தொடர் 9

 ஜைனப்பை திருமணம் செய்ததற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தரப்படும் விளக்கங்களும்  எனது மறுப்புகளும் வருமாறு:-

விளக்கம் : 1

முஹம்மது நபி  அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைனப்- குடும்பத்தினரிடம் கேட்டார்கள் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஸைத் ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தாங்கள் உயர்ந்த குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப்பும் அவரது குடும்பத்தினரும மறுத்து விடுகிறார்கள். ஆனால் ஸைனப்  முஹம்மது நபி  அவர்களை திருமணம் செய்ய விரும்புகிறார்கள்.  அவரது குடும்பத்தினரின் விருப்பமும் அதுவே.  வேறுவழியில்லாததால்    பின் வரும் இறை வசனம் உடனே இறங்கியது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

(குர்ஆன் 33:36)

இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப்  அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள்.

(இப்னு ஜரீர், இப்னு கஸீர்)

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத்  அவர்களை மணந்து கொள்ள ஸைனப்  விரும்பவில்லை என்பதும், முஹம்மதுநபி  அவர்களின் வற்புறுத்தலுக்காகவே,  தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகின்றார் என்பதும் தெளிவாகிறது.

மறுப்பு :

முஹம்மதுநபி-ஸைனப் திருமணமே, ஸைனப் மற்றும் அவரது  குடும்பத்தினரின் விருப்பமும்  எனில், கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபிக்கு ஸைனபை மறுமணம் செய்து வைத்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே! முஹம்மது நபி நான்கு திருமணங்களை முடிக்கும்வரையிலும்  காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜைத்-ஜைனப் தம்பதியினரிடையே சுமூக உறவின்றி பிரிந்தனர் என ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், விவாகரத்திற்குப் பின் ஜைனப்பை முஹம்மதுநபி திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லையே! விவாகரத்திற்குப் பின்னர் ஜைனபின் வாழ்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு நபியிடம் வழங்கப்படவில்லை.   ஸைனபின் பேரழகில் மயங்கி விட வில்லையெனில், ஸைனப்பை வேறு யாருக்காவது திருமணம் செய்துவைக்க இயலுமே. ஏனெனில் முஹம்மதுநபி  வார்தைக்கு முற்றிலும்  கீழ்படிந்தவர்கள் பலர் இருந்தனர்.  அவருக்கு இது எளிதானதும் கூட.

“தலாக்” (விவாகரத்து) என்ற சொல் உச்சரிக்கப்படும் பொழுது அல்லாஹ்வின் அரியாசனமே (அர்ஷ்) நடுங்குகிறது என்கின்றனர். அல்லாஹ்விடத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்களிலேயே மிகவும் வெறுப்பிற்குரிய செயல் விவாகரத்து என்கிறது அபூதாவூத்.  குர்ஆன் 33:36 வசனத்தைக்கூறி திருமணம் செய்துவைத்த முஹம்மதுநபி மேற்கண்ட குர்ஆன் 33:36 வசனத்தை மேற்கோள் காண்பித்து அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்பிற்குரிய தலாக் விவாகரத்தை ஏன் தடுக்கவில்லை? முகம்மதுநபி தனது  மனதில் உள்ள ஆசையை மறைத்து ஸைத்தை  தலாக் சொல்லக்கூடாது என்று முகம்மதுநபி சொன்னதாக அல்லவா குர்ஆன் கூறுகிறது !

விளக்கம் : 2

முஹம்மது நபி  அவர்கள் ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்கள் என்ற செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் முஹம்மதுநபி  அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக முஹம்மதுநபி அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார்கள். அதன் பின்பும் முஹம்மது நபி  அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை.

முஹம்மது நபி அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. முஹம்மது நபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக முஹம்மதுநபி அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது.  ஆக வளர்ப்பு மகன் மனைவியை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற அல்லாவின் விருப்பத்தை ஜைத் அறியமாட்டார்.

முஹம்மதுநபி  அவர்கள் மீது, ஜைத் ஆத்திரப்படவில்லை. ஏனெனில், தலாக் சொல்லியபிறகு, ஜைத் முகம்மதுநபிக்காக தாமாகவே முன்வந்து (ஹதீஸ் முஸ்லீம்: பாகம் 87, எண் : 3330)  முஹம்மது நபிக்காக தூது செல்கிறார், முஹம்மது நபி, வியந்து பாராட்டிய பெண் என்று ஆச்சரியமடைகிறார்.

இமாம் குர்தூபி பட்டியலிடும் முஹம்மதுநபிக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளிலிருந்து

முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், “இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்”.

முஹம்மது நபி  அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. முஹம்மது நபி  அவர்களும் சொல்லவில்லை. ஆனால் மனிதர்களுக்கு ஏளனத்திற்கு அஞ்சி வெளியே கூற இயலாத ஒரு செய்தி முஹம்மது நபியின் மனதில் மறைந்திருந்தது மறுக்க முடியாத உண்மையே! ஜைத்-ஜைனப் விவாகரத்திற்குப் பின் நடந்த சகிக்க முடியாத நிகழ்வுகள், முஹம்மது நபியின் மனதில் மறைத்திருந்ததை  வெளியாக்கி விட்டதே!

விளக்கம்  :3

முஹம்மது நபி  அவர்களைத் திருமணம் செய்யும் ஸைனப்ன் வயது முப்பத்து ஆறு. முஹம்மது நபி  அவர்களின் வயது 56.  பருவ வயதிலிருந்தே ஸைனப்  அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை முஹம்மதுநபி  அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் அவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு முஹம்மது நபி  அவர்களுக்கு வாய்த்திருந்தது.

முஹம்மதுநபி  அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 20 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 25 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15வயது முதல் 30 வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்துப் பேசிப் பழகியிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸைனபின் அழகில் சொக்கிவிடாத முஹம்மது நபி அவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது மேலோட்டமான அழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடையோர் எவரும் ஏற்க முடியுமா?

மறுப்பு :

இப்ன் ஜரீர் அல் தபரி இஸ்லாமிய ஆராய்சியாளர்களாலும், அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.  குர்தூபியும் சிறந்த மார்க்க அறிஞராவர். இவர்கள்  தங்களுடைய ஆன்மீகத் தலைவர் முஹம்மதுநபி  அவர்களின் மீது வேண்டுமென்றே ஒரு கட்டுக்கதையைக் கூற வேண்டியத் தேவை என்ன?

இந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஜைனப்பின் மீது முதலிலிருந்தே காதல் இருந்ததாக கூறவில்லை குறிப்பிட்ட ‘அந்த ஆடையற்ற’ சம்பவத்திற்கு பிறகே முஹம்மது நபி, தன்னை விரும்புவதை ஜைனப் அறிந்து கொண்டார் என்றே  குறிப்பிடுகின்றனர். ஸைனப்பின் பேரழகில் மயங்கி, சொக்கி விடவில்லையெனில்  இழிவான புதிய வரைமுறைகளை ஏற்படுத்தி, அவரை தனது படுக்கைக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லையே!

விளக்கம்  :3

முஹம்மது நபி அவர்களின் 50வயது வரை அவர்களுக்கு கதீஜா  மனைவியாக இருந்தார்கள். கதீஜா  அவர்களின் மரணத்திற்குப் பின்னர் முஹம்மது நபி அவர்களுக்கு மனைவியின்பால் தேவையிருந்தது. கதீஜா மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே!

மறுப்பு :

முஹம்மது நபிஜைனபின் பேரழகில் மயங்கி விடவில்லையெனில் ஜைத் விவாகரத்து கூறிய, ஒரு சில நாட்களில், அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான் எனக்கூறி ஜைனப்புடனான  திருமண ஆலோசனையை முதலில் துவக்கியது ஏன்?

முஹம்மது நபிக்குஜைனப்பின் மீது எவ்விதமான ஈர்ப்பும் இல்லையெனில், வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்கலாமே? அதற்கு எந்தத் தடையும் இல்லயே?

ஜைனப்பை திருமணம் செய்தால்மருமகளையே அதாவது தன் (வளர்ப்பு) மகனின் மனைவியை தன்னுடைய படுக்கையில் வீழ்த்தியவர் என்று நாகரீமற்ற(?) பண்டைய அரபியர்கள் இழிவாக பேசுவார்களே என தயங்கினார். அவரது இந்த மனப்போராட்டத்தை பார்த்துக் கொண்டு அல்லாஹ்வால் பொறுமையாய்  இருக்க முடியவில்லைஉடனே ஜிப்ரீல் மூலம் வஹியை இறக்கி விட்டான்.

…முஃமினானவர்களின் மீது தங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில் அவர்களிலிருந்து விருப்பத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால் எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; …

(குர்அன்33:37)

நபியின் மீது அல்லாஹ் அவருக்கு ஆகுமாக்கியவற்றில் (அவற்றை நிறைவேற்றுவதில்) எவ்வித குற்றமும் இல்லை…

(குர்அன்33:38)

“எவ்வித குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக” என்ற வார்த்தைகளின் நேரடிப் பொருள், முஹம்மது நபி, ஜைனப் மீது  கொண்டிருந்த (தகாத) விருப்பம், குற்றம் கூறும் வகையிலேயே இருந்திருக்கிறது என்பது தான். அதை சரி செய்யவே இத்தகைய புதிய சட்டம் இயற்றப்பட்டதாக  குர்ஆன் தரும் இந்த விளக்கத்தை எப்படி மறுக்க முடியும்?

”அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்”..

                (குர்ஆன்33:5)

அதாவது உங்களுடைய வளர்ப்பு மகன்களை ஒருநாளும் சொந்த மகன்களாக கருதக்கூடாது என்று புதிய சட்டத்தை இயற்றி, முஹம்மது நபி அவர்களுக்கும் ஜைனப்  அவர்களுக்கும் திருமணம் நடக்க வழிவகை செய்துவிட்டான் (திருக் குர்ஆன் அறக்கட்டளையின் மொழி பெயர்பின் 33 ம் அத்தியாயத்தின் Foot Note 5 & 6 காண்க)

அல் பாக்கவி.com–ன் “பலதார மணம் புரிந்தது ஏன்?“என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….

நபி (ஸல்அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டதுஅதாவதுஅரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்ததுபெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும்கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர்இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்ததுஇதைக் களைவது இலகுவானதல்லதிருமணம்விவாகரத்து,சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.

மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான்.

குழந்தைகளைத் தத்தெடுக்கும் மனிதாபிமான செயல், அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் சமூகத்திலிருக்கும் மானக்கேடான அருவருக்கத்தக்கஊறிப்போன அறியாமைக் கால வழக்கமாகத் தெரிந்தது(இந்த முட்டாள்களுக்கும் இன்றும் அப்படித்தான் தெரிகிறது) எனவே அதை அல்லாஹ் தடைசெய்ய விரும்பினானாம்.

அநாதைகளை குழந்தைகளைத் தத்தெடுத்து தங்களது சொந்த குழந்தைகளாகக் கருதி அதற்குரிய சகல உரிமைகளையும் வழங்குவது,  அநாதைகளை ஆதரிக்கும் மனிதாபிமான செயலின் உச்சகட்டம்.மனிதாபிமான மிகுந்த தத்தெடுக்கும் முறை ஏன் தடைசெய்ய வேண்டும்? இதில் என்ன மானக்கேடுள்ளது? அதொன்றும் அவ்வளவு கொடூரமான செயல் இல்லையே !        

                வாதத்திற்காக கூறினாலும்முஹம்மதுநபியும் ஜைத்தும் அதிபயங்கர விரோதிகளாகவும் இருக்கவில்லை.  தத்தெடுக்கும் முறையைத் தடை செய்வதென்றால் அல்லாஹ்வினால் நேரடியாகவே கூறியிருக்க முடியும்.

                குழந்தைகளைத் தத்தெடுப்பதால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறோம் எனவே இந்த காடுமிராண்டித்தனத்தை தடைசெய்து எங்களைக் காப்பற்ற வேண்டும் என்று யாராவது அல்லாஹ்விடமும்,முஹம்மதுவிடமும் முறையிட்டார்களா?

அப்படி எதுவுமில்லை

நமக்குத் தெரிந்தவரையில் இப்படியொரு தடையின் தேவை ஏற்பட்டது முஹம்மது நபியின் அடங்காத இச்சைக்குக்கு மட்டுமே! அது அல்லாஹ்விடமிருந்து வேதவாக்கையும் வரவழைத்தது.

“முஹம்மது உங்களுடைய ஆண்களில் எவருடைய தந்தையாகவும் இருக்கவில்லை….”

                (குர் ஆன் 33.53)

இந்த வசனம் “ஆண்களில்” என குறிப்பிடுவதால் இது ஸைனப்-ஐ திருமணம் செய்வதற்காக, ஸைத் அவர்களையே இலக்காக கொண்டுள்ளதை காணலாம்.  இதில் ஒரு வேடிக்கையானறிவுக்குப்  பொருந்தாத இன்னொரு அறிவிப்பும் உள்ளது. முகம்மதுநபி  ஆண்களில் எவருக்கும் தந்தையில்லையாம்; ஆனால் முகம்மதுநபியின் மனைவிகள் அனைவருக்கும் தாய் ஆகுவார்களாம். பெண்களின் மறுமணத்தை ஆதரித்த முகம்மதுநபி தனது மனைவிகளுக்கு மட்டும் அதனைதடுக்க அனைவருக்கும் தாய் என்று கூறிவிடுகிறார்.

‘‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன் (புகாரி ஹதீஸ் -4788)  (முஸ்லீம் ஹதீஸிலும் இது இடம் பெற்றுள்ளது.)

வெவ்வேறு சூழ்நிலைகளில் நிகழ்ந்தவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆயிஷா கூறிய இந்த கருத்து மிகச்சரியானதே!

அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் நடைமுறையை  மீறி முஹம்மது நபி – ஜைனப்   இடையே நிகழ்ந்த திருமணம் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரமாக அமைகிறது.  இத்திருமணத்திற்கு முன்பு வரை தன் வளர்புமகனாக கருதியவரை  இத்திருமணத்திற்கு தடையான உறவு என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் வஹி என்ற பெயரில் வளர்ப்பு மகன் என்ற உறவை தூக்கி எறிந்தார். மற்றவர்களும், இனி உலகம் உள்ளவரையிலும், தத்து எடுக்கக் கூடாது எனக்கூறி மனிதாபிமனமிக்க நடைமுறையை முற்றிலும் தடை செய்தார்.

இச்சம்பவத்தை காணும் பொழுது, வாலை இழந்த நரியின் கதை நினைவிற்குவருகிறது. ஒரு முறை விவசாயி ஒருவரின் வீட்டில் கோழியைத் திருடச் சென்ற நரி, தாக்குதலுக்கு உள்ளாகி வாலை இழந்தது. காட்டிற்கு திரும்பிய நரி, வால் இல்லாத காரணத்தால் தன் இனத்தார் ஏளனம் செய்வார்கள் என்று அஞ்சிய ஒரு தந்திரம் செய்தது. நம் இனத்திற்கே வால் மிகவும் அசிங்கமாக உள்ளது எனவே அனைவரும் வாலை வெட்டி எறிய வேண்டும் என்று கூறியதாம்.

 ஜைனப்பின் பேரழகில் மயங்கவில்லையெனில், முறை தவறிய உறவை ஆதரித்தும் அன்று மட்டுமல்ல இன்றும் உலகில் இருக்கும் மனிதாபிமானமுள்ள  தத்தெடுக்கும் நடைமுறையை தடைசெய்து அல்லாஹ்வின் வசனம் ஏன் இறங்கவேணடும்?  தத்தெடுக்கும்  முறையை தடை செய்வதைப் பற்றி முன்பே வேறு சந்தர்பங்களில் கூறியிருந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி போயிருக்கும். ஆனால் த த்து எடுப்பதை தடுக்க எவ்வித அவசியமும்  இல்லை

நேர்மையையும், நியாயத்தையும்ஒழுக்கத்தையும்அன்பையும் மனிதாபிமானத்தையும் போதிக்கிறது என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் கொள்கைகளின் ஏதார்த்த நிலை இதுதான். நபி   அவர்களின் பலதார மணமும் அற்கான பின்னணியும்ஸைனப்  இடையே நிகழ்ந்த இத்திருமணம் முறை தவறியிருப்பதை உறுதி செய்கிறது

முஹம்மது நபிக்கு பெண்கள் விஷயத்தில் எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காக அல்லாஹ்வின் சலுகை அறிவிப்பு

 

“நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய புதல்வியரையும் உம் தந்தையின் சகோதரிகளுடைய புதல்வியரையும் உம் தாய்மாமனின் புதல்வியரையும் உம் தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் (இப் பெண்களை மஹர் கொடுத்து மணமுடிப்பதை) உமக்கு நிச்சயமாக நாம் ஆகுமாக்கியுள்ளோம். இன்னும் மஹரின்றியே தன்னை நபிக்காக அர்பணித்துக்கொள்ளும் முஃமினான பெண்ணையும் நபியும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் (ஆகுமாக்கி வைத்துள்ளோம். இதுமற்ற) முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியோகமாக உள்ளதாகும். (மற்ற முஃமின்களாகிய) அவர்கள் மீது, அவர்களுடைய மனைவியரின் விஷயத்திலும் நாம் விதியாக்கியுள்ளதைத் திட்டமாக நாம் அறிவோம் (உமக்கு விலக்களித்ததெல்லாம்) உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான் – அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும் மிகக் கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.”

(குர்ஆன் 33:50)

முஃமின்களுக்கின்றி உமக்கு (மட்டுமேபிரத்தியோகமாக உள்ளதாகும்.”, “உம்மீது எவ்வித கஷ்டமும் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்”  விதவிதமான அனுமதிகளின் அவசியம் என்ன? பெண்கள் விஷயத்தில்  முஹம்மது நபிக்கு என்ன கஷ்டங்கள் இருக்க முடியும்? இந்த சிறப்பு அனுமதி வசனங்கள் நமக்கு கூறும் செய்தியை சற்று சிந்தித்தது பாருங்கள்.  வஹியின் முழுப் பின்னணியையும் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

ஆதரவற்ற ஒரு அநாதையை மகனாக தத்தெடுத்து வாழ்வளிப்பதில் உள்ள தவறு என்ன? தனக்கு பிறந்த மகன்களுக்கு இணையாக வாரிசுரிமையை வழங்குவது தவறான முடிவா? உடல் வேட்கைக்காகவளர்ப்பு மகன் என்ற உறவைத் துண்டித்து, மருமகளைத் திருமணம் செய்து கொள்வது உலகின் சிறந்த முன்உதாரணமா? இந்நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ்மனிதனுக்கு கற்பிக்கும் படிப்பினை என்ன?

Advertisements

2 thoughts on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 9

  1. “முஹம்மது உங்களுடைய ஆண்களில் எவருடைய தந்தையாகவும் இருக்கவில்லை….” (குர் ஆன் 33.53).. u have wrongly mentioned the ayath here…Let me know the correct one or else it will be taken as if u have faltered in ur translation.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s