1948 ல் அமைக்கப்பட்ட இந்திய அணுசக்தி கழகம், 1954-ல் அணுசக்தி துறையாக மாற்றப்பட்டது, அன்று முதல் இன்று வரை இந்திய அணுசக்தித்துறை தன் திறமை குறித்து மக்கள் மத்தியில் பல கட்டுக்கதைகளை அள்ளிவிட்டுக் கொண்டே தான் வளர்ந்தது. இந்திய அணுசக்தி துறையின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ஹோமி பாபா 1987ஆம் ஆண்டிற்குள் அணுசக்தி மூலம் 25,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்று அடித்துக் கூறினார்.  அவருக்கு பின் அணுசக்தி துறைக்கு பொறுப்பேற்ற டாக்டர். விக்ரம் சாராபாய், 2000-த்தில் இந்திய அணு உலைகள் 45,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று இந்திராவின் தலையில் அடித்து சத்தியம் செய்தார்.  இந்த வாக்குறுதிகள் எல்லாமே நீரில் எழுதப்பட்ட வாசகங்கள் என்பதை காலம் நிரூபித்து விட்டது.

ஆனால், இப்போதும் வெட்கமே இல்லாமல் 2030-க்குள் 30,000 மெகாவாட்ட மின்சாரத்தையும், 2050-க்குள் 2,75,000 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்வோம் என்று மார்தட்டுகிறது இந்திய அணு சக்தித்துறை.

உண்மையில் இப்போது இந்தியாவில் இயங்கும் 20 அணு உலைகளும் சேர்ந்து 4200 மெகாவாட் மின்சாரத்தை மட்டும் தான் உற்பத்தி செய்கின்றன. இது நமது ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் வெறும் 3% மட்டுமே. இதற்காக நமது இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் செலவிடும் தொகை ரூ. 3,600 கோடி.

மரபுசாரா மின்உற்பத்தியின் மூலம் (காற்றாலை மின்உற்பத்தி, சூரிய ஓளி மின்உற்பத்தி, புணல் மின் உற்பத்தி) நமது ஒட்டுமொத்த மின் தேவையில் 6% பெற நாம் செலவிடும் தொகை 600 கோடி மட்டுமே. மரபுசாரா மின்உற்பத்தியில் ஆபத்து எதுவும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு,

ஆனால், அணு விஞ்ஞானிகளோ, அணுசக்தி மூலம் தான் நமது மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள்.  “உலக நாடுகள் எல்லாம் அணு உலைகளை மூடி வரும் வேளையில், இந்தியா மட்டும் கண்மூடித்தனமாக அணு உலைகளை கட்டிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சாடுகிறார் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த    சுப. உதயகுமார்.

வி.வி.ஆர். 1000 ஏன்ற வகையை சேர்ந்த ரஷ்ய அணுஉலைகள் நம்பகத்தன்மை இல்லாதவை என்று சொல்கிறார்கள் அணுஉலை எதிர்ப்பாளர்கள். 1986-ல் செர்னோபில் அணு விபத்துக்குபின் ரஷ்யாவில் புதிய அணு உலைகள் எதுவும் கட்டப்படவேயில்லை. ரஷ்யா மட்டுமல்ல அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் இந்த 25 ஆண்டுகளில் புதிதாக எந்த அணுஉலையுமே கட்டப்படவில்லை. ஆனால், பொறுப்பே இல்லாத இந்திய ஆட்சியாளர்கள் (ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணத்தை கொட்டி) ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து அணு உலைகள் வாங்க அலைகிறார்கள்.

1988-ல் சோவியத் ஒன்றியத்துடன் போடப்பபட்ட கூடங்குளம் ஒப்பந்தம். 90-ல் மக்கள் போராட்டத்தாலும், சோவியத் நாடு சிதறுண்டதாலும் கைவிடப்பட்டது, ஆனால் 1997-ல் தேவகவுடாவும், 2001-ல் வாஜ்பாயும் இந்த ஒப்பந்தத்தை புதுபித்து, தங்கள் ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டிக் கொண்டார்கள். 2006-ல் ஆட்சிக்கு வந்த மன்மோகன் ஏகாதிபத்திய விசுவாசத்தில் தன்னை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்பதை நிரூபிக்க அமெரிக்காவுடன் “123” ஒப்பந்தம் செய்துகொண்டு, ஓட்டுமொத்த இந்தியாவையுமே அணு கதிர்வீச்சு ஆபத்தில் நிற்கவைத்து, தான் உலக வங்கியின் முன்னாள் ஊழியன் என்பதை பச்சையாக பறைசாற்றிக் கொண்டார்.

வளர்ந்த நாடுகள் எல்லாமே 25 ஆண்டுகளாக தங்கள் நாடுகளில் அணு உலைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, மிகவும் ஆபத்தான கொடிய அணு தொழில் நுட்பத்தை மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டும் பணியை தீவிரமாக செய்து வருகின்றன.

இயற்கை சீற்றங்களினால் (சுனாமி. பூகம்பம்) பாதிக்கப்பட்டால் தான் அணு உலைகளில் விபத்து ஏற்படும் என்று இல்லை. மனித தவறுகளாலும், தொழில்நுட்ப கோளாறுகளாலும், இராசயன மாற்றங்களாலும் கூட விபத்து ஏற்படும்.

அதுபோல், நூற்றுக்கணக்கான சிறு விபத்துகள் தாராபூர், கல்பாக்கம், நரோரோ, காக்ராபர், கைகா, ராவத்பாட்டா ஆகிய இடங்களில் உள்ள நமது அணு உலைகளில் நடந்திருக்கின்றன. இவற்றை வெளி உலகுக்கு தெரியாமல் மூடி மறைப்பதில், நமது உளவு அமைப்புகளைவிட திறமையாக செயல்படுகிறது இந்திய அணுசக்தித்துறை.

நல்வாய்ப்பாக இந்த விபத்துகள் எல்லாம் சிறிய அளவிலேயே நடந்துள்ளது, ஒருவேளை பெரிய விபத்து நேர்ந்திருந்தால், இந்த அணு உலை அமைந்துள்ள மையப்பகுதியிலிருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு புல் பூண்டு கூட முளைக்காது. 45 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அடுத்த 50 இண்டுகளுக்கு மக்கள் வசிக்கவே முடியாது. இப்படி ஒரு விபத்து நடக்கிறது என்பதை உணருவதற்குள் இந்த 16 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள மக்கள் இறந்துபோவார்கள்.

கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தமிழகம் மட்டும் பாதிக்கப்படாது, தமிழகத்தின் மூன்று மாவட்டத்துடன் சேர்ந்து. கேரளாவின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்படும், ஆக. ஆறு மாவட்ட மக்களின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கி. உற்பத்தி செய்யப்படும்  1000 மெகாவாட்  மின்சாரம் நமக்கு தேவையா?

விபத்து நேர்ந்தால் தான் பிரச்சனை என்று இல்லை. சாதாரணமாகவே இந்த உலைகள் அயோடின் 131. 132. 133 ஐசோடோப்புகளை உமிழும் தன்மை கொண்டவை, ஸ்ட்ரோன்டியம், டிரைடியம், டெலுசியம் போன்ற கதிர்வீச்சு மிக்க வாயுக்களையும் வெளியிடும்,  இவற்றின் வீரியம் 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்.

அணு உலைகளின் அபாயம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதபோது, அதன் தவிர்க்க இயலாமை குறித்து அரசும், ஆளும் வர்க்கமும் பேசுகிறார்கள். அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், நுகர்ப் பொருட்கள், மின்சார சாதனங்கள் போன்றவற்றுக்கு கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது; இந்த மின் தேவைக்கு என்ன செய்வது என்று நீங்கள் கூறுங்கள் என்று நம்மை கேட்கிறார்கள்.

அந்நியச் சந்தைக்காக நம் உழைப்பை உறிஞ்சி உற்பத்தி செய்யும் பன்னாட்டு தொழிற்சாலைகள், அவர்களுக்கான தடையில்லாத மின்விநியோகம், உலகமயம் தோற்றுவிக்கும் நகரமயம், நுகர்ப் பொருள் கலாச்சாரம், அதற்கான கேளிக்கை விடுதிகள், மால்கள், ஒளிவெள்ளத்தில் திளைக்கும் நகர்ப்புறக் கடைவீதிகள் என்று பெரும்பான்மை மக்களை சுரண்டுகிற, ஒடுக்குகின்ற ஒரு வளர்ச்சியை தீர்மானித்துக் கொண்டு, அதற்காக மின் விநியோகத்திற்கு மட்டும் நம்மிடம் ஆலோசனை கேட்பது அயோக்கியத்தனம்.

நாமும் காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் என்று மாற்றுகள் குறித்து ஆலோசனை கூறிக்கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம். அதனால்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும்  கூடங்குளம், இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

கூடங்குளம் மட்டுமல்ல. கல்பாக்கம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூட போராடுவோம்!

நமது எதிர்கால சந்ததிகளுக்கு பாதுகாப்பான, தூய்மையான இந்தியாவை விட்டுச் செல்வோம்!

—அர்ஷத்

அணுசக்தி தொடர்பான ஒரு தொடர்படக் காட்சியைக் காண இங்கே சொடுக்கவும். Nuclear Power & India

Advertisements

One thought on “கூடங்குளம் அணுஉலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s