தொடர் 33

அல்லாஹ்வின் வசனங்கள் முஹம்மது நபி  அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறே இறங்கியது அல்லது இட்டுக்கட்டப்பட்டது  என்ற குற்றச்சாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதில்

  1. தன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்கவேண்டுமென பெரிதும்            விரும்பினார்கள்.
  2. நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56)         என்ற வசனம் இறங்கியது.
  3. உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்களின் அவர்களின் பல் உடைந்தபோது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள்.
  4. உமக்கு அதிகாரத்தில் யாதொருபங்குமில்ல (3:128) என்ற வசனம் இறங்கியது.
  5. குருடர் ஒருவரது விஷயத்தில் நபியின் அணுகுமுறையைக் கண்டித்து (80:1)            வசனம் இறங்கியது.
  6. செல்வந்தர்களுக்கும், உயர் குலத்தவர்களுக்கும் தனி மதிப்புத் தரலாம்   என்று     விரும்பிய போது (6:52) வசனம் இறங்கியது.
  7. கைதிகளை என்ன செய்யலாம் என்ற விஷயத்திலும், பெண்களின் ஆடைகள்           பற்றியும், நயவஞ்சகர்களுக்கு தொழுகை நடத்துவது பற்றியும் இவரது                 விருப்பம் வேறாக இருந்தது. இவரது தோழரான உமருடைய விருப்பம்      நோற்பது, தன் சுகத்தைத் தியாகம் செய்வது போன்ற காரியங்களை   இயல்பிலேயே எவரும் விரும்ப மாட்டார்கள். அவற்றைச் செய்யுமாறு    அவருக்கும் சேர்த்தே கட்டளை வருகிறது.
  8. குர்ஆன் முழுவதும் அல்லாஹ்வின் வார்த்தைகளே முஹம்மது      இட்டுக்கட்டிக் கூறவில்லை. வேத வசனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதைத் குறிப்பிடும் வசனங்கள்.

1. முஹம்மத் நம் மீது எதையாவது இட்டுக்கட்டிக் கூறி இருப்பாரானால் வலக்கரத்தால் அவரைப்பிடித்து அவரது நாடிநரம்புகளைத் துண்டித்திருப்போம்.

(குர்ஆன் 69:44)

2. நாமே இந்த போதனையை அருளினோம் அதை நாமே பாதுகாப்போம்.

(குர்ஆன் 15:9)

3. ஓதுவதற்காக அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர் அதைத்திரட்டி (உம்             உள்ளத்தில்) பதியச் செய்வதும், ஓதச் செய்வதும் நம்முடைய வேலையாகும்.

(குர்ஆன் 75:16)

4. முஹம்மது தம் இச்சைப்படி பேசமாட்டார், அது இறைவனால் அறிவிக்கப்பட்ட   செய்தியைத்தவிர வேறு இல்லை.

(குர்ஆன் 53:3)

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், முஹம்மது நபி அவர்கள் பொய்யுரைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களாக முன்வைக்கப்படுகிறது. இவர்களது இந்த பதில் பகுத்தறிவிற்கு ஏற்புடையதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.  குர்ஆனில் உள்ள ஒவ்வொரு சொல்லும் இறைவனின் வாக்கு என்று நிரூபித்தால் மட்டுமே இவர்களது பதிலை ஏற்க முடியும்.

இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களுக்கு சுருக்கமான முறையில் மறுப்புகள்.

ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் மாதம். மக்காவினுள் நுழையும் நாளுக்கு முந்தைய இரவு. நபிகள் தன் தோழர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அதைக் குறிப்பிட்டார்கள். “மக்காவில் நான்கு பேர் இருக்கிறார்கள். உருவ வழிபாட்டில் மிகவும் மூழ்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்”.

“அல்லாஹ்வின் தூதரே, யார் அவர்கள்?” தோழர்கள் கேட்டார்கள்.

“அத்தாப் இப்னு உஸைத், ஜுபைர் இப்னு முத்இம், ஹகீம் இப்னு ஹிஸாம், சுஹைல் இப்னு அம்ரு”

அந்த விருப்பம் வீணாகவில்லை. நிறைவேறியது, முழுவதுமாய் நிறைவேறியது. பின்னர் அந்த நால்வருமே இஸ்லாத்தினுள் நுழைந்தனர்.

            அபூதாலிப், முஹம்மதின் போதனைகளை ஏற்க வில்லை எனினும், எதிரிகளிடமிருந்து முஹம்மதை கண்ணும் கருத்துமாக  பாதுகாத்தார். இதற்காக முஹம்மதுவிடம் எவ்வித பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அத்தாப் இப்னு உஸைத், ஜுபைர் இப்னு முத்இம், ஹகீம் இப்னு ஹிஸாம், சுஹைல் இப்னு அம்ரு ஆகியவர்களை விட அபூதாலிப் மோசமானவரா? முஹம்மதிற்காகவே இப்பிரபஞ்சத்தையே படைத்தவனால் ஒரு அபூதாலிப்பின் கொள்கை உறுதியை உடைத்து தனது அன்பிற்கும் ஆசைக்கும் உரிய தூதரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையா?

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முஹம்மது விரும்பியவர்களில்  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் உள்ளனர்.  அதைப் புறக்கணித்தவர்களும் உள்ளனர் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. அந்த நால்வரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது கூட  சூழ்நிலையின் நிர்பந்தம்.

நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம், தன்னை மிகுந்த அன்புடன் பாதுகாத்தவரே தன்னை அல்லாஹ்வின் தூதரென்று நம்பவில்லையே என்று  முஹம்மது அடைந்த விரக்தியின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்பதைத்தவிர வேறில்லை!

உஹது போரில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக யாரைக் குறைகூறுவதென்று தெரியாமல், முதலில், போரில் பின் வாங்கியவர்களையும், அவர்களது ஈமானையும், பிறகு வழக்கம்போல சைத்தானையும், அல்லாஹ்வின் சோதனை என்றும்  புலம்பிய குர்ஆனின் வசனங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தனது முடிவுகளை அடிக்கடி மற்றிக் கொள்ளும் இயல்புடைய முஹம்மதிற்கு, குருடரின் விஷயத்திலும் செல்வந்தர்களின் விஷயத்திலும் தனது முடிவை மற்றிக் கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.. தன்னைத் தேடிவந்த குருடரைப் புறக்கணித்து, வலியச் சென்று செல்வந்தரிடம் பேசியது பயனளிக்கவில்லையே என்ற முஹம்மதின் புலம்பல்தான் அது. (தனது சுட்டுவிரலை தனது முகத்திற்கு எதிரே சுட்டிக் காண்பித்தவாறு “உனக்கு இது தேவையா… தேவையா ?” என்று வடிவேலு தன்னைத்தானே நெந்துகொள்ளும் காமெடி கட்சியை கற்பனை செய்து கொள்ளவும்!)

முந்தின வேதங்களை மாற்றியதாக அல்லாஹ்வால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் எத்தனை பேர்களது நாடிநரம்புகளை  வலக்கரத்தால் பிடித்து துண்டித்திருக்கிறான்? ஒருவரும் தண்டிக்கப்படவில்லை!

 

முஹம்மது தம் இச்சைப்படியே பேசினார், தம் இச்சைப்படியே வாழ்ந்தார். குர்ஆன் இறைவனின் செய்திஅல்ல என்பதை நிருபிக்கவே இவ்வளவு ஆதாரங்களையும் குர்ஆனிலிருந்து எடுத்து முன்வைக்கிறேன்.

 

 மீணடும் “அது இறைவனால் அறிவிக்கப்பட்ட             செய்தியைத்தவிர வேறு இல்லை.” என்ற குர்ஆன்வசனத்தையே சுட்டிக் காட்டி, குர்ஆன் இறைவனின் வார்த்தைகள்தான் என்று சிறுபிள்ளைத்தனமாக விளக்கம் கூறுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தான் குற்றவாளி இல்லை  என்று கூறுவதை மிக முக்கியமான ஆதாரமாகக் கொண்டு அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று வாதிடுவதைப் போன்று உள்ளது.

குர்ஆன் வசனங்களை அல்லாஹ் கூறுவதையோ அல்லது ஜிப்ரீல் மூலம் கூறப்பட்டதையோ ஒருவரும் கண்டதில்லை. முஹம்மது நபியின் வாய்மொழி மட்டுமே ஆதாரம். அவர் பொய்யுரைத்திருக்க மாட்டார் என்று நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். குர்ஆன் வசனங்களிலுள்ள பலவிதமான முரண்பாடுகள்,  குர்ஆன் சர்வ வல்லமையுடைய இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியாது என்பதற்கு ஆதாரங்களாகின்றன.

 

இந்தக் குர்ஆனை ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்துள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”

(குர்ஆன் 4:82) 

 

குர்ஆனின் இந்த கருத்தின்படி  குர்ஆன்  இறைவனின் வார்த்தைகளல்ல. அறிவியல் மற்றும் சமுக வாழ்க்கைச் செய்திகளிலும் நான் கண்ட சில முரண்பாடுகளை மட்டும் உங்கள் முன் வைத்து விட்டேன் பதில் என்ன?

மேற்கண்ட குழப்பங்களைப் பற்றி சிலரிடம் விளக்கம் பெற முற்பட்டவுடன்,

நம் திருவசனங்களைப் பற்றி வீண் விவாதத்தில் மூழ்கியிருப்போரை நீர் பார்த்தால். அது அல்லாத வேறு விஷயத்தில் அவர்கள் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணித்து (ஒதுங்கி) விடுவீராக ; …

(குர் ஆன் 6:68)

என்ற வசனத்தை முன் நிறுத்தி, என்னையும்   72 கூட்டத்தில் ஒரு கூட்டமாக (அவர்கள் குறிப்பிட்ட குழுவின் பெயர் நினைவில் இல்லை) கருதி பதில் சொல்லாமல் நழுவி சென்று விட்டனர். சிலர் முஹம்மது நபி  அவர்களைப் பற்றி விமர்சிக்க நீ யார்? அதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்கின்றனர். சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்கென்று ஏதாவது சிறப்புத் தகுதிகள் வேண்டுமா?

 

குர்ஆனின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுவது  வீண் விவாதங்களாம். குர்ஆனில் முரண்பாடுகளே இல்லையெனில் அதைப் பற்றி விவாதிப்பதற்கு அச்சம் ஏன்? Internet என்ற பாதுகாப்பான ஊடகம் மட்டும் இருப்பதனால்  இணையதளங்களில் முஹம்மது அவர்களைக் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   பொதுமேடைகளில் பகிரங்கமாக இஸ்லாமை விமர்சி்க்க வழியில்லை.

சிலர், உங்களது கேள்விகள் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் நேரிடையாக போர் செய்வதைப் போன்றது என்றனர். அதாவது, குர்ஆனை ஆராய்சிகள்  செய்யலாம்,  ஆராய்ச்சிகள்  குர்ஆனுக்கு ஆதரவாக மட்டுமே இருக்க வேண்டும். நடுநிலையாகவோ, குறை கூறும் விதமாகவோ முடிவுகளைக் கூற கனவிலும் கூட நினைக்கக் கூடாது. முரண்பாடுகளைப் பற்றி வாய் திறக்கக் கூடாது. ஒருவேளை முரண்பாடுகளைப்பற்றி விவாதித்தால் அது வீண் வேலை என்று புறக்கணித்து விடுவார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் எதிராகப் போர் செய்பவராகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவார்கள்.

எங்களைப் போன்றவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லத் தெரியாமல் குர்ஆனும் விழி பிதுங்கி, அத்தகையவர்களைக் கொடூரமாக கொலை செய்யுமாறு உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வுடனும் அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது கொல்லப்படுதல் அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல்…

(குர்ஆன் 5: 33)

 

Sahih Bukhari Volume 9, Book 84, Number 57: Narrated ‘Ikrima:

Some Zanadiqa (atheists) were brought to ‘Ali and he burnt them. The news of this event, reached Ibn ‘Abbas who said, “If I had been in his place, I would not have burnt them, as Allah’s Apostle forbade it, saying, ‘Do not punish anybody with Allah’s punishment (fire).’ I would have killed them according to the statement of Allah’s Apostle, “Whoever changed his Islamic religion, then kill him.”

 

இதில் போர் எனக் குறிப்பிடப்படுவது, முஹமம்மதிற்கு எதிரான அனைத்து விதமான செயல்களையும் குறிப்பிடும்.

முஹம்மது நபியின் செயல்களும், போதனைகளும் முரண்பாடற்றவைகளே எனில், மரண தண்டனைகளுக்கான அவசியம் என்ன?   எதற்காக மாறுகால் மாறுகை வாங்கி கொல்ல உத்தரவிட வேண்டும்? முஹம்மது  நபியின் செயல்கள் முரண்பாடற்றவைகள் என்பதில் உறுதியானவர்களாக இருந்தால், அதை  பகிரங்கமாக விவாதிப்பதற்கு எதற்காக தயங்க வேண்டும்?

                நடைமுறை வாழ்க்கையில், விவாதத்திற்கு சரியான பதில் செல்ல கையாலாகாத முரடர்கள் கோபமடைந்து எதிராளியைத் தாக்குவார்கள். அப்படியானால், நிச்சயமாக இந்தக் கட்டளை எல்லாம் அறிந்த இறைவனின் சொல்லாக இருக்க முடியாது. இது கையாலாகாத ஒரு முரட்டு மானிடப் பிறவியிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம்.

இது மனிதர்களுக்கு விளக்கமாகவும் நேர்வழி காட்டியாகவும் பயபக்தியாளர்களுக்கு நற்போதனையாகவும் இருக்கிறது

(குர்ஆன் 3:138)

அவர்கள் பயபக்தியுள்ளவர்களாவதற்காக கோணலில்லாத அரபிமொழியில் குர்ஆனை (அருளியுள்ளோம்)

(குர்ஆன் 39:28)

                உண்மையிலேயே குர்ஆன் தெளிவான, கோணலில்லாத நேர்வழிகட்டும் புத்தகமாக இருந்தால் கேள்விகளும் சந்தேகங்களும் எப்படி உருவாக முடியும்? நீண்ட நெடிய தப்சீர் (குர்ஆன் விரிவுரை) குறிப்புகளின் துணையுடன்தான் அல்லாஹ்வின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியுமென்றால், குர்ஆன் கோணலில்லாதது, விளக்கமானது, மனிதர்களுக்கு நேர்வழிகாட்டி என்று அல்லாஹ் கூறுவது  பொய்தானே? அல்லாஹ்விற்குத் தெளிவாகப் பேசத் தெரியாதா?

குர்ஆன் விளக்கமானது என்று அல்லாஹ் கூறிய பின்னரும், தப்சீர்கள் என்ற பெயரில் விளக்க உரைகளையும், அந்த தப்சீர்களுக்கு  விரிவுரைகளையும் கூறிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று அழைக்கலாம்? இவர்கள் அல்லாஹ்வை விட புத்திசாலிகளா? உண்மையில், குர்ஆன்  இறைவனின் சொல்லாக இருப்பின் புத்திபேதலித்தவனால் கூட எளிதாக  புரிந்து கொள்ள முடியும். எவரும் விரிவுரைகளும், விளக்கவுரைகளும் எழுத வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு விரிவுரைகளும், விளக்கவுரைகளும் எழுதவேண்டிய அவசியம் என்ன?

குர்ஆனிலுள்ள முரண்பாடுகளையும் அபத்தங்களையும் மறைப்பதற்காகவே மீண்டும் மீண்டும் விரிவுரைகளும், விளக்கவுரைகளும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆன் எல்லாம் அறிந்தவனும், ஞானமிக்கவனும், நுண்ணறிவாளனுமாகிய இறைவனின் சொல்லாக இருக்க முடியாது என்பது இன்னும் புரியவில்லையா?

மார்க்கத்ததை ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பது படைப்பினங்களுக்குத் தரப்பட்டுள்ள பகுத்தறிவின் சுதந்திரம் என்று கூறும் குர்ஆனின் விளக்கத்தை ஏற்பதானால், குர்ஆனில் மிகுதியாக உள்ள விதியின்வலிமை, வற்புறுத்தல்கள், சர்வாதிகாரம் நிறைந்து காணப்படும்  வசனங்கள்  பொருளற்றது. 

படைப்பினங்களின் ஒவ்வொரு இயக்கமும் அல்லாஹ்  முன்பே முடிவு செய்த விதியின் வழியே நிகழ்கிறது  என்ற குர்ஆனின் வசனங்களை ஏற்பதானால், படைப்பின் ஆரம்பத்தில் துவங்கி இறுதித் தீர்ப்பு நாள் வரையுள்ள அனைத்து நிகழ்வுகளையும், அதன் அடிப்படையையும், விளக்கங்களையும் பொருளற்றதாக்கி விடுவதுடன், மேலும் மேலும் வேடிக்கையான கேள்விகளையே உருவாக்குகிறது. இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மரண தண்டனைக்குரிய  குற்றவாளிகளா? இதைக் கண்டும் காணமல் விடுபவர்கள்  இறைநேசர்களா?

 

                இது இன்று புதிதாக துவங்கியதல்ல.  முஹம்மதுவின் தில்லுமுல்லு வேலைகளை இனம் கண்டு அவரது காலத்திலேயே அதை மக்களுக்குத் தெரிவிக்கவும் செய்தனர். அதன் பிறகு அவர்கள் உலகில் வாழ அனுமதிக்கப்படவில்லை.

 

 

புகாரி ஹதீஸ் :  3617       

அனஸ்  (ரலி) அவர்கள் கூறியதாவது

ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா” மற்றும் “ஆலு இம்ரான்” அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) ‘முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்ததை தவிர வேறதுவும் தெரியாது” என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைதனது தனது விட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதைகுழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டிப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (அல்லாஹ்வின் தண்டனை) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.

முஹம்மது அவர்களிடம் எழுத்தராக இருந்த கிருஸ்துவர் கூறியது அபாண்டமான பொய்யாக இருப்பின், தனது வேதத்தை ஏளனம் செய்தவரை எல்லோரும் அறிய வெளிப்படையாக ஏன் தண்டிக்கவில்லை? இரகசியமாக தண்டிக்க வேண்டியஅவசியம் என்ன? பிணத்தைத் தோண்டி வெளியில் எடுத்துக் கொண்டிருப்பதைப்பதை மற்ற கிருஸ்துவர்கள் பார்த்து விட்டால் தன்னிடமிருந்து பிடுங்கி தனது திட்டத்தை தடுத்து விடுவார்கள் என்று அல்லாஹ் அஞ்சி விட்டானா?

            கிருஸ்துவர் கூறியது தவறென்றால் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் மறுப்பதற்கு தனது தூதருக்கு கற்பித்துக் கொடுத்திருக்க வேண்டும். தனது தூதரின் கண்ணியத்தை நிரூபித்திருக்க வேண்டும். அதைவிடுத்து கோழைத்தனமாக கிருஸ்துவரின் சடலத்தையும் தண்டித்த அல்லாஹ்வின் வல்லமையை நினைக்கையில் காறியுமிழவும் அருவருப்பாக இருக்கிறது. இது சர்வவல்லமையுடைய இறைவனின் செயல் என்று கற்பனை செய்வதைக்கூட பெரும்பாவமாக நினைக்கிறேன். 

                இத்தனை முரண்பாடுகளையும் நான் புதிதாக கண்டுபிடித்துக் கூறுவதாக நினைக்க வேண்டாம். முஹம்மது தன்னை இறைத்தூதராக அறிவித்தவுடனே ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியவைகள். அவற்றை மீண்டுமொரு முறை தொகுத்துக் கூறுகிறேன். அன்றைய காலகட்டத்திலேயே இஸ்லாமை ஆய்வு செய்து அதை கடுமையாக விமர்சித்த முஸ்லீம்களில் சிலர் Zakaria Razi, Ibn Sina, Ibn Rushd, Khayyam, Ibn Arabi, Al Muari

                எங்களைப் போன்ற மாற்றுச் சிந்தனையாளர்களின் கேள்விகளுக்கு 1400 ஆண்டுகளாக,  அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மதுவும் மரண தண்டனைகளை மட்டுமே பதிலாக  தந்திருக்கிறார்கள். 

            இஸ்லாமைப்பற்றிய உண்மைகளைக் கூறுகிறவர்களுக்கு,  பதிலாக  அல்லாஹ்வும் அவனது தூதரும் முஸ்லீம்களுக்கு போதித்த, மிகவலிமையாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளும், மரண தண்டனைகளும் இல்லையென்றால், இஸ்லாமின் நிலை  கேள்விக்குறியே…!

            முரண்பாடுகளின் மொத்த உருவமான இந்த அல்லாஹ்வைப்பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றக்கூடிய முஸ்லீம்களின் இலக்கணத்தைப் பார்க்கலாம்

*****

 

Advertisements

5 thoughts on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 33

  1. ஆமாம் சாதிக். அவர்கள் அவ்வாறு ஓதுவது இன்று நேற்றல்ல. 1400 ஆண்டுகளாக கொலைவெறியிடன்தான் இருக்கிறார்கள். ஆனலும் அதற்கெதிரான போராட்டங்களும் தொடரத்தான் செய்கிறது. நாமும் தொடருவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s