தொடர் : 34

இதுவரை என்னுடன் பயணித்த உங்களது துணிச்சலைப் பாராட்டுகிறேன். இப்பொழுதும் உங்கள் மனதில் சில சந்தேகங்கள் தோன்றி சில முடிவுகளைக் கூறலாம்

*  தேடலில் நான் அடைந்த முடிவுகளை அடியோடு புறக்கணிக்கலாம். இவர்கள் நான் முன்வைத்துள்ள ஆதாரங்களை தவறானவைகள் என உறுதியாக நிருபிக்க வேண்டும். அது என்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

 

*  எனது அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட வாதங்களை ஏற்கலாம்.

 

               அல்லது

 

*     நான் இதுவரை உங்கள் முன் வைத்த விவாதங்களை ஏற்கவும் முடியாமல் புறக்கணிக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தவித்து,

 கீழ்கண்டவாறு சமாதானம் கூறலாம்

1  பெரும்பான்மையான முஸ்லீம்கள் பலதாரமணம் புரிவதில்லை. அதில் அவர்களுக்கு விருப்பமும் இல்லை.

 

2      1400 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அடிமைகளாக்குவதும், அடிமைப் பெண்களுடன் கூடுவதும் தவறாக நினைக்கப்படவில்லை. அத்தகைய செயல்கள் இன்று நம்மிடையே நடைமுறையில் இல்லை. சில முஸ்லீம் நாடுகள் கூட இந்த நாகரீகமற்ற செயல்களை அங்கீகரிக்காது.

 

3  ஆறு வயது குழந்தையைத் திருமணம் செய்வதும் நடைமுறையில் இல்லை. இன்றைய காலத்தில் மிக அரிதாக நிகழும் ஒரு சில சம்பவங்களைப் பெரிதுபடுத்திப் பார்ப்பது சரியல்ல.

 

4       பொதுவாக சொல்வதென்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நாகரீகத்தை இன்றைய நாகரீகத்துடன் ஒப்பிடுவது முட்டாள் தனமானது.

 

உங்களது மனதில் தோன்றும் மூன்றாவது முடிவின் கருத்துக்களை மனப்பூர்வமாக ஏற்கிறேன். ஏனெனில் இது முற்றிலும் உண்மையே. இங்கு மிக முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்கவில்லை. முஹம்மது அவர்கள் தன்னைப்பற்றி வர்ணனை செய்யும் பொழுது,

“உலகின் மிகச்சிறந்த படைப்பு ” என்கிறார். அல்லாஹ் குர்ஆனில்,

நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்

(குர்ஆன் 68:4)

 

அல்லாஹ்வுடைய ரஸூலிடத்தில் அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது.

(குர்ஆன் 33:21)

அனைத்து உலகத்தினருக்கும் அருளாகவே தவிர (நபியே) உம்மை நாம் அனுப்பவில்லை.

(குர்ஆன் 21:107)

மேலும் அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய ஏவலைக் கொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை நாம் அனுப்பி வைத்துள்ளோம்)

(குர்ஆன் 33:46)

நாம் முன்பு பார்த்த ஜுவேரியா, ஷஃபியா, ரைஹானா மற்றும் பல பெண்களின் வரலாற்றிலிருந்தும் முஹம்மது அவர்களின்  தலைமையில் அவரது படையினர் நிகழ்த்திய பல்வேறு போர்களிலிருந்தும் அவர் நமக்கு போதித்திருக்கும் சிறந்த முன்னுதாரணங்களை முஸ்லீம்களால் பின்பற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? முஹம்மது நபியை நீங்கள் பின்பற்றியே தீரவேண்டும் என்று வற்புறுத்தும் பல வசனங்களை குர்ஆன் முழுவதும் நீங்கள் பார்க்கலாம்.

(நபியே) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான்

(குர்ஆன் 3:31)

ஆம்…! என்று கூறினால், மாற்று மதத்தினரைக் கொன்று அவர்களது மனைவியர்களை வன்புணர்சி செய்து, உடைமைகளை கொள்ளையிட வேண்டும். இல்லை…! 1400 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை  21 ம் நூற்றாண்டிற்கு பொருத்தமற்றது என்று கூறினால், முஹம்மதை பின்பற்றுமாறு கூறும் மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் அர்த்தமற்றதாகி விடுகிறது.

முஸ்லீம்களால் இதை ஏற்க முடியாது. முஹம்மது அவர்களின்  உதாரணங்களை பின்பற்றுவீர்களா? இல்லையா? அவர், மனிதகுலம் என்றென்றும் பின்பற்றத்தக்க  சிறந்த முன்னுதாரணங்களை செய்திருக்கிறாரா? இல்லையா?

அந்த உதாரணங்கள் இன்றைய காலத்திற்கு சிறந்தவைகள் அல்ல என்று நினைக்கலாம். அதனால் தான் இன்றைய நாகரீகத்துடன் அவரை ஒப்பிடக்கூடாது என்றும்  அவருடைய காலத்தில் அவரது செயல்கள் தவறில்லை என்றும் நீங்கள் அவருக்காக பரிந்து பேசுகிறீர்கள். அதனால்  அவரது செயல்கள் அனைத்துமே சிறந்த முன்உதாரணம் அல்ல. இது உங்களின் முடிவென்றால் முஹம்மது அவர்கள்  இன்றைய காலத்திற்கு பொருத்தமற்றவராகத் தெரியவில்லையா?

போர்களத்தில் எதிரிகளின் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக்குவதென்பது, முஹம்மது அவர்கள் மட்டுமல்ல வரலாற்றில் அன்றைய காலத்தில் ஏறக்குறைய அனைத்து ஆட்சியளர்களாலும் பின்பற்றப்பட்ட நடைமுறை முஹம்மது அவர்களை மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டும்?

அந்த ஆட்சியாளர்கள் யாரும் தங்களது செயல் இப்பிரபஞ்சத்திற்கே சிறந்த முன்மாதிரி என்றும் தங்களைப் பின்பற்றினால் இறைநேசர்களாக ஆகலாம் கூறிக் கொண்டு இருக்கவில்லை. அன்றைய நடைமுறையில் முஹம்மது அவர்கள் செய்தது குற்றமா? இல்லையா? என்பதல்ல கேள்வி. அவர் மனிதகுலம் எப்பொழுதும் பின்பற்றத்தக்க  மிகச்சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டாரா? இல்லையா? என்பதே கேள்வி.

முஹம்மது அவர்கள், குற்றமற்றவராக இருந்தபோதிலும், பின்பற்றத்தக்க சிறந்த முன்னுதாரணம் இல்லையென்பது பதிலாக இருந்தால், அவரை புகழ்ந்து கூறும் குர்ஆன்வசனங்கள் தவறானவை. அந்த குர்ஆன் வசனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை, காலங்கள் மாறுவதால் முஹம்மது நபியை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது உங்கள் பதிலாக இருந்தால், எதிர்காலத்தில் (உதாரணத்திற்கு 1400 ஆண்டுகளுக்குப் பிறகு) குர்ஆனின் போதனைகளையோ, அல்லது முஹம்மது அவர்களால் கற்பிக்கப்பட்ட வழிமுறைளையோ பின்பற்றுவதை நிறுத்திவிடுமாறு அல்லாஹ், உங்களுக்கு கட்டளை ஏதேனும் விதித்திருக்கிறானா?  

முஹம்மது அவர்களின் செயல்முறை நீங்கள் கண்டிப்பாக பின்பற்றியே தீரவேண்டும். என்பதை வலியுறுத்திக்கூறும் பின்வரும் ஹதீஸைக் கவனியுங்கள்.

புகாரி ஹதீஸ் -6101

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செயதார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோபாது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்” என்றார்கள்.

உங்களால் இயன்றதையோ, உங்களுக்குப் மனதிற்கு விருப்பமானதையோ அல்லது உங்கள் பகுத்தறிவிற்கு சரியென்று தோன்றுவதையோ  விருப்பம் போல பின்பற்றலாம் என்று அனுமதிகள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா?

நிச்சயமாக குர்ஆனிலும் ஹதீஸ்களிலும்  அப்படி எதுவும் கூறப்படவில்லை!

முஹம்மது அவர்களின் செயல்கள் எல்லா காலத்திலும் பின்பற்றத்தக்க உதாரணமல்ல என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரை மிகச்சிறந்த உதாரணம் எனக் கூறும் குர்ஆன் வசனம் உண்மையல்ல. இதன்மூலம், குர்ஆன் இறைவனின் வார்த்தைகளல்ல என்பதும் தெளிவாகிறது.

முஹம்மது சிறந்த முன்னுதாரணங்களைக் கற்பித்தாரா? அல்லது அன்றைய மக்களின் அறியாமையை பின்பற்றினாரா?

என்னைப் பின்பற்றுங்கள் ஏனெனில் “மகத்தான நற்குணம் கொண்டவர்”, “உலகத்திற்கே அருளாக வந்தவர்”, “அழகிய முன்மாதிரி”, “பிரகாசிக்கும் விளக்கு” என்று மக்களிடம் கூறிக்கொண்டு, உண்மையில் எந்த முன்னுதாரணத்தையும் உருவாக்காமல் அதே அறியாமை காலத்தின் தவறான செயல்களைப் பின்பற்றியிருந்தால்,  அவரை( முஹம்மது நபியை) பின்பற்றுவதன் முலம் நாமும் அறியமை காலமக்களின் பிரதிநிதியை  பின்பற்றியதைப் போன்று ஆகாதா?

முடிவு என்ன?

வன்முறையை வெறுக்கும் மிதவாதிகளும், பகுத்தறிந்து செயல்படும் நல்ல குணமும் கொண்ட மக்கள் தங்களை முஸ்லீம்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் உண்மையில் இவர்கள் தகுதி குறைவான முஸ்லீம்களே. முஹம்மது நபியின் செயல்கள் உலகம் உள்ள வரையிலும் சிறந்த உதாரணங்களே அவைகளைப் பின்பற்றுவதே தங்களின் வாழ்வின் தாரக மந்திரமென்று வாழ்பவர்களே உண்மையான முஸ்லீம்கள். அவர்களே நீங்கள் தினமும்  செய்திகளில் காணும் “ஜிஹாதிகள்” என்னும் புனிதப் போராளிகள்.

உதாரணத்திற்கு, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதத்தில் (மன்னிக்கவும்,) ஜிஹாது என்ற புனிதப் போரில் ஈடுபட்டு முஹம்மது நபியின் “அழகிய முன்மாதிரிகளை” நிலை நிறுத்தப் போராடுபவர்களின் “புனிதமான” செயல்களை கண்டும் காணாதது போல் விடுவதும் ஏன்?

ஜிஹாதிகள் என்பவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை உயிருக்கு துணிந்து நிலை நாட்டுபவர்கள். மற்ற முஸ்லீம்களை விட அல்லாஹ்விடம் தரத்தால் உயர்ந்தவர்கள்,  உயர்ந்த மரியாதைக்குரியவர்கள் என்ற  குர்ஆனின்  போதனைகளை முஸ்லீம்கள் உறுதியாக நம்புகின்றனர். மற்ற முஸ்லீம்களால் நிறைவேற்ற முடியாத “அழகிய முன்மாதிரிகளை” அவர்கள், மற்றவர்கள் உயிரை எடுத்தும்  தங்களது உயிரைத் துறந்தும் நிறைவேற்றுவதால், அவர்களே  முதல் தரமான முஸ்லீம்கள் என்று முடிவு செய்வதால்தான்.  தங்களால் முடியாததை துணிந்து செய்பவர்களை உடலாலும், பொருளாலும், மனதாலும் ஆதரிக்க வேண்டும் என்ற   போதனைகளைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. இவைகள்,  குர்ஆனின் வசனங்கள் மக்களை வழிகெடுத்து விட்டதை நிருபிக்கவில்லையா?

மாற்று மதத்தைச் சேர்ந்த அண்டை மக்களுடன் போர்தெடுக்கவும், அவர்களது மனைவியர்களை அடிமைகளாக்கி வன்புணர்சி செய்யவும்,  நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளவும் அளவற்ற அடிமைகளைக்  கைப்பற்றி உடலுறவு உறவு கொள்ளவும் அனுமதிக்கும் ஒரு புத்தகத்தின் இந்த விதிமுறைகளை, உங்களது அறிவுத் திறமையால் பின்பற்ற மறுக்கிறீர்களென்றால் அந்த புத்தகத்தின் மூலம் கூறப்பட்ட வழிகாட்டுதல்களின் பயன் என்ன? மனிதர்களை நேர்வழிபடுத்த இறக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு புத்தகம், கோணலான வழிக்கு இட்டுச் செல்லும், அவரவர் அறிவுத் திறமையால் நேர்வழியை தேர்ந்தெடுக்க அறிவுரையும் கூறும். இதென்ன வேடிக்கையான போதனை? என்ன கொடுமையான தூதுத்துவம் இது?

முஹம்மதுவை  Warrior Leader என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.  அவர் ஒரு  சாதனையாளரே! தனிமனிதனாக போராடி பலவாறாக பிரிந்து காணப்பட்ட அரேபியர்களை தனது கலடியில் வீழ்த்தி  மிகப்பெரும் ஆட்சியை நிறுவிய புரட்சியாளர் என்பதிலும் எந்த விதமான மாற்று கருத்து  சிறிதளவும் கிடையாது. ஆனால் அவர்களுடைய கருத்துகளும் செயல்களும் அவருடைய காலத்தில் நிலவிய நகரீகத்தின் அடிப்படையைதான் பிரதிபளிக்கிறது. அவர் இறைத்தூதர் என்ற வாதம் மூடத்தனமானது. அவரது போதனைகளிலும், செயல்களிலும் காலத்தை கடந்த ஞானம் எங்கும் எதிலும்  காண முடியவில்லை.

நாகரீகம், தனிமனித மற்றும் சமுதாய ஒழுக்கங்கள் எல்லாம் ஊர்களைப் பொருத்தும், தேவைகளைப் பொருத்தும் மாறுபடுகிறது. முஹம்மது நபியும், அவருடைய தோழர்களும் அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதியில் நிலவிய நாகரீகத்திற்கும், தேவைகளுக்கும், நடைமுறைகளுக்கும்  ஏற்ப வாழ்திருக்கிறார்கள்.

கற்பனைக்கு எட்டாத பிரமாண்டம் இந்த Universe.  அதில் காணப்படும் ஒவ்வொரு அமைப்பும் நம் அறிவுக்கும்  கற்பனைக்கும்  எட்டாதது நாம் வாழும் மிகச்சிறிய இந்த பூமியின் படைப்பின் ரகசியங்களே இன்றுவரை நமக்கு புரியவில்லை. இவையனைத்திற்கும் முதல்வனான இறைவனின் வார்த்தைகளில் எப்படி இவ்வளவு முரண்பாடுகள் இருக்க முடியும்?.

இத்தனை குழப்பம் நிறைந்தவன் நிச்சயமாக இறைவனாக இருக்க முடியாது. அப்படியென்றல் திருக்குர் ஆன் குறிப்பிடும் இந்த இறைவன் யார்?

 

 

*****

Advertisements

4 thoughts on “ஆரம்பத்தை நோக்கி- தொடர் 34

  1. “அப்படியென்றால் திருக்குர் ஆன் குறிப்பிடும் இந்த இறைவன் யார்?” வேறு யார் மனிதர்களின் முன்மாதிரி?முஹம்மதுதான் வாழ்த்துகள் தோழரே பதிலலிக்கமாட்டோம் ஆனால் வசை பாடுவோம் இது யூத கிருஸ்துவ சதி?????ஹி ஹி

  2. ##முஹம்மது சிறந்த முன்னுதாரணங்களைக் கற்பித்தாரா? அல்லது அன்றைய மக்களின் அறியாமையை பின்பற்றினாரா?##

    6 வயது சிறுமியை திருமணம் செய்த கொடுமை, அடிமைகளை ஆண்டைகளின் காமக்களியாட்டங்களுக்கு அனுமதியளித்தது போன்ற முகம்மதுவின் செயல்களை கேள்விக்குள்ளாக்கும்போது வரலாற்றுடன் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுபவர்களுக்கு சரியான செருப்படி.

  3. //அப்படியென்றல் திருக்குர் ஆன் குறிப்பிடும் இந்த இறைவன் யார்?//

    வேறு யார் நம்ம கண்ணுமனி பொண்ணுமனி முகம்மதுதான் அதுமட்டுமல்ல‌ அல்லாவும்,சைத்தானும்,மலக்குமார்கள்,ஜின்கள் அனைத்துக் அவரே.ராஜாவும் நானே மந்திரியும் நானே என்ற கோட்பாடுதான்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s