முதலாளித்துவத்தின் (Capitalism) நடைமுறை விளைவுகளை இப்பக்கத்தில் காணலாம்.

முழுமையாகப் படிக்க தலைப்புகளில் சொடுக்கவும்.

1. உலகமயச்-சூழலில்-தமிழகம்

உலகமயச் சூழலில் தமிழகம் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்

உலகமயச் சூழல் என்றால்என்ன? வல்லரசு நாடுகளின் முதலாளிகளுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அது கார்ல்மார்க்ஸ் வெளிக்காட்டிய முதலாளித்துவ விதிகளுக்குட்பட்டே ஏற்படுகிறது. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தால் ஏற்பட்ட அந்தக் கடுமையான நெருக்கடியை அவர்களால் நிரந்தரமாகத் தீர்க்க முடியாது என்பதை அவர்களே அறிந்திருக்கிறார்கள். என்பதைத்தான் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளின் ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. சரி! நெருக்கடிகளை எவ்வாறு தீர்ப்பது?— குருசாமிமயில்வாகனன்

2. பரிசோதனை எலிகளாக ஏழைமக்கள்

தனியார் மயத்தின் கோர முகமும்

இலாப வெறியின் விளைவும்

பரிசோதனை எலிகளாக ஏழைமக்கள்.

சிவகங்கை நகருக்கு அருகிலுள்ள வல்லாங்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் நடுத்தர விவசாயி சிவலிங்கத்தின் மகன் முத்துராஜா. இவருக்கு வயது 19. இவர் சிவகங்கை அரசு மன்னர் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 11.12.2009 அன்று இராமனாதபுரத்தில் நடந்த போலீஸ் தேர்வில் கலந்துகொண்டுவிட்டுத்     —குருசாமி மயில்வாகனன்

3. தியாகதீபம் முத்துக்குமார்

ஈழ மக்களின் விடுதலைக்காக தன்னுரை தீயிட்டு மாய்த்துக்கொண்ட தியாக தீபம் முத்துக்குமாருக்கு 29. ஜனவரி இன்று முதலாம் ஆண்டு நினைவுநாள். இவரின் மரணம் தமிழக அரசியலின் துரோகங்களை அடையாளம் காட்டி பிழைப்புவாதிகளின் முகத்திரையைக் கிழித்தது. முத்துக்குமார் இட்ட தீ, இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் நிச்சயம் பரவும். உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடுங்கோலர்கள் இன்று வெற்றியடைந்திருக்கலாம். ஆனால் வரலாறு என்றும் மன்னித்தது இல்லை. அவர்கள் துடைத்தெரிப்படாமல் நிலையாக இருந்ததும் இல்லை. புரட்சியாளர்கள் என்றும் அவரது தியாகத்தை நெஞ்சில் ஏந்துவார்கள்.  –சாகித்

4. 108 உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஓரு சோகம்

திருவண்ணாமலையை சேர்ந்த, 108 ஆம்புலன்ஸில் ஓட்டுனராக பணிபுரியும் ஏழுமலை தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கருணைக்காக படி ஏறி இறங்கி அலைந்துகொண்டிருக்கிறார். இவர் செய்த குற்றம்தான் என்ன? முதலாளிகளுக்கே பிடிக்காத சம்பள உயர்வு கேட்டதுதான்.

வேலைக்கு சேர்ந்தபோது ஒவ்வொரு ஆண்டுக்கும் சம்பள உயர்வு உண்டு என்று நிர்வாகம் கூறியதை நம்பி …. –சாகித்

5. மற்றும் ஒரு துரோகி உலா வருகிறான்

நாடகம் என்னவோ பழசுதான். நடிகர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனர். சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்ற கற்பனை ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட போதும்கூட இந்த நாடகம் மக்களிடம் செல்லுபடியாகிக் கொண்டே இருக்கிறது. மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய அறியாமை நடிகர்களை புதுப்புது வேடம்கட்ட தூண்டிக்கொண்டே இருக்கிறது. மக்களும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே  —கலை

6. திவ்யாவின் தற்கொலையும் தொடரும் ஏழ்மையின் துயரமும்.

எம்.ஜி.ஆர்- ஜானகி மகளிர் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படிக்கும் மாணவி திவ்யா, இராஜாஜி பவனிலுள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக வேலைபார்க்கும் சாந்தி என்பவரின் மகள்.  வழக்கம்போல 31-01-2011 திங்கட்கிழமை அன்று பணிக்குச்சென்று சுமார் 7 மணியளவில் வீடுதிரும்பிய தாய் சாந்திக்கு அதிர்ச்சி. தன் மகள் திவ்யா தலை சரிந்து, நாக்கு வெளியே தள்ளிய நிலையில் தூக்கில் தொங்குவதைக்கண்டு அலறுகிறார். ~ அய்யோ! என் மகளைக் கொண்டுட்டாங்களே. காலேஜ்ல, திருடிப்புட்டான்னு அவுத்துபோட்டு சோதனை போட்டதாக கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவ இப்படி தூக்குப் போட்டுக்கொண்டு உசுரை விட்டுட்டாலே~ என்று கதறுகிறார்.— சாகித்.

7. டாடா மித்தல் அம்பானிக்கு தமிழக மீனவர்கள் பிரியாணியா? –தொடர் 1

உஷார்…..மீனவர்களை ஏமாற்றும் தேர்தல் நாடகம்:

கேள்வி: மீனவர்கள் இனிமேல் தாக்கப்படமாட்டார்கள் என்று ஏதாவது

உறுதிமொழி கொடுக்கப்பட்டதா?

பதில்: தாக்கப்பட்டால் அதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்

என்று சொல்லியிருக்கிறார்கள்.

சமீபத்தில் விலைவாசி உயர்வுக்குறித்து நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் ….

— சாகித்

8.தேர்தல் சூதாட்டத்தில் இளைஞர்களே நீங்களும் ஒரு மூலதனம் –1

அன்பார்ந்த ஜனநாயக உள்ளம் கொண்ட. அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்களே!

நடைபெற இருக்கின்ற 14-வது தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சில கருத்துக்களையும். தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்த கடிதம்,

—-அர்ஷத்


9.  தேர்தல் சூதாட்டத்தில் இளைஞர்களே நீங்களும் ஒரு மூலதனம் –2

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி. இந்தியாவுக்கும். இந்திய மக்களுக்கும் செய்திருக்கும் துரோகங்கள் எண்ணிலடங்காதவை, “திருவாளர் பரிசுத்தம் மன்மேகனின் ஆட்சியில் ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2-ஜி ஊழல் என்று தொடர்ந்த ஊழல் கதைகள். இப்போது எஸ்-பேண்ட் ஊழலில் (2 ஈலட்சம் கோடி) வந்து நிற்கிறது. இன்னும் எத்தனை வருமோ? இப்போது நாம் கடந்த கால காங்கிரஸைப் பார்ப்போம்….

— அர்ஷத்

10. சூடான ஜனநாயக சூப். நாளை சுடு ஆறிவிடும் 

சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம். வாங்கின காசுக்குமேல் உணர்சிப் பிழம்பாக அலையும் கட்சித் தொண்டர்கள், பிரச்சார பீரங்கிகள். மூலை முடுக்கு, வீட்டுக்கு வீடு என்று காற்றுப் புக முடியாத இடத்திலும் சீமைச்சாரய நெடி புகுந்து தூள்கிளப்பும் உற்சாகம். என்ன நடக்குமோ (வெற்றி பற்றிய) என்ற பயத்தை வயிற்றில் கட்டிக்கொண்டு கிளிபிடித்து போயிருந்தாலும்….

—சாகித்

11. திருட்டு ஆனாலும் சட்டப்படிதான் திருடுவோம்

வழக்கம்போல தவறிய அழைப்புக்கு தனது செல்பேசியிலிருந்து தொடர்பு கொள்கிறார். “நீங்கள் பெண் நண்பர்களுடன் தொடர்புகொள்ள வேண்டுமா? அல்லது ஆண் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள வேண்ணுமா?” என்று மறுமுனையில் ஒரு பெண்ணின் குரலை கேட்டதும் ‘அய்யோ’ என்று பதறியடித்துக்கொண்டு அவசர அவசரமாக செல்பேசி இணைப்பை துண்டித்துவிட்டு எவ்வளவு போச்சோ என்று கவலைப்பட, ஏர்செல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்   சேவையில் குறைவைக்காது, முறையாக கடைசி அழைப்புக்கான கட்டணம் எவ்வளவு….

— சாகித்

12. டாடா மித்தல் அம்பனிக்கு தமிழக மீனவர்கள் பிரியாணியா -தொடர் 2

ஒருநாட்டின் உள்நாட்டுக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கைகளையும் அந்த நாட்டின் ஆளும் வர்கத்தின் நலன்கள்தான் அவற்றைத் தீர்மானிப்பதில் முதன்மையானப் பங்காற்றுகிறது. தனி நபர்களின் விருப்பு வெறுப்பு அதனை ஒரு போதும் தீர்மானிப்பதில்லை. இந்தியாவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட நாடாக இலங்கையை பேணிக்கொள்ளும் வகையிலேயே இலங்கை குறித்த இந்தியாவின் கொள்கை உள்ளது. அதனாலேயே இந்திய அரசு, தேயிலைத் தோட்டத் தொழிளார்களில் 7 இலட்சம் பேரை நாடற்ற நாடோடிகளாகவும், 5 இலட்சம் பேரை இந்தியாவுக்கு அகதிகளாக ஏற்றுக் கொள்ளவும், 5 இலட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கினாலும் ஒட்டுரிமையை பறித்துகொள்ளவும் சிங்களப் பேரினவாதத்திற்கு…

— சாகித்

13. சமூகத்திற்குத் தேவை தாமோதரனா? சாய்பாபாவா?

கடந்த ஏப்ரல் 26. அன்று புதுச்சேரி மாநிலத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்ற கட்டிடத் தொழிலாளி புதுச்சேரி மேட்டுபாளையம் காவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். இதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக மர்மமான முறையில் இறந்துபோனவரும் தங்களுடன் பணிபுரிந்த சகத் தொழிலாளியுமான ஜெய்சங்கர் என்பவரை முன்விரோதம் காரணமாக தாங்கள்தான் கொன்றோம் என ஒப்புக்கொள்ளுவதற்காக செய்யப்பட்ட சித்ரவதையினால்தான் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.  இதன் பிறகு இக்கொலையை சந்தேகத்திற்கிடமான மரணம் என கதைகட்டி திசைதிருப்ப எத்தனித்த்து போலீசு. …

— கலை

One thought on “முதலாளித்துவம் கொல்லும்…

 1. இன்று உலகின் 80% மக்கள் வறுமையில். மூலதனத் தாக்குதலுக்கு எதிராக போராடுவது ஒன்றே இதற்கு தீர்வாகும்.எனவே, நாம் நமக்காக போராட கம்யூனிஸத்தில் இணைவோம் வாருங்கள்.
  ——————————————————
  உலக மக்களில் 80 சதம் பேர் பின்பற்றும் பாட்டாளி வர்க்க வறுமைக்கோட்டை “கோட்டைவிட்டு” விட்டுப்போன மீதமான 20 சதம் பேர் கம்யுநிசத்திலிருந்து மதம்மாறி முதலாளியாக பணக்காரர்களாக ஆனது மாறிவிட்டது நல்லது தானே தோழா !!!

  பணமுள்ளவன் முதலாளித்துவம் பேசுவதும் பணம் சம்பாதிக்க அருகதை இல்லாதவன் பாட்டாளி வர்க்கம் என்றும் பேசுவது தற்காலிகமானது தானே தோழா !!!
  முதலாளி தொழிலாளி எல்லாவற்றிற்கும் அளவுகோல் பணம்தான்.

  வர்க்க வெறி கொண்ட பாட்டாளியும் முதலாளியும் வர்க்கபேத அரசியலும் பணத்திற்காக அடிக்கும் லாவணி.
  என்ன புரியவில்லையா !!! புரியவைக்கவா ?

  loose@motion.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s