தொடர் :36

            ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஒடுவது ஹஜ் வழிபாடுகளிலுள்ள ஒரு கட்டாயக் கடமையாகும். தொங்கோட்டம் ஓடுவதற்கு காரணம் என்ன?

புஹாரி ஹதீஸ் : 1602

இப்னு அப்பாஸ் (ரலி )கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தேபாது, ‘யத்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்’ என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடைய நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டைளயிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை

புஹாரி ஹதீஸ் : 1649

இப்னு அப்பாஸ் (ரலி )கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாவையும் வலம் வரும்போது தொங்கோட்டம் ஓடியது இணைவைப்போருக்குத் தம் (உடல்) பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.

தன் மனதிற்குத் தோன்றியதையெல்லாம் வஹீ என்றும் வழிபாடுகள் என்றும் கூறிக்கொண்டார்.

நாம் ஒரு பொருளை மதிப்பது கடின முயற்சிக்கு பிறகுகிடைக்கும் பொழுது மட்டுமே. எளிதில் கிடைப்பவைகளை நாம் மதிப்பதில்லை. தியாகம் செய்வதே சிறந்தது, அதன் மூலமே வெற்றி பெற முடியும் என்றும் போதிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் உயிரைத் துறக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உயிரை தியாகம் செய்வது உச்சகட்ட வழிபாடாகவும், போற்றுதலுக்குரிதாகவும் அனைத்து மதங்களும் போதிப்பதை நீங்கள் பார்க்கலாம். இவ்வாறே மதத்தலைவர்கள், தங்களைப் பின்பற்றுபவர்களை, ஒரு நாயைக்கட்டி இழுத்துச் செல்வதைப் போல இழுத்துச்  செல்கிறார்கள்.

மார்க்கப் போர் செய்தல், அதுவோ வெறுப்பாக இருக்க, உங்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது; ஒரு பொருளை நீங்கள் வெறுக்கலாம்; (ஆனால்) அது உங்களுக்கு நன்மையாக இருக்கும்; இன்னும் ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம் ஆனால் உங்களுக்கு அது தீமையாக இருக்கும்; (இவற்றையெல்லாம்) அல்லாஹ்  அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(குர்ஆன் 2:216)

முஃமின்களே (முதுமை, நோய் போன்று) எவ்வித இடர்பாடுடையவர்களாகவும் இல்லாமல் (போரில் கலந்து கொள்ளாமல்) உட்கார்ந்திருப்பவர்களும் அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உடைமைகளையும் தங்களுடைய  உயிர்களையும் (அர்ப்பணிப்பது) கொண்டு போர் செய்பவர்களும் சமமாக மாட்டார்கள்…

(குர்ஆன் 4:95)

 

நிச்சயமாக அல்லாஹ்; எவர்கள் அவனுடைய பாதையில் நிச்சயமாக அவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட கட்டடத்தைப் போன்று அணிவகுத்தவர்களாகப் போரிடுகிறார்களே அத்தகையோரை நேசிக்கிறான்

(குர்ஆன் 61: 4)

புகாரி ஹதீஸ் 4046

ஜாபிர் பின் அப்தில்லாஹ்  (ரலி) அவர்கள் கூறியதாவது :

உஹுதுப் போரின் போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்) என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், சொர்கத்தில் என்று பதிலளித்தார். (அந்த மனிதர்) தமது கையிலிருந்த போரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்து விட்டு (களத்தில் குதித்து)  தாம்  கொல்லப்படும் வரையிலும் போரிட்டார்.

முஹம்மது, மற்றவர்கள் தன்னை மிக உயர்வாக கருத வேண்டும், தன்னை மட்டுமே  நேசித்து அளவற்ற அன்பைச் செலுத்த வேண்டுமென்றும்  அவர் விரும்பினார். முஸ்லீம்கள்  இன்றும் தங்களின் உயிரையும் அனைத்து உறவுகளையும் விட முஹம்மது நபியை நேசிக்கின்றனர்இதற்கு அவரின் வற்புறுத்தல்கள் மட்டுமே அதற்குக் காரணம்.

 

முஸ்லீம்  ஹதீஸ் எண் : 62,  அத்தியாயம்: 1, பாடம்: 1.16,

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).

“ஒருவருக்குத் தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மனிதர்கள் அனைவைரையும்விட நான் அன்புக்குரியவனாக ஆகாதவரை ‘எந்த அடியாரும்’ அல்லது ‘எந்த மனிதரும்’ இறைநம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அவரது வற்புறுத்தல்களை நம்பி, முஹம்மது நபியை அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான மனிதர் என்கின்றனர். அவரை அல்லாஹ்வின் தூதரென்று உறுதியாக நம்புகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் என்ற தன்னுடைய கோரிக்கையை நிரூபிக்க, பகுத்தறிவிற்கு ஏற்புடைய எந்த ஒரு வாதத்தையும் முஹம்மது  முன்வைக்கவில்லை. பழைய பயமுறுத்தல்களையே மீண்டும் கூறி “நான் எச்சரிக்கை செய்பவனே” என்றும் என்னை ஏற்கவில்லையென்றால் அல்லாஹ் உங்களை நரக நெருப்பில் வீசி எறிந்திடுவான் என்றார். மனிதர்களில் பலர் நல்ல குணங்களுடனும் மன்னிக்கும் இயல்புடனும் இருக்கையில், இறைவன் மோசமானவனாகவோ கொடுமைக்காரனாகவோ இருக்க முடியாது. அப்படிப்பட்ட கொடுமைக்காரனாக, இறைவனைப்பற்றி ஒருவர் கூறுகிறார் என்றால் அவரது தீய எண்ணங்களையே அவர் பிரதிபளிக்கிறார் என்று கூறலாம்.

முஹம்மது இறைவனைப்பற்றி கூறிய சில செய்திகளைப் பாருங்கள்.

அவர்கள் (உமக்கெதிராக) பெரும் சூழ்ச்சி செய்கின்றனர்.

நானும் சூழ்ச்சியாக சூழ்ச்சி செய்கிறேன்.

(குர்ஆன் 86:15 & 16)

… நிச்சயமாக என்னுடைய சூழ்ச்சி உறுதியானது

(குர்ஆன் 68:45)

            சர்வ வல்லமையுடைய இறைவன் பொய்களைக் கூறி சூழ்ச்சி செய்யத் தேவையில்லை காரணம் பொய்யும், சூழ்ச்சியும் பலவீனத்தின் வெளிப்பாடு. அல்லாஹ் சர்வ வல்லமையுடையவன் என்றால் பொய்யும், சூழ்ச்சியும் அவனுக்கு தேவையற்றது. அது அவனை இழிவுபடுத்திவிடும். ஆனால் குர்ஆனின் கருத்துப்படி, அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மேலானவனாக இருக்கிறான். Allah is Khairul Makirin (best deceiver – சூழ்ச்சி செய்பவர்களில் மிகச்சிறந்தவன்) சூழ்ச்சி செய்ய வேண்டுமென்றால் பொய் கூற வேண்டும். அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் சிறந்தவனென்றால், பொய் சொல்பவர்களில் மேலானவனாக இருக்கிறான் என்று பொருள்படும். பொய்யும் சூழ்ச்சியும் இறைத்தன்மையல்ல. இந்த குணங்கள் சராசரி மனிதனுக்கே அவமானம்.

அப்படியானால் பொய் கூறி சூழ்ச்சி செய்தது யார்?

புகாரி ஹதீஸ் :4037 , ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார் ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்து விட்டான் என்று சொன்னார்கள். உடனே முஹம்மது பின் மஸ்லமா (ரலி) அவர்கள் எழுந்து, நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க,நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலிளத்தார்கள். உடனே, முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறை கூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (சரி) சொல் என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிடம் சென்று, இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார்கள் எங்களுக்கு கடும் சிரமம் தந்துவிட்டார் என்று (நபி -ஸல்- அவர்களை குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன் என்றும் கூறினார்கள். கஅப் பின் அஷ்ரஃப், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள் என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால் தான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்) என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, நீ எங்களுக்க ஒரு வஸக்கு ….அல்லது இரண்டு வஸக்கு…. (பேரீச்சம் பழம்) கடன் தரவேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம் என்று சொன்னார்கள். அப்போது கஅப் பின் அஸ்ரஃப், சரி ! (நான் கடன் தர தயார்) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள் என்று கூறினான். அதற்கு அவர்கள், நீ எதை விரும்புகிறாய் (கேள்) என்று கூறினர். கஅப் பின் அஷ்ரஃப், உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள் என்று சொன்னான். அவர்கள், எங்கள் பெண்களை எப்படி அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை) என்று சொன்னார்கள். (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள் என்று கூறினான். அதற்கு அவர்கள், எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது அவர்களில் ஒருவர் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன் என்றல்லவா ஏசப்படுவான் இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம் என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்து விட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூநாயிலா (ரலி) அவர்கள் இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். -அபூ நாயிலா (ரலி) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரர் ஆவார்- அவர்களைத் தனது கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் பின் அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கி வந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள் என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறு யாருமல்ல) முஹம்மத் பின் மஸ்லமாவும் எனது (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான் என்று பதிலளித்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), கஅப் பின் அஷ்ஃரப் வந்தால் நான் அவனது (தலை) முடியைப் பற்றி இழுத்து அதை நுகருவேன். அவனது தலையை எனது பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை செய்கையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள் என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் பின் அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை என்று சொன்னார்கள். மேலும், முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், (கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா என்று கேட்டார்கள். அவன், சரி (நுகர்ந்து பார்) என்று கூறினான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனது தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரச் சொன்னார்கள். (மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா என்று கேட்டார்கள். அவன், சரி (அனுமதிக்கிறேன்) என்று கூறினான். முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, பிடியுங்கள் என்று கூறினார்கள். உடனே (அவர்களுடைய சகாக்கள்) அவனைக் கொன்று விட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர். …

புகாரி ஹதீஸ்         : 3029             

பூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் போரை சூழ்ச்சி என்று குறிப்பிட்டார்கள்

புகாரி ஹதீஸ் : 3030        

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். போர் என்பது சூழ்ச்சியாகும்.

 

அல்லாஹ் யாரென்று உணர்ந்து கொள்ள, முஹம்மது, அல்லாஹ்வை புகழ்ந்து வர்ணணை செய்த 99 பெயர்களில் சில பெயர்களை கவனியுங்கள்

Al-Mutakabbir (தற்பெருமை கூறுபவன்)

Al – Jabbar  (சர்வாதிகாரி)

Al-Qahhar (அடக்கியாள்பவன்)

Al-Khafid (இழிவுபடுத்துபவன்)

Al-Mudhell (அவமானப்படுத்துபவன்)

Al-Mumit (மரணத்தை வழங்குபவன்)

Al-Muntaqim (பழிவாங்குபவன்)

Ad-Darr (தீமையைத் தருபவன்)

இவைகளா தெய்வீக அடைமொழிகள்? மனிதர்களாகிய நம்மிடமும் தெய்வீக குணங்கள் உருவாக வேண்டும் அதன் மூலம் புனிதமான தகுதிகளை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். இவைகளா புனிதமான தகுதிகள்? சூழ்ச்சியும், தற்பெருமையும், பழிவாங்கும் குணமும் கொண்ட சர்வாதிகாரி மக்களை அவமானப்படுத்துவான், அவர்களை அடக்கி ஆட்சி செய்து, அவர்களுக்கு துன்பத்தையும் மரணத்தையும் தருபவன்  மனிதனாகக் கூட இருக்க தகுதியற்றவன்.  இவைகளா அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனின் உண்மை முகம்?

எதற்காக மனிதர்களைப் பழிவாங்க வேண்டும்? அவமானப்படுத்த வேண்டும்? மனிதனின் புறக்கணிப்பால் அல்லாஹ் அடைந்த பாதிப்புகள் யாருக்கும் தெரியாது ஆனால் முஹம்மது அடைந்த பாதிப்புகளையும், தன்னை புறக்கணித்தவர்களுக்கு பதிலடியாக அவர் கொடுத்த அவமானங்களையும், பழிவாங்களையும் அடக்கியாண்ட முறைகளையும் ஹதீஸ்கள் தெளிவாக கூறியதை முன்பே பார்த்துவிட்டோம்.

மறுமை வாழ்வின் வெற்றியாளர்கள் யார்? என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது.  ஆனால் “தலைமைக்கு கீழ்ப்படிய வேண்டும்”  என்று போதனை செய்தவர்கள்  உலக வாழ்வில் அடைந்த பயன்களை இனம் காண்பது எளிதானது.  முஹம்மது பொய்யர் என்பது உண்மையாக இருந்தாலும், எனக்கு அதிகாரம் வேண்டும், சல்லாபத்திற்கு பெண்கள் வேண்டும், பொருள் வேண்டும் என்று கூறமுடியாது. இவற்றைக் கூற வேறொருவர் வேண்டும் அவர்தான் அல்லாஹ். எனக்கு நீங்கள் அடிபணியுங்கள் என்று அவர் கூறியிருந்தால் மறு வினாடியே கொல்லப்பட்டிருப்பார். எனவே  தன்னுடன் அல்லாஹ்வை இணைத்தார். குர்ஆனில் பலவசனங்களில் வலியுறுத்தி கூறப்படும் வாக்கியம்.

“அல்லாஹ்வுக்கும் அவன் ரஸூலுக்கும் (தூதர்)கீழ்படியுங்கள்”

(குர்ஆன் 8:20, 8:46, 33:33)

அல்லாஹ்வுக்கும் அவன் ரஸூலுக்கும் (தூதர்)மாறு செய்யாதீர்கள்”

(குர்ஆன் 8:13, 9:7)

அல்லாஹ்வும் ரஸூலும் இணைந்து காணப்படும் வசனங்களில் மேலும் சில

அல்லாஹ்வுக்கும் (அவன்) ரஸூலுக்கும் நீங்கள் மோசம் செய்யாதீர்கள்.

(குர்ஆன் 8:27)

முஃமின்களே அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும்(தூதர்) முன்னர் நீங்கள் முந்தாதீர்கள்.…

(குர்ஆன் 49:1)

அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் (தூதர்) நிச்சயமாக நோவினை செய்கிறவர்கள் அவர்களை உலகத்திலும மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான்.…

(குர்ஆன் 33:57)

அல்லாஹ்விற்கு வழிப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதைப் போல் தோன்றும் இவ்வாக்கியங்களை   கூர்ந்து கவனித்தால், இதில் மறைந்துள்ள விஷ(ம)ம் புரியும்.

அல்லாஹ்வை மனிதனால் மோசம் செய்ய முடியுமா?  முந்தமுடியுமா? அல்லது உறுதியாக நோவினை செய்ய முடியுமா? இவ் வசனங்கள் உவமை வாக்கியம் அல்ல என்பதை அதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை கவனித்தால் விளங்கும். எந்த வகையிலாவது அல்லாஹ்வின் உணர்வுகளை மனிதனால் பாதிக்கச் செய்ய முடியுமென்றால், மனிதன் அல்லாஹ்வின் உணர்வுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி பெற்றவனாகிறான். அல்லாஹ்வின் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது அல்லாஹ்வையே கட்டுப்படுத்துவதற்கு சமமாகும். மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுபவன் எப்படி இறைவனாக முடியும்?

அல்லாவிற்காகவும், அவனுடைய தூதருக்காகவும் போரிடுங்கள் என்றார். போரில் கொள்ளையிட்டவைகளில் ஐந்தில் ஒரு பகுதி அல்லாவிற்கும் அவனுடைய தூதருக்கும் உரியதென்றார். அல்லாஹ்வின் ஆணை என்று கூறி பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக்கி  பாலியல் வன்முறை செய்தார். இவ்வாறாக எல்லா குற்றத்திற்கும் அல்லாஹ்வை பொறுப்பேற்கச் செய்தார். ஆனால் எல்லாவற்றையும் அனுபவித்தவர் அல்லாஹ்வின் கூட்டாளியான முஹம்மது மட்டுமே!

பாவம்…! கொள்ளையிட்டவற்றில் ஒரு துரும்பைக்கூட அல்லாஹ் தொட்டிருக்க மாட்டான்.

ஆரம்பத்தை நோக்கி தொடர்கள் இத்துடன் நிறைவுற்றது. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

Advertisements

One thought on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 36

  1. உங்களின் பதிவுகள் அனைத்திமே அருமை.

    நன்றாக ஆராய்ச்சி செய்த்து அலசியெடுத்து பதிவிட்டிருக்கிறிர்கள். நம்முடைய கருத்துக்கள் இப்பொழுது கவனிக்க படாமல் போகலாம், ஆனால் காலம் மாறும்போது உங்கள் போன்றவர்களின் கட்டுரைகள் பொக்கிஷமாக மாறும்.

    உங்களின் அடுத்த தொடரை எதிர்பார்த்து இருக்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s