ரைஷ்ஸ்டாக் தீ வழக்கு.

 1933 செப் 2ம் தேதியன்று டிமிட்ரொவ் முதல்முறையாக லீப்சிக் நீதிமன்றத்தில் உரை நிகழ்த்தினார். வழக்கின் மூன்றாவது நாளான அன்று 82 அயல் நாட்டு நிருபர்களும், 42 ஜெர்மன் பத்திரிகை நிருபர்களும் அங்கு கூடியிருந்தார்கள். கம்யூனிஸ்ட், சமூக ஜனநாயகக் கட்சி மட்டுமின்றி இட்துசாரி பூர்ஷ்வா பத்திரிகை நிருபர்களும் கூட நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணமுடியாமல் தடை விதிகப்பட்டது. . ஆரம்பத்தில் சோவியத் பத்திரிகை நிருபர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் ஜெர்மன் பத்திரிகையாளர்களின் செயல்பாடுகளை சோவியத் யூனியனில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை சோவியத் அரசு எடுத்த பிறகுதான் ஜெர்மன் பாசிச அதிகாரிகள் அவர்களை அனுமத்திதனர்.

 ஜெர்மன் பாசிஸ்டுகளினால் தூண்டிவிடப்பட்ட இந்தச் சதி வழக்கில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில், அவர்கள் இந்த வழக்கு நடவடிக்கைகளை ரேடியோவில் ஒலிபரப்பினார்கள். ஆனால் டிமிட்ரொவ் நிகழ்த்திய முதல் உரைக்குப் பிறகு இந்த வழக்கு நடவடிக்கைகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டார்கள்.

 ஆனாலும் உலகம் முழுவதிலும் உள்ள பாட்டாளி வர்க்கம் வழக்கின் மீது கொண்டிருந்த ஆர்வத்தை அவர்களால் தடுத்த நிறுத்த முடியவில்லை. கியோர்கி டிமிட்ரொவ் என்ற பெயர் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள வாலிபர்களும், சிறுவர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும், பிற்போக்குவாதிகளும் நாளிதழைக் கையில் கொடுத்தவுடன் இந்த வழக்கைப் பற்றிச் செய்தி வந்துள்ள பக்கத்தைதான் முதலில் புரட்டினார்கள்.

 சோவியத் அரசியல் மேதையான மனுவில்ஸ்கி டிமிட்ரொவை பற்றி அவரது சமகாலத்தினர் கொண்டிருந்த மதிப்பை மிகத் தெளிவான வார்த்தைகளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலட்சக்கணக்கான தொழிலாளிகள் அவரை அறிவார்கள். ரைஷ்ஸ்டாக் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் அவரோடு இருந்தார்கள். டிமிட்ரொவ் வழக்கின்போது உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையும் உலகத்தின் மூலை முடுக்களிலெல்லாம் எதிரொலித்தது. அவரை பார்த்தறியாத மக்களுக்கு கூட அவர் மிகவும் நெருக்கமானவாராக, வேண்டியவராக மாறிவிட்டார். அவரது எதிர்காலத்தை எண்ணி கவலைப்பட்டார்கள். அவரது காயங்களுக்காக கவலைப்பட்டார்கள் அவரது கை விலங்குத் தழும்புகளைத் தாங்கினார்கள். அவரது உறக்கமில்லா இரவுகளை நினைந்து உருகினார்கள். உழைக்கும் மக்களின் உன்னதமான லட்சியங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் அறிகுறியாக விளங்கிய அவரை காக்கப் போராடினார்கள்.

 இந்தச் சதி வழக்கு தொடங்குவதற்கு முன்பிருந்த சூழல்.

1933ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று ஜெர்மனியின் குடியரசுத் தலைவர் ஜெர்மன் பாசிஸ்டுகளின் தலைவரான ஹிடலரை ரைஷ் சான்ஸலராக (சட்டசபைத் தலைவர்) நியமித்தார். அவருடன் ஜெர்மன் நிதிமூலதனத்தின் வட்டாரத்தைச் சார்ந்த வெறித்தனமானவர்களும் ஆட்சிக்கு வந்தனர்.

பாசிஸ்ட் சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளின் துரோகத்தனமான கொள்கைகளினால் பிளவுண்டிருந்த தொழிலாளி வர்க்கத்தால் பாசிஸம் ஆட்சிக்கு வருவதை தடுக்க இயலவில்லை.

 பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 1932 நவம்பரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 6 மில்லியன் ஓட்டுகளைப் பெற்றார்கள், உண்மையில் அவர்களின் பின்னே பாட்டாளி வர்க்கத்தின் மிகப் புரட்சிகரமான, தீவிரமான பகுதியினர் அணிதிரண்டிருந்தார்கள், கம்யூனிஸ்ட் கட்சியை எப்படியாவது அழிப்பதற்கும், உழைக்கும் மக்களின் இயக்கத்தை என்றென்றைக்குமாக நசுக்குவதற்கும் ஜெர்மன் பாசிசம் முனைந்தது.

 ஜெர்மன் பாசிஸ்டுகள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த குட்டி பூர்ஷ்வாக்களை கம்யூனிச பூச்சாண்டி காட்டி அச்ச்சுறுத்த நினைத்தனர். குட்டி பூர்ஷ்வாக்களிடையே உள்ள வியாபாரிகளிடையே கம்யூனிசம் என்பது அபாயமான ஒன்று என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு தூண்டிவிடக்கூடிய கம்யூனிச எதிர்ப்பு அவதூறுகள் அவசியமான ஒன்றாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியின் தலைமைச் செயலகம் இருந்த கார்ல்லீப்ஃனெட் கட்டிடத்தை போலீசின் சோதனைக்குட்படுத்தி அதில் சுரங்க வழிகளும் ரகசிய நிலவறைகளும் இருப்பதாக புதிது புதிதாக ஈட்டுக்கட்டி பொய்ப்பிரச்சராங்கள் மூலம் மக்களை பீதியூட்ட எத்தணித்தனர். இப்பொய்ப் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடவில்லை.

எனவே மேலும் உணர்ச்சி ஊட்டக்கூடிய வழிகள் பாசிஸ்டுகளுக்கு அவசியமாயிற்று. ரைஷ்ஸ்டாக்கிற்கு தீ வைப்பது என்ற எண்ணம் அவர்கள் மூளையில் உதித்தது. 1933 பிப் 27ம் தேதி மாலை ரைஷ்ஸ்டாக்கில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய செய்தி பெர்லின் நகரம் முழுவதும் பரவிற்று. உடனடியாக அவ்விடத்திற்கு வந்த ஹிட்லர் அங்கு குழுமியிருந்த அயல் நாட்டு நிருபர்களிடம், ”இது கடவுளின் தயவுதான். இனி நாம் கம்யூனிஸ்டுகளைத் தாக்குவோம்.” என்று கூறினான்.

 அதே மாலையில் கம்யூனிஸ்டுகள் ரைஷ்ஸ்டாக்கிற்கு தீவைத்தார்கள் என்ற குற்றச்சாட்டு அரசாங்க அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அந்தக் கட்டிடத்தில் கைது செய்யப்பட்ட ஒரே நபரான டச்சு நாட்டைச் சேர்ந்த வான் டர் லுப்பெ ஒரு கம்யூனிஸ்ட் என்று பிரகடனம் செய்யப்பட்டார். அவரிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் அறிவித்தது. அதன் பின்பு அது போன்ற எந்த உறுப்பினர் சீட்டும் அவரிடமிருந்து கைப்பற்றப்படவில்லை என்று போலீஸ் அறிவிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாயிற்று.

 தீ விபத்து இரண்டாவது நாள் அன்று ரைஷ்ஸ்டாக்கிற்கு தீ வைத்தவர்கள் ஒரே ஒரு சுரங்க வழியாகத்தான் வந்திருக்க முடியும் என்றும், அந்த வழி ரைஷ்ஸ்டாக்கின் தலைவரான ஹெர்மன் கோயரிங் இல்லத்தை நோக்கித்தான் செல்கிறது என்றும் பூர்ஷ்வா பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த உண்மையானது உலக முழுவதுமுள்ள மக்களின் கண்டனத்தை உருவாக்கியது.

 எனினும் ஜெர்மன் போலீசு ஒன்றைவிட மற்றொன்று அர்த்தமற்றதென தோற்றமளிக்கின்ற அறிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டனர். தீ விபத்து நடந்த மறுநாள் தங்கள் மீதான அவதூறை மறுப்பதற்காக போலீசு தலைமையகம் சென்ற ரைஷ்ஸ்டாக்கிலுள்ள கம்யூனிஸ்ட் குழுவின் தலைவரான தோர்க்லரை தீ விபத்திற்கு உடந்தையாக இருந்தார் என்று கைது செய்தனர். மார்ச் 9ம் தேதி பல்கேரிய கம்யூனிஸ்டுகளான டிமிட்ரொவ் மற்றும் பொபொவ், தானெவ் ஆகியோரும் தீ வைப்பிற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

 அதாவது, தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு டச்சுக்காரர், மூன்று பல்கேரியர்கள், ஒரு ஜெர்மானியர் இவர்கள் மூலம் ஐரோப்பாவின் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக உலக கம்யூனிஸ்டு இயக்கம் சதி செய்கிறது என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நாஜிகளின் திட்டம்.

 அந்த நேரத்தில் ஜெர்மன் பாசிஸ்டு முகாமில் ஏராளமான பூசல்கள் நடந்து வந்தன.இதன் காரணமாக ரைஷ்ஸ்டாக்கிற்கு தீவைத்தவர்கள் ஜெர்மன் பாசிஸ்டுகளே என்ற உண்மையை அம்பலப்படுத்துகின்ற அறிக்கை ஒவ்வொரு நாளும் வெளிவந்துகொண்டிருந்தன. ஜெர்மன் தேசியவாதிகள் தலைவரது ஓபர்ஃபோரன் அறிக்கை இவைகளில் மோசமானதாக இருந்தது. இவ்வறிக்கை வெளிவந்ததும் அவர் அவரது இல்லத்தில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் ஏற்கனவே தெரிந்த உண்மைகளோடு, ரைஷ்ஸ்டாக் எவ்வாறு தீ வைக்கப்பட்டது என்ற முழுமையான சித்திரம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பாசிஸ்டுகள் எவ்வாறு தீயை உண்டாக்கினார்கள் என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள். ஹிட்லரின் வலதுகரமான கோயரிங்கின் இல்லத்தையும் ரைஷ்ஸ்டாக்கை இணைக்கும் ஒரே ரகசிய வழியில்தான் தீவைத்தவர்கள் யாருமறியாமல் நுழைந்து யாருமறியாமல் வெளியேறி இருக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. அரைகுருடான வான் டர் லுப்பெ தனியாகச் செயல்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாயிற்று.

 அனைத்து நாடுகளுக்கும் எதிரான போக்கினை உள்ளே மறைத்து, இந்தக் கொடூரமான சூழ்ச்சியை ஜெர்மன் பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை உலகம் முழுதுமுள்ள முற்போக்கு சக்திகள் உணர்ந்து கொண்டன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s