மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்…!

சூரியனும் சந்திரனும் அதனதன் வட்டத்தில் நீந்துகின்றன, இன்னும் சூரியன் தன் வரையறைக்குள்  சென்று கொண்டு இருக்கிறது;

(குர் ஆன் 36:38)

… இவ்வாறே எல்லாம் எல்லாம் வட்டரைக்குள் நீந்திச் செல்கின்றன

(குர் ஆன் 36:38, 40)

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்தங்களது பிரச்சாரங்களில்சூரியன் தனது இதர கோள்களுடன் வினாடிக்கு 240 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இந்த பால்வெளி வீதியை சுற்றிவருகிறதுஇவ்வாறான ஒரு சுழற்சி நிறைவடைய சுமார் 225 மில்லியன் வருடங்கள் தேவைப்படுகிறது என்ற அதி நவீன கண்டு பிடிப்பையே மேற்கண்ட குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது என்கின்றனர்.

Read Islam இணையதளத்தின்  “சுழலும் சூரியன்” (Dr. ஜாகீர் நாயக்அவர்களின் கட்டுரையின்  தமிழ்மொழிபெயர்ப்புக்  ) கட்டுரையிலிருந்து

“சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. 36:40 سورة يس

        இந்த இறை வசனம் Modern Astronomy கண்டுபிடித்துக் கூறியிருக்கும் ஓர் அடிப்படை உண்மையை கூறுகிறதுசூரியனுக்கும் சந்திரனுக்கும் தனித்தனியே கோளப் பாதைகள் உள்ளனஅப்பாதைகளில் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு விண்வெளியில் நகர்ந்தும் செல்கின்றன.

        சூரியன் தன் கோள குடும்பத்துடன் ஓர் இடத்தை நோக்கி (Fixed Place)  செல்கிறதுஅவ்விடத்திற்கு நவீன விஞ்ஞானம்  Solar Apex என்ற பெயரையும் சூட்டியுள்ளதுஅந்த இடம் Constellation of Hercules என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ளதுஇவ்விண்மீன் கூட்டத்திற்கு Alpha Lyrae என்ற பெயரும் உண்டு

        சந்திரனும் தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் 29.5 நாட்கள் பிடிக்கின்றனதிருக்குர்ஆன் எடுத்துரைக்கும் இவ்வுண்மைய கண்டு ஆச்சரியத்தால் மலைத்து நிற்காமல் இருக்க முடியவில்லை.

மார்க்க அறிஞர்கள்குர்ஆன் வசனங்களுக்கான விளக்கத்தை ஹதீஸ்களில் தேட வேண்டும். அதை விடுத்து நவீன அறிவியலுக்குள் தேடுவது ஏனென்று புரியவில்லை ஹதீஸ்களில் எந்த விளக்கமும் இல்லையெனில் அவரவர் மனதிற்கு தோன்றுவதைக் கூறிக் கொண்டிருக்கலாம்.  அதை ஏற்பதும் மறுப்பதும் வேறுவிஷயம்.

 குர்ஆன் வசனங்களுக்கு முஹம்மது நபியை விட வேறு யார் விளக்கமளிக்க  முடியும்? குர்ஆனின் 36:38, 40 வசனங்களுக்கு முஹம்மது நபி அழகிய விளக்கங்களைக் கூறியுள்ளார்சூரியனின் சுழற்சிக்கு மட்டுமல்ல பூமியில் ஏற்படும் பகல்–இரவு மாற்றத்திற்கான காரணத்தையும் அல்லாஹ்தனது தூதருக்கு கற்பித்துக் கொடுத்திருக்கிறான்.

புகாரி 3199, 4802 ல் காணப்படும் சூரியன் எங்கு செல்கிறதுஎன்ற விளக்கத்தை பாருங்கள்

புகாரி ஹதீஸ் -3199

சயீத்அபூதர் (ரலிஅவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கின்றது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கின்றது. அப்போது அது (வழக்கம் போலக்) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும் அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக. வந்த வழியே திரும்பிவிடு என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்று சொன்னார்கள். இதைத் தான் சூரியன் தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் என்னும் (குர் ஆன் 36:38) இறைவசனம் குறிக்கின்றது என்று சொன்னார்கள்.

இதுமட்டுமல்ல, அல்லாஹ்வால் முஹம்மது நபிக்கு  வழங்கப்பட்டிருந்த வானவியல் அறிவின் மூலமாக சூரியன் உதயமாகுமிடத்தையும் நமக்கு அறிவித்துள்ளார்.

புகாரி ஹதீஸ் :3273

நபி (ஸல்அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்.

மேலும், சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.

சுழலும் சூரியன் கட்டுரையில் கூறப்பட்ட செய்திகளுக்கும் மேற்கண்ட ஹதீஸ்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?

பிறகு, முஹம்மது நபி ஏன் இப்படியொரு விளக்கத்தைக் கூறினார்?

நாம் சிறு வயதினராக இருக்கையில்வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது மலைகளும்மரங்களும் மற்றவைகளும் பின்னால் செல்வதைப் போல உணர்வோம்இத்தகைய உணர்வே சூரியனும் மற்றுள்ள கோள்களும் நட்சத்திரங்களும் தினமும் பூமியைச் சுற்றுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய மக்களால் பூமியின் சுழற்சியைப்பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. அதன் அடிப்படையிலேயே பூமி மையக் கொள்கை உருவானது. பூமியை மையமாகக் கொண்டே இப்பிரபஞ்சம் இயங்குவதாக நினைத்தனர். பகல்-இரவு மாற்றத்திற்கு சூரியனின் இயக்கமே காரணம் என்று நம்பினர். இன்றும் பலரால் உறுதியாக நம்பப்படும் வானியலை அடிப்படையாகக் கொண்ட ஜோதிடக்கலை இதற்கு ஆதாரம். பூமி சுழல்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்ட பொழுது ஒருவராலும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பூமி தன்னைத் தானே  சுற்றுவதால்தான் பகல்–இரவு மாற்றம் ஏற்படுகிறது என்பதை இன்றுள்ள பாமர மனிதனும் அறிவான்இந்த மிகச் சாதாரணமான இந்த உண்மையைக் கூட  தனது ஆருயிர் தூதருக்கு அல்லாஹ் கற்பித்துத் தரவில்லை? பூமிக்கு வெளியில் சென்றால் திசைகள் ஏதுமில்லை பகலும் இரவுமில்லை எல்லாம் ஒரே நிலைதான்இந்த உண்மை அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும்  ஏன் தெரியவில்லை?

தினமும் அந்திவேளைகளில், சூரியன் நம் பார்வையிலிருந்து மறைந்த பிறகு, அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகத்தான் செல்கின்றது என்பதை உங்களால் ஏற்க முடியுமா?

                ஆதாரபூர்வமான இந்த ஹதீஸை மறுக்கவும் முடியாது. குர்ஆன்ஹதீஸ் விளக்கங்களுடன் நவீன உலமாக்களின் இந்த அதிநவீன விஞ்ஞான கண்டுபிடிப்பையும் இணைத்தால் இப்படித்தான் பொருள்விளங்க முடியும்.

சூரியன் தினமும் மாலை வேளைகளில் மறைந்தவுடன்(மேற்கு திசையிலிருந்து) நவீன விஞ்ஞானம் கூறும் Solar Apexற்கு 20 கோடி ஒளிவருடங்கள் நீந்தி/பறந்து/மிதந்துச் சென்று, தனது பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் அல்லாஹ்வின்  “அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கின்றது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது.” உடனே மறுநாள் உதயத்திற்காக  Solar Apexலிருந்து திரும்பவும் 20 கோடி ஒளிவருடங்கள் மாற்று வழியில் நீந்தி/பறந்து/மிதந்து வந்து தனது உதயத்திற்காக ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே(?) வந்து சேர்கிறது (கிழக்கு திசையை). ஒரு நாள் சூரியனின் ஸஜ்தா (வணக்கம்)  ஏற்கப்படாது (ஏன்? தவறு ஏதேனும் செய்து விட்டதா?) திரும்பிச் செல்ல மாற்று வழியும் மறுக்கப்படும் காரணத்தால், பாவம்அது வந்த வழியிலேயே திரும்பிச் சென்றுவிடும் (கேட்கவே மிகவும் சோகமாக இருக்கிறது…!).  இதுதான் தினமும் இரவு வேளைகளில் நடைபெறும் மாபெரும் ரகசியம்முஹம்மது நபி நமக்குக் கற்றுத் தந்த சூரிய இயக்க விதியின் ரகசியமும் பகல்–இரவு மாற்றத்திற்கான ரகசியமும் இதுதான் 

                சரி, சூரியன் மீண்டும் உதயமாவதற்கு ஷைத்தானின் கொம்புகளை எப்படி அடைகிறது? ஷைத்தானை எங்கே சென்று தேடுவது? அதற்கும் ஒருவழியை முஹம்மது நபி கூறியிருக்கிறார்.

புகாரி  ஹதீஸ் எண் : 3295

அபூஹுரைரா (ரலிஅவர்கள் கூறியதாவது

நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கை சிந்தி (தூய்மைப்படுத்தி) கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கின்றான்.

நாம் இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பொழுது ஷைத்தான்மூக்கினுள் தந்திரமாக நுழைந்து தங்கிவிடுகிறான்சூரியனும் மறுஉதயத்திற்காக ஷைத்தானது கொம்புகளைத் தேடி சூரியனும் நமது மூக்கிற்குள் நுழைந்து விடுகிறது (ஹதீஸ் உண்மையாக வேண்டுமே! சூரியனுக்கு மூக்கிற்குள் நுழைவதைத் தவிர வேறுவழியில்லை).

                நீங்கள் உறங்குவதை இறந்துவிட்டதாகக் கருதி ஷைத்தானும் சூரியனும் உங்களது மூக்கின் துளைகளை விளையாட்டு மைதானமாக்கி விட்டனதூக்கமென்பது சிறு மரணமேஉளறுவதாக நினைக்க வேண்டாம்உறங்கும் பொழுது உங்களது உயிர்கள் அல்லாஹ்வால் கைப்பற்றப்படுகிறது என்கிறது குர்ஆன்.

                உறக்கத்திற்கு இப்படியொரு விளக்கம் கொடுத்த முஹம்மது நபியே பேசமுடியாமல் வாயடைத்துப் போன நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.

புஹாரி ஹதீஸ்

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து, “நீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்,) தொழவில்லையா?”என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை எழுப்ப நினைத்தால்தான் எங்களால் எழ முடியும்” என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே “மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்” (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.

முஹம்மது நபியின் தில்லாலங்கடி வேலைக்கு அவரது மருமகன் அலீ பின் அபீதாலிப் அவர்களின் பதில்(ஆப்பு) எப்படி இருக்கிறது? நான் மீண்டும் கோள்கள் இயக்க விதிகளைத் தொடர்கிறேன்.

                ஆக, சூரியன் உதிப்பது கிழக்கிலிருந்து அல்லஉங்கள் மூக்கிலிருந்துதான்இதைப் போன்ற அபத்தங்களை இஸ்லாமைத் தவிர வேறு எங்கும் காண முடியாது.

  குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட ஒரு மாபெரும் அற்புதம் என்ற தங்களின் வாதத்தை நிருபிக்க ஆதாரபூர்வமான ஹதீஸ்களை புறந்தள்ளிவிட்டு புதிய விளக்கங்களை வெட்கமின்றி கூறிக் கொள்கின்றனர்.

முகம்மதுநபியைவிட அறிவில் சிறந்த நவீன உலமாக்களின் இந்த அதிநவீன விளக்கம்அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள நவீன கண்டுபிடிப்புகள்(?) பற்றிய முன்னறிவிப்புகளுக்குமுஹம்மது நபி தவறான விளக்கம் கூறிவிட்டதாவே பொருள் தருகிறதுமேலும் முஹம்மது நபி அன்றைய அறியாமை காலத்து மக்களின் நம்பிக்கைகளையே அவரும் நம்பினார் என்பது தெளிவாகிறது. அல்லாஹ்வின் வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்தது யார்? முஹம்மது நபியா? இல்லை இன்றைய அறிஞர்களா?

“சூரியனும் சந்திரனும் அதனதன் வட்டத்தில் நீந்துகின்றன, இன்னும் சூரியன் தன் வரையறைக்குள் சென்று கொண்டு இருக்கிறது;”என்ற வசனத்திற்கு முஹம்மது நபி கூறிய விளக்கங்களைப் புறந்தள்ளிவிட்டுஇன்று புதிய விளக்கத்தை கூறுவதன் மூலம் முஹம்மது நபியை முட்டாளாக்கி விட்டனர்.

இப்படித்தான் அறிவியல் உண்மைகளுடன் குர்ஆன் வசனங்களையும் இணைத்து ஏமாந்த சோணகிரிகளைப் புல்லரிக்கச் செய்கிறார்கள்.  (ஒருகாலத்தில்நானும் புல்லரிப்பிற்கு ஆளாகி தோல் மருத்துவரை அணுகியது தனிக்கதை!) அவர்கள்  முன்வைக்கும் முன்னறிவிப்புகளில் சில, ஃபிர்அவுனின் (Porah RAMSES-II) பாதுகாக்கப்பட்ட உடல், இருகடல்களுக்கிடையே உள்ள தடுப்பு, கருவின் வளர்ச்சி, பெருவெடிப்புக் கொள்கை தேன் உருவாகும் விதம், இரும்பின் அற்புதம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவைகள் அனைத்துமே அறிஞர்களால் தக்க அறிவியல் ஆதரங்களுடனும், குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையிலும் தெளிவாக மறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இஸ்லாமிய அறிஞர்கள் முன்னறிவிப்பு கட்டுக்கதைகளை கைவிடுவதாக இல்லை. நாள்தோறும் புதுப்புது முன்னறிவிப்புகளைக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்

       இன்னும் பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஜில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்

(குர் ஆன் 10:5, 36:39)

இப்பொழுது சந்திரன் தினமும் எந்த மன்ஜில்களில் எத்தனை நாள் தங்கிவருகிறது? இந்த இரண்டாம் வகுப்பு அறிவியல் பாடத்தையும்  நான் மீண்டும் உங்களுக்கு விளக்க வேண்டுமா?

இஸ்லாமிய நாட்காட்டி சந்திரனை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் அறிவோம். பிறை தென்படாத மேகமூட்டமான நேரங்களில் மாதத்தை கணக்கிடுவதைப்பற்றி முஹம்மது நபியிடம் அவரது தோழர்கள் வினவினர். அதற்கு முஹம்மது நபி கூறிய பதிலில்,    ‘குர்ஆனில் வானவியல் அற்புதங்கள்  உள்ளது’ என்று கூறிக் கொண்டிருப்பவர்களுக்கான பதில் உள்ளது.

புஹாரி ஹதீஸ் : 1913

இப்னு உமர் (ரலி )அவர்கள் கூறியதாவது:

நாம் உம்மி (எழுத்தறிவற்ற) சமுதாயமாவோம்எழுதுவதை அறிய மாட்டோம்விண்கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும் சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேகமூட்டமான காலங்களில் தென்படாத பிறைக்கு விளக்கம் தரமுடியால்,  தனக்கு விண்கலை தெரியாது என்று இயலாமையை வெளிப்படையாக கூறிய முஹம்மது நபி உங்களுக்கு பெருவெடிப்புக் கொள்கையையும், GALAXYன் இயக்கத்தையும்சூரிய இயக்க விதிகளையும் கோள்கள்  இயக்க விதிகளையும் அறிவித்தாரா?  நல்ல வேடிக்கை !

ஒருமுறை முஹம்மது நபியின் ஆலோசனையை செயல்படுத்தியதால் அவ்வருடம் பேரீச்சம்பழ விளைச்சல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது பாதிப்பை முஹம்மது நபியிடம் முறையிட்டபொழுது,

 முஸ்லீம்  ஹதீஸ் : 4711

…அல்லாஹ்வைப் பற்றி கூறுவதை மட்டும் கடைபிடியுங்கள் ஏனெனில் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்க மாட்டேன்… என்றார்.

முஹம்மது சந்திரனைப்பிளந்தார், சூரியனைச் சுட்டுவீழ்த்தினார் என்று அளந்து கொண்டிருப்பது பகுத்தறிவிற்குமட்டுமல்ல குர்ஆனுக்கே எதிரானது. முஹம்மது தனக்கு வெளிப்பட்ட வஹீயையும், குர்ஆனையுமே தனது அற்புதமாகக் கூறியுள்ளார்.

புஹாரி 2458-ல் வழக்குகளில் உண்மையை அறியாமல்,  வாதத் திறமையுடையவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிவிடுவேன் என்று தனது இயலாமையை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்.

                அர்த்தமில்லாத அற்புதக் கதைகளைக் கூறி முழம்போட்டுக் கொண்டிருப்பதைவிட தனக்கும் தனது தொழிலுக்கும் உபயோகமான எழுதத்தறிவையல்லவா முஹம்மது,  அல்லாஹ்விடமிருந்து கோரிப் பெற்றிருக்க வேண்டும்?

அடுத்தது தத்துவ முரண்பாடுகள்.  பூமியில் மனிதன் தோன்றுவதற்கான குர்ஆன் கூறும் காரணங்களைக் காண்போம்

தொடரும்…

Advertisements

3 thoughts on “ஆரம்பத்தை நோக்கி -தொடர் 15

  1. வானவியல் எப்படி ஒரு ஆறாம் நூற்றாண்டு அரபுக்கு தெரியும் ?
    அல்லா சொன்னால் என்றால் ஏன் அவனுக்கும் தெரிய வில்லை ?
    ஆக இந்த குரான் முஹம்மத் உட்ட புருடாவே தவிர வேறில்லை…!!
    மேலும் மேலும் மேலும் சூரியனின் பாதையை மட்டும் குறிப்பிடும் அல்லாஹ் ஏன் அதற்கு பின்னே போக மாட்டேன் என்கிறான் ?
    சூரியன் என்பது இந்த பிரபஞ்சத்தில் மிகச்சிறிய ஒரு நட்சத்திரம் …. ஏன் இதை மட்டும் புடித்துகொண்டு தொங்க வேண்டும் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s