தொடர் : 11

வன்கலவியும் வேதவெளிப்பாடும்

முஹம்மது நபியும் அவரது படையினரும் பல போர்களை சந்தித்தவர்கள். இவற்றில் ஓரிரு போர்களைத் தவிர மற்றவையெல்லாம் முஹம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான திடீர் தாக்குதல்களே. ஒவ்வொரு போரின் முடிவிலும் பெருமளவு பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் போர்கைதிகளாக கருதப்பட்டு முஸ்லீம்களால் அடிமைகளாக்கப்பட்டனர். இந்த அடிமைகளை போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இந்த அடிமைகளுக்கு சில அடிப்படை உரிமைகள் மட்டுமே வழங்கப்பட்டது. சுதந்திரமான  மனிதர்களைப் போல வாழ அடிமைகளுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை.

ஆண் அடிமைகள் கடுமையான உடல் உழைப்பிற்காக பயன்படுத்தப்பட்டனர். பெண் அடிமைகள் வீட்டு வேலைகளுக்கும்,  அவர்களது ஆண் எஜமானர்களின் உடல் இச்சைத் தேவைகளுக்கும் பயன் படுத்தப்பட்டனர்.  பலர் தங்களது அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பொருளீட்டினர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பொருளீட்டுவதை முஹம்மது நபி தடைசெய்தார். இந்த அடிமைகளை பிறருக்கு இரவல் தருவதும், விற்பனை செய்வதும் அல்லது சுதந்திரமாக விடுதலை செய்வதும் எஜமானரின் உரிமைகளாகும்.  சுருக்கமாகச் சொல்வதென்றால், அடிமைகளென்பவர்கள் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த கால்நடைகள்.

இத்தகைய அடிமைப் பெண்களையே குர்ஆன், “(போரில்) உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்று குறிப்பிடுகிறது.  இஸ்லாமியர்களுக்கு நான்கு மனைவிகளை மட்டுமே அனுமதித்த அல்லாஹ், இந்த அடிமைப் பெண்களின் விஷயத்தில் எந்த விதமான எண்ணிக்கை எல்லைகளையும் விதிக்கவில்லை. அடைப்புக்குறிகளுக்குள் “போரில்” என்று சொல் இருப்பதால் அடிமைகளைப் போர்கள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்பதில்லை. விலை கொடுத்தும், பரிசுப் பொருளாகவும் அடிமைகளைப் பெறலாம்.  “(போரில்)”  என்றச் சொல் மொழிபெயர்ப்பாளர்களின் இடைச்சொருகல். “உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்ற வார்த்தையின் உண்மைப் பொருளை மாற்ற அவர்கள் கையாளும் தந்திரம்.

“உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” என்பதை நேரடியாகக் கூறுவதென்றால் அடிமைகள். அவர்களை எஜமானர்கள் தங்களது இச்சைகளுக்கு விருப்பம் போல உபயோகப்படுத்தலாம். எகிப்திய ஆளுனரால் முஹம்மது நபிக்கு பரிசாக வழங்கப்பட்ட மரியத்துல் கிப்தியாவும் ஓர் அடிமையே. அடிமைகளுடன் விருப்பம் போல கூடி அதன் மூலம் நிறைய அடிமைகளை உற்பத்தி செய்து கொள்ளவும் அல்லாஹ் அனுமதிக்கிறான். இதன் விளக்கங்கள் சிலவற்றை மட்டும் காணலாம்.

விபச்சாரி-விபச்சாரகன் இருவருமே தங்களது செயலை நன்கு அறிவார்கள். விபச்சாரகன், ஏதோ ஒரு காரணத்திற்காக உடலை விற்கும் விபச்சாரியின் முழு சம்மததத்துடன்தான் அவளது இறைச்சியை சுவைக்கின்றான். இப்படி இருவரின் சம்மதத்துடனே நடக்கும் உறவு அல்லாஹ்விடத்தில் கடுமையான தண்டனைக்குரியது.

பனூ முஸ்தலிக் போரில் முஹம்மது நபி  அவர்களின் படையினர், போர்கைதிகளாக எதிரிகளை பிடிக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -4138

இப்னு முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு அஸ்ல் பற்றிக் கேட்டேன். அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (ரலி) குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில்) எங்கள் மனைவியரைப் பிரிந்து (தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. (அந்த பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது) அஸ்ல் (சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு) செய்ய நினைத்தோம் (ஆனால்) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா என்று எங்களுக்குள்) பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

 (புகாரி 5210,4138,2229,2542)

Sahih Muslim Book 008, Number 3371:

Abu Sirma said to Abu Sa’id al Khadri (Allah he pleased with him): O Abu Sa’id, did you hear Allah’s Messenger (may peace be upon him) mentioning al-‘azl? He said: Yes, and added: We went out with Allah’s Messenger (may peace be upon him) on the expedition to the Bi’l-Mustaliq and took captive some excellent Arab women; and we desired them, for we were suffering from the absence of our wives, (but at the same time) we also desired ransom for them. So we decided to have sexual intercourse with them but by observing ‘azl (Withdrawing the male sexual organ before emission of semen to avoid-conception). But we said: We are doing an act whereas Allah’s Messenger is amongst us; why not ask him? So we asked Allah’s Messenger (may peace be upon him), and he said: It does not matter if you do not do it, for every soul that is to be born up to the Day of Resurrection will be born.

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது போர்க் கைதிகளில் மிகச்சிறந்த (அழகிய) அரபு பெண்கள் சிலர் கிடைத்தனர். எங்கள் மனைவியரைப் பிரிந்து தனிமையில் இருந்தது எங்களை வாட்டியதால், அந்த பெண்களுடன் உடலுறவு கொள்ள விரும்பினோம்.  அப்பெண்களிடமிருந்து (அவர்களுடைய) விடுதலைக்கான  தொகையையும் பெற விரும்பியதால் ‘அஸ்ல்’ (சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு) செய்ய நினைத்தோம். ஆனால்) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா என்று (எங்களுக்குள் பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்).

அஸ்ல் செய்ய விரும்பியதன் காரணங்களில் ஒன்றை இந்த ஹதீஸ் விளக்குகிறது. சஹாபக்களின் வெறித்தனத்தால் அப்பாவி பெண்கைதிகள் கருவுற்றால், அடிமைச் சந்தையில் ஆதரவற்ற அந்த பெண்களை நல்ல விலைக்கு விற்க முடியாது என்பது மற்றொரு காரணம்.

புஹாரி ஹதீஸ்       : 6603 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக் கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது (புணர்ச்சி இடைமுறிப்பு) அஸ்ல் செய்து கொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

இத்தகைய உடலுறவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு புனிதமான(?) காரணம், சஹாபாக்கள், நீண்ட காலங்களாக தங்களது மனைவியர்களைப் பிரிந்து இருந்தனர். எனவே அவர்களால் இச்சையை கட்டுப்படுத்த முடியவில்லை. தனது அடியர்களான  சஹாபாக்களின் “…”தேவையறிந்த  அல்லாஹ்(!), பெண் போர்க் கைதிகளின்“ சூறையாடும் அனுமதிகளை வஹீயாக இறக்கினான். (அல்லாஹ்விற்கு(!) இது ரொம்ப முக்கியம்) அல்லாஹ்வே பரிதாபப்பட்டு தான் கூறிய ஒழுக்கநெறிகளை மீறிய அனுமதியாக வஹீ இறக்குமளவிற்கு நபி (ஸல்) அவர்கள் உட்பட சஹாபாக்கள் அனைவருமே, பெண்களின் வாடையைக் காணமல்காய்ந்துபோயிருந்தனரா?

சஹாபாக்கள் வருடக்கணக்கில் தங்களது மனைவியரைப் பிரிந்திருந்தனரா?

        இல்லை…! நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி நபிகளாரின் காலத்தில், சில வாரங்களுக்கு மேல் எந்த ஒரு போரும் நீடிக்கவில்லை (இது நீஈஈஈ…ண்ட காலமாம் …!). ஒருவேளை நீடித்திருந்தாலும் ஆண்களை விட அறிவிலும், வலிமையிலும் பலவீனமானவர்கள் என திருக்குர்ஆன் வர்ணணை செய்யும் பெண்களை அதாவது பெண் போர்க்கைதிகளையும் அவர்களது பெண் குழந்தைகளையும் வேட்டையாடுவது முறையானதா?

        மேற்கண்ட ஹதீஸ்கள் அஸ்ல் (Coitus interruption- புணர்ச்சி இடைமுறிப்பு) செய்வதை தவிற்பது பற்றி மட்டுமே விளக்குகிறது. போரில் அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட முஹம்மது நபி  அவர்களும் தடையேதும் விதிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.  தனது மருமகன் அலீயின் லீலைகளை, முஹம்மது நபி  ஆதரிப்பதைப் பாருங்கள்.

புஹாரி ஹதீஸ் : 4350        

புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் குமுஸ் நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென எடுத்துக் கொண்ட அடிமைப் பெண்ணுடன் உறவு கொண்ட பின்) குளித்து விட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து, காலிதிடம், இவரை நீங்கள் பார்க்க மாட்டீர்களா என்று கேட்டேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா என்று கேட்க நான், ஆம்! என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், அவர் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு குமுஸ் நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது என்று சொன்னார்கள்.

முஹம்மது நபியோ அல்லது சஹாபாக்களோ பெண் கைதிகளுடன் உறவில் ஈடுபடுவதற்கு அந்த கைதிகள் சம்மதித்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்,

அக்காலத்தில் கைதிகளை அடைத்து வைக்க சிறைச்சாலைகள் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே கைதிகள் விலங்கிடப்பட்டு திறந்தவெளிகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் பனூகுறைழாவில் நிறுத்தி வைக்கப்பட்டதைப் போல ஆண்களையும், பெண்களையும் தனித்தனியே நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

            போரில் கைப்பற்றப்பட்ட எதிரிகளின் பெண்கள் நிலையை சற்று கவனிப்போம். அப்பெண்களின் பாதுகாவலர்களாக இருக்கும் ஆண்கள் தந்தை, கணவன், சகோதரர்கள், மகன்கள் அல்லது உறவினர்கள் போர்களத்தில் கொல்லப்படுகிறார்கள். அல்லது அவளது கணவன் கைதியாக செயலற்றுப்போய் பரிதாபமாக நிற்கிறான். பெண்கைதிகள் பங்குவைத்து பிரிக்கப்பட்டு அவரவர் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள். உடனே அப்பெண்கைதிகள், ஆஹா…! எங்களுக்கு புதிய உடலுறவுத் துணை கிடைத்து விட்டது இதற்காகத்தான் நாங்கள் இத்தனை நாள் ஏங்கிக் காத்திருந்தோம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துச் செல்வார்களா? அல்லது இது அல்லாஹ்வின் தீர்ப்பு எனக்கூறி ஆடைகளை அவிழ்த்து தயாராக நிற்பாளா?

            இது பெண்ணாகப் பிறந்ததின் இழிநிலை. நிச்சயமாக எந்தப் பெண்ணும் இந்த நிலையை கற்பனை செய்வதைக் கூட விரும்பமாட்டாள் நிச்சயமாக முஹம்மது நபி மற்றும் அவரது படையினரின் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள். தங்களால் முடிந்த எதிர்ப்பை ஏதாவது ஒரு வழியில் வெளிக் காட்டியிருக்க வேண்டும்

                               பெண் கைதிகள்  “அதற்கு”  சம்மதித்திருப்பார்களா? அவர்கள் இணங்கவில்லையென்றால்?

கொடூரமான வன்கலவிக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்…!

இல்லையென்று மறுக்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள். அதாவது ஹதீஸ்களில் பெண் கைதிகளுடன் உடலுறவு கொண்டதாகவே கூறப்பட்டுள்ளது. கற்பழிக்கப்பட்டதாக கூறப்படவேயில்லை.  எனவே அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என்று விளக்கமளிக்கின்றனர்.

விபச்சாரியின் சம்மதத்துடன் நிகழும் உடலுறவை முறையற்றது என தடைசெய்த அல்லாஹ், எப்படி இந்த சம்மதமின்றி நிகழும் உடலுறவை அனுமதித்திருக்க முடியும்? வாதத்திற்காக, அவர்கள் சம்மதித்திருந்தாலும் அது விபச்சாரம்தானே?

கள்ளத்தொடர்பு என்பது தங்களது துணைவர்களுக்கு தெரியாமல், நம்பிக்கை துரோகம் செய்து காதல் கொண்டு இணைவதாகும். ஆனாலும் சம்பந்தப்பட்ட இருவரின் முழு ஒப்புதலோடுதான் கள்ளத் தொடர்புகள் அரங்கேறுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. அல்லாஹ் இதைக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமென்கிறான். திருக்குர் ஆனின் பல பகுதிகளிலும், ஹதீஸ்களிலும் இந்த கள்ளத்தொடர்பை வன்மையாக கண்டிக்கும் வசனங்களைக் காணலாம்.

 தங்களது கண்முன்னே வல்லுறவுக்காக இழுத்துச் செல்லப்படும் தனது தாயையோ, மனைவியையோ, மகளையோ சகோதரியையோ காணும் ஒரு பெண் அல்லது ஆண் எப்படி எந்த நிலையிலிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

பாதிப்பிற்குட்பட்ட அப்பெண்களின் நிலையில் தங்கள் அன்புக்குரிய தாயை, மனைவியயை, மகளை, சகோதரியை அல்லது தங்களின் நெருக்கமான உறவுவழி பெண்களை ஒரு நிமிடம்  கற்பனை செய்து பார்த்தால், சூழ்நிலையின் கொடூரம், மறுப்பவர்களுக்கு விளங்கும்.

                        தங்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல் அழித்தவர்கள் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் தயார் நிலையில் இருக்க முடியும்? அந்தப் பெண்கள் அதற்கு இணங்கியிருப்பார்களா? அப்பெண்கள் உடலுறவு கொள்ளப்பட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றது.

முஹம்மது நபி மற்றும் அவரது  படையினரின் இச்செயலை என்னவென்று அழைக்க முடியும்?

வன்கலவி…!  கற்பழிப்பு…!       மிருகங்கள் கூட இது போன்ற ஈனத்தனமான செயலைச் செய்வதில்லை.

இஸ்லாமிய ஷரியத்தின்படி விபச்சார குற்றத்திற்கே கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் பொழுது கற்பழிப்பை எப்படி அனுமதித்திருப்பார்கள்?

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை குர்ஆனிலிருந்து கூறமுடியுமா?

நிச்சயமாக முடியாது … !

முழு குர்ஆனிலும் அப்படி ஒருவார்த்தையே கிடையாது. பெண்களுக்கு இழைக்கப்படும் இக்கொடூரத்தை அல்லாஹ் அறியவில்லையா? அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட செயலா?

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை, புஹாரி, முஸ்லீம் போன்ற மிக நம்பகமான ஹதீஸ்களிலிருந்தேனும் காண்பிக்க முடியுமா?

நிச்சயமாக எவனாலும் முடியாது …!

ஏன்…?

மேலும் சில குர்ஆன் வசனங்களையும் அதன் பின்னணி ஹதீஸ்களையும் காண்போம்

வலக்கரங்கள்சொந்தமாக்கிக்கொண்டவர்கள்

முஹம்மது நபி அவர்களின் படையினரால் போரில் கைப்பற்றப்படுவதற்கு முன்பு வரை முன்பு வரை சுதந்திரமாக வாழ்ந்தவர்கள்.  அவரவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப கற்பு நெறியை பின்பற்றி வாழ்ந்தவர்கள்.  நிச்சயமாக அற்ப தேவைகளுக்காக உடலை விற்கும் கீழ்த்தரமானவர்கள் அல்லர்.

முஹம்மது நபிக்கு வழங்கப்பட்ட அனுமதி,

நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்)…

 (குர்ஆன் 33:50)

மற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதி,

(ஆனால்)  தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்.

(குர்ஆன் 23:6)

தங்களுடைய மனைவியர்களிடமோ அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர நிச்சயமாக (இப் பெண்கள் விஷயத்தில்) பழிப்புக்குரியவர்களல்லர்.

(குர்ஆன் 70:30)

Sunaan Abu Dawud: Book 11,  number 2150

Abu Said al-Khudri said: “The apostle of Allah sent a military expedition to Awtas on the occasion of the battle of Hunain. They met their enemy and fought with them. They defeated them and took them captives. Some of the Companions of the apostle of Allah were reluctant to have intercourse with the female captives in the presence of their husbands who were unbelievers. So Allah, the Exalted, sent down the Qur’anic verse, “And all married women (are forbidden) unto your save those (captives) whom your right hand possesses”. That is to say, they are lawful for them when they complete their waiting period.”” [The Qur’an verse is 4:24].

Sahih Muslim: Book 008, Number 3432:

Abu Sa’id al-Khudri (Allah her pleased with him) reported that at the Battle of Hanain Allah’s Messenger (may peace be upon him) sent an army to Autas and encountered the enemy and fought with them. Having overcome them and taken them captives, the Companions of Allah’s Messenger (may peace be upon him) seemed to refrain from having intercourse with captive women because of their husbands being polytheists. Then Allah, Most High, sent down regarding that:” And women already married, except those whom your right hands possess (4: 24)

(ஹூனைன் போரில் நபியின் படை வெற்றி பெறுகிறது. போரில் ஈடுபட்ட நபித்தோழர்கள், தங்கள் கைப்பற்றிய பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்கின்றனர். நபித்தோழர்களில் சிலர், அப்பெண்கைதிகள் திருமணமானவர்கள் என்பதாலும், காஃபிர்களான அவர்களின் கணவர்கள் இருப்பதாலும் உடலுறவு கொள்ளத் தயங்குகின்றனர்.  இந்செய்தி நபியிடம் கூறப்பட்டவுடன், அடிமைகளின் திருமணங்களை ரத்து செய்யும் வசனங்களை (குர்ஆன் 4:24) அல்லாஹ் இறக்கினான்)

அன்றியும் பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) –அடிமைப் பெண்களில் உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர…

                                          (குர்ஆன் 4:24)

போர்க்கைதிகளில் தம்பதிகளும் இருந்தனர். சஹாபாக்களில் சிலர் தம்பதிகளை அவர்களது திருமணபந்தத்தை சிதைக்கத் தயங்குகின்றனர் திருமணமானவர்கள் என்பதாலும் அவர்களது கணவர்களின் முன்னிலையிலும் உடலுறவு கொள்ள சஹாபாக்களில் தயங்குகின்றனர். ஆனால் அல்லாஹ்(?),  சஹாபாக்களின் செயலை விரும்பவில்லை.  திருமண உறவைப் வலுக்கட்டாயமாகப் பிரித்து, அப்பெண் கைதிகளின் இறைச்சியை போர்வீரர்களுக்கு விருந்தாக்கினான் எனக்கூறும் திருக்குர் ஆனின் 4:24 வசனத்தின் பின்னணியை மனிதாபிமானமுடையவர்களால் எப்படி ஏற்க இயலும்?  கற்பை பாதுகாக்க பணிக்கும் அல்லாஹ் இப்படி கற்பழிப்பை ஊக்குவிப்பானா? சத்தியமாக இருக்க முடியாது…!

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நமக்கு அறிவுறுத்திக் கூறுவது என்னவென்றால், மனைவியர்களைப் பிரிந்திருக்கும் நேரத்தில் அற்பமான காமஇச்சையை கட்டுப்டுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் அல்லது முடியாதவர்கள் கற்பு என்ற ஒழுக்கத்தில் பேணுதல் செய்கிறாம் என்று சிரமத்திற்குள்ளாகத் தேவையில்லை என்பதுதான். ஒருவேளை ஒழுக்கத்தை மீறினாலும், நெறி தவறி விட்டோமே குற்ற உணர்ச்சியை களைவதற்காக வழங்கப்பட்டது அல்லாஹ்வின் அனுமதி(!) பழிப்பிற்குரியவர்களல்ர் என்ற மாபெரும் அற்புத அனுமதி. (த்ரீயெம் பிரின்டர்ஸ், K.A நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழபெயர்பில் பழிப்பிற்குரியவர்கள் அல்லர்” எனவும் சவுதி வெளியீடு, முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மொழிபெயர்ப்பில் “நிந்திக்கப்படுபவர்களல்லர்” எனவும் உள்ளது)

                நாம் இங்கு முக்கியமான ஒன்றை கவனிக்கத் தவறுகிறோம் குர்ஆன் 23:5-6, 70:30 காணப்படும் “பழிப்பிற்குரியவர்கள் அல்லர்/ பழிப்பிற்குரியகுற்றமல்ல” என்பதன் உட்பொருள் அன்றைய காலகட்டத்திலும் இது பழிப்பிற்குரிய ஈனத்தனமான செயலாகவே இருந்துள்ளது என்பதுதான். இல்லையெனில் “பழிப்பிற்குரியவர்கள் அல்லர்” என்ற சொல் இடம்பெற வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பழிப்பிற்குரிய மகாபாவமான செயலைத் தடுக்க வேண்டிய தடுக்க வேண்டிய இறைவனே(!) “பழிப்பிற்குரிய குற்றமல்ல” என்று அனுமதித்தான் என விளக்கம் தரமுனைந்துள்ள இஸ்லாமியர்களின் மனிதாபிமானத்தை நினைத்து வேதனைப்படுகிறேன்.

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனை குர்ஆனில் இல்லாததற்கான காரணமும் இதுதான்.

இந்த இழிவான செயல்களை இறைவன் அனுமதித்திருப்பானா? நிச்சயமாக ஒரு சராசரி மனிதன் கூட இந்த கேவலமான அனுமதிகளை வழங்கமாட்டான். இது கருணைமிக்கவன் என்று கூறப்படும் இறைவனின் அனுமதிகளாக இருக்க முடியாது. எனவே குர்ஆன் வசனங்கள் முழுவதுமே  முஹம்மது நபியின் கற்பனைகளின் விளைவுதான் என்பது  தெளிவாகிறது.

மிகக் கேவலமான சகிக்க முடியாத செய்தி என்னவென்றால், இன்று புனிதப்போரில் ஈடுபட்டுள்ள ஜிஹாதிகள் வெற்றி பெற்றால் இதைவிட கொடுமையான நிகழ்வுகள் அரங்கேறுவது உறுதி. காரணம் மேற்கூறிய குர்ஆனின் கற்பழிப்பு அனுமதிகள் இன்றும் 100%   செயல்படுத்த அனுமதிக்கப்பட்டவைகள்இதை ரத்து செய்ய எந்த முல்லாவாலும்  இயலாத விஷயம்.

ஒரு இஸ்லாமிய கேள்வி-பதில் தளத்திலிருந்து  “வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்” பற்றிய விளக்கம்.

http://www.binoria.org/q&a/miscellaneous.html#possessions

Question:

What is the meaning of right hand possession and what was the purpose of having them. Some brothers in America think it is okay to have right hand possessions now in the USA.

கேள்வி :

(வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்பதன் பொருள் என்ன அவர்களை அடைந்ததற்கான தேவை என்ன. அமெரிக்காவில், வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொள்வது இன்றும் சரியானதே என்று அமெரிக்காவில் இருக்கும் சில சகோதரர்கள் நினைக்கிறார்கள்)

Answer: 

Right hand possessions (Malak-ul-Yameen) means slaves and maids, those came in possession of Muslims through war or purchase. After having the possession of slave maid it is lawful and correct to have sexual relation with them. Even today if Muslims get possession over infidel country, this condition is possible, lawful and correct. 

(வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்கள் எனபது அடிமைகளைக்குறிக்கும். அவர்களை போர் அல்லது (பொருள் கொடுத்து) வாங்குவதன் முலம் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அவர்களை சொந்தமாக்கிக்கொண்டபின்னர் அவர்களுடன் பாலியல்உறவு கொள்வது (ஷரியத்) சட்டபூர்வமாகவும் சரியானதும். இன்றும் கூட காஃபிர் (இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத) நாடுகளை  வெற்றி கொண்டால், இந்த (சட்ட) நிபந்தனை செயல்படுத்தக் கூடியதாகவும்,  சட்டபூர்வமாகவமானதாகவும்,  சரியானதாகவும் இருக்கிறது)

முஹம்மதை, என்னுடைய தூதராக ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையெனில் கொலை புரியவும்,  கொள்ளையடிக்கவும், கற்பழிக்கவும் முழு உரிமையை முஹம்மதிற்கு நாம் வழங்கியுள்ளோம். என்பதே மனிதனுக்கு, அல்லாஹ் கற்பிக்கும் போதனையா?

மாற்று மதத்தினரின் செயல்கள் அல்லாஹ்வை மிகுந்த அவமானப்படுத்திவிட்டது எனவே அவர்களைத் தண்டிக்கவும், அவமானப்படுத்துவதற்காகவும் முஹம்மது நபி கடுமையாக நடந்து கொள்ள அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்டார் என்கின்றனர்.

புஹாரி ஹதீஸ்       :  2926

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் யூதர்களுடன் போர்புரியாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல் முஸ்லிமே ! இதோ…! என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கின்றான் அவனை நீ கொன்று விடு என்று கூறும்

இந்த அற்பமனிதர்களின் புறக்கணிப்பால் அல்லாஹ், அவமானமடைந்து விட்டான் எனக் கூறுவது, அவனுடைய வல்லமைக்கு இழுக்கு! சர்வ வல்லமையுடைய இறைவன் தன்னை அவமானப்படுத்தியவனை கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே அவன், தன்னை இழிவு படுத்தியவர்களை தண்டிக்க விரும்பினால் அற்ப மனிதர்களின் உதவியின்றி நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு, மூளையைச் செயலிழக்கச் செய்யலாம், இதயத் துடிப்பை நிறுத்த முடியும். அல்லது அவன் அளிக்கும் தண்டனையை மற்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எல்லேரும் காணும் விதமாக வானில் உயர்த்தி தரையில் வீசி எறிந்து சிதறடிக்கலாம். அது மற்றவர்களுக்கும் பாடமாக அமையும். இதை விட்டுவிட்டு, ஒரு முஸ்லீம் தன் பின்னால் பாதுகாப்பாக இருக்கும் யூதனை காட்டிக்கொடுத்து கொல்லுங்கள் என்று சொல்லும் அளவுக்கு யூதர்களை வெருத்துள்ளார் என்றால் இவர்ரளின் மனித நேயத்தைப் பற்றி என்ன கூறுவது?.

        இரவு நேரத் தாக்குதல்களில் எதிரிகளின் குழந்தைகளும் இறக்கும் அபாயம் உள்ளதே? என்ற நபித்தோழர்  ஒருவரின் அச்சத்திற்கு, முஹம்மது நபி மிகக் கனிவான பதிலைக் கூறி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறார்.

புஹாரி ஹதீஸ்  : 3012  

 ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அப்வா என்னுமிடத்தில் அல்லது வத்தான் என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இணை வைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே என்று பதிலளித்தார்கள்.…

மாற்று மதத்தினர் இருக்கவே கூடாது என்று அல்லாஹ் விரும்பினால், முஹம்மதுவின் கையில் வாளைக் கொடுத்து கொல்லச் செய்வதை விட, யூதர்கள், கிருஸ்துவர்கள்  என எந்த ஒரு மாற்று மத குழந்தைகளும் பூமியில் பிறக்காமல் தடுப்பது எளிதல்லவா?

தன்னைப் புறக்கணித்தவர்களை தண்டிக்க அல்லாஹ்விற்கு ஒரு மனிதனின் உதவி தேவையா? முஸ்லீம்கள், இந்த ஒரு கேள்வியை சிந்தித்தால் போதும் எல்லா உண்மைகளும் விளங்கிவிடும். முஹம்மது நபி, முஸ்லீம்களின் மனதில் அவர் வலுவாக பதிய வைத்துள்ள பேய்க்கதைகள் உள்ள வரையிலும் அவர்களால் சிந்திக்கவும் முடியாது, அவரது போதனைகளில் நிறைந்திருக்கும் அபத்தங்களை உணரவும் முடியாது.

முஸ்லீம் பெண்மணி ஒருவர், TNTJ-வினரின் இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றில் “வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களைக்” குறிப்பிட்டு, இது  வன்கலவி செய்ய குர்ஆன் அனுமதிப்பதைப் போன்றுள்ளதே? என்று கேள்வி கேட்டார். அதற்கு, தவ்ஹீத் ஜமாத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தஃபி, பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார், “முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் அவர்களின் காலத்திற்கு முன்பு வரை போர்கைதிகள் அடிமைகள்தான் அவர்களை தங்கள் விருப்பம் போல பயன்படுத்தலாம் என்ற நிலையிருந்தது. ஆப்ரஹாம் லிங்கன் காலத்திற்குப்பின் உருவாகிய புதிய சிந்தனைகளின் காரணமாகவே இந்த அனுமதிகள் உங்களுக்குத் தவறாகத் தெரிகிறது. மேலும் இது அல்லாஹ்வின் அனுமதி எனவே சஹாபக்களின் செயலில் தவறில்லை” என்றார்.

 

 இசுலாமிய மதவதிகளின் வாதம் எப்படி மனசாட்சியுள்ள மனிதர்களால் ஏற்க முடியும்? புதிய சிந்தனைகள் தோன்றக்கூடாது என்கிறார்கள் அவர்கள்.

அடிமைப் பெண்களுடன் கூடுவதும், அவர்களை விருப்பம் போல பயன்படுத்துவதும்,  முஹம்மது நபியால் துவங்கி வைக்கப்படவில்லை.  இது அவருக்கு  முன்பிருந்தே பின்பற்றப்படும் ஒரு நடைமுறை இதற்கு முஹம்மது நபியை எப்படிக்  குறை கூற முடியும் ? என்றும் மறுக்கின்றனர்.

                எந்த இராணுவத்திலும் சில‌ சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால், முஹம்மது நபி இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை அல்லாஹ் தனக்கு வேதவாக்காக அருளியதாகக் கூறி குர்ஆனிலும்  எழுதிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.

முஹம்மதுநபி கற்பழிப்பதை நியாயப்படுத்தி அல்லாஹ்வின் பெயரால் சட்டபூர்வமாக்கிவிட்டார்

One thought on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 11

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s