சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம். வாங்கின காசுக்குமேல் உணர்சிப் பிழம்பாக அலையும் கட்சித் தொண்டர்கள், பிரச்சார பீரங்கிகள். மூலை முடுக்கு, வீட்டுக்கு வீடு என்று காற்றுப் புக முடியாத இடத்திலும் சீமைச்சாரய நெடி புகுந்து தூள்கிளப்பும் உற்சாகம். என்ன நடக்குமோ (வெற்றி பற்றிய) என்ற பயத்தை வயிற்றில் கட்டிக்கொண்டு கிளிபிடித்து போயிருந்தாலும் கொஞ்சமும் முகத்தில் அதன் சாயல் படிந்துவிடாத மேக்கப்பில் வேட்பாளர்களும் தலைவர்களும் காட்சித் தரும் உட்சக்கட்ட நாள்.

“எவன் வந்து நமக்கு என்ன ஆகப்போகிறது; நாம உழைத்தால்தான் நாம கஞ்சி குடிக்கலாம்” என்று உழைப்பாளிகளும் நடுத்தட்டு குடும்பங்களும் புலம்பிக்கொண்டாலும் தாம் விரும்பும் வேட்பாளரும் கடசியும் வெற்றி பெற வேண்டும் என்ற இறுதிக்கட்ட இரத்த அழுத்தம் எகிறிப்போய்தான் இருக்கிறார்கள். ஒட்டுப்போட்டு முடியும் வரை இந்த உற்சாகக் கிரக்கம் இறங்காது.

அடுத்தநாள் உசுப்பிவிடவோ என்னன்னு கேட்கவோ ஆள் இல்லாமல் “செத்தப் பிணக்காடாக” உற்சாகம் வடிந்து அமைதியாக காட்சியளிக்கும். தேர்தல் போதை  இறங்கி குடும்பப் பிரச்சனை நினைவுக்கு வர பழையபடி “எவன் வந்து நமக்கு என்ன ஆகப்போகிறது; நாம உழைத்தால்தான் நாம கஞ்சி குடிக்கலாம்” போன்ற தத்துவங்கள் எங்கும் ஒலிக்கும்.

 

தேர்தல் முடிவுகள் கொஞ்சம்நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் முடிவுநாள் அன்று வேதாளம் முருங்கை மரம் ஏறி தொலைக்காட்சிப் பெட்டிமுன் காது மடல்கள் சூடேறிட, மயிர்கால்கள் குத்திட நிலைதாங்க முடியாத பரபரப்பில் தனது கட்டசியின் வெற்றிக்காக தவமிருப்பர். முடிவு அறிவிக்கப்பட்ட பிறகுதான் இந்தச் சூடு தனியும். மீண்டும் முக்கலும் முனகலுமாக “எவன் வந்து நமக்கு என்ன ஆகப்போகிறது; நாம உழைத்தால்தான் நாம கஞ்சி குடிக்கலாம்” கேட்கத்தொடங்கும். வெற்றி பெற்ற கட்டசித் தொண்டர்கள் உற்சாக பாணத்தில் அன்று இரவு முழுவதும் மிதப்பர்.

மதுரை பழங்காநத்த பேருந்து நிலையத்தருகில் நின்ற ஓட்டுனர் ஒருவர் கூறியது. “ மதுரையில் ஒரு கலாட்டா இருக்கிறது. வெற்றி பெற்றால் வெற்றிக் களிப்பில் அண்ணணுடைய ஆட்களின் டாஸ்மார்க் பாட்டில் பறக்கும். தோற்றுவிட்டாலும் சோகத்திற்காக பாட்டில் பறக்கும்.”

சாதாரண மக்களைப் பொறுத்தவரை, இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதில் தமது பங்கும் அதாவது ஓட்டுரிமை உள்ளதை நினைத்து பெருமைப் படுவதற்குமேல் அரசியல் பற்றி ஒன்றும் தெரியாத அப்பாவிகள். அதிகப்பட்சம் போனால் ஊழல், இலவசங்களுக்கு மேல் எதுவும் தெரியாது. அண்ணணின் கைத்தடிகளாக இருப்பவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் குவாட்டரும் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணிக்குமேல் எதுவும் புரியாது. கல்வி, மருத்துவம், போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான உரிமையை மறுக்கும் ஓட்டுப் பொறுக்கிகள் இலவச அரிசி, மிக்ஸி, கிரைண்டர் என்று பேசுவதை புரிந்துகொள்ள முடியாத அப்பாவிகள் இவர்கள. தமது உழைப்பினாலேயே இந்த உலகம் உருவானது என்பதை புரிந்துகொள்ள முடியாத மூலதனத்தின் அடிமைகள் இவர்கள்.

நானே இந்த உலகத்தின் கரு என்பதை ஒவ்வொரு தொழிலாளியையும் உணரவைத்து புரட்சிப்பாதையில் பயணிப்பது என்பது மந்திரத்தால் விழும் மாங்காய் அல்ல. இவர்கள் ஓட்டுப்போடுவதால், இது மக்கள் ஜனநாயக அரசாங்கம் என்பதும் உண்மையாகிவிட முடியாது.

— சாகித்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s