நூல்              : டாக்டர் நார்மன் பெத்யூன் கதை 

நூலாசிரியர்கள்     : சிட்னி கார்டன், டெட் ஆலென்

மொழிபெயர்ப்பு     : சொ. பிரபாகரன்

வெளியீடு : சவுத் விஷன்

கனடாவின் நெஞ்சுக்கூட்டு  அறுவை சிகிச்சை முன்னோடி மருத்துவர்களில் ஒருவர் டாக்டர். நார்மன் பெத்யூன். மருத்துவராக மட்டுமல்லாது சிறந்த ஓவியக் கலைஞராகவும், அறுவைசிகிச்சைக் கருவிகளை வடிவமைத்தவராகவும் மிளிர்ந்தவர். ஸ்பெயின் போர்முனையிலும் சீனப் போர்முனையிலும் தன்னலம் கருதாது அச்சமின்றி பணிபுரிந்தவர். அவரது வாழ்க்கையையும், சிந்தனைகளையும் தொகுத்து வரலாற்று நூல் ஒன்றை ஒரு அற்புதமான நாவலாக எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளனர்.

இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதை உணரமுடியாத வண்ணம் அழகுத் தமிழில் சொ. பிரபாகரன் அவர்கள் மொழிபெயர்துள்ளது நமக்கு கிடைத்தப் பரிசு.

பதிப்பகத்தார்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி அடிக்குறிப்புகளில் ஏற்பட்டுள்ள பக்க எண் மாற்றங்களைத் தவிர்த்திருந்தால் படிப்பாளிக்கு சில சிரமங்களைத் தவிர்த்திருக்கலாம்.

நூலிலிருந்து சில வரிகள்..

மருத்துவர்கள் மக்களது ஆரோக்கியத்தை மேன்மைபடுத்துவதற்கு தங்களை அர்பணித்துக் கொள்ளவேண்டும். இந்த கருதுகோள்படி எத்தனை மருத்துவர்கள் இங்கே மருத்துவம் செய்கிறார்கள்? அப்படி இருப்பதற்கு அவர்களைக் குறைகூற முடியுமோ? முடியாது. அப்படிச் சொல்வதும் தப்பு. நமது நாட்டில் அனைத்து இடங்களிலும் நீர் வினியோகம், கழிவுச்சாக்கடைக் குழாய்கள், சுகாதாரம், மின்சாரம் மற்றும் மற்ற சேவைகளை எல்லாம் கேள்வி முறையில்லாலமல் முறையாக தரப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அதை அடிப்படையான மருத்துவச் சேவையில் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆமாம் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் ஏன் அவைகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது? ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை பற்றி எங்கும் பேசப்படுவதில்லை. இன்னும் ஒரு கிலோ சர்க்கரையைத் தெருவின் மூலையில் உள்ள மளிகைக் கடையில் வாங்குவது போல்தான், இந்த மருத்துவச் சேவையையும் வாங்க வேண்டியுள்ளது. அதற்கு டாலர்களிலும் செண்டுகளிலும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. தையல் கடையைப் போல அற்பத்தனமாகவும், திருப்தியுடனும் நாம் மருத்துவம் செய்வதற்குக் கடைகளைத் திறந்துக் காத்திருக்கிறோம். தையல்காரர் எப்படி ஒரு கோட்டுக்கு ஒட்டுப் போடுகிறாரோ, அப்படி மருத்துவர்கள் கையிலோ அல்லது காலிலோ ஒட்டுப் போடுகிறார்கள். நாம் மருத்துவத்தைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக பணத்தைச் சேர்பதற்கான வியாபாரத்தை செய்கிறோம். தற்போது எது தேவை என்பதை நான் சொல்கிறேன். புதிய மருத்துவக் கொள்கை, உலக ஆரோக்கியப் பாதுகாப்புக்காகப் புதிய கொள்கை, மருத்துவர்கள் பணிபுரிவதற்கான பதிய கொள்கை…

 

(ரஷ்யாவில் நடந்த பிசியாலஜிகல் (Physiology) மாநாட்டில் கலந்துகொண்டபோது}

…..தனது விசாரணைய்யைத் தொடரும்போது அவரது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ஓய்வு வீடுகள், நேரடியான சானடேரியம் போன்றவற்றில் எங்குப் பார்த்தாலும் அவைகள்தான் அவர் பார்த்ததிலேயே மிகவும் ஆடம்பரமாக இருந்தது அரசு கொடுக்கும் சிகிச்சையில் தொழிற்சாலையிலுள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. ஆனால் இங்கே அவர் நாட்டிலோ எல்லாம் அப்படியே தலைகீழாக இருந்தது. இங்கே மருத்துவமனையிலும், சானடேரியத்திலும் அனைத்தும் கட்டணம் இல்லாமல் மருத்துவர் பார்க்கப் பட்டது. அதை அவர்கள் ஏழைகளுக்கு செய்யும் தர்மகாரியமாகச் செய்யவில்லை. மாறாக நோய்யுற்றவர்கள் வைத்தியம் பெறுவது என்பது அவர்களது உரிமையாக அங்கே நிலைநாட்டப்பட்டிருந்தது. சில நோய்களுக்கு தடுப்பு நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என் அதிர்காரபூர்வமாக அங்கு அறிவிக்கப் பட்டிருந்தது. அதில் குழந்தைகளுக்கு இளம்  வயதிலேயே டியூபர்குலின் சோதனை எடுத்துக் கொள்வதும் அவசியம் என ஆக்கப்பட்டிருந்து. இதைத்தான் அவர் தனது நாட்டில் செய்யவேண்டும் என ரொம்பநாளாக கத்திக் கொண்டிருக்கிறார்….

….. சமத்துவப்பட்ட மருத்துவமும், தனியார் மருத்துவம் செய்வதை தடுப்பதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கான யதார்த்தமான தீர்வாய் இருக்க முடியும். நாம் இந்தக் கொள்ளை இலாபத்தை தனியார் பொருளாதார இலாபத்தை மருத்துவத்திலிருந்து நீக்குவோம். கொள்ளயடிக்கும் பேரசையுணன் செயற்படும் தனி நபர்களிடம் இருந்து இந்தப் புனிதமான மருத்துவத் தொழிலைக் காப்பாற்றுவோம். நமது சகமனிதனின் கடுந்துயரை மூலதனமாகக் கொண்டு நம்மை பணக்காரர்களாக்கிக் கொள்ளும் இந்தச் செயல் அசிங்கமானது என்று புரிய வைப்போம். நம்மைத் தற்போது சுரண்டுவது போல் தொடர்ந்து இந்த அரசியல்வாதிகள் சுரண்டாமல் இருக்க நாமே அமைப்புரீதியாக திரள்வேம்…..

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s