கட்டுரைகளை முழுமையாகப் படிக்க தலைப்புகளில் சொடுக்கவும்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 1

இசுலாம் ஒரு மதம் அல்ல; அது ஒரு மார்க்கம் என்றும், இசுலாம் ஒரு எளிய மார்க்கம் என்றும், இசுலாமியக் கொள்கைகள் மட்டுமே காலங்காலத்திற்கும் பொறுத்தமான வாழ்க்கைக்கு வழிமுறைகளைக் கொண்டுள்ளது; கடைபிடிக்க சிறந்தது என்றும் இசுலாமியர்கள் கூறுகின்றனர். இந்து, கிறித்துவ மதங்கள் போன்று இசுலாமும் ஒரு பிற்போக்கானதே என்பதை ஒரு நீண்ட தொடர்மூலம் விரிவாக விளக்குவதே இத் தொடர்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 2

முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்கு பிறகு யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ ஆரம்பமானது குழப்பம். முகம்மதுநபி, மரணப் படுக்கையில் இருக்கும் பொழுதே வாரிசுரிமை விவாதம் துவங்கிவிட்டதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. அபூபக்கர் சித்தீக் அவர்களின் காலத்தில் பதுங்கியிருந்த ரத்தவெறி உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் விஷம் தோய்த்த ஈட்டியாக உமர் அவர்களின் உயிரைப் பறித்து

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 3

வழிபாடுகளில் கவனம் தேவையா?

முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்குப்பின் சஹாபாக்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை மறப்பதற்காக எனது சிந்தனையை வேறு வழியில் திருப்பினேன்.  இரத்தக்கறை படிந்த வரலாற்று செய்திகளை அறிந்த கொள்வதை முற்றிலும் நிறுத்தினேன். அரசியல் அதிகாரங்களுக்காக நடந்த படுகொலை வரலாற்றை படித்து வெறுப்படைவதற்கு பதிலாக, ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து படித்து மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 4

வேதவெளிப்பாடு

சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள்,  ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக குர் ஆனின் வசனங்கள் சிறிது சிறிதாக முஹம்மதுநபிக்கு அருளப்பட்டது. அவ்வாறு அருளப்பட்ட வசனங்களின் முழுமையான தொகுப்பு குர்ஆன்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 5

மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்

ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து புனையப்பட்ட செய்தி… (புகாரி 2661, 3388, 4141, 4750, 4757) (பெரிய ஹதீஸ்தான் வேறுவழியில்லை!)

புகாரி ஹதீஸ் -2661

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

…நபி (ஸல்)அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தெட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது.

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 6

சில Instant வேதவெளிப்பாடுகள்

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) ‘தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 7

சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும்

முஹம்மதுநபி தேனை மிக விரும்பி உண்பார். தினமும் ஒவ்வொரு மனைவியின் வீட்டுக்கும் செல்வது முஹம்மது நபி அவர்களுக்கு வாடிக்கை. ஜைனப்   அவர்களின் முறை வரும் பொழுது சற்று கூடுதலான நேரம் தங்கி அவர் தரும் தேனைக் குடித்து மகிழ்வார். இதை மற்ற மனைவியர்களால் பொறுக்க முடியாமல் மனைவியருக்கிடையே ஏற்பட்ட சக்களத்தி சண்டையில் தேன் உண்பதை நிறுத்திவிடுவதாக கூறுகிறார் (புகாரி 4912, 5267, 5268).

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 8

பொருந்தா உறவும் வேதவெளிப்பாடும்.

திருக்குர் ஆன் 33:33,59. வசனங்களுக்கான உண்மையான காரணத்தை சற்று விரிவாக காணலாம்.

(நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர், ”அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன்,…                                                                                                              (குர்அன் 33:37)

கதீஜா அவர்கள் உக்காழ் எனும் அரேபியாச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத்  அவர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா அவர்கள் முஹம்மது நபி அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை முஹம்மது நபி அவர்களுக்கு வழங்கி,…..

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 9

 ஜைனப்பை திருமணம் செய்ததற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தரப்படும் விளக்கங்களும்  எனது மறுப்புகளும் வருமாறு:-

விளக்கம் : 1

முஹம்மது நபி  அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைனப்- குடும்பத்தினரிடம் கேட்டார்கள் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஸைத் ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தாங்கள் உயர்ந்த குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப்பும் அவரது குடும்பத்தினரும மறுத்து …..

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 10

தோழர்களின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்

ஹிஜாப் (கோஷா– ஆண்களுக்கு முன் தோன்றாமல் திரைமறைவில் இருக்கும் நிலை)  முறை அமலக்கப்பட்ட நிகழ்சி

தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவி (மருமகள்) ஜைனப்பை ஒருவழியாக திருமணம் செய்த பிறகு அவருடன் தாம்பத்திய வாழ்கையைத் துவங்குவதன் அடையாளமாக ஒரு விருந்து முஹம்மது நபி  அவர்களால், இரவு நேரத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தில் உணவு தயாராவதற்கு முன்பே வந்து விட்ட சஹாபாக்கள் (நபித்தோழர்கள்) விருந்து முடிந்த பிறகும் செல்லாமல் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் போவதும் வருவதுமாக  முஹம்மது நபி  அவர்களின் “நிலைமை” புரியாமல் நடந்து கொள்கின்றனர். அவர்களை போகச் சொல்லும் விதமாக எழுந்து நிற்கிறார். சிலர் சென்று விடுகின்றனர் சிலர் அமர்ந்து விடுகின்றனர். பொறுமை இழந்த முஹம்மது நபி  அவர்கள் மூன்றாம் முறையாக இறுதில் எழுந்து நிற்கிறார் சஹாபாக்களும் (நபித்தோழர்கள்) கலைந்து சென்று விடுகின்றனர்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 11

வன்கலவியும் வேதவெளிப்பாடும்

முஹம்மது நபியும் அவரது படையினரும் பல போர்களை சந்தித்தவர்கள். இவற்றில் ஓரிரு போர்களைத் தவிர மற்றவையெல்லாம் முஹம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான திடீர் தாக்குதல்களே. ஒவ்வொரு போரின் முடிவிலும் பெருமளவு பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் போர்கைதிகளாக கருதப்பட்டு முஸ்லீம்களால் அடிமைகளாக்கப்பட்டனர். இந்த அடிமைகளை போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இந்த அடிமைகளுக்கு சில அடிப்படை உரிமைகள் மட்டுமே வழங்கப்பட்டது. சுதந்திரமான  மனிதர்களைப் போல வாழ அடிமைகளுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 12

இஸ்லாம் எந்தவகையான ஒழுக்கநெறிகளைப் போதிக்கிறது?

மதுவும், வட்டியும்,  பல தெய்வக் கொள்கையும், உருவ வழிபாடும் முஹம்மது நபிக்கு முன்பிருந்தவைகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஈனத்தனமான இச் செயல்களை இறைவனின் அனுமதியென்று கூறிக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?

சராசரியாக சிந்திக்கக் கூடிய எவராலும் குர்ஆனின் இந்த அனுமதிகளிலுள்ள முட்டாள்தனத்தை அறிய முடியும். கற்றுணர்ந்த மார்க்க அறிஞர்களுக்குத் தெரியாதா? அவர்களென்ன இரக்கமில்லாதவர்களா?….

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 13

திருக்குர்ஆன் இஸ்லாமிய நம்பிக்கைகளின் முதுகெலும்பு. அல்லாஹ்வின் உரையாடல் அல்லது கட்டளைகளின் எழுத்து வடிவமே குர்ஆன். அல்லாஹ்வின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்க முடியாது. அதாவது குர்ஆனில் முரண்பாடு இருக்க முடியாது என்பது முஸ்லீம்களின் வாதம். ஒரே ஒரு பிழை இருந்தாலும் இந்த குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை எளிதாக கூறி விடலாம்.  குர்ஆனைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 14

பூமியின் வடிவத்தில் குழப்பம்…!

மேலும் அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து  உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்;

(குர் ஆன் 13:3. 15:19, 78:6, 51:47)

 ”பூமியை விரித்து” என்ற சொல் தட்டையானது என்று பொருள் தருகிறதே என்ற கேள்விக்குஇந்தியாவின் மிகப் பிரபலமான மார்க்க அறிஞர் Dr. ஜாகீர் நாயக் தரும் பதில்….

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 15

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்…!

சூரியனும் சந்திரனும் அதனதன் வட்டத்தில் நீந்துகின்றன, இன்னும் சூரியன் தன் வரையறைக்குள்  சென்று கொண்டு இருக்கிறது;

(குர் ஆன் 36:38)

… இவ்வாறே எல்லாம் எல்லாம் வட்டரைக்குள் நீந்திச் செல்கின்றன

(குர் ஆன் 36:38, 40)

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்தங்களது பிரச்சாரங்களில்சூரியன் தனது இதர கோள்களுடன் வினாடிக்கு 240 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இந்த பால்வெளி வீதியை சுற்றிவருகிறதுஇவ்வாறான ஒரு சுழற்சி நிறைவடைய சுமார் 225 மில்லியன் வருடங்கள் தேவைப்படுகிறது என்ற அதி நவீன கண்டு பிடிப்பையே மேற்கண்ட…

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 16

மனிதனின் ஆரம்பம்

உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது….

(குர்ஆன்   2:30)

                அல்லாஹ், மலக்கு(என்ற வானவர்)களிடம் தன் முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன?  இதில் மலக்குகளின் முடிவை அறிவதன் முலம் இரண்டாம் கருத்து தேவை என்ற நிலையே தெரிகிறது.

குர்ஆனின் மூலம் மனிதர்களுடனே உரையாடும் அல்லாஹ், 

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 17

யார் இந்த இப்லீஸ் ?     எங்கிருந்து வந்தான் ?    எதற்காக வந்தான்?

இப்லீஸே ஸுஜூது  செய்பவர்களுடன் நீ ஆகாமல் இருப்பதற்கு உனக்கு என்ன வந்தது?

(குர்ஆன் 15:32)

“நான் உனக்குக் கட்டளையிட்ட பொழுது நீ ஸுஜூது செய்வதை விட்டும் உன்னை எது தடுத்தது என்று அவன் (அல்லாஹ்) கேட்டான்…

(குர்ஆன் 7:12)

அல்லாஹ்வின் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகும். அவன் ஸுஜூது செய்யக் கூறியது மலக்குகளிடம் மட்டுமே. இப்லீஸிடம் ஆதமிற்கு ஸுஜூது செய்யக் கூறப்படவே இல்லை ஏனென்றால்

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 18

விதியா ?  மதியா ?

உலகில் தொடர்ந்து கெண்டிருக்கும் குழப்பங்களுக்கு, சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாடு, மதம், மொழி, நிறம், இனம், பொருளாதாரம் எனவும் இவற்றிற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து காணப்படுகிறது. இந்த பிரிவினைகள் ஏன்?   இவ்வினாவிற்கு,

 ஆரம்பத்தை நோக்கி -தொடர் 19

கிருஸ்துவ நம்பிக்கை உருவாகக் காரணம் யார்?

(Answering Islam.com இணைதளத்தின் கட்டுரையைத் தழுவியது)

ஈஸா நபி (இயேசு) பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை  போதித்துவந்தார் என்று  குர்ஆன் சொல்கிறது.

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறினார்.

 (குர்ஆன் 19:23)

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே…

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 20

சிலுவை மரணம் – கிருஸ்தவமும் இஸ்லாமும்

இயேசு சிலுவை மரணத்தின் போது  கூறியதை கவனியுங்கள்,

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.                                                       (லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ…

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 21

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார்பொறுப்பு?

            குர்ஆன் சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், ஈஸா நபியின் எதிரிகள் அவரை கொன்று விட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தான். அதனால், “ஈஸா நபி சிலுவையில் மரித்தார்” என்ற

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 22

வேதங்களின் நிலை

குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின்  அடிப்படை குர்ஆன். எனவே  இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்;

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 23

                    முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும்  வெளிப்படுத்தும் தன்மையில்லாததால்,

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 24

                         சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபிநபித்துவத்தை  நிருபிக்கும் விதமாக சந்திரனை இரண்டாக பிளந்து அற்புதம் நிகழ்த்தினார்இரண்டாக பிளந்த  சந்திரனின் ஒரு பகுதி மலையின் மேல் பகுதியிலும் மற்றொரு கீழ் இந்த பகுதியிலும் சென்றதை முஹம்மது நபி  அவர்களுடைய தோழர்களும் கண்டனர்

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 25

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தையும் பலவிதமான உயிரினங்களையும் “குன்” (ஆகுக!) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கிதன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக  வல்லமைமிக்கவனாகவும்நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும்அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித   கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்க,  போர்வியூகம் அமைத்து, கையில் வாள் ஏந்திய  மலக்குகளை  குதிரையில் ஏற்றி, முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான்.

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 26

இரவுப் பயணம் …!

உம்மு ஹானி :   முஹம்மது நபியுடைய பெரிய தகப்பனார் அபூ தாலிபின் மகள். இவரது உண்மையான பெயர் ஃபகிதா. உம்முஹானியை விரும்பிய முஹம்மது நபி திருமணம் செய்து தருமாறு அபூ தாலிபிடம், கேட்கிறார். ஆனால் ஏதோ சில காரணங்களால்   அபூ தாலிப் மறுத்து, உம்மு ஹனியை, ஹூபைரா என்பவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். தன் கணவருடன் அபிசீனியாவில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் இறந்ததால், மக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s