• எமது வெளியீடுகள்

  • பிஜேவின் கனவு

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • வெளியீடு 2

  • Blog Stats

    • 88,138 பார்வைகள்

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 30


தொடர் 30

மறுமை வாழ்கை

(இந்த பகுதியை கூடுமானவரையிலும் வார்த்தைகளை தணிக்கை செய்தே எழுதியிருக்கிறேன். கருத்தை தணிக்க செய்ய முடியவில்லை.  ஆபாசம் தென்பட்டால், குற்றம் குர்ஆனையும், ஹதீஸ்களையுமே சார்ந்தது )

            இந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி!.  வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், பணிவிடை செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.

நிச்சயமாக ஈமான் நற்செயல்கள் செய்பவர்களை சொர்க்கங்களில் புகச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் தங்கத்தினாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் (ஆபரணங்கள்) அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்.…

(குர் ஆன் 22:23)

தங்கத்தினாலான தட்டுகளும், குவளைகளும் அவர்களிடம் சுற்றிக் கொண்டுவரப்படும்…

(குர் ஆன் 43:71)

            தங்கம் இரும்பைப் போன்ற ஒரு உலோகமே. பூமியில், தங்கம் கிடைப்பது அரிதாக இருப்பதன் காரணமாகவே பெரிதாக மதிக்கப்படுகிறது.பொருள்களை பண்டமாற்றம் செய்து வந்த மக்கள், நாளடைவில் அரிதான உலோகமான தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றினர். ஆக, தங்கத்தின் மதிப்பு மனிதர்களின் பிற தேவைகளையே சார்ந்தது. உலக வாழ்வில்  தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களின் உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளுக்காகவும், மற்றவர்களை விட தன்னை உயர்ந்தவனாக கண்பிக்கும் மனோபாவாமே மனிதனை பொருளை (தங்கத்தை) தேடி ஓட வைத்தது. எவ்வித தேவைகளும், போட்டி, பொறாமைகளுமற்ற  மறுமை வாழ்வில் தங்கத்திற்கு தனி மரியாதை தேவையில்லையே?   மறுமை வாழ்வில் அல்லாஹ்  தரும் தங்கத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

வீட்டுவாடகை, School fees, collage fees, Ration கடை, பருப்பு, பாமாயில், கரண்ட பில் என்ற எந்த கவலையும் சொர்கத்தில் உங்களுக்கு இருக்காது. பஸ்ஸை பிடிக்க வேண்டும், இரயிலைப் பிடிக்க வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும், காது குத்திற்குப் போக வேண்டும் Hospital  போக வேண்டும் என்ற பிடுங்கல்களும் இருக்காது.  அல்லாஹ்வை தொழ வேண்டும், முஹம்மதுவிற்கு பல்லக்கு தூக்க வேண்டும்,  என்ற எந்த வழிபாடுகளும் கிடையாது. பொறாமை, கோபம், விரோதம் போன்ற  தீய எண்ணங்களும் சொர்க்கவாசிகளின் மனதைவிட்டு அகற்றி விடுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

பிறகு என்னதான் இருக்கிறது?

 இவ்வளவையும் மனிதனைவிட்டு நீக்கிய அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex.  மனிதனின் உடற்பசியை மட்டும் ஒரு காலத்திலும் அவனை விட்டு விலக விடுவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறான். சொர்கத்தில்  மனிதனுக்கு இருக்கும் ஒரே பணி  Sex…  Sex…முடிவில்லாத  சல்லாபங்கள்.

அதற்கு விருந்தாக, கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி, மான்விழி ஹூர் எனும் பேரழகிகள். மறுமையின் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வெகுமதிகளாக 80,000 பணியாட்களும், உலகில் அவர்களுடன் வாழ்ந்து மறுமையிலும் வெற்றி பெற்ற  அவர்களது மனைவியர்களுடன், எழுபதிற்கும் மேற்பட்ட ஹூருலீன்களும்  வழங்கப்படுவார்கள்.

நீங்களும் உங்களுடைய மனைவியரும் மகிழ்ச்சிக்குரியவர்களாக இருக்கும் நிலையில் சொர்க்கத்தினுள் புகுங்கள்…

(குர் ஆன் 43.70)

அவற்றில் அழகுமிக்க நற்குணமுள்ள கன்னியர்கள் இருப்பர்

(குர் ஆன் 55.70)

இவ்வாறே;   இன்னும் அவர்களுக்கு  ஹூருல்ஈன்  (என்னும் சுவர்கத்துக் கன்னியர்)களைத் துணைவியராக்கி வைப்போம்.

(குர்ஆன் 44: 54)

அவற்றில் பார்வை கீழ் நோக்கிய பெண்கள் இருக்கின்றனர் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் (சொர்க்வாசிகளாகிய) இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை.

       (குர்ஆன் 55: 56)

அவர்களை கன்னியர்களாகவும் ஆக்கினோம்.

(குர்ஆன் 55: 36)

ஒரே வயதுள்ள கன்னிப் பெண்களும்.

(குர்ஆன் 78: 33)

சரி, மனைவியர்கள் இருக்கையில், எதற்காக இவ்வளவு ஹூருலீன்கள் ?  தங்களது கணவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளாத (கள்ளத்தொடர்பு) காரணத்தால் நரகத்தில் பெண்களே மிகுதியாக இருக்கக் கண்டதாக முஹம்மது நபி கூறுகிறார்.

புகாரிஹதீஸ் எண் : 3241

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நான் (மிஅராஜ்- விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களை கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஹம்மது நபி, பெண்கள் என்றாலே பிற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு கொள்பவர்கள் என்று முடிவு செய்துவிட்டாதாகவே தோன்றுகிறது. மிஃராஜ் பயணத்தின் பொழுது கண்ட காட்சிகளில் இதுவும் இடம்பெறுகிறது.,

பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

முஹம்மது நபியின் சந்தேக குணத்தை பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைத்தது உமர் கத்தாப் அவர்களின் பணியாகும். இன்று முஸ்லீம் பெண்களின் முகங்கள் கருப்புத் திரைகளால் மூடப்பட்டிருப்பதற்கு  இவர்களது இந்த குணம் மட்டுமே காரணம்.

எனவே, பெரும்பாலான பெண்கள் கள்ளத் தொடர்பு குற்றத்திற்காக நரகத்திற்குள் வீசப்பட இருப்பதால், ஆண்களின் இச்சையை  சரிகட்டவே ஒவ்வொருவருக்கும் 72 ஹூருலீன்கள் வழங்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஹூருலீன்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஹதீஸ்களிலிருந்து சில செய்திகள்.

புகாரிஹதீஸ் எண்: 3327

அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள் பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள். எச்சில் துப்பவும் மாட்டார்கள், மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவருடைய சீப்புக்கள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.

புகாரிஹதீஸ்:3246 ,

அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது, எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வெருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வெருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளது பளிங்குமேனியின் பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களுடைய பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களுடைய தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களுடைய வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும்.

Sahih Muslim  6793

The great Islamic scholar, Ibn Kathir, comments on 78:33:

(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said, (Kawa`ib) “This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.” The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah…

(சம வயதுடையவர்கள் ஹூரூலீன்களுக்கு வட்டவடிவமான நிமிர்ந்த்த மார்புகள்  உடையவர்கள்)

Comment on 56:36 from Maariful Tafsir

 

The word “abkaran, being the plural of bikr, means ‘virgins’. The sense is the creation of the maidens of Paradise will be of such a nature that, even after every sexual intercourse, they will remain like virgins  (Page: 290)

(ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் அவர்கள் (ஹூரூலீன்கள்) கன்னியர்களாகவே இருப்பார்கள்)

Comment on 44:54 from Maariful Tafsir

… Although the inmates of Paradise will not be legally obligated to observe the precepts of Shariah the purpose of marriage will be to honour them. Therefore, this should not raise any objection IF the word is taken in the first sense, houris having big dark eyes will be given as life partners to the men of Paradise. The houris in this case will be granted to them as a gift. There will be no need for a contract of marriage as is done in this world. (Page 762).

(மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு, ஹூரூலீன்கள் பரிசாக வழங்கப்படுவார்கள். உலகில் இருப்பதைப் போல அங்கு எவ்வித திருமண ஒப்பந்தங்களும் தேவையில்லை)

இத்தனை ஹூருலீன்களையும் வைத்துக் கொண்டு சராசரி பாலியல் பலம் கொண்ட மனிதன் தன் இச்சையை எப்படி தீர்க்கமுடியும்?என்ற உங்களது அச்சம் நியாயமானதே. இதற்கும் சரியான தீர்வு முஹம்மது நபி அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.

Sunan al-Tirmidhi #2459

A man will have intercourse in Paradise with his wives from among al-hoor al-‘iyn and his wives from among the people of this world, if they enter Paradise with him.A man will be given the strength of a hundred men to eat, drink, feel desire and have sexual intercourse. It was narrated from Anas that the Prophet said: “The eliever in Paradise will be given such and such strength for sexual intercourse.” He was asked, “O Messenger of Allaah, will he really be able to do that?” He said, “He will be given the strength of one hundred (men).” 

(ஹூருலீன்களுடன் இணைவதற்கும் முடிவில்லா சுகம் பெறுவதற்கும் நூறு பேருடைய ஆற்றல் சொர்க்வாசி ஆண்களுக்கு வழங்கப்படும். அறிவிப்பவர் அனஸ் (ரலி) திர்மிதீ.)

ஜிப்ரீல் முஹம்மது நபிக்கு ஆண்மைபலம் பெருக லேகியம் (பக்குவமாக சமைக்கப்பட்ட இறைச்சி) கொடுத்ததை முன்பே உங்களிடம் கூறியிருக்கிறேன். அதைவிட பல மடங்கு சக்த்திவாய்ந்த லேகியம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறதே பிறகு என்ன கவலை? ஆற்றல் குறைபாடு உள்ளவர்கள், அல்லஹ்விடம் முறையிடலாம். ஜிப்ரீலைத் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து சற்று கூடுதல் சக்தியுடைய லேகியம் வாங்கி சாப்பிடவும்.

ஒரு நாளைக்கு நூறுமுறை என்றால்,  மறுமை வெற்றியாளர்கள்  சுமார் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை RECHARGE செய்யப்பட்டு ஹூருலீன்களை  ‘வெற்றி கொள்ள களத்திற்கு’ அனுப்பப்படுவார்கள்.

சாதாரண ஆண்மை பலத்திற்கே நம்மில் பலருக்கு பலதாரங்கள் தேவைப்படுகிறது. இதில் நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்பட்டால் மென்மையான ஹூருலீன்களின் நிலை என்னாவது? என்று கவலைப்பட வேண்டாம்.உங்களது அந்த கவலையையும் அல்லாஹ் கவனத்தில் கொண்டுள்ளான்,

நிச்சயமாக நாம் (ஹூருல்ஈன்களான) அவர்களை பிரத்தியேகமாக உண்டாக்கினோம்.

(குர் ஆன் 55.35)

ஹூருலீன்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். எவ்வளவு முறை உறவு கொள்ளப்பட்டாலும் சலிப்படையவோ வேதனையடையவோ மாட்டார்கள். அவர்களுக்கு மாதவிலக்கு கிடையாது என்றுமே கன்னித்தன்மையுடையவர்களாக இருப்பார்கள். இவை பற்றிய ஹதீஸ்கள் கூறும் வர்ணணைகளின் சுருக்கமான தகவல்கள்.

எகிப்திய அறிஞரின் குர்ஆன் விரிவுரையிலிருந்து

Imam Al-Suyuti (died 1505). He wrote:

 “Each time we sleep with a houri we find her virgin. Besides, the penis of the Ejected never softens. The erection is eternal; the sensation that you feel each time you make love is utterly delicious and out of this world and were you to experience it in this world you would faint. Each chosen one [ie Muslim] will marry seventy  houris, besides the women he married on earth, and all will have appetizing vaginas.”

(ஒவ்வொரு முறையும் (உறவுக்குப் பின்னும்) ஹூரூலீன்களைக் கன்னியர்களாகவே நாம் காண்போம். அன்றியும், ஆணுறுப்பு ஒருபொழுதும் தளர்ந்து விடாது. அதன் விறைப்புத்தன்மை நிலையானது; உங்கள் காதலால் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணரும் முழு இன்பம் உலகில் இல்லாதது. அதை(இன்பங்களை) இவ்வுலகில் நீங்கள் அனுபவித்தால் மயங்கி விடுவீர்கள்.  தேந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் 70 ஹூரூலீன்களை திருமணம் செய்வார்கள். அன்றியும், அவரது இவ்வுலக மனைவியர்கள் (இச்சையைத்) தூண்டும்படியான பெண்ணுறுப்புகளைப் பெற்றிருப்பார்கள்)

ஆண்களுக்கு ஹூருல்ஈன்கள். Ok   பெண்களுக்கு என்ன…?

தொடரும்….

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: