அன்பார்ந்த ஜனநாயக உள்ளம் கொண்ட. அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்களே!

நடைபெற இருக்கின்ற 14-வது தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சில கருத்துக்களையும். தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்த கடிதம்,

நாம் வாழும் இந்த சமூகத்திற்கு அதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகவும். பொறுப்பாளர்களாகவும் அங்கம் வகிக்கிறீர்கள்,

ஆனால், நீங்கள் நம்பும் ஆளவுக்கு நீங்கள் சார்ந்துள்ள கட்சிகள் நேர்மையானதுதானா என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழகத்தில், ஏன் இந்தியாவில் தற்போது (ஓட்டுக்காக) செயல்படும் எந்த கட்சியும் மக்களுக்கானது அல்ல. இந்த கட்சிகள் நம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் செய்திருக்கும் துரோகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இவைகளை பட்டியலிட்டால் தனி ஒரு புத்தகமே எழுதவேண்டியிருக்கும். இதில் காங்கிரஸ், பா.ஜ.க.. தி.மு.க., அ.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., முஸ்லிம் லீக். ம,ம,க,. என்று எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல,

உங்களுக்கெல்லாம் உங்கள் கட்சிகளின் கடந்த கால வரலாறு தெரியாது, நீங்களென்ன. 40 வயதில் இருக்கும் உங்கள் கட்சிகாரர்களுக்கே தெரியாது என்பது தான் ஊண்மை, தெரிந்தவர்களும் அவற்றை ஊங்களுக்கு சொல்ல மாட்டார்கள், ஏனென்றால். அந்த “துரோக வரலாறு ஊங்களுக்கு தெரிந்தால் நிச்சயம் நீங்கள் அவர்களுடன் இருக்க மாட்டீர்கள். அவர்களுக்காக ஓட்டும் கேட்க மாட்டீர்கள்,

இப்போது 14-வது சட்டமன்ற தேர்தலுக்காக உங்கள் கட்சிகள் தி,மு,க, மற்றும் ஆ,தி,மு,க, கூட்டணியில் போட்டியிடுகின்றன, நீங்களும் உங்கள் விசுவாசத்தை காட்ட உங்கள் கட்சிக்கும், உங்கள் கூட்டணி கட்சிக்கும் வீடு வீடாக ஏறி ஓட்டுக் கேட்கப் போகிறீர்கள்,

முதலில் தி,முக, மற்றும் ஆ,தி,மு,க, கூட்டணிக்கு உள்ள வேறுபாடு என்று பார்த்தால். ஹமாம் சோப்புக்கும். லைஃப்பாய் சோப்புக்கும் உள்ள வித்தியாசம் தான். இந்த இருவருக்கும் உள்ள “கொள்கை” வேறுபாடுகள். இரண்டுமே இநுதுஸ்தான் லிவர் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகள்.  அதாவது. அ,தி,மு,க, ஆட்சியில் (2001-2006) 5000 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருமானம் இப்போது. தி,மு,க, இட்சியில் (2006-2011) 13.000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

வாக்குரிமையை மிகவும் புனிதமான கடமையாக சித்தரிக்கும் உங்கள் (ஓட்டுக்) கட்சிகள், மக்களின் வாழ்வுரிமையை எப்போதும் மதித்ததே கிடையாது. இலஞ்சத்தை வெறுத்த மக்களை இலஞ்சம் தவிற்க முடியாதது என்று காலப்போக்கில் எற்கச் செய்ததுபோல்; குடிநீருக்கும். சிறுநீருக்கும் காசுக் கொடுத்தாக வேண்டும் என்று மக்களைப் பழக்கியது போல், கல்வியும் மருத்துவமும் காசுள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பதை சகஜமாக்கியதை போல்; ஆரசியல் சீரழிவுக்கும் உங்களையும். மக்களையும் பழக்கியிருக்கிறார்கள் உங்கள் கட்சியின் தலைவர்கள்,

 

இரவு பகலாக நீங்கள் கண்விழித்து, பல அரசியல் சித்துவேலைகள் செய்து உங்கள் கூட்டணிக்காக நீங்கள் வாங்கப் போகும் ஓட்டுகள் நிச்சயம், நீங்கள் விரும்பும். நம்பும் கொள்கைக்கும். கோட்பாடுக்கும் சம்பந்மே இல்லாத யாரோ ஒரு மக்கள் விரோத (அவர் கிரிமினல் குற்றவாளியாக கூட இருக்கலாம்) வேட்பாளரின் வெற்றிக்கே வித்திடும். உங்கள் உழைப்பால். வியர்வையால் வெற்றி பெறும் அவர். அதன்பின் உங்களைப் பற்றியோ. மக்களை பற்றியோ கவலைப்படாமல் தன் “சில கோடி ரூபாய் சொத்துக்களை “பல கோடி ரூபாய் சொத்தாக மாற்றவே பணி செய்வார். இதுதான் 64 இண்டு கால இந்தியாவின் வரலாறு,

ஆடுத்த 5 இண்டுகளுக்கு மக்கள் எந்தக் கூட்டணி கட்சியால் கொள்ளையடிக்கபட விரும்புகிறார்கள் என்பதை ஓட்டுப்போட்டு “ரகசியமாகத் தெரிவித்து விட்டால், அதன்பின் அவர்கள் “பகிரங்கமாகவும். சட்டப்பூர்வமாகவும்” கொள்ளையடிப்பார்கள். இதற்கான தரகு வேலையை செய்யப்போகிறவர்கள் தான் நீங்கள், அதுதான் உண்மை.

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால். மக்களை நம்பவைத்து. ஏமாற்றி. நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க உங்கள் கட்சியின் தலைமைக்கும், அவர்கள் மூலம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் நீங்கள் அங்கீகாரம் வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள்.

இந்த “புனித காரியத்தை நீங்கள் செய்வதற்கு முன் உங்கள் கட்சியின் துரோக வரலாறு ஓருசிலவற்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், அதன்பின்னும் உங்கள் கட்சி. “நேர்மையான கட்சி என்று நீங்கள் நம்பினால் தாராளமாக உங்கள் “புனித” காரியத்தை அரங்கேற்றுங்கள்.

— அர்ஷத்

ஓட்டுக் கட்டசிகளின் கடந்தகாலங்கள் அடுத்த கட்டுரையில்….இங்கே சொடுக்கவும்

 

One thought on “தேர்தல் சூதாட்டத்தில் இளைஞர்களே நீங்களும் ஒரு மூலதனம் –1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s