மாற்றுக் கருத்துக் கொண்டோர்களையும் தமது கருத்துக்களை இவ்விடுக்கையில் பதிவிட அழைப்பு விடுத்திருந்தோம். ஒரு தனி இடுக்கை ஆரம்பித்து எழுதுவது என்பது எளிதானதாக இருந்தாலும், தொழில் நுட்பம், கணிணி வசதி, வளைத்தள இணைப்பு மற்றும் பல காரணங்களால் வாய்ப்பு குறைவாக உள்ளவர்களுடனும் எமக்குள்ள தொடர்புகளால் இந்நிலைப்பாட்டை எடுத்திருந்தோம், அந்த வகையில் எமக்கு வந்த முதல் கட்டுரை இது. நண்பர் கணேசன் அவர்களிடமிருந்து வந்துள்ள இக் கட்டுரைக்கு சில தினங்களில் எமது கருத்துக்களை வெளியிடுகிறேம். கணேசன் அவர்களுக்கு நன்றி !


இன்றைய தேர்தல் நடைமுறை சரிதானா?

          இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் விதிமுறைகள் ரிதானா? என்றால் இல்லை என்று தொண்ணூறு சதவிகிதம் பேர் சொல்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றால் போதும் என்கிற நடைமுறை சாத்தியம் என்றால் தொண்ணூறு சதவிகிதம் எதிர்ப்பு உள்ள தேர்தல் நடை முறை எப்படி ரியாக இருக்கும்? இங்கு தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் தொடங்குகிறது.

பிரச்சனைகளும் பாதிப்புகளும்

          ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய நூறு பேர் இருந்தால் அதில் 51 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. நாற்பத்து ஒன்பது வாக்குகள் பெற்றவர் தோல்வி என அறிவிக்கப்படுகிறது. இருவர்தான் போட்டி என்றால் இது தான் தீர்வு வரும். ஆனால் ஒரு ஐந்து பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் யார் என்றால்! போட்டி கடுமையாக இருந்தால்! 21 வாக்கு வாங்கியவர் கூட வெற்றி பெற முடியும். அப்படிப்பார்த்தால் 81 வாக்குகள் வெற்றி பெற்றவருக்கு எதிராகவே இருக்கிறது. இது எந்த வகையில் ரி?

          தேர்தலில் வெற்றி பெற்றபின் தலைவரைத் தேர்வு செய்ய (பிரதமர் அல்லது முதல்வர்) மற்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் பதவியேற்றால் எப்படி ரி? ஒருவர் பதவி ஏற்ற பின் அவரது பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வது எந்த விதத்தில் ரி?

          பதவிக்கு வந்த பின் உறுப்பினர்களை விலைக்கோ, பதவிக்கோ வாங்க முடியும். அப்படி வாங்கப்பட்ட உறுப்பினர் எப்படி ரியாக செயல் படுவார்? அவரை வாங்கிய தலைவரும் எப்படி ரியானவர் ஆவார்? அதானல் தான் ஊழலில் நம் நாடு முதலிடத்திற்குச் செல்கிறது.

          மேற்கண்டபடி தேர்வு செய்யப்படும் உறுப்பினரோ தலைவரோ தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே வேண்டிய உதவிகளைச் செய்வதால் எதிர்த்து வாக்களித்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நன்மை பெறக்கூடியவர்கள் குறைவாகவும் தீமை பெறக்கூடியவர்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள்.

          (இப்போது நடைமுறைப்படி பெரும்பான்மை வாக்கு பெற்றவர்தான் வென்றவர் என்பது செய்தியாக மட்டுமே உள்ளது)

          பிரதமரோ? முதல்வரோ? மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் கூட ஆட்சி அமைக்க முடிகிறது. இரண்டு பங்கு உறுப்பினர்கள் வெளியிலிந்தும் மறைமுகமாகவும் எதிராகவும் செயல் படுகிறார்கள். இதனால் நாட்டின் இரண்டு பங்கில் உள்ள மக்கள் தேர்வு செய்த உறுப்பினர்கள் பதவியில் மட்டுமே இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

          அமைச்சரவையில் இடம் பெறாத உறுப்பினர்கள் அவையில் இடம் கிடைக்காத காரணத்தால் எப்படியும் இடம் பிடிக்க என்ன என்ன குறுக்கு வழி உள்ளதோ அத்தனையையும் இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் முடங்கிப் போய் விடுகிறது.

நீதிமன்ற அவலம்

          தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்ற உறுப்பினர் மீது வழக்கு தொடுத்தால் அவர் பதவி காலம் முடிந்த பின்பு தீர்ப்பு கூறி வேடிக்கைக்காட்டுகிறது. ஓரு தவறான வேட்பாளர் தனது ஐந்தாண்டு பதவியை அனுபவிக்க நீதி மன்றமும் மறைமுகமாக உதவி செய்கிறது. இதனால் குற்றவாளிகள் எளிதில் அரசியலில் நுழைய வழி கிடைக்கிறது. இது போன்ற குற்றவாளிகள் அரசியலில் நுழையாமல் தடுக்க தேர்தல் கமிஷனோ நீதிமன்றமோ எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

          தேர்தலில் போட்டியிடும் நபர் வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது அவர் கொடுக்க வேண்டிய தகவல்கள் ரியில்லை என்றால் அதை ரிசெய்து கொடுக்க கால அவகாசம் இல்லாமல் உடனே தள்ளுபடி செய்வது எந்த விதத்தில் ரி? இப்படிச் செய்வதால் சில நல்ல வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது. அந்த இடத்தில் தகுதி இல்லாத ஒருவருக்கு இடம் கிடைத்து விடுகிறது. ஏன் இந்த அவசர நிலை? ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்ய தேர்ந்தெடுப்பவர் ரியான தகவல் தர ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் என்ன தவறு? இது போன்ற சின்னச் சின்ன தவறுகள்தான் மிகப்பெரி தவறுகள் நடப்பதற்குத் துணை செய்கின்றன. இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாட்டின் நிலை முற்றிலும் தவறானவர்களின் கைகளுக்குப் போய்விடும்.

இதற்கான தீர்வு என்ன?

          வாக்களிப்பின் முறையில் மாற்றம் தேவை. எப்படி? விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனை வாக்குக்கு ஒரு உறுப்பினர் என்ற முறையைக் கையாள வேண்டும். ஒரு கட்சிக்கு எத்தனை வாக்கு உள்ளதோ அதற்கு ஏற்றவாறு அந்த கட்சிக்கு உறுப்பினர் எண்ணிக்கை இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக : நம் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை) இந்த முறையைப் பின்பற்றித்தான் பெரி கட்சிகள் சிறிய கட்சிகளுக்கு இன்றைக்கு இடம் ஒதுக்குகிறார்கள். இதனால் கொள்கைகள் இல்லாமல் இடம் அதிகம் தரும் கட்சிகளுக்கு அடிக்கடி சின்னக் கட்சிகள் தாவுகின்றனர்மேற்கண்ட முறையில் இடம் ஒதுக்கினால் இந்த கட்சி மாறும் கூட்டணிகள் தடுத்து நிறுத்தப்படும்.

          ஒவ்வொரு கட்சியும் தனித்து தான் தேர்தலில் நிற்க வேண்டும். கூட்டணியில் நிற்கக்கூடாது. அப்பொழுது தான் எந்தக்கட்சிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என கூற முடியும். இப்பொழுது கூட்டணியில் நின்று வெற்றி பெற்றவர்களின் வாக்கி சதவிகிதம் இவ்வளவு என்று சொல்கிறார்கள் அது எப்படி ரி தனித்தனியாக நின்றால் எந்தக் கட்சியும் யாரிடமும் போய் கெஞ்ச வேண்டியதில்லை. இந்த முறை நடைமுறை இல்லாத காரணத்தால் பத்து லட்சம் மக்களின் ஆதரவு இருந்து அவையில் ஒரு இடம் கூட பெறமுடியாத நிலை உள்ளது. இந்த பத்து லட்சம் மக்களின் பிரதி நிதி அரசவையில் இடம்பெற முடியாமல் போகிறது. இது எந்த விதத்தில் ரி? இதனால் இந்த விகிதாச்சார அடிப்படை முறையை நடை முறை படுத்தவேண்டும்.

          பிரதமர் அல்லது முதல்வர் தேர்வு ஒரு தலைவரைத் தேர்வு செய்து பதவியில் அமர்த்தும் முன்பு அவருடைய பெரும் பான்மையை நிரூபிக்கச் செய்து அதன் பின் பதவியேற்க வழி செய்ய வேண்டும். இதன் மூலம் குதிரை பேரம் முடிவுக்கு வரும். அது மட்டுமின்றி பதவியை வைத்து மிரட்டுவதும் தடுக்கப்படும்.

          மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால்தான் ஆட்சி கவிழாமல் ஆட்சி  செய்ய முடியும். அதனால் ஜனாதிபதியைத் தேர்வு செய்வது போல் தேர்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஆட்சி ஐந்தாண்டு காலம் நீடிக்கும் மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் முடியும்.

வேட்பு மனுத்தாக்கல் :

          வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது அந்த படிவத்தை நிரப்புவதற்கு தகுந்த நபரை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் அல்லது ரியாக நிரப்பவில்லையென்றாலும் தகுந்த தகவல்கள் தரவில்லை என்றாலும் அதை ரி செய்ய கால அவகாசம் கொடுக்கவேண்டும். அப்பொழுது தான் ஒரு கட்சியின் ஆதிகாரப்பூர்வ வேட்பாளர் தேர்தலில் நிற்கமுடியும். தவறானவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும்.

          மேற்கண்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டால் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்பது என் கருத்து. இதை அரசும் தேர்தல் ஆணையமும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

 

—இந்தியன் கணேசன்


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s