உஷார்…..மீனவர்களை ஏமாற்றும் தேர்தல் நாடகம்:

கேள்வி: மீனவர்கள் இனிமேல் தாக்கப்படமாட்டார்கள் என்று ஏதாவது

உறுதிமொழி கொடுக்கப்பட்டதா?

பதில்: தாக்கப்பட்டால் அதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்

என்று சொல்லியிருக்கிறார்கள்.

சமீபத்தில் விலைவாசி உயர்வுக்குறித்து நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தினந்தந்தி நிருபரின் கேள்வியும் முதலமைச்சரின் பதிலும்தான் மேலுள்ளது. (தினத்தந்தி 2-2-2011)

ஈழத்தமிழர்கள் மேல் இந்திய- இலங்கை இராணுவங்கள் இன அழிப்புப் போரை நடத்திக்கொண்டிருக்கும்போது போரை நிறுத்தக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததை நாம் அறிவோம். உண்ணாவிதம் தொடங்கி சில மணி நேரங்களில் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாக “போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட்டது” என்று உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார். அந்த நிமிடமே தொலைக்காட்சிகளும் இணையதளங்களும் அதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பு இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கியதை வெளியிட்டன. இது பற்றி 7 கோடித் தமிழர்களின் மாண்புமிகு முதலமைச்சர் என்ன கூறினார்?

“மழைவிட்டாலும் தூவானம் அடிக்கத்தானே செய்யும்” என்றார். ஆனாலும் தொடர்ந்து தாக்குதல் நடந்ததை நாம் அறிவோம்.

மீண்டும் மேலே உள்ள கேள்வி பதிலைப் படியுங்கள். தாக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூடச் சொல்லவில்லை. தாக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லுகிறார். “இதுகூட பரவாயில்லை தோழர். சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் இந்த சொல்லடை தந்திரம். இதற்குமுன் ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதால்தான் தாக்கப்படுகிறார்கள்’ என்று சொன்னவர்தானே இவர். அடைந்தால் தனி நாடு. இல்லையேல் சுடுகாடு என்று முழங்கியவர்களின் வாரிசு, தமிழகத்தையே தனது குடும்பச் சொத்தாக மாற்ற குறுக்கீடுகள் தோன்றினால் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என்று அப்பப்போ முழங்குபவர், எல்லையை தாண்டுவதால் தாக்கபடுகிறார்கள் என்று கூறாமல் இருக்க மீனவர்கள் என்ன அவரது குடும்ப வாரிசா?” என்று என் நண்பர் கூறுகிறார்.

கோவையில் நடந்த உலகதமிழ் செம்மொழி மாநாட்டில் “கட்சத்தீவு ஒப்பந்தத்திலுள்ள தமிழக மீனவர்களுக்கான  கட்சத்தீவு கடல் பகுதியையும், கட்சத்தீவில் வலையை உலர்த்திக்கொள்ளும் உரிமையையும் இலங்கை அரசு மீறுகிறது” என்று பேசியுள்ளார். என் இந்த இரட்டைநாக்கு? இதுதான் முதலாளிகளுக்கு (அவரும் ஒரு முதலாளியாகவும் உள்ளார்) சேவை செய்யும் அரசியல் தந்திரம். பிரச்சனை முற்றி நேரடியாக பதில் சொல்லவேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி முற்றும்போது  பழியை மக்கள்மீது போட்டு முதலாளிகளுக்கு வாலையாட்டும் விசுவாசம். பிரச்சனை தணிந்திருக்கும் சூழ்நிலையிலும் அறிவு ஜீவிகள் மட்டத்திலிருந்தும் தன்னை பெரிய அரசியல் ஞானி என்றும் மக்கள்மீது அக்கரை கொண்டவர் என்றும் பகட்டித்திரியும் வேடம்.

முதலமைச்சரின் இந்த பதில்களை எப்படி புரிந்துகொள்வது? தேர்தலில் தோற்றால் அவர் தமிழக மக்களை முட்டாள்கள் என்று கூறுவார். அப்படி புரிந்து கொள்ளலாமா? குறைந்த பட்சம் தேர்தல் புறக்கணிப்போ அல்லது தேர்ந்தெடுக்க மறுக்கும் ( விதி எண்: ஓ 45)  உரிமையைக்கூட பயண்படுத்தாத தமிழக மக்களைப் பற்றி என்ன சொல்வது?

உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பாராளுமன்றத் தேர்தல் எதிர் நோக்கி இருந்தது. இன்று சட்டசபைத்தேர்தல் வரவிருக்கிறது. அதனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், கப்பற்படைத்தளபதியும் மீனவர்கள் இனி தாக்கப்படமாட்டார்கள் என்று பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கின்றனர். அடுத்த சில நாட்களிலேயே மீனவர்களின் தாக்குதல் கூடுதலாகவே நடக்கிறது. அதன் பிறகு அளித்த பேட்டியின் கேள்வி பதில்தான் மேலே தரப்பட்டுள்ளது.

ஜகதாபட்டினம், கோட்டைப்படிடனம், காரைக்கால், இராமேஸ்வரம் போன்ற பல பகுதிகளிலும் மீனவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்தன. சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட தன்னெழுச்சியான போராட்டங்கள் பாதைமாறிவிடும் என்பதை உணர்ந்துள்ள திமுக தனது அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை களமிறக்கிவிட்டு திசைநிருப்ப முயற்றசிக்கிறது. இவ்வளவுகாலமும் சட்டவாதம்மும் மத்திய அரசை காரணம் காட்டியும் வந்த திமுக, ஆடு நனைவதைக் கண்டு ஓநாய் அழுத கதையாக சாலைமறியல், உண்ணாவிரதம் என்று அரிதாரம் பூசி நாடகமாடத் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல தமிழகத்திலுள்ள சில கைக்கூலி மீனவ அமைப்புகளையும் களமிறக்கி விட்டுள்ளது.

கட்சத்தீவு ஒப்பந்தம் குறித்தான சூழ்நிலை, மீனவர்களின் இப்பொழுதுள்ள பிரச்சனை,மீனவ முதலாளிகளின் நடவடிக்கைகள், மீனவ அமைப்புகளின் பின்னணிகள், இலங்கை மீனவர்களின் நிலை போன்றவற்றின் உண்மை நிலைகளை இக்கட்டுரையில் தொடராகப்பார்ப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s