• எமது வெளியீடுகள்

  • பிஜேவின் கனவு

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • வெளியீடு 2

  • Blog Stats

    • 86,546 பார்வைகள்

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 22


வேதங்களின் நிலை

குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின்  அடிப்படை குர்ஆன். எனவே  இக்கேள்வியை இஸ்லாம் என்ற புதிய வழிமுறை ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …

(குர்ஆன் 2:213)

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட  தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.

…இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.

(குர்ஆன் 2:75)

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …

(குர்ஆன் 2:79)

எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே  குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.

நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.

(குர்ஆன் 15: 9)

                இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி.    தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.

…அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.

(குர்ஆன் 6:34)

நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,

இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …

(குர்ஆன் 2: 4)

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(குர்ஆன் 3:84)

தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

நிச்சயமாக நாம்தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

(குர்ஆன் 5:44)

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; “நிச்சயமாக பூமியை (சாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

  (குர்ஆன் 21:105)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக  இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு  நேர் வழிகாட்டியாகவும்  நல்லுபதேசமாகவும்  இருந்தது.

 (குர்ஆன் 5:46)

அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக  பார்ப்போம் :

  • குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
  • குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய           வேதங்கள்  ஆகும்
  • குர் ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
  • முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக      அல்லாஹ்      தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர்       ஆன் பாதுகாக்கப்பட்டு           இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
  • அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.

இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்

* குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை  பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி  செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க  உறுதி மேற்கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக  தெரியவில்லையா?

* குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், அல்லாஹ் பலவீனமானவன் அல்லது அவன் ஒரு அநீதிக்காரன். தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

அல்லது

* அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் சும்மா இருந்த அல்லாஹ்,  பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தைவேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.

* அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும்.

* அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்,  வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?

* முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால்  சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?

* அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?

* குர்ஆனின் (6:34) …அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை. என்ற வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம்.  இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.

* அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய  பொய்.

 முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)

 “அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனாக இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகி குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.

* அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று  வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என  ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,

ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக  வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.

மறதியாளன் என தன்னால் வர்ணணை  செய்யப்பட்ட  மனிதனின் இதயத்தில்(?)  வைத்து  அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(குர்ஆன் 2:106)

முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும்  வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த “மூலப்பதிவேடு” என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?

எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது ‘சொதப்பலா’?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,

தொடரும்….

ஆரம்பத்தை நோக்கி -முந்தைய தொடர்கள்

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 22 PDF

Advertisements

2 பதில்கள்

  1. உங்களின் பதிவுகள் அருமை.உங்களின் வாதிடும் முறை நன்று.இசுலாத்தைப்பற்றி அதிகம் ஏன் 99 விழுக்காடு தெரியாத என் போன்றவர்களுக்கு உங்களின் தொடர் நிறைய செய்திகளைத் தருகிறது. மற்ற மதங்களைப்போலவே இசுலாமும் நம்பிக்கைகள் கற்பனைகள் அறிவியலற்ற செய்திகள் அற்புதங்கள் வன்முறைகள் அடக்குமுறைகள் இவற்றின் மீதே கட்டப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.இது வரை தமிழ்நாட்டில் இந்து மத த்தை தான் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து கேள்வி கேட்டுவந்தார்கள் பெரியார் தொண்டர்கள்.நீங்கள் ஏன் பிற மதங்களை விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்குப்பதிலாக உங்களின் அருமையான தொடர் பதிலாக வந்துள்ளது.ஏன் என்றால் தமிழ்நாட்டில் உள்ள நாத்திகர்களில் 99 விழுக்காடு இந்துமத த்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு இசுலாம் கிறித்தவம் போன்ற இறக்குமதியான மதங்களைப்பற்றி அதிகம்தெரிவது இல்லை.அந்த குறையை உங்களின் தொடர் போக்குகிறது.தொடரட்டும் உங்களின் அறிவு வெளிச்சம் பரப்பும் பணி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: