளர்களாக இருந்தவர்கள். என்னால் மிகவும் மதிக்கப்பட்டவர்கள். ஒத்த கருத்துக் கொண்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள். இந்த இருவரும் அப்போதுதான் பயங்கரமான விமான விபத்துகளில் உயிரிழந்திருந்தனர். அந்த விபத்துக்கள் தற்செயலானவை அல்ல. உலகப்பேரரசைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த தொழில் நிறுவனங்கள் வங்கித் தலைமைகள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையில் நிலவிவந்த கூட்டணியை எதிர்த்து நின்றதன் காரணமாக அவர்கள் படுகொலை கூட்டணியை எதிர்த்து நின்றதன் காரணமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களை வழிக்குக் கொண்டுவருவதில் பொருளாதார அடியாட்களான நாங்கள் தோல்வியடைந்தால் சி.ஐ.ஏ.வால் இயக்கப்படட் இன்னொரு வகையான அடியாட்களான “குள்ளநரிகள்” இப்படுகொலைகளை நிகழ்த்தினர்.

 

நான் இப்புத்தகத்தை எழுவதை நிறுத்தும்படி நிர்பந்திக்கப்பட்டேன். அடுத்த இருபது ஆண்டுகளில் மேலும் நான்கு முறை இதை தொடங்க முயன்றேன். 1989ல் பனாமா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு முதல் வளைகுடாப் போர் சோமாலியா ஒசாமா பின்லேடனின் எழுச்சி போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தபோதெல்லாம் புத்தகத்தைத்திரும்பவும் தொடங்கத் தீர்மானிப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் மிரட்டல்கள் அல்லது கையூட்டுகள் என்னை இடையிலேயே கைவிடும்படி செய்தன.

 

2003 ல் ஒரு வலிமை வாய்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு பெரிய பதிப்பகத்தின் தலைவர் இதன் கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு “சொல்லியே ஆக வேண்டிய ஆணித்தரமான கதை” என்று குறிப்பிட்டார். ஆனால் வருடத்துடன் சிரித்தபடி தலைமை நிர்வாகிகள் ஆட்சேபிப்பார்கள் என்பதால் இதை வெளியிடும் ஆபத்தை மேற்கொள்ள முடியாது என்றுக் கூறிவிட்டார். பதிலாக இதை ஒரு நெவீனமாக மாற்றிவிடும்படி எனக்கு ஆலோசனை வழங்கினார். “ஜான் லீ கேரி” அல்லது கிராஹம் கிரீன்” போன்ற நாவலாசியராக உங்களை விற்றுவிடலாம்.”

 

ஆனால் இந்நூல் ஒரு கற்பனைக் கதையல்ல. என் சொந்த வாழ்க்கை. எந்தப் பன்னாட்டு நிறுவனத்திற்கும் சொந்தமாயிராத ஒரு பதிப்பகத்தின் துணிச்சல் மிகுந்த பதிப்பாளர் எனக்கு உதவ ஒப்புக் கொண்டார்.

 

இந்தக் கதை சொல்லப்பட்டே ஆக ண்டும். நம் காலத்தில் உள்ள நெருக்கடிகள் கடுமையானவைதான். ஆனால் நமக்கு முன் ஏராளமான வாய்ப்புகளும் உள்ளன. இந்தக் குறிப்பிட்ட பொருளாதார அடியாளின் கதை நாம் ஏன் இப்போது கடக்கவே முடியாததாகத் தோன்றும் நெருக்கடிகடிகளைச் சந்திக்கிறோம் இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றிதாகும். நமது கடந்தகாலத் தவறுகள் புரிந்துகொள்ளப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை அனுகூலமாக்கிக் கொள்ள முடியும். என்பதனாலயே இந்தக் கதை சொல்லப்பட்டாக வேண்டும். செப்டம்பர் 11 தாக்குதலின் காரணமாக இரண்டாவது ஈராக் போரின் காரணமாக 2001 செப்டம்பர் 11ல் தீவிரவாதிகளின் கரங்களில் உயிரிழந்த மூவாயிரம் பேர்களோடு அதேநாளில் உலகெங்கும் பட்டினியாலும் அது தொடர்பான காரணங்களாலும் இன்னொரு இருபத்தி நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதன் காரணமாக இந்தக் கதை சொல்லப்பட்டே ஆக வேண்டும். உயிர்வாழத் தேவையான உணவைப் பெற முடியாமல் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் இருபத்தி நான்காயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமான இவையனைத்தையும் மாற்றும் வல்லமையையும் செல்வத்தையும் இன்று ஒரு நாடு பெற்றுள்ளது என்பதால் அந்த நாடு நான்பிறந்த பொருளாதார அடியாளாகச் சேவைபுரிந்த அமெரிக்காதான் என்பதால் இந்தக் கதை சொல்லப்பட்டே ஆகவேண்டும்.

 

அச்சுறுத்தல்களையும் கையூட்டுகளையும் இறுதியாக என்னைக் கடந்து வரும்படி செய்தது எது?

ஜான்பெர்கின்ஸ்
ஜான்பெர்கின்ஸ

இதற்கு ஒரு சுருக்கமான பதிலைச் சொல்லவேண்டுமானால் பட்டம் பெற்றபின் உலகைத் தனியே எதிர்கொள்ளச் சென்ற என் ஒரே மகள் ஜெஸிகாவைத்தான் குறிப்பிட வேண்டும். நான் சமீப்திதல் இந்தப் புத்தகத்தை வெளியிடுவது பற்றிச்சிந்தித்து வருகிறேன் என்பதை அவளிடம் சொல்லி என் அச்சத்தைப் பகிர்ந்து கொண்டபோது அவள் சொன்னாள் “கவலைப்பட வேண்டாம் அப்பா. அவர்கள் உனக்கு முடிவு கட்டினால் நீவிட்ட இடத்திலிருந்து நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் நான் பெற்றுத்தர போகும் பேரக்குழந்தைகளுக்காக இதை நாம் செய்தே ஆக வேண்டும்.” இதுதான் அந்தச் சுருக்கமான பதில்.

 

விரிவான பதில் இதுதான்: நான்பிறந்து வளர்ந்த நாட்டின் மேல் எனக்குள்ள அர்ப்பணிப்பு உணர்வு நமது நாட்டின் தந்தையர் கொண்டிருந்த இலட்சியங்களின் மேல் நான் கொண்டுள்ள அன்பு உலகின் அனைத்து மக்களுக்கும் வாழ்வு விடுதலை மகிழ்ச்சிக்கான தேடல் ஆகியவற்றை வாக்களிக்கும் அமெரிக்கக்குடியரசின் பால் எனக்குள்ள இந்தக் குடியரசை உலகப் பேரரசாக மாற்றிக்கொண்டிருக்கும் போது இனிமேலும் மௌனமாக இருக்கக்கூடாது என்று நான் செய்த தீர்மானம் ஆகியவையே. இதுவும் ஒரு நீணட பதிலின் சாராம்சம்தான். வரவிருக்கும் அத்தியாயங்களில் இப்பதில் மேலும் விரிவாக விளக்கப்படும்.

 

இது ஓர் உண்மைக்கதை. இதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வாழ்ந்திருக்கிறேன். இதில் பெற்றுள்ள இடங்கள் மக்கள் உரையாடல்கள் உணர்வுகள் அனைத்துமே என் வாழ்ககையின் பகுதிகள்தான். இது எனது தனிப்பட்டகதை என்றாலும் அது நமது வரலாற்றை வடிவமைத்த நாம் இப்போதுள்ள இடத்திற்கு நம்மைக் கொண்டுவந்து சேர்த்த நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய உலக நிகழ்வுகளின் பின்னணியில் நிகழ்ந்தது. இந்த அனுபவங்கள் மற்றும் உரையாடல்களைத் துல்லியமாகத் தர எல்லா முயற்சிகளையும் எடுத்து இருக்கிறேன். வரலாற்று நிகழ்வுகள் பற்றி நான் விவாதிக்கும் போதெல்லாம் உரையாடல்களைத் திரும்ப வழங்கும் போதெல்லாம் வெளியிடப்பட்ட ஆவணங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் என்னுடைய மற்றும் அந்நிகழ்களோடு தொடர்புடைய மற்றவர்களது நினைவுகள் முற்றுபெறாத எனது ஐந்து மூலப்பிரதிகள் மற்ற ஆசிரியர்களது வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமாக முன்பு கிடைக்கப் பெறாமல் இருந்த அல்லது இரகசியமாக வைக்கப்பட்டிருந்த தகவல்களை வெளிப்படுத்தும் நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே செய்துள்ளேன். இந்நூலில் குறிப்பிடப்படும் விஷயங்கள் குறித்து இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பும் வாசர்களுக்காக இறுதியில் குறிப்புகளைத்தந்துள்ளேன். சில இடங்களில் ஓட்டம் தடைப்படக்கூடாது என்பதற்காக ஒருவரோடு பலநேரங்களில் நடந்த உரையாடல்களை ஒரே உரையாடலக மற்றித் தந்திருக்கிறேன்.

 

உண்மையில் எங்களை நாங்களே பொருளாதாரை அடியாட்கள் என்று அழைத்துக்கொள்கிறோமா என”று பதிப்பாளர் கேட்டார். ஆமாம் என்று நான் உறுதியளித்தேன். பெரும்பாலும் அதன் முதலெழுத்துகளை (நாஅள) கொண்டு மட்டுமே எங்களை நாங்கள் அழைத்துக்கொண்டோம் என்ற போதிலும் உண்மையிலேயே 1971ல் எனது குருவான கிளேடினுடன் வேலை செய்யத் தொடங்கிய முதல் நாளிலேயே அவள் எனக்கு அளிக்கப்பட்ட வேலை உன்னை ஒரு பொருளாதார அடியாளாக உரவாக்குவதுதான். உன்மனைவி உட்பட இது யாருக்கும் தெரியக்கூடாது. என்று அறிவித்திருந்தாள். பின்பு ஒருமுறை இதில் கால்வைத்து விட்டால் பின்பு வெளியே போவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்ற வேறு என்னை எச்சரித்தாள்.

 

நான் அடிவைத்த துறையின் அடிநாதமான பொய்ரைமக்குக் கிளேடின் ஒரு கவர்ச்சிகரமான உதாரணம். அழகும் புத்திசாலித் தனமும் அவளை மிகவும் சக்தி வாய்ந்தவளாக்கியிருந்தன. எனது பலவீனங்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தனக்குச் சாதகமான விதத்தில் மிகச் சரியாக அவள் பயன்படுத்தினாள். இப்பணியை அவள் செயல்படுத்திய விதம் அமைப்பிற்குப் பின்னால் உள்ளவர்கள் எவ்வளவு நுணுக்கமானவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டியது.

 

நான் செய்யவேண்டியது என்ன என்பதை விவரித்தபோது கிளேடின் ஒளிவுமறைவு எதையும் வைத்துக் கொள்ளவில்லை.அமெரிக்க வணிக நலன்களை முன்னின்றுத்தும் விரிந்த வலைப்பின்னலின் பகுதியாக மாறுவதற்கு உலகத் தலைவர்களைத் தூண்டுவது. முதலில் இந்தத் தலைவர்கள் மீளமுடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள். அது அவர்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். பின்பு நமது அரசியல் பொருளாதார இராணுவத் தேவைகளுக்காக அவர்களைப்பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மாற்றாக அவர்கள் தங்கள் மக்களுக்குத் தொழில் பூங்காக்கள் மின்சக்தி நிலையங்கள் விமான நிலையங்கள் அமைத்துத் தருவதன் மூலம் தங்கள் நிலையைப் பலபடுத்திக் கொள்வார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொறியியல் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள் என்று அவள் சொன்னாள்.

 

இந்த அமைப்பு மூர்க்கவெறிகொண்டு ஓடியதன்விளைவுகளை இன்று நாம் பார்க்கிறோம். மனிதத்தன்மையற்ற சூழல் நிலவுகின்ற மனிதர்களைக் கசக்கிப் பிழிகின்ற ஆசியத் தொழற்சாலைகளில் வேலை செய்து வரும் தொழிலார்களுக்க நமது மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஏறத்தாழ அடிமைகளுக்குத்தரப்பட்டது போன்ற கூலியையே தந்து வருகிறார்கள். எண்ணெய்நிறுவனங்கள் வேண்டுமென்றே விஷப் பொருட்களை(வழஒளை) மழைக் காடுகளினூடே ஓடும் ஆறுகளுக்குள் கொட்டுகின்றன. அவை திட்டமிட்டே விலங்குகளையும் தாவரங்களையம் அழிப்பதோடு பழம் பண்பாடுகளைப் பின்பற்றும் மக்களையும் கூட்டங்கூட்டமாகக் கொன்று குவிக்கின்றன. மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எச்.ஐ.வினால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அளிக்க மறுக்கின்றன. நமது நாட்டிலேயே பன்னிரண்டு மில்லியன் மக்கள் அடுத்தவேளை உணவைக் குறித்துக் கவலை கொள்ளும் நிலையில் உள்ளனர். ஆற்றல் வளத்துறை என்ரானை உருவாக்குகிறது. பணக்கார நாடுகளின் மக்கள்தொகையில் ஐந்தல் ஒரு பகுதியனரின் வருமானத்திற்கும் இடையேயான விகிதாச்சாரம் 1960லிருந்து 70வரை 30.1ஆகஇருந்தது. 1995ல் 74.1 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா ஈராக்கில் போர் நடந்த 87 பில்லியன் டாலர் செலவிடுகிறது. ஆனால் உலகமக்கள் அனைவருக்கும் சுத்தமான நீரும் போதுமான உணவும் மற்ற அடிப்படை வசதிகளும் கல்வியும் அளிக்க இதில் பாதித் தொகையே தேவைப்படும் என்று ஐ.நா சபை மதிப்பிட்டுள்ளது.

 

இப்படியிருக்கும்போது தீவிரவாதிகள் ஏன் நம்மைத் தாக்குகிறார்கள் என்ற நாம் அப்பாவித்தனமாக ஆச்சரியப்படுகிறோம்.

 

திட்டமிட்ட சதியே நமது தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம் என்று ஒருசிலர் சொல்கிறார்கள். அது அவ்வளவு எளிமையானதாக இருக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.__________

 

(என்ரான்: மின் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குறுகியகாலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிய மாபெரும் பன்னாட்டு நிறுவனம் பின்பு இந்நிறுவனம் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி மூடப்பட்டது.(மொ_ர்)

 

(ஆண்டர்சன் : பிரபலமான கணக்குத் தணிக்கை நிறுவனம்(மொ_ர்)

 

அப்படியிருந்துவிட்டால் இந்தச் சதியாலோசனையில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் வளைத்துப் பிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டுவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் இந்த அமைப்பு ஒரு சதியைவிடப்பல மடங்கு அபாயகரமான ஒன்றால் உந்தித் தள்ளப்படுகிறது. சதியாலோசனையில் ஈடுப்ட்டுள்ள ஒரு குழுவால் அல்ல வேதவாக்கியத்துக்குச் சமமாக மதிக்கப்படும் ஒரு கோட்பாட்டாலயே இந்த அமைப்பு வழிநடத்தப்படுகிறது. எல்லாப் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க நலன்களும் மேலும் பரவலாக்கப்படும் என்பதுதான் அந்தக் கோட்பாடு. அதற்கு ஒரு பின்விளைவும் உண்டு. பொருளாதார வளர்ச்சி என்ற நெருப்பைக்கிளறி விடுவதில் முன்னணியில் உள்ளவர்கள் மேன்மைபடுத்தப்படவும் பரிசளிக்கப்படவும் வேண்டும. அதே நேரத்தில் பின்னணியில் உள்ளவர்கள் சுரண்டலுக்குஉட்படுத்தப்படவேண்டும் என்பதுதான் அது.

 

இந்தக் கோட்பாடு தவறானது. பலநாடுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள் தொகையில் ஒரு சிறய பகுதியினருக்கே பலனளிப்பதையும் பெரும் பகுதியினருக்கு அது அழிவையும் வறுமையையுமே அளிப்பதையும் நாம் அறிவோம். இந்த அமைப்பை நடத்திச் செல்லும் தலைவர்களுக்குச்சிறப்பு அந்தஸ்த்து அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தால் இந்த அநீதி நியாயப்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்தே நமது பிரச்ச்னைகள் பலவற்றக்க அடிப்படைக் காரணமாகவும் சதி பற்றிய கருத்துக்கள் பரவுவதற்கு ஊற்றுக்கண்ணாகவும் இருக்கிறது. பேராசைப்படுவதற்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பரிசளிக்கப்படும்போது பேராசை நியாயமானதாக தூண்டுகோளாக உந்துவிசையாக ஆகிவிடுகிறது. பூமியின் இயற்கை வளங்களை அரக்கதனமான நுகர்வுக்கு உட்படுத்துவதை புனிதமான ஒன்றாகக் கருதும்போது சமனற்ற வாழ்க்கை வாழும் இந்தச் சிறுபான்மை மேட்டுகுடியினரைப் பின்பற்றும்படி நமது குழந்தைகளுக்குக்கற்றுத்தரும்போது சிறபான்மையினரான மேல்தட்டு வர்க்கத்தினரின் சேவர்களாகப் பெரும்பான்மை மக்களை வரையறுக்கும் போது நாம் தொல்லையை நாடிப் போகிறோம். நாம் தேடியது கிடைக்கிறது.

 

உலகப் பேரரசை நோக்கிய பாய்ச்சலில் முன்னிற்கும் நிறுவனங்களும் வங்கிகளும் அரசாங்கங்களும் (சருக்கமாகச் சொல்வதானால் நிறுவன அதிகாரவர்க்கம்) தங்கள் அதிகாரங்களையும் பண பலத்தையும் பயன்படுத்தி நமது பள்ளிகளும் ஊடகங்களும் இந்தக் கற்பனையான கருத்தையும் அதன் விளைவுகளையும் ஆதரிக்கும்படி செய்கின்றன. இந்த அரக்கத்தனமான இயந்திரமயமான உலகப் பண்பாட்டின் தழுராத பசி கண்ணில் தென்படும் அனைத்தையும் நுகர்ந்து விட்டு இறுதியில் தன்னைதானே விழுங்கிக் கொள்வதைத் தவிர வேறு மாற்று வழி இல்லாத ஒரு கட்டத்திற்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்திருக்கிறது.

 

நிறுவன _ அதிகாரவர்க்கம் என்பது ஒரு சதிக்கும்பல்ல: அது சில பொதுவான மதிப்பீடுகளையும் லட்சியங்களையும் முன்னிறுத்தியுள்ளது. இந்த வர்க்கத்தின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று இந்த அமைப்பை நிலைநிறுத்துவதும் அதை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதுமாகும். உல்லாசப் படகுகள் ஜெட் விமானங்கள் போன்றவை எல்லையற்ற நுகர்வுக் கலாச்சாரத்தில் நம்மைத் தள்ளுவதற்கான தூண்டு கோல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்களை வாங்குவது மறுக்க முடியாத கடமை: பூமியைக் கொள்ளையிடுவது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது. இக்கருத்தை நம்மீது திணிக்கச் சாத்தியமான எல்லா வாய்ப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பிற்கு ஏலம் கூறும் வேலையைச் செய்ய என்னைப் போன்றவர்களுக்குப் பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது. நாங்கள் எங்கள் வேலையில் தோல்வியடைந்தால் இன்னும் மோசமான அடியாட்கள் _ குள்ளநரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் _ அரங்கிற்கு வருவார்கள். அவர்களும் தோல்வியடையும் பட்சத்தில் அந்த வேலை இராணுவத்தின் தலையில் சுமத்தப்படுகிறது.

 

இந்நூல் ஒப்பீட்டளவில் ஒருசிறிய குழுவில் நான் பொருளாதார அடியாளாக இருந்தபோது நடந்த நிகழ்வுகள் பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாகும். அதேபாத்திரத்தை ஆற்றக்கூடியவர்கள் இப்போது ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கு இன்னும் அழகான பட்டங்கள் சூட்டப்படுகின்றன. அவர்கள் மன்சான்டோ ஜெனரல் எலெக்ட்ரிக் நைக் ஜெனரல் மோட்டார்ஸ் வால்_மார்ட் உள்ளிட்ட உலகின் மாபெரும் நிறுவனங்களில் உள்ள நடைபாதைகளில் நடை பயில்கிறார்கள். உண்மையில் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னுடையதைப் போலவே அவர்களுடைய கதையும்தான்.

 

இது உங்கள் கதையும்கூட உண்மையாகவே முதல்முதலாக உலகம் முழுவதையும் கட்டியாளும் ஒரு பேரரசின் கதை. இந்தக் கதையை நாம் மாற்றியமைக்காவிட்டால் அது நிச்சயம் துன்பமயமாகத்தான் முடியும் என்று வரலாறு காட்டுகிறது. எந்தப் பேரரசும் நீடித்து நிலைத்திருந்ததே கிடையாது. அவை ஒவ்வொன்றுமே பயங்கரமான தோல்வியையே தழுவியுள்ளன. தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான பாய்ச்சலில் அவை பல பண்பாடுகளை அழிக்கின்றன. தாங்களும் இறுதியில் அழிவையே சந்திக்கின்றன. எந்த நாடும் நாடுகளின் கூட்டணியும் மற்றவர்களைச்சுரண்டி நீண்டகாலம் செழித்திருந்து விட முடியாது.

 

இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம் உண்மையை வெளிபடுத்துவதும் அதன்மூலம் நம் வரலாற்றை மாற்றியமைப்பதுமேயாகும். நாம் எப்படி உலகின் மூலவளங்களின் மேல்தீராப் பசியை உருவாக்கும் பொருளாதார இயந்திரத்தால் சுரண்டபடுகிறோம் அது எப்படி அடிமைத்தனத்தை முன்னின்றும் அமைப்புகளை உருவாக்குகின்றது என்பதை நம்மில் போதுமான அளவினர் உணர்ந்து கொண்டால் அதை இனிமேலும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்பது எனக்கு உறுதியாகத் தெரிகிறது. சிலர் மட்டும் செல்வத்தில் மூழ்கித்திளைக்கும் போது பெரும்பாலோர் வறுமையிலும் சீரழிந்துபோன இயற்கைச் சூழலிலும் வன்முறையிலும் வதைபடும் இவ்வுலகில் நம் பாத்திரத்தை மறு ஆய்வு செய்வோம். சமூகநீதி ஜனநாயகம் அன்பு ஆகியவற்றை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான பயணத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்.

 

பிரச்சனை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது தீர்வை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடி. பாவம் செய்ததை ஒப்புக் கொள்வதே பாவ மன்னிப்பின் தொடக்கம். எனவே இந்த நூல் நமது மீட்சிக்கான தொடக்கமாக இருக்கட்டும். அதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ளவும் சமத்துமிக்க கண்ணியமான சமூகங்கள் பற்றிய கனவை நனவாக்கவும் அது நமக்குத் தூண்டுதலாக இருக்கட்டும்.

 

முடிவுரை :

இந்த நூலின் இறுதிக் கட்டத்திற்கு வந்து சோந்து விட்டோம். ஒரு புதிய தொடக்கத்துக்கும்தான். உலக பேரரசை உருவாக்குவதற்காகப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நிறுவன அதிகாரவாக்கத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா என்ற திகைப்பு உங்களுக்கு ஏற்படலாம். இந்தப் பைத்திய்க்காரதனத்தை தற்கொலைப் பிடிவாதத்தை தடுத்து நிறுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கும் என்று நீங்கள் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கலாம். நீங்கள் இந்நூலை ஒதுக்கிவிட்டு உலகை எதிகொள்ளத் தயாராக உள்ளீர்கள்.

உங்களுக்கு ஆலோசனைகள் தேவைபடுகின்றன. என்னால் சில கருத்துக்களை உங்களுக்கு வழங்க முடியும்.

கடந்த அத்தியாயத்தில் நீங்கள் படித்த பெக்டெல் ஹாலிபட்டன் பற்றிய செய்தி இப்போது பழைய கதையாகிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதை நீங்கள் படிக்கும் போது அது அவசியமற்றதாகக்கூடத் தோன்றலாம். ஆனால் அந்த செய்திகளின் முக்கியத்துவம் அது வெளிவந்த காலத்தையும் கடந்து செல்கின்றன. பத்திரிக்கைச் செய்திகள் தொடர்பான உங்கள் கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றக்கூடும் என்று நான் எதிப்பாக்கிறேன். ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லப்பட்ட செய்திகளைக் கொண்டு சொல்லப்படாத செய்திகளை அறிந்துக்கொள்ளவும். ஒவ்வொரு வானொலி. தொலைக்காட்சி செய்தியையும் ஆழமாகப் பாசீலிக்கவும் கேள்விக்குட்படுத்தவும் இந்த நூல் உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகின்றேன்.

 

கண்ணால் காண்பதெல்லாம் உண்மையல்ல. என்.பி.சி. செய்தி நிறுவனம் ஜெனரல் எலெக்ட்க் நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஏ.பி.சி. டிஸ்னி நிறுவனத்திற்குச் சொந்தமானது. சி.பி.எஸ். வயாகாமுக்குச் சொந்தமானது. சி.என்.என். பிரம்மாண்டமான ஏ.ஓ.எல். டைம் வார்னர் கூட்டமைப்பின் பகுதியாகும். நமது செய்தி பத்திரைக்கைகள், வார மாத இதழ்கள், பதிப்பகங்கள் பெரும்பாலும் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமானவைதான். நமது ஊடகங்கள் அனைத்துமே தனது எஜமானர்களின் நலனுக்காக செய்திகளைத் தித்துப் புரட்டக் கூடிவைதான். நமது செய்தி ஊடகங்களே நிறுவன _ அதிகாரவாக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் செயல்பட்டு வருகின்றன. நமது அனைத்து செய்தித் தொடர்புகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரிகள் தங்களது கடமை என்ன என்பதைத் தெளிவாக அறிந்தவாகள். இந்த அமைப்பை நிலை நிறுத்துவதற்கும்  பலபடுத்துவதற்கும் தங்களை அர்பணித்துக் கொண்டர்கள். அதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டர்கள். தங்கள் வேலையில் அவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். தங்களது எதிரிகளைப் பொருத்தவரை அவர்கள் ஈவு இரக்கமற்றவர்கள். எனவே வெளிபூச்சிக்கு உள்ளே மறைந்து கிடக்கும் உண்மைகளைக் கண்டெடுக்கும் பொறுப்பு உங்கள் தோள்களில் விழுகிறது. நீங்கள் கண்டெடுத்த உண்மைகளை உங்கள் குடும்பத்தினரிமும் நன்பர்களிடமும் வெளிப்படுத்துங்கள். பேசுங்கள் பரப்புங்கள்.

 

உங்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு பட்டியலை என்னால் தர முடியும். உதாரணமாகப் பெட்ரோலைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 1990_ல் ஈராக்கை தாக்குவதற்கு முன்பு நமது எண்ணெய் இறக்குமதி எண்பது இலட்சம் பீப்பாய்களாக இருந்தது. 2005_ல் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பு அது ஒரு கோடியே இருபது இலட்சம் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. அடுத்தமுறை ஷாப்பிங் செல்லவேண்டும் என்ற விருப்பம் எழும்போது அதற்கு பதிலாக ஒரு புத்தகம் படியுங்கள். அல்லது தியானம் செய்யுங்கள். உங்கள் வீட்டின் பரப்பளவை ஆடைகளை அலமாரியை அலுவலகத்தை முடிந்தவரை சுருக்கிக்கொள்ளுங்கள். பாவப்பட்ட மக்களை அடிமைகள் போல பிழிந்தெடுக்கும் அல்லது சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிப்புத் தெரிவியுங்கள். தடையற்ற வணிக ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவியுங்கள்.

 

தற்போதுள்ள அமைப்பிலேயே பெரும் அளவுக்கு நாம் நம்பிக்கை கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அடிப்படையிலேயே அவை தவறானவை அல்ல. அவை கட்டாயம் நிறுவன_ அதிகாரவாக்கத்தை ஆதரித்துத்தான் ஆக வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்று என்னால் உங்களுக்கும் சொல்ல முடியும். தற்போதைய பிரச்சனைகளுக்கான காரணம் நிறுவனங்களின் தவறான போக்கு அல்ல.  மாறாக பொருளாதார வளர்ச்சி குறித்த தவறான கோட்பாடுகளே ஆகும். நிறுவனங்களில் குறைபாடுகள் இல்லை. அவை செயல்படும் விதத்தையும் அவற்றின் அதிகாரிகள் புரியும் செயல்களையும் பற்றிய நமது புரிதல்களில்தான் தவறு உள்ளது.

 

இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பலம் அனைத்தும் உலக மக்களின் நன்மைக்குப் பயன்படுத்தப்பட்டால் உலகம் எவ்வளவு அற்புதமானதாக மாறிவிடும்! நைக், டொனால்டு, கொகோகோலா போன்ற நிறுவனங்கள் ஏழைகளுக்கு உணவளிப்பதையும் (இயற்கையை சீரழிக்காத வகையில்) உடையளிப்பதையும் தங்களது குறிக்கோளாக ஏற்றுக்கொண்டால் எப்படியிருக்கும்? கற்பனை செய்து பாருங்கள். நிலவில் மனிதனை கால்பதிக்க செய்வதைவிட சோவியத்ய யூனியனைத் துண்டாடுவதைவிட மாபெரும் நிறுவனங்களை கட்டியெழுப்புவதைவிட வறுமையை ஒழிப்பது நடைமுறையில் எளிதானது. கல்வி பற்றிய நமது  அணுகுமுறையில் புரட்சிகரமன மாற்றங்கள் ஏற்பட வேண்டும். நமது குழந்தைகளை சிந்திக்க தூண்ட வேண்டும். கேள்விகள் கேட்பதற்கும் செயல்படுவதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். நீங்களே ஒரு முன்னுதாரனமாக இருக்கலாம். நீங்கள் ஆசிரியராக இருந்து கற்றுக்கொடுங்கள். அதே நேரத்தில் மாணவராகவும் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உங்கள் சொந்த உதாரணத்தால் உணர்வூட்டுங்கள்.

 

உங்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சில குறிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நான் உங்களிடம் கோருகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்  போதெல்லாம் வெளிபடையாக பேசுங்கள். கடிதங்கள் எழுதுங்கள். மின்னஞ்சல்கள் அனுப்புங்கள். தொலைபேசியையும் பயன்படுத்துங்கள். அறிவு தெளிவுப் பெற்ற நபர்களை பள்ளி வாரியங்களுக்கும் லவுன்டி வாரியங்களுக்கும் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்களியுங்கள். முற்போக்கான உள்ளுர் சட்டங்களை ஆதரித்து வாக்களியுங்கள். செய்வதை மனபூவமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.

 

பத்தாண்டுகளுக்கு முன்பு உலகம் நீங்கள் நினைக்கிறபடிதான் இருக்கும் என்ற ஷூவார்கள் என்னிடம் சொன்னதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். நாம் இந்த மாசு விளைவிக்கும் தொழிற்சாலைகள், மக்கள் நிறைந்த நகரங்கள், நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலைகள் என்ற பயங்கர கனவை விட்டுவிட்டு இயற்கையை மதிக்கும் சமூக பொறுப்புணர்வு கொண்ட ஒரு புதிய இனிய கனவுக்கு மாறிச்செல்லலாம். நம்மை மாற்றிக்கொள்வது நமது சக்திக்கு உட்பட்டதுதான்.

 

இன்னும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கு நமக்குள்ள வியக்கத்தக்க வாய்ப்புகளை இப்போதே பட்டியலிடுகிறேன். எல்லோருக்கும் போதுமான உணவும் நீரும் தேவை. தினமும் லட்சக்கனக்கான மக்களைப் பலி கொள்ளும் தொற்றுநோய்களை குணமாக்குவதற்கான மருந்துகள், உயிக்காக்கும் சேவையை உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள், கல்வியறிவை அதிகப்படுத்தும் வாயப்புகள். உலகில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவாகளுடன் தொடர்புகொள்வதை சாத்தியமாக்கக்கூடிய கருவிகள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நுண்ணிய தொழில்நுட்பங்கள் என அவையனைத்தும் உருவாக்கப்பட வேண்டும்.

 

நீங்கள் பிரச்சனையையும் அதற்கான தீர்வுகளையும் மற்றவர்களுக்குப் புரியவைக்க சில ஆலோசனைகள் கூறுகிறேன்.

 

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற இந்நூல் குறித்து வாசகர் கூட்டங்கள் உள்ளுர் புத்தகக்கடைகளிலோ நூலகங்களிலோ நடத்துங்கள். (இதற்கான குறிப்புகள்  http://www.johnperkns.org என்ற இணையதளத்தில கிடைக்கும்).

 

உங்களுக்கு பிடித்தமான துறை தொடர்பாக ஓர் உரையை அருகில் உள்ள சிறுவர் பள்ளியில் நிகழ்த்த தயார் செய்யுங்கள். (சமையல் விளையாட்டு எறும்புகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் அந்த உரை இருக்கலாம்) இந்த உரையை மாணவ்ர்களுக்கு சமூகம் குறித்த விழிப்புணர்வை அளிக்கப் பயன்படுத்துங்கள்.

 

இந்த நூலும் இதைப் போன்ற மற்ற நூல்களும் உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உங்களுக்கு வேண்டியவாகள் அனைவருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்புங்கள்.

 

நாம் கூறிய இந்த யோசனைகள் பலவற்றை ஏற்கனவே நீஙகள் சிந்தித்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். இவற்றில் உங்களுக்கு மிகவும் ஏற்றத்தாக தோன்றும் ஒன்றிரண்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது நீங்களும் நானும் ஆற்ற வேண்டிய மாபெரும கடமையின் ஒரு பகுதி என்பதை உணாந்து கொள்ளுங்கள். நம்மையும் மற்றவ்களையும் விழிபுணர்வு அடையச் செய்வதற்காக எந்த நிபந்தனையும் இன்றி நம்மை நாமே அற்பணித்துக் கொள்ள வேண்டும். நம் இதயங்களையும் அறிவையும் திறந்து வைக்க வேண்டும்.

 

எப்படி இருந்தாலும் இந்த புத்தகம் ஒரு மருந்துச்சீட்டு அல்ல. இது ஒரு எளிய ஒப்புதல் வாக்குமூலம். தன்னை ஒரு பகடைக்காயாக கொருளாதார அடியாளாக மாற்ற அனுமதித்த ஒருவனின் வாக்குமூலம். லஞ்ச ஊழலில் மூழிகிப்போன ஓர் அமைப்பு ஏராளமான பணத்தையும். தவறுகளை நியாயபடுத்த வசதியான சாக்குப்போக்குகளையும் வாரி வழங்குகிறது என்பதால் அதைச் சரணடைந்த ஒருவனின் ஒப்புதல் வாக்குமூலம். எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தாலும் தன் பேராசையை எப்போதுமே நியாயபடுத்தி வந்த ஒருவனின், பாவப்பட்ட மக்களைச் சுரண்டவும்  இவ்வுலகை கொள்ளையடிக்கவும் முடிவெடுத்த ஒருவனின், உலகில் பணக்கார நாடுகளில் பிறந்த ஒன்றின் காரணத்தினாலயே அதை முழூமையாகக் பயன்படுத்திக் கொண்ட ஒருவனின் ஒப்புதல் வாக்குமூலம் இந்த நூல். தனது சமூகம் செல்வமிகுந்ததாக இருநதாலும் தனது பெற்றோர்கள் பணம் படைத்தவ்களாக இல்லை என்பதில் கழிவிரக்கம் கொண்டிருந்த ஒருவனின் பொருளாதார வளர்ச்சிப்பற்றிய அத்தனை நூல்களையும் படித்த பின்பு உலகப்பேரரசு மக்களை கொன்றுக் குவிக்கிறது. சுற்றுச்சூழலை சர்வநாசம் செய்கிறது என்பதை அறிந்திருந்தும் அதை வளர்த்தெடுப்பதற்காக தன்னால் ஆன அனைத்தையும் செய்த ஒருவனின், இதே வேலையை செய்வதற்கு மற்றர்களுக்கு பயிற்சி அளித்த ஒருவனின், உலக பேரரசின் நடவடிக்கைகளைச் சட்டபூவமாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை கண்மூடிதனமாகப் பின்பற்றிய ஒருவனின் ஒப்புதல் வாக்குமூலம் இந்நூல்.

 

இந்நூலைக் கட்டாயமாக நீங்கள் உங்கள் சொந்த அனுபவங்களுடன் இணைந்துப் பார்ப்பீர்கள். அது உங்களுக்கும் எனக்குமிடையே பொதுவான பல விஷயங்கள் உள்ளன என்பதைக் காட்டும். நாம் வெவ்வேறு பாதைகளில் பயணம் செய்திருக்கலாம். ஆனால் நமது வாகனங்கள் ஒரே மாதிரியானவை. நமது எரிபொருளும் ஒன்றேதான். நாம் உணவருந்துவதற்கு நிறுத்திய உணவகங்களும் ஒரே நிறுவனத்துச் சொந்தமானவைதான்.

 

என்னைபொறுத்தவரை விழித்தெழுவதற்கு அவசியமானது தவறுகளை ஒப்புக்கொள்வதாகும். எல்லா ஒப்புதல் வாக்குமூலங்களையும் போலவே இதுவும் விடுதலைக்கான முதல்படியாகும்.

 

இப்போது உங்கள் முறை. நீங்கள் உங்கள் சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்க வேண்டி உள்ளது. நீங்கள யார் என்பதைப் பற்றியும் இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏன் இப்போதுள்ள இடத்திலிருக்கிறீகள் என்பது பற்றியும் நீங்கள் கர்வமடையக்கூடிய அல்லது வெட்கமடையகூடிய செயல்களை ஏன் செய்தீர்கள் என்பதை பற்றியும். அடுத்து எங்கே போக விரும்புகிறீர்கள் என்பது பற்றியும் முழூமையாகவும் தெளிவாகவும் அறிந்துக் கொண்டால் ஒரு விடுதலை உணர்வை அடைவீர்கள். அது இன்பமயமானதாக இருக்கும். இந்த புத்தகத்தை எழுதும் அனுபவமானது சில நேரங்களில் வலியையும் சில நேரங்களில் அவமான உணர்ச்சிகளையும அளித்தது. இந்த அனுபவம் முன்னப்போதும் நான் அனுபவித்திராத ஒரு பீதியை என்னுள் ஏற்படுத்துகிறது. ஆனால் இதே அனுபவம் முன்னெப்போதும் நான் உணர்ந்திராத ஒரு விடுதலை உணர்வையும் பேரிண்பத்தையும் அள்ளித் தந்துள்ளது.

உங்களை நீங்களே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் எதை ஒப்புக்கொள்ள வேண்டும்? நான் எப்படி மற்றவாகளை ஏமாற்றினேன்? இந்த மோசமான அமைப்பு என்னை அடிமைக் கொள்ள நான் எப்படி அனுமதித்தேன்?. நமது நாட்டை நிறுவியர்களின் கனவுலகளை நனவாக்க நான் என்ன செய்யப்போகிறேன்?. வாழ்க்கை சுதந்திரம் இன்பத்திற்கான தேடல் என்ற நமது நாட்டின் அடிப்படை லட்சியங்களை நமது குழந்தைகளும் உலகில் உள்ள மற்ற குழந்தைகளும் அடைவதற்கு வாய்ப்பளிக்க என்ன செய்ய போகிறேன்? தேவையற்ற பணியை போக்கவும் செப்டம்பா 11ஐப்போல் இன்னொரு நாள் வராமல் தடுக்கவும் நான் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்க போகிறேன்? அரக்கத்தனமான சமநிலையற்ற வாழ்க்கை வாழும் மனிதர்கள் இறக்கத்துக்குரியவர்களே தவிர நாயகர்களாகப் பின்பற்றக்கூடியவர்கள் அல்ல என்தையும் அவர்களது பண்ணை வீடுகளும் உல்லாசப் படகுகளும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்று அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள செய்திகள் ஊடங்கங்கள் பரப்பி வரும் பொய்களை நம் குழந்தைகள் புரிந்துக் கொள்ள நாம் எப்படி உதவப்போகிறோம்? கற்றுக்கொள்ளவும் கற்றுத்தரவும் என்ன தளங்களை பயன்படுத்த போகிறோம்?

 

இவை நமது காலத்துக்கு மிகவும் அவசியமான கேள்விகள். நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த வழியில் தெளிவாகவும் தன்னிச்சையாகவும் இக்கேள்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. தாமஸ்பெய்னும் ஜெபர்சனும் ஏனைய தியாகிகளும் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரை அவர்களுடைய சொற்கள் நமக்கு உணர்வூட்டி வருகின்றன. மாபெரும் வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் ஏகாயபத்தியத்தை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தங்களது பண்ணைகளையும் மீன்பிடி படகுகளையும் விட்டுவிட்டுக் கிளம்பியவர்களின், அடிமைகளின் விடுதலைக்காக போராடியவர்களின் பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் ஆன்மாக்கள் நம்மோடு பேசுகன்றன. அவர்களுக்கு உணவும் உடையும் ஆதரவும் அளித்தவர்களின் ஆன்மாக்களும் போர்களங்களில் நாம்பெற்ற வெற்றிகளைக் காத்துநின்ற ஆசிரியர்கள் கவிஞர்கள் ஓவியர்கள் விஞ்ஞானிகள் மற்றும் உடலுழைப்பாளர்களின் ஆனமாக்களும் நம்மைக்கவனித்து கொண்டுதான் இருக்கின்றன.

 

காலம் கைகளில் உள்ளது. போரில் இறங்குவதற்கும், கேள்விகள் எழுப்புவதற்கும், ஆனமப் பரிசோதனை செய்வதற்கும், செயல்படுவதற்கும் இதுதான் நேரம்.

 

உங்கள் வாழ்க்கையில் தற்செயலாக நடைபெற்ற சில நிகழ்ச்சிகளும் அந்த நேரத்தில் நீங்கள் எடுத்த முடிவுகளும்தான் உங்களை இப்போதுள்ள இடத்துக்குக் கொண்டு வந்துள்ளன.

நான் பாஸ்டான் பல்கலைக்கழகத்தில் வணிகப் பள்ளியில் சேர்ந்த நாளிலேயே இந்த கெர்மிட் ரூஸ்வெல்ட் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. அமெரிக்க உளவு நிறுவனங்கள், என்.எஸ்.ஏ போன்றவை பொருளாதார அடியாட்களை அடையாளம் காண்பார்கள். பின்பு இப்படி உளவு நிறுவனங்கள் பணக்கமர்த்திக் கொள்ளும். இந்த பொருளாதார அடியாட்கள் ஒரு போதும் அரசிடமிருந்து சம்பளம் பெறுவதில்லை. தனியார் நிறுவனங்களே அவர்களுக்கு ஊதியம் வணங்குகின்றன. இதனால் பொருளாதார அடியாட்களின் சதிவேலைகள் வெளிபட்டுவிட்டால் அவற்றுக்குக் காரணம் தனியார் நிறுவனத்தின் பேராசைதான், அரசுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று கூறப்பட்டு அத்தோடு முடித்துக் கொள்ளப்பட்டுவிடும். அத்துடன் இந்த அடியாட்களைப் பணிக்கமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு அரசின் உளவு நிறுவனங்களிலிருந்தும், பன்னாட்டு வங்கிகளிடமிருந்தும் பணம் வழங்கபட்டாலும் (வரி செலுத்தும்வோரின் பணம்தான்) நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு பொதுமககளின் பார்வை (டிடஉ ளஉசரவலை) தகவல் அறியும் உமைச் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தனியார் நிறுவனங்கள் தப்பி விடுகின்றன். வணிக முத்திரை சர்வதேச வாணிபம் உள்ளிட்டச் சட்ட பாதுகாப்புகளும் இந்நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.

 

எனவே கிளேடின் இப்படி முடித்தாள். “நீ முதல் வகுப்பு படிக்கும்போது தொடங்கிய இந்த பெருமை மிகுந்த பாரம்பரியத்தின் அடுத்த தலைமுறைதான் நாம்”.

 

http://www.johnperkins.org

அவரது வலைத்தளம் http://www.johnprkins.org

இதனை தரமிரக்க இங்கே சொடுக்கவும்

A Hitman

Jhonperkins
-சாகித் paraiyoasai@gmail.com
பொருளாதார அடியாள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s