கடந்த ஏப்ரல் 26. அன்று புதுச்சேரி மாநிலத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்ற கட்டிடத் தொழிலாளி புதுச்சேரி மேட்டுபாளையம் காவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். இதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக மர்மமான முறையில் இறந்துபோனவரும் தங்களுடன் பணிபுரிந்த சகத் தொழிலாளியுமான ஜெய்சங்கர் என்பவரை முன்விரோதம் காரணமாக தாங்கள்தான் கொன்றோம் என ஒப்புக்கொள்ளுவதற்காக செய்யப்பட்ட சித்ரவதையினால்தான் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.  இதன் பிறகு இக்கொலையை சந்தேகத்திற்கிடமான மரணம் என கதைகட்டி திசைதிருப்ப எத்தனித்த்து போலீசு. உடனடியக இதனைக் கண்டித்தும் போலீசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சில மனித உரிமை அமைப்புகளால் (பெ.தி.க.. ம.உ.பா.மை.,) முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. போலீசின் மீதான அச்சம் காரணமாக தாமோதரன் உறவினர்கள் மனித உரிமை அமைப்புகளுடன் இண்ந்து செயல்படுவதை தவிர்த்தனர். அதன்பின் கொலை செய்யப்பட்ட தாமோதரன் சார்பாக ஆஜரான வழக்கறிஞரும், தாமோதரனின் உறவினருமான செல்வராசு (பா.மா.க. மண்டபம் ஊராட்சி மன்றத் தலைவர். திருக்கோவிலூர்) என்பவராலும், உள்ளூர் அரசியல் பிரமுகர் விஜயகுமார் (NR பேரவை) என்பவராலும் போலீசின் மீதான நடவடிக்கை என்பது கொல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல் என்பதாக மட்டும் முடிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 27 மதியம் சந்தேகத்திற்கிடமான மரணம் என FIR பதியப்பட்டு தாமோதரனின் உடல் போஸ்மார்ட்டம் செய்வதற்காக புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்த அதே நாளில்தான் ஒரு மாபெரும் மோசடி மாயவித்தைக்காரனின் உடல் புட்டபர்த்தியில் அமைந்துள்ள குல்வந்த் அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் இரு பிணங்களைச் சுற்றியும் நடந்த நிகழ்வுகளின் வேறுபாடுகள் மிகத் தெளிவாக தெரிந்தன. மோசடி வித்தைகள் செய்து மக்களை ஏமாற்ற துவக்கம் செய்த அவரது பதினாறாவது வயது வேப்ப மரத்தடி நிகழ்ச்சிகள் முதல் தனது உயிர்த்தெழும் நிகழ்விற்கு வித்தைகள் எதுவும் புரிய முடியாமல் சத்யசாய் மருத்துவமனையில் முடங்கிப்போனது வரையிலுமான நிகழ்வுகள் அனைத்தும் ”அற்புதங்கள்தான்” என்பதாக நம்பவைக்க தொலைக்காட்சி ஊடகங்கள் பெரும் பிரயாத்தன்ங்கள் செய்து கொண்டிருந்தன. அரசியல் பிரமுகர்களும், பக்தர்களும், பொதுமக்களுமாக லட்சக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் சோகத்திற்காக இரங்கல் தெரிவிக்கமுடியாத கருணாநிதியும் சாய்பாபாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். வருத்தம் தாளாமல் டெண்டுல்கரும் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார். ஆனால், தாமோதரனின் உடலருகில் நிகழ்ந்த நிகழ்வுகளோ வேறுவிதமானவை. கொலை செய்யப்பட்ட தாமோதரனின் உறவினர்களுக்கு போலீசின் மூர்க்கமான தக்குதலால்தான் தாமோதரன் இறந்தார் என்பதை அறிந்திருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் அனவரின் முகத்திலும் ஒருவித அச்சம் பரவியிருந்தது. மூன்று குழந்தைகளுக்குத் தாயான தாமோதரனின் மனைவியோ வயிற்றிலும் மாரிலும் அடித்துக்கொண்டு ஒரு மூலையில் அழுது கொண்டிருந்தார். எவரும் தாமோதரனின் சடலத்திற்கு அருகே சென்று விடாதவாறு கண்காணித்துக்கொண்டிருந்த்து போலீசு. ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நியாயம் வேண்டும் என்பது போல பேசிய அரசியல் கட்சி பிரமுகர்கள் இறுதியில் போலிசின் கைக்கூலிகளாக மாறி போலிசின் சார்பாக தாமோதரன் உறவினர்களிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தனர்.  பேரத்திற்குப் படியாதவர்கள் நாசுக்காக மிரட்டப்பட்டனர். புதுவையில் டசன் கணக்கில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இருந்தும் சம்பவத்தன்று வறட்சியே காணப்பட்டது.

ஒரு மனிதனின் மீதான மதிப்பீடு சமூகத்திற்கு அவன் செய்த பங்களிப்புகளிலிருந்து எழுகிறது எனும்போது தங்களது உழைப்பின் மூலம் மனிதகுல நாகரிகத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் தாமோதரன் போன்ற தொழிலாளர்கள் மதிப்பளிக்க வேண்டியவர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களும் ஆவார்கள். வரலாற்றில் மறைந்துபோன நாகரிகங்களின் உயர்ந்த தன்மைகளை பறைசாற்றும் கலைத்திறன் மிக்க வேலைப்பாடுகளால் ஆன கட்டிடங்களும், உலக அதிசயங்களாக எழும்பியிருக்கும் கட்டிடங்களும் உழைப்பளிகளின் சமூகப் பங்களிப்பை உணர்த்தக் கூடியவைகள்.  ஆயினும், சமூகத்திற்காக தங்களது உழைப்பை கொடுக்கும் உழைப்பாளிகள் பெற்றுக்கொள்வது தங்களது வாழ்நிலைத் தேவைக்கும் குறைவான கூலிதான். கடுமையான வேலைப் பளுவினாலும், பொருளாதாரச் சிக்கலினாலும் மன உளைச்சலுக்குள்ளாகும் தொழிலாளர்கள் சிறுகச்சிறுக குடிப்பழக்கத்திற்கு ஆட்படுவதைக் குறிப்பிட்டு இவனெல்லாம் வாழ்ந்து என்ன செய்யப் போறான் என்பதாக ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள்.

ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவிப்பதாகவும், அது தமக்கு நன்மை செய்யும் என்பதாகவும் நம்பும் பக்தர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, மோசடி வித்தை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு சமூகத்தை மடமைக்குள்ளாக்கும் வேலையை செய்யும் சாய்பாபா காணிக்கை என்ற பெயரில் சுருட்டிக்கொள்வதோ பல லட்சம் கோடிகள். மோசடிகள், போதைப்பொருள், பாலியல் வக்கிரம், போன்றவை எதுவும் சாய்பாபாவின் மதிப்புகளைக் குறைத்துவிடுவதில்லை. நிலவுகின்ற முதலாளித்துவ சமூக அமைப்பை தாங்கி நிற்கும் ஆளும் கும்பலானது முதலாளிகளின் நலனுக்கு விசுவாசமாக வேலைசெய்வோரையே பாதுகாக்கின்றது. அதனால்தான், இயற்கையின் ரகசியங்களுக்கு விடைகாணப்படும் 21ம் நூற்றாண்டிலும் சாய்பாபா போன்ற மூடர்கள் மதிப்புமிக்கவர்களாக போற்றப்படுகிறார்கள். சாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் திரண்டதைப் போன்று அன்றைய தினம் தாமோதரனின் கொலைக்கு எதிராகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்த்தெழுந்திருந்தால் கொலையாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். அதனுடன் மேலும் அது போன்ற சம்பவங்கள் நடைபெறாது இருப்பதற்கான அனைத்து கூறுகளும் உருவாக்கப்பட்டிருக்கும்.

உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் மட்டுமே உயிர் வாழும் முதலாளிகளைப் பாதுகாக்கும் இந்த ஆளும் கும்பலிடம், உழைப்பாளிகள் தங்களது நலனைப் பாதுகாக்க கோரிக்கைகள் வைப்பதின் மூலமாகவோ, தனித்தனியாக போராடுவதன் மூலமாகவோ பெற்றிட முடியாது.  உழைப்பாளியின் நலன் என்பது முதலாளியின் இருப்பிற்கே எதிரானது. எனவே உழைப்பாளிகள் அனைவரும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக வர்க்கம் என்ற முறையில் ஒன்றாக இணைவது அவசியமான ஒன்றாகும்..

—கலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s