நன்றி ; வினவு

 

 

 

 

 

எம்.ஜி.ஆர்- ஜானகி மகளிர் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படிக்கும் மாணவி திவ்யா, இராஜாஜி பவனிலுள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக வேலைபார்க்கும் சாந்தி என்பவரின் மகள்.  வழக்கம்போல 31-01-2011 திங்கட்கிழமை அன்று பணிக்குச்சென்று சுமார் 7 மணியளவில் வீடுதிரும்பிய தாய் சாந்திக்கு அதிர்ச்சி. தன் மகள் திவ்யா தலை சரிந்து, நாக்கு வெளியே தள்ளிய நிலையில் தூக்கில் தொங்குவதைக்கண்டு அலறுகிறார். ~ அய்யோ! என் மகளைக் கொண்டுட்டாங்களே. காலேஜ்ல, திருடிப்புட்டான்னு அவுத்துபோட்டு சோதனை போட்டதாக கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவ இப்படி தூக்குப் போட்டுக்கொண்டு உசுரை விட்டுட்டாலே~ என்று கதறுகிறார்.

29-01-2011 அன்று, திவ்யாவுடன் படிக்கும் ஒரு மாணவி தன்னுடைய 4000 ரூபாய் காணவில்லை என்று ஆசிரியையிடம் முறையிட அம் மாணவிக்கு அருகிலுள்ள மாணவிகளிடம் விசாரித்துவிட்டு திவ்யாவையும் விசாரிக்கின்றனர். சற்று கன்னங்கள் ஒட்டிய மெலிந்த உடல், ஏழ்மைக்கே உரிய விலைகுறைந்த ஆடை, சாதாரண உடல்நிறம், தோற்றமட்டுமல்லாது மீனவ குப்பத்துபெண் என்பதால் திருடியாக இருப்பதற்கு ஏற்றவள் என்ற அதிகாரவர்கப் புத்தி, திவ்யாமேல் பே..ராசிரியைக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது போலும். திவ்யாவை மட்டும் தனியறைக்கு அழைத்துச் சென்று மறைத்துவைத்துள்ள பணத்தை கண்டுபிடிக்க உள்ளாடைகள்வரை கலைத்து நிர்வாணப்படுத்தி சோதனை செய்கின்றனர் அக் கல்லூரியின், ஜெயலட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி என்ற பேராசிரியைகள் நான்கு பேர். பிற வகுப்பு ஆசிரியைகள் எப்படி இணைந்துகொண்டனர்?  வகுப்பில் இருந்த ஆசிரியை ~திவ்யா திருவிட்டால்~ என்று உறதிசெய்யப்படாத தகவலை கல்லூரிக்குள் பரவச்செய்யாமல் இது சாத்தியமில்லை.

சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இச் சோதனைப்பற்றி வெளியில் சொன்னால் ~என்ன செய்வோம்~ என்று எப்படியெல்லாம் இந்த நான்கு பேராசிரியைகளும் மிரட்டினார்கள் என்பதைச் சொல்ல திவ்யா உயிருடன் இல்லை. ஆனால் ~மதிப்பெண்களைக் குறைத்து தேர்ச்சிபெறவிடாமல் செய்திடுவோம்~ என்று மிரட்டியும் இருக்கலாம். இது வழமையாக எல்லா ஆசிரியர்களும் கடைபிடிக்கும் மிரட்டல் திமிர்தான். அல்லது   இவளால் நம்மை என்ன செய்திட முடியும் என்ற மமதையிலும் சும்மா இருந்திருக்கலாம். தன்னுடைய தாயிடம் தமக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லி அழுதபோது ~நாளை கல்லூரிக்கு வந்து கேட்கிறேமா~ என்று திவ்யாவின் தாய்கூறியபோது ~வேண்டாம்மா. பெயிலாக்கிடுவாங்க, வாழ்வு போயிடும்~ என்று அந்த ஏழைமாணவி கூறிய பதிலில் இருந்து இந்த சமூகத்தை திவ்யா போன்றோர் புரிந்து வைத்திருக்கும் கோணமும், அவ்வாசிரியர்கள் எப்படி மிரட்டிருப்பார்கள் என்பதும் புரிந்துகொள்ள முடிந்ததுதான்.

தன்னுடை வறுமை, படித்து நிறைய சம்பாதித்து தாய், தந்தையை நல்லா கவனித்துக் கொள்ளனும் என்ற கற்பனை, ஆசிரியைகளால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தை ஜீரணிக்க முயற்சித்திருக்கிறார். ஆனாலும் சமூகத்தின் ஆதிக்சாதியுணர்வும், குட்டி முதலாளித்துவ சிந்தனையும் திவ்யாவை விடுவதாக இல்லை.  மறுநாள் கல்லூரிக்குச் சென்ற திவ்யாவை பிற மாணவிகளே கிண்டல் செய்துள்ளனர். நன்றாக சிந்தித்துப் பாருங்கள். இப்படி ஒரு நிகழ்சி மேட்டுக்குடிக்கும், மேல்சாதிக்கும் நடந்திருந்தால் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த, ஊடகங்கள் ஊதிப்பெருக்க தமிழகமே பரபரப்பாகியிருக்கும்.

திவ்யாவின் மரணத்திற்குப்பின் மறுநாள் கல்லூரிக்குமுன்பு ஊர்மக்களால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்ட பிறகுதான் திவ்யாவின் மரணச்செய்தி கல்லூரி மாணவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் போராட்டத்தில் எந்த மாணவ மாணவிகளும் கலந்துகொள்ளவில்லை என்பதும், கல்லூரியின் ஊழியர்களோ, ஆசிரியர்களோ திவ்யாவின் மரண ஊர்வலத்தில்கூட கலந்துகொள்ளவில்லை என்பதும். அதிர்சியான செய்திகள்.

பேராசிரியைகள் நால்வரும் இன்னும் தனது கல்லூரி வாழ்க்கை நினைவுகளை இழக்காத பருவத்தினர். ~ நாங்களெல்லாம் படிக்கும்போது அப்படி இருந்தோம்~ என்று மாணவிகளை ஓயாமல் குறைசொல்லித் திரியும், ~பழுத்த அனுபவமுள்ளவர்கள்~ என்று தம்பட்டம் அடிதுதக்கொள்ளும் வயதினர் இல்லை. மாணவிகளுடன் இயல்பாக சிரித்துபேசி வகுப்பெடுக்கும் வயதினர். ஆனால் அவர்கள் இப்படிப்பட்ட கொடுஞ்செயலை ஈவிரக்கமில்லாமல் ஆணவத்தோடு செயல்படமுடிந்தது எவ்வாறு? தன் முகம் பத்திரிக்கையில் வெளிவருதை அவமானமாக கருதும் இவர்கள் ஒரு மாணவியை சொரனையே இல்லாது மானபங்கப்படுத்த முடிந்தது எவ்வாறு?

காந்தி, பாரதி, திருவள்ளுவர் முதலானோரின் அறவுரைகளையும், நன்னெரிகளையும் படித்தது, போற்றுவதுமட்டுமல்லாது போதிக்கவும் பொறுப்புக்கு வந்துள்ள இவர்கள் இப்படிச் செய்ததற்கு காரணம் என்ன?

மாணவர்கள் மீதான வன்முறைகள் பலவற்றிற்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும், ஒருசிலர் தண்டிக்கப்பட்டுள்ளதையும் இவர்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது. ஆனாலும் தைரியமாக இந்த வன்செயலைச் செய்தது எப்படி?

.இந்திய சிப்பாய்கள் தம் சொந்த மக்கள் மீது துப்பாக்கியை பிறயோகிக்க மறுத்ததைக் கண்டு அகிம்சையை போதித்த காந்தி குமுறியது எந்த சிந்தனை? அதிகார வர்க்கத்தின் கட்டளைக்கு ஏன் எதற்கு என்ற கேள்விகேட்காமல் கீழ்படியவேண்டும் என்ற கோட்பாடு யாருடையது? செத்த பிணத்திலும் சித்திரவதையை செய்து மகிழ்சியடைவதும், பச்சிளங்குழந்தைகளையும் கொஞ்சம்கூட மன உறுத்தலின்றி பெருமிதமாக சுட்டுத்தள்ளும் முதலாளித்துவ ஜனநாயக இராணுவ வீராதி வீரர்களின் வக்கிர மனநிலையும் எங்கிருந்து வந்தது? போலியான தேசியவெறியூட்டி வளர்க்கப்பட்டது தானே இந்த மனநோய்!

அரசு அலுவலகங்களிலும், போலீசு, இராணவத்திலும் உள்ள பல இலட்சபேர்களும் இந்த சமூகத்தின் அடித்தட்டிலிருந்தும், நடுத்தரவர்கத்திலிருந்தும் சென்றவர்கள்தான். இவர்களில் இப்படிப்பட்ட பிரச்சனைகளை தாமும் அனுபவித்தவர்கள் பலரும் உண்டு. இடம் மாறியதும் அவர்களின் பண்பு மாறிவிடுகிறதே! அதை உருவாக்குவது எது?

ஒரு பேரூந்து நடத்துனர்கூட பேரூந்தில் ஏறியதும் பயணிகளை உருட்டும் உருட்டு, அதிலும் கொஞ்சம் ஏழ்மைக்கோலத்தில் இருந்தால் படுத்தும் பாடு எதனுடைய விளைவு? நடத்துனர், ஓட்டுனராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றதும் நடத்துனர்களை அதிகாரத்துடன் அழைப்பதும் மிரட்டுவதும் கணநேரத்தில் மாறிவிடுகிறதே. எல்லா தொழிற்சாலைகளிலும் சூப்பர்வைஸர் (supervisor) என்பவருக்கும், தொழிலாளி என்பவருக்கும் உள்ள வேறுபாட்டினை கவனியங்கள். இருவருமே சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். ஆனால் பண்பு மாறிவிடுகிறது. இதன் மந்திரக்கோல் எங்குள்ளது? முதலாளித்துவம் கற்றுத்தரும் பண்புதானே இவைகள்!

ஒரே தகுதியிலுள்ள தொழிலாளிகள் தாம் வேலைசெய்யும் இடத்தில்கூட ஜாதிய உணர்வுடன் செயல்படுவது எதனால்? தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று புத்தகத்தின் முன்னும் பின்னும் அச்சடிக்கப்பட்டுள்ளதை சுமந்துகொண்டு 21ஆம் நூற்றாண்டிலும் வருங்காலத் தூண்கள் என்று வருணிக்கப்படும் மாணவர்கள் ஜாதியக் குட்டையில் மூழ்கித்திரிவது ஏன்? நிலபிரபுவத்துவ பண்பாட்டின் திமிரில்லையா இது!

தனிமனித ஒழுக்கம், விருப்பு வெருப்பு சார்ந்தது என்று ஜனநாயக முகமூடிபோட்ட முதலாளித்துவ சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். இந்த தனிமனித ஒழுக்கம், விருப்பு வெருப்பு என்பது சமூகம் சார்ந்த பண்பு என்றும் சமூகமே அதனை உருவக்குகிறது என்றும், இது போன்ற நிகழ்சிகளெல்லாம் நிலபிரபுவத்துவ, முதலாளித்துவ சிந்தனையின் விளைவு என்றும் இடதுசாரிகள் கூறுகின்றனர். ~ஒரு துயரம் நடைபெறும்போது சந்தடிசாக்கில் புகுந்து இடதுசாரி அரசியலைப் பேசி குளிர்காய்வதாக பேயாடுகின்றனர். ஒரு நிகழ்சி நடைபெறும்போது அதன் காரணத்தையும் அதற்கான வழிகாட்டுதல்களையும் முன்வைக்காமல் பிறகு எப்பொழுது அது பற்றி பேசுவது? வெறுமனே ~அய்யோ இப்படி நடத்துவிட்டதே~ என்று மட்டும் செய்திபத்திரிக்கைகள் போல் ஒப்பாரி வைக்கவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். அவர்களின் பிரதிநிதிகளாக இவர்கள் இருப்பதால் இதை எல்லாம் ஒன்றிணைத்து அம்பலப்படுத்துவதைக்கண்டு அலறுகின்றனர்.

கடுமையாக தண்டித்துவிட்டால் மட்டும் போதும் என்று புலம்புகின்றனர். கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து  இல்லைதான். ஆனால் அது மட்டுமே குற்றச்செயல்களை நிறுத்திவிடுமா?

இதுபோன்ற பல்வேறு குற்றங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்று தொடர்ந்து குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இலஞ்ச ஒழிப்பு அதிகாரியே இலஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டதும், தீண்டாமை ஒழிப்புத்துறையே ஆதிக்க ஜாதிக்கு துணைபோவதும் எடுத்துச் சொல்லி தெரியவேண்ண்டியவை அல்ல.

என்ன செய்யலாம் என்று பல நல்ல உள்ளங்கள் கலங்குகின்றனர். நாம் செய்வதற்கு நிறைய உள்ளன. இது குறித்த தொடர் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதற்கும் அப்பாற்பட்டு நம் முன்னே பெரும் பணியுள்ளது. பாட்டாளிவர்க்க கலாச்சாரத்தை  பயிலுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். ஒன்றிணைந்து கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டு செயல்படவும் முயற்சி செய்யுங்கள். இதற்கு நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக மாறவேண்டும் என்பதில்லை. ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பில் இணையவேண்டும் என்பதும் அவசியம் இல்லை. ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக மாறி செயல்படுவதில் பலன் கூடுதல் என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

— சாகித்.

தொடர்புள்ள பிற பதிவுகள்;

திவ்யா, B.Com. ஒரு பச்சைப்படுகொலை –வினவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s