நான் அறிந்து கொண்டவற்றில் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சில முரண்பாடுகளைக் கூறுகிறேன். முதலில் வார்த்தைகளைச் சிதைத்து தாங்கள் விரும்பும் பொருளில் குர்ஆனுக்கு விளக்கம் கூறும் அறிஞர்களின் வித்தையைக் கூறுகிறேன்.

பூமியின் வடிவத்தில் குழப்பம்…!

 மேலும் அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து  உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்;

(குர் ஆன் 13:3. 15:19, 78:6, 51:47)

 “பூமியை விரித்து” என்ற சொல் தட்டையானது என்று பொருள் தருகிறதே என்ற கேள்விக்குஇந்தியாவின் மிகப் பிரபலமான மார்க்க அறிஞர் Dr. ஜாகீர் நாயக் தரும் பதில்

பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:

அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.

‘இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான்.

மேற்படி வசனத்தில் தஹாஹா என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. தஹாஹா என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தஹாஹா‘ என்னும் அரபி வார்த்தை ‘துஹ்யா’ என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி ‘துஹ்யா’ என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.

இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.

Dr.ஜாகீர் நாயக் அளித்த பதில் தவறு என குர்ஆனிலிருந்தே Faith Freedom International.com  தரும் மறுப்பு

குர் ஆன் 15:19

பூமியை-அதனை விரித்து வைத்து அதில் உறுதிமிக்க மலைகள் நாம் வைத்தோம்;…

Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli shay-in mawzoonin

وَالارضَ مَدَدْنَهَا
مَدَدْ = madad = protract, reach, elongate, extend, draw out, lengthen, stretch out, spread out, sprawl, dilate, reach, range, unwind, outstretch, pervade, lengthen

மதத் = நீட்டு, நெருங்கு, நீளச் செய், விரிவாக்கு, வெளியில் எடு, நீளமான, நீட்டு, பரவலாக்கு, பரப்பிக்கிட, விரியச்செய், விசாலமாக்கு, பரந்துகிட, ஒன்றை விரி, ஊடுருவிப் பரவு

குர் ஆன் 20:53

அவன் எத்தகையவனென்றால் பூமியை உங்களுக்கு விரிப்பாக்கினான்

Allathee jaAAala lakumu al-ardamahdan wasalaka lakum feeha subulan waanzala mina alssama-imaan faakhrajna bihi azwajan min nabatinshatta

الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا
مَهْدًا = mahdan = (Noun) cradle.or bed, (verb) flatten, smoothen, smooth, level, cement, grade, ram, plane, roll, flat, level off

மஹ்தன் = தொட்டில், படுக்கை, தட்டையாக்கு, மென்மையாக்கு, கிடைமட்டமாக்கு,

 குர் ஆன் 43:10

அவன் எத்தகையவனென்றால் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கினான்…

[Allathee jaAAala lakumu al-ardamahdan wajaAAala lakum feeha subulan laAAallakum tahtadoona]

الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا
مَهْدًا = mahdan = (Noun) cradle or bed, (verb) flatten, smoothen, smooth, level, cement, grade, ram, plane, roll, flat, level off

குர் ஆன் 50:07

மேலும் – பூமியை-அதனை விரித்து வைத்து அதில் உறுதியான  மலைகள் அமைத்து…

[Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli zawjin baheejin]

وَالارضَ مَدَدْنَهَا
مَدَدْ = madad = protract, reach, elongate, extend, draw out, lengthen, stretch out, spread out, sprawl, dilate, reach, range, unwind, outstretch, pervade, lengthen

குர் ஆன் 51:48

பூமியை-அதனை நாம் விரித்தோம் , எனவே விரிப்போரில் (நாமே) மேலானவராவோம்

[Waal-arda farashnahafaniAAma almahidoona]

وَالْأَرْضَ فَرَشْنَهَا فَنِعْمَ الْمَهِدُونَ
فَرَشَْ = farasha = provide with furniture, flatten, outspread, pervade, circulate, cement, grade, unwind, stretch, expand, flat, range, reach, ram, spread out, lengthen, sprawl, unfold, level off, roll out, level

الْمَهِدُونَ from مَهِدُ = flatten, smoothen, smooth, level, cement, grade, ram, plane, roll, flat, level off

குர் ஆன் 71:19

அல்லாஹ் (இந்த) பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கியுள்ளான்,

[WaAllahu jaAAala lakumu al-ardabisatan]

وَاللَّهُ جَعَلَ لَكُمْ الْأَرْضَ بِسَاطًا
بِسَاطًا = bisaatan = drugget , carpet , rug
from the verb بسط = outspread, flatten, flat, even, ram, grade, level off, outstretch, pave, level, smoothen, roll, cement

குர் ஆன் 79:30

பூமியை அதற்குப்பின்அவன் விரித்தான்;

[Waal-arda baAAda thalika dahaha]

In this verse some muslims suggests that the Koran says that the earth is egg-shaped. They claim that dahaha = eggshaped, but this is not true at all. (இந்த வசனத்திற்கு முஸ்லீம்களில் சிலர், பூமி முட்டை வடிவமானது என்று குர்ஆன் கூறுவதாக பரிந்துரைக்கின்றனர். ஆனால் இது எந்த வகையிலும் உண்மை அல்ல.)

وَالأرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا
دَحَا = daha=spread out, level off level. The last ha = هَا in dahaha means this. So dahaha actually means spread out this, level off this, level this.

( தஹா = விரி, கிடைமட்டமாக மட்டமாக்கு, கடைசியில் உள்ள ஹா என்பதற்கு ‘இது’ என்று பொருள்படும். எனவே தஹாஹா என்பதற்கு இதனை விரித்தான் என்றே பொருளாகும்.)

I found an error in this translation. The word translated as canopy is binaa or binaan (بِنَاء). This is what the word means in Arabic ( நான் இந்த மொழிபெயர்ப்பில் தவறை கண்டுகொண்டேன். இந்தச் சொல் படுக்கைமேல் விரிக்கப்படும் விரிப்பு என்று பொருள்படும் இது உண்மையில்…)

As you can see the word binaa or binaan ( بِنَاء ) means “building”. The heavens are as a multi-story building over the earth. There are seven layers or stories to this building called the heavens. The heavens are built on a “flat” foundation called “the earth”. (பினான் என்பது கட்டிடம். அதாவது, சொர்க்கம் என்பது பூமிக்கு மேலே உள்ள அடுக்கடுக்கான கட்டிடம் ஆகும். அது ஏழடுக்குகளாக உள்ள கட்டிடம். இது பூமியை அடிவாரமாகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. )

The Tafsir Ibn Kathir says the same thing: (இப்னு காதிர் தனது குர்ஆன் விரிவுரையில் இவ்வாறே கூறுகிறார். )

These Ayat indicate that Allah started creation by creating earth, then He made heaven into seven heavens. This is how building usually starts, with the lower floors first and then the top floors,

(இந்த வசனம், பூமியை முதலிலும் பிறகு ஏழு வானங்களையும் படைக்க ஆரம்பித்தான் என்று கூறுகிறது. அதாவது கீழ் தளம் முதலிலும், பிறகு அதன்மேல் பிற தளங்களையும் நாம் வழமையாக கட்டும் கட்டிடங்கள் போல் இந்த உலகம் படைக்கப்பட்டது.)

(இப்னுகாதிர் விளக்க உரைக்கு  http://tafsir.com/default.asp?sid=2&tid=1494  )

Does “Dahaha” really mean egg-shaped?

In Arabic, each word must be derived from its root. The root usually consists of three letters that can be manipulated, by adding vowels, prefixes and suffixes in order to produce different words with different meanings.
For example, “ka-ta-ba” (to write) is the root for many words such as kitab (book), maktaba (library), katib (author), maktoob (written), kitabat (writings) etc…

Let’s now take the word you mentioned to mean egg of an ostrich, “Duhiya”. This word is NOT a root. It is a noun and is derived from “da-ha-wa”, the same root that the verb “dahaha” comes from.

(அரபில் ஒவ்வொரு சொல்லும் அடிச்சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அடிச்சொற்கள் வழமையாக மூன்று எழுத்துக்களுடையதாக இருக்கும். இந்த அடிச் சொல்லுடன் முன்னும் பின்னும் இணைக்கபடும் சில எழுத்துக்களிலிருந்து வேறுபட்ட பொருளைத் தரும் பிறச் சொற்கள் உருவாக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக கிதாப் (புத்தகம்), மக்தபா (நூலகம்), கதிப் (ஆசிரியர்), மக்தூப் (எழுதப்பட்ட), கிதாபத் (எழுதியவைகள்) ஆகிய சொற்களுக்கு கடபா (எழுது) என்றச் சொல் அடிச்சொல்லாக அமைகிறது.)

முட்டை என்று பொருள் கூறுவதற்காக நீங்கள்(ஜாகிர் நாயக்) குறிப்பிடும் துஹியா என்றச் சொல்லை எடுத்துக் கொள்வோம். இது ஒரு அடிச்சொல் அல்ல. பெயர் சொல்லாகும். மேலும் இது த-ஹ-வா என்ற அடிச்சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டச் சொல். இந்த தஹவா விலிருந்து தஹாஹா என்ற வினைச்சொல் வந்துள்ளது.)

Furthermore, Duhiya doesn’t even mean the egg of an ostrich! This is what the most respected dictionaries have to say on this subject:

(அதுபோல, துஹ்யா என்பது தீக்கோழியின் முட்டை என்று பொருள்படாது. இச்சொல் பற்றி மிகவும் மதிப்பிற்குரிய அகராதிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.)

From Lisan Al Arab:

الأُدْحِيُّ و الإدْحِيُّ و الأُدْحِيَّة و الإدْحِيَّة و الأُدْحُوّة مَبِيض النعام في الرمل , وزنه أُفْعُول من ذلك , لأَن النعامة تَدْحُوه برِجْلها ثم تَبِيض فيه وليس للنعام عُشٌّ . و مَدْحَى النعام : موضع بيضها , و أُدْحِيُّها موضعها الذي تُفَرِّخ فيه .ِ

Translation: “Al-udhy, Al-idhy, Al-udhiyya, Al-idhiyya, Al-udhuwwa:The place in sand where an ostrich lays its egg. That’s because the ostrich spreads out the earth with its feet then lays its eggs there, an ostrich doesn’t have a nest.”

லிசன் அல் அரப்பிலிருந்து:

அல்-உதி, அல்-இதி, அல்-உதையா, அல்-இதையா, அல்-உதுவ்வா : தீக் கோழி முட்டையிடும் நிலங்கள். அதாவது தீக்கோழி தனக்கான கூட்டினை பெற்றில்லாததால், இந்த பூமியில் தனது கால்களால் அலைந்து திரிந்து முட்டையிடும் இடத்தைப்போல பரந்து விரிந்த நிலப்பரப்பு என்று பொருள்படும்.

As for the meaning for the verb “dahaha”, it’s unanimously agreed on by all Arabic dictionaries:

தஹாஹா என்ற வினைச் சொல்லிற்கு அனைத்து அரபி அகராதிகளும் இதுபோலவே முழு உடன்பாடுடன் ஏற்றுக்கொள்கின்றன.

Al Qamoos Al Muheet:

(دَحَا): الله الأرضَ (يَدْحُوهَا وَيَدْحَاهَا دَحْواً) بَسَطَها

“Allah daha the Earth: He spread it out.” ( அல்லா பூமியை விரித்தான்)

Al Waseet:

دَحَا الشيءَ: بسطه ووسعه. يقال: دحا اللهُ الأَرض

“To daha something: means to spread it out. For example: Allah daha the Earth.”  (தஹா என்பது ஏதோ ஒரு பொருளை விரிப்பதாகும்,)

Lisan Al Arab:

الدَّحْوُ البَسْطُ . دَحَا الأَرضَ يَدْحُوها دَحْواً بَسَطَها . وقال الفراء في قوله والأَرض بعد ذلك دَحاها قال : بَسَطَها ; قال شمر : وأَنشدتني أَعرابية : الحمدُ لله الذي أَطاقَا
بَنَى السماءَ فَوْقَنا طِباقَا
ثم دَحا الأَرضَ فما أَضاقا

قال شمر : وفسرته فقالت دَحَا الأَرضَ أَوْسَعَها ; وأَنشد ابن بري لزيد بن عمرو بن نُفَيْل : دَحَاها , فلما رآها اسْتَوَتْ
على الماء , أَرْسَى عليها الجِبالا
و دَحَيْتُ الشيءَ أَدْحاهُ دَحْياً بَسَطْته , لغة في دَحَوْتُه ; حكاها اللحياني . وفي حديث عليّ وصلاتهِ , اللهم دَاحِيَ المَدْحُوَّاتِ يعني باسِطَ الأَرَضِينَ ومُوَسِّعَها , ويروى ; دَاحِيَ المَدْحِيَّاتِ . و الدَّحْوُ البَسْطُ . يقال : دَحَا يَدْحُو و يَدْحَى أَي بَسَطَ ووسع

“To daha the earth: means to spread it out.”

Then it mentions a couple of Arabic poems that confirm this meaning. I won’t translate the rest but anyone who can read Arabic will find this to be the definitive proof that Daha means to spread out.

(இதன் பொருளை இரு கவிதைகளை எடுத்துக்காட்டுத் தந்து உறுதி செய்கிறது. இங்கு அக் கவிதைகளை மொழிபெயர்த்து தரவில்லை என்றாலும் அரபு படிப்பவர்கள் இதனை உண்மை என்று அறிந்துகொள்வர்.)

Also, Ibn Kathir agrees with me in his commentary on the Quran: “(30. And after that He spread the earth,)”

(இப்னு கதிர் அவர்களும் தனது விரிவுரையில் இதனை ஏற்றுக்கொள்கிறார்.)

முடிவு:

குர்ஆனில் பூமியின் வடிவத்தைப் பற்றி குறிப்பிட 15:19, 20:53, 43:10, 50:07 -ல் “Madad” என்ற  சொல்லும், 51: 48-ல் “Farasha” என்ற  சொல்லும், 71:19-ல் “Bisaatan” என்ற  சொல்லும், 79:30-ல் “Dahaha” என்ற  சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொற்களனைத்தும் “விரிப்பு” என்றே பொருள் தருகிறது. பூமியின் வடிவத்தை தட்டை என்றே குறிப்பிடும்  “Madad”, “Farasha“, “Bisaatan” போன்ற சொற்களை  பற்றி எதுவும் கூறாமல் மழுப்புவதும், இஸ்லாமிய அறிஞர்களின் பொய் வேஷத்தை கலைக்க  போதுமானது.   இருப்பினும் அவர்களிடமும், அவர்களின் விளக்கத்தை ஏற்பவர்களிடமும் சில கேள்விகள்,

 • பூமி உருண்டை வடிவமானது என்று முஹம்மது நபி அவர்கள் போதித்ததாகவோ அல்லது நினைத்ததாகவோ ஒரே ஒரு ஹதீஸையேனும் (நம்பகத் தன்மையற்றதாயினும், இட்டுக்கட்டப்பட்டதாயினும்  பரவயில்லை) காண்பிக்க முடியுமா?
 • அல்லாஹ், பூமியின் வடிவத்தைப் பற்றி குறிப்பிட்டதை முஹம்மது நபியால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையா?
 • முஹம்மது நபி தன்னுடைய சமுதாயத்தினருக்கு பூமியின் வடிவத்தை உருண்டை என்று கற்பித்தது உண்மையானால், அவரை அடிபிறழாமல் பின்பற்றியதாக கூறப்படும் பல மகான்கள் உட்பட அன்றைய காலத்ததில் வாழ்ந்த அனைவரும் துணிந்து பொய்யை கூறியது ஏன்?
 • அல்லாஹ்வின் செய்தியை முஹம்மது நபியால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், அவர் கடமையை சரிவர நிறைவேற்றாதவராகத்  தெரியவில்லையா?
 • நவீன உலமாக்களைத் தவிர, “Dahaha” என்ற சொல் திரிவதாக முஹம்மது நபி உட்பட எவரும் கூறவில்லையே ஏன்?
 • நபித் தோழர்கள், அவர்களுக்குப் பின்னால் வந்த தலைமுறையினர் மற்றும் அன்றைய காலத்தில் வாழ்ந்த மகான்கள், ஞானிகள் என்றெல்லாம் முஸ்லீம்களால்  போற்றப்படக் கூடியவர்கள் உட்பட எவருக்கும் அரபி மொழியில் புலமை இல்லையா?
 • ஒட்டகத்தை குறிப்பிட ஓராயிரம் சொற்கள் இருப்பதாக கூறப்படும் அரபு மொழியில், குர்ஆன் எழுதப்பட்ட காலத்தில் வடிவங்களை நேரடியாக குறிப்பிட எந்த ஒரு சொல்லும் இல்லாத அளவிற்கு  சொற்களுக்கு பஞ்சம் ஏதேனும் ஏற்பட்டிருந்ததா?
 • நேரானது, முரண்பாடற்றது, தெளிவானது, விளக்கமானது என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளும் குர்ஆனின் வார்த்தைகள், ஒரு சராசரியாக சிந்திக்கக் கூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு குழப்பமாக இருப்பதேன்?

ஒருவேளை பூமி உருண்டை வடிவமானது என்று முஹம்மது நபி கூறியிருந்தால், கலிலியோ வாங்கிய அடிகள்,  நிச்சயமாக முஹம்மது நபிக்கே கிடைத்திருக்கும். இந்த சர்ச்சைகள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியிருக்கும். ஆனால் அப்படி எதுவுமே நிகழவில்லை.

சொற்களையும் எழுத்தையும் நம் விருப்பத்திற்கேற்ப சிதைத்து உருமாற்றி  பொருள் விளங்க முயன்றால், மனநிலை பாதிக்கப்பட்டவனின் பிதற்றலில் இருந்து கூட பல்வேறு முன்னறிவிப்புகளையும், அற்புதங்களையும் அவரவர் தேவைக்கேற்றவாறு பெற முடியும். (ருவேளை, நாளை யாராவது பூமியைக் கூம்பு வடிவமென்று நிரூபித்தாலும் அந்த கண்டுபிடிப்பையும் குர்ஆனின் வார்தைகளைச் சிதைத்து உருட்டி, மருட்டி, குர்ஆனில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி நம்மை அதிர்ச்சியடைச் செய்து விடுவார்கள்) சராசரி மனிதர்கள் எழுதும் புத்தகங்கள் தெளிவான பொருளைத் தருகின்றன. ஆனால் அல்லாஹ்வின்  வார்த்தைகளை தப்சீர் விளக்கங்களைக் கொண்டுதான் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர்.

குர்ஆனில் ஒரே செய்தியை பல முறை திரும்பத் திரும்ப கூறி வெறுப்படையச் செய்வதற்கு பதிலாக, “பூமி உருண்டை வடிவமானது, அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது”, “இப்பிரபஞ்சம் உருவாகி பல லட்சம் கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது அண்டவெளியின் வெடிப்பினால் உருவாகியது”, ”நட்சத்திரங்களும் சூரியனைப் போன்றவைகளே”  என்று தன்னுடைய தூதருக்கு  கற்பிப்பதற்கு  தயக்கம் ஏன்? இதில் மறைப்பதற்கு பரமரகசியங்கள் எதுவுமில்லையே?

இந்தக் கேள்விகளுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் விசித்திரமான பதிலைக் கூறுகின்றனர். குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் மக்களால் இது போன்ற உண்மைகளைக் கூறினாலும் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. அதாவது அன்று அவர்களிடம் செல்போனையும், கம்ப்யூட்டரைப் பற்றி கூறியிருந்தால் உளறுவதாகக் கூறி முஹம்மது நபியை ஏளனம் செய்திருப்பார்கள் என்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது…?!

உண்மை என்னவென்றால்,

பூமி தட்டையானது என்று கூறிக் கொண்டிருந்த வாடிகன் தன்னை திருத்திக் கொண்டது. மெக்கா அதற்கு தைரியமின்றி, பொய் வேடமிட்டு மக்களை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு அசிங்கப்பட்டுக்  கொண்டிருக்கிறது. அடுத்தது ஹதீஸ்களைப் புறந்தள்ளிவிட்டு தாங்கள் விரும்பும் விளக்கத்தை மக்களின் மீது திணிக்கும் வேடிக்கை, கோள்கள் இயக்க விதி…

தொடரும்….

குறிப்பு : இதிலுள்ள அரபிச் சொல்லிற்கு கூகிள் டிரான்ஸ்லேட்டரில் ‘காப்பி பேஸ்ட்’ செய்து பொருளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisements

2 thoughts on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 14

 1. தோழர் தஜ்ஜால்,
  அருமையான கேள்விகள், மற்றும் ஆக்கபூர்வமான பதில்கள்.
  முஹம்மதுக்கு பூமி தட்டா இருந்தா என்ன? முட்டா இருந்தா என்ன?
  அவருக்கு தேவையான அதிகாரமும், ஆட்சியையும் பிடித்து விட்டாரே ?
  முஹம்மது தான் அல்லாஹ், அல்லாஹு தான் முஹம்மது 🙂
  முஹம்மதின் முட்டாள் தனங்கள் அல்லாஹ்வின் வஹி வாயிலாக வெளிப்பட்டது.

  நச் பாயிண்ட் :
  ********************
  சொற்களையும் எழுத்தையும் நம் விருப்பத்திற்கேற்ப சிதைத்து உருமாற்றி பொருள் விளங்க முயன்றால், மனநிலை பாதிக்கப்பட்டவனின் பிதற்றலில் இருந்து கூட பல்வேறு முன்னறிவிப்புகளையும், அற்புதங்களையும் அவரவர் தேவைக்கேற்றவாறு பெற முடியும்.

 2. இவர்களுக்கு ரொம்ப நாள் முன்னாடியே ஆர்யபட்டர் என்பவர் தன்னுடைய நூலில் சூரியனை சுற்றி தான் க்ரகங்கள் சுத்துகின்றன என்பதை எழுதி வைத்துவிட்டார் –இது பரவலாக எல்லா அறிஞ்கர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாக தான்இருந்துல்லது – இப்படி இருக்கயில் மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று அல்லா பொய் சொன்னார் என்பது வினோதமான விஷயம்

  ஆர்யபட்டம் Kalakriyapada 3.17

  The mean planets move on their orbits and the true planets in eccentric circles. All planets moving on their orbits or in eccentric circles move with their own motion. Anti clock wise from their apogees and clock-wise from their perigees.

  ஆர்யபட்டம் கோலபதஹ 4.9

  Just as a person in a boat moving forward sees the stationary objects as moving backwards, the stationary stars are moving seen in the equator as moving towards west (Indians considered Sri Lanka as their equator – Lanka means equator).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s