காங்கிரஸ் :

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி. இந்தியாவுக்கும். இந்திய மக்களுக்கும் செய்திருக்கும் துரோகங்கள் எண்ணிலடங்காதவை, “திருவாளர் பரிசுத்தம் மன்மேகனின் ஆட்சியில் ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2-ஜி ஊழல் என்று தொடர்ந்த ஊழல் கதைகள். இப்போது எஸ்-பேண்ட் ஊழலில் (2 ஈலட்சம் கோடி) வந்து நிற்கிறது. இன்னும் எத்தனை வருமோ? இப்போது நாம் கடந்த கால காங்கிரஸைப் பார்ப்போம்,,,

1975-ல் இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி ஜக்மோகன் சின்ஹா இந்திரா தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன். 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டிடவும் தடை விதித்தார், இதனால் ஆத்திரம் கொண்ட இந்திரா, அவரால் நியமிக்கப்பட்ட பொம்மை குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அஹமதுவின் ஓப்புதலுடன் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார்.     இதுதான் ஜனநாயகத்தின் இலட்சணம். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலையினால் பதவி பறிபோன தி.மு.க. தலைவர் தனது நெஞ்சுக்கு நீதியில் அதன் கொடுமைகளை பற்றி கண்ணீரும் கம்பலையுமாக பல பக்கங்கள் எழுதியிருக்கிறார்.

1982-ல் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு என்ற இரசாயன ஆலையில் இருந்து கசிந்த மெத்தில் ஐசோ சைனைடு என்ற நச்சுவாயுவினால் ஒரே நாளில் 30.000 பேர் இறந்து போனார்கள், அடுத்த ஓரு வாரத்தில் 5 ஈலட்சம் பேர் இறந்தார்கள், 5 இலட்சம் பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள், இப்போதும் இங்கு பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலோருக்கு ஒரு கண்ணோ, கையோ இல்லாமலும், வளைந்த கால்களுடனும், கோர முகத்துடனும் தான் பிறக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்த போது இந்தியாவை ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி. பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்ததும் அர்ஜுன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சிதான். சம்பவம் நிகழ்ந்த பின் தன்னுடைய பாதிக்கப்பட்ட ஆலையை (கவனியுங்கள் – மக்களை அல்ல) பார்க்க வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முதலாளி ஆன்டர்சன் கைது செய்யப்பட்டு, அவனுடைய கெஸ்ட் ஹவுசிலேயே அரைமணி நேரம் தங்க வைக்கப்பட்டான். பிறகு இந்த நல்லவனுக்கு காபியும், பிஸ்கட்டும், பெயிலும் கொடுத்து, போபால் மாவட்ட ஆட்சியரின் அரசு காரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காரை ஓட்டிச் சென்று, விமான நிலையத்தில் தயாராக நின்றிருந்த மாநில அரசுக்குச் சொந்தமான விமானத்தில் மிக்க மரியாதையுடன் தில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டான், தில்லியில் இருந்து தனி விமானத்தில் பாதுகாப்பாக அமெரிக்கா போய் சேர்ந்தான். இன்று வரை இவனை இந்திய அரசாங்கத்தால் கைது செய்ய முடியவில்லையாம் என்று பம்மாத்து பண்ணுகின்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்கு இன்னும் முறையான முழுமையான நிவாரணம் வழங்காமல் ஏய்த்து வருகிறது இந்திய அரசு. ஆண்டர்சன் இந்தியாவுக்கு வந்து போன சில நாட்கள் கழித்து பேசிய மாண்புமிகு பிரதமந்திரி ராஜீவ் காந்தி “ஆன்டர்சன் இந்தியாவுக்கு வந்து போனாரா? எப்போ வந்தாரு? எனக்குச் சொல்லவே இல்லையே! அட சண்டாளப் பாவிகளா! என்று ஒன்றுமே தெரியாதது போல் பேசினார்.

இப்போது காங்கிரஸையும், இந்திராவையும், ராஜீவையும் நல்லவர்கள் என்று  நீங்கள் சொல்வீர்களா?

தி.மு.க. :

தி.மு.க.வின் குடும்ப அரசியலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் நடப்பு விவகாரமாக நாடே நாறும் விஷயமாகிவிட்டதால், இந்த நாற்றத்தில் உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால். நேரடியாக தி.மு.க.வின் கடந்த காலத்தை பார்ப்போம்.

கலைஞர் என்னவோ இப்பதான் குடும்ப அரசியலில் சிக்கி சீரழிந்து விட்டார் என்றும், முன்னெல்லாம் அவர் நல்லவராதான் இருந்தார் என்றும் நினைத்துக் கொண்டிருக்கம் நல்லவர்களே! அவர் எப்பபோதும் நல்லவராக இருந்ததே இல்லை என்பதுதான் வரலாறு, “அறிவியல் பூர்வமான ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்ததே அரசியல் சாணக்கியன் கலைஞர் தான். இந்திராவின் நெருக்கடி நிலையில் சொல்ல முடியாத பல கொடுமைகளை எல்லாம் அனுபவித்த இயக்கம் தி.மு.க. தான். ஆனால், நெருக்கடிநிலை பாதிப்புகளின் தழும்புகள் மறையும் முன்பே, 1980-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெட்கமே இல்லாமல் “நேருவின் மகளே வருக! நிலையான இட்சி தருக!” என்று காங்கிரசுடனேயே கூட்டணி வைத்த “நல்லவர்”தான் கலைஞர்.

நோக்கியவை தமிழகத்திற்கு கொண்டுவந்த “நல்லவர்” கலைஞர். இது வரை நோக்கியாவுக்கு கொடுத்திருக்கும் மானியம் எவ்வளவு தெரியுமா? 650 கோடி ரூபாய்கள். இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? நோக்கியா இதுவரை தமிழகத்தில் செய்துள்ள முதலீடும் ரூபாய் 650 கோடிதான். அதாவது. இப்போது நோக்கியா நிறுவனம் தமிழகத்தில் ஒரு பைசாகூட முதலீடு இல்லாமல் வருடம் தோறும் சுமார் நூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது. இப்படி சட்டப்பூர்வமாக அனுமதியளித்து, பன்னாட்டு முதலாளிகள் கொழுக்க உதவி செய்திடும் உத்தமர் தான் கலைஞர். இதுதாங்க அறிவியல் பூர்வமான ஊழல் என்பது.

அ.தி.மு.க. :

அதிகார துஷ்பிரயோகம், அகந்தை, ஆணவம், பழிவாங்கும் மனோபாவம், சொத்துக் குவிப்பு, விமர்சனங்களை மதிக்காத சர்வாதிகாரப்போக்கு போன்றைகள் தான் ஜெயலலிதாவின் தனித்தன்மைகள். அவரின் கடந்த கால ஆட்சியில் இழந்த உரிமைகளை கேட்டுப் போராடிய 27.000 போக்குவரத்து தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இரண்டு இலட்சம் அரசு ஊழியர்கள் ஒரே இரவில் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். இவர்களில் 50 பேர் மாரடைப்பால் மரணமடைந்தார்கள். இரண்டு இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டிற்கு அனுப்பிய ஆணவம் கொண்ட ஒரே இந்திய தலைவர் ஜெயலலிதா தான். அரசு ஊழியர்களிடம் அடிமைசை சாசனம் எழுதிவாங்கிக்கிட்டு சேர்த்துகிட்டது தனிக்கதை.

டான்சி நில ஊழல், வெள்ள நிவாரண ஊழல், சுடுகாட்டு கொட்டகை ஊழல், சுனாமி ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தல் என்று ஊழலின் ஊற்றுகண்ணாகவே விளங்கிய ஜெயலலிதா, பார்ப்பனிய பா.ஜ.க. முதல்வர்களே செய்ய துனியாத மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடைச் சட்டம் போன்ற    பார்ப்பனிய பாசிச சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப் படுத்திய பாசிஸ்ட்.

 

1989 தேர்தலுக்கு பின் சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருந்த போது எதிர் கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா வேட்டி- சேலை உருவிய காட்சி ஜனநாயக மாண்பின் சட்டமன்றத்தில் படு கேவலமாக காட்சிப்படுத்தப்பட்டது. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே நடந்த மிக மிகவும் அருவருப்பான ஒரு சம்பவம் உண்டென்றால் அது இதுதான்.

குறிப்பு :- இந்த விபரீத நாடகத்தின் முழு திரைக் கதையையும் தெரிந்துகொள்ள விழைவோர், 40 வயதுக்கு மேற்பட்ட தி.மு.க,. அ.தி.மு.க. விசுவாசிகளிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். கேட்க படு ஜாலியாக இருக்கும்

தே.மு.தி.க. :

“மக்களுடன்தான் கூட்டணி, எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று கடந்த தேர்தலில் கெஞ்சிய கேப்டன். இந்தமுறை தனது சுயமரியாதையை துறந்துவிட்டு, அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துகொண்டார், இதுநாள் வரை அவரே மெச்சிய அவரது (தனித்து போட்டி) தனித்தன்மை என்ற கற்பனைக்கொடி அம்மாவின் கால்பட்டு கிழிஞ்சி நார் நாராய் காற்றில் பறக்கிறது,

“காஷ்மீரில் இருந்து கன்னியாக்குமரி வரை எங்கு பிரச்சனை என்றாலும் எங்கள் கேப்டனை தான் அனுப்புவோம் என்று சினிமாவிலே “காமெடி வைக்கும் காமடியன் தான் இந்த கேப்டன். “நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்களை வீட்டுக்கே வந்து தருவேன்” என்று காமெடி பண்ணும் கேப்டன், இந்த திட்டத்தை எப்படி நடைமுறைபடுத்துவேன் என்பதை மட்டும் சொல்ல மாட்டாராம். சொன்னால் கலைஞர் காப்பியடித்து விடுவாராம். சூசூசூ….. அப்பா தாங்க முடியலப்பா! மூன்றாவது படிக்கும் மாணவனைப் போல பேசும் கேப்டனை போல் ஒரு அரசியல் ஞானசூன்யம் தமிழகம்  இதுவரை கண்டதேயில்லை,

2006-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் சென்றிருந்த கேப்டன். தன்னை நெருக்கியடித்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத தனது செயலாளரை “பளார் என்று கன்னத்தில் அறைந்தார். இந்த தேர்தல் (மார்ச் 2011) பிரச்சாரத்தில் வேட்பாளரை பிரச்சார ஊர்தியில் வைத்து அடித்ததையும் பார்த்தோம். ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பத்திரிகை போட்டோகிராபர்களும், வீடியோகிராபர்களும் சுற்றி நிற்கும் ஒரு பொது இடத்தில் தனது செயலாளரை கன்னத்தில்லும், தனது வேட்பாளரை தலையிலும் அடிக்கிறார் என்றால். இவர் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஆஃப் அடிச்சிட்டு கருணாநிதிக்கு ஆப்படிக்க போறேன் என்று டயலாக்லாம் விட்டு இந்திய ஜனநாயகத்தை காக்கும் ஒரே கதாநாயகனாக வலம் வருகிறார். ஜெயாவுக்கு சரியான வாரிசுதானோ!

தீவிரவாதம் என்றால் என்ன என்றே தெரியாமல், தீவிரவாதம் பற்றி படம் எடுக்கும் இவரது ஒவ்வொரு படத்திலும் ஒரு காஷ்மீர் தீவிரவாதி வருவான். அவன் எப்போதும் குர்த்தாவுடனும் தொப்பியுடனுமே (இஸ்லாமியன்) காட்சியளிப்பான், அவனிடமிருந்து தனியெரு ஆளாக இந்தியாவை காப்பாற்றுவார் கேப்டன். காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை இவரைப் போல் இழிவுபடுத்தியவர் யாருமே இருக்க முடியாது.  இவர் முதல்வரானால் தமிழ்நாடு என்ன ஆகும்,,,,?

ம.தி.மு.க. :

தனது கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களையே தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத பரிதாப நிலையில் இருப்பவர்தான் வை.கோ. ஒவ்வொரு தேர்தலிலும் இவர் போட்டியிடும் கூட்டணி தோல்வியை தழுவ, தமிழக அரசியலில் தோல்வியை மட்டுமே சந்தித்த ஒரே தலைவாராக காட்சியளிக்கிறார். சிறந்த “பார்லிமென்டேரியன்” என்று பெயர் எடுத்த வை.கோபால்சாமி, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பொடா சட்டத்தை கொண்டுவந்த போது முதல் ஆளாக ஓடோடோடி சென்று கையெழுத்து போட்டவர் இவர்தான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கு ஏற்றார் போல், விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக அன்பு சகோதரியால் அதே பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 18 மாதங்கள் சிறை இருந்த “தியாகத் தலைவரு”ம் வைகோ ஒருவர்தான். 18 மாத சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வெளியில் வந்த உடனேயே, அன்பு சகோதரியின் “பொடா துரோகத்தை”   எல்லாம் பெருந்தன்மையாக மன்னித்துவிட்டு தப்பு  மறந்துவிட்டு அவருடனேயே கூட்டணி வைத்த நல்லவரும் வைகோதான்.

மிகச் சிறந்த பேச்சாளர் என்று போற்றப்பட்டாலும் வைகோவை, ஒரு சிறந்த தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. இவர் அளவுக்கு தமிழக மேடைகளில் “அழுத அரசியல் தலைவர்” யாருமே கிடையாது. எதற்கெடுத்தாலும் சிறு குழந்தைப் போல் உணர்ச்சிவசப்படும் இவர் தமிழக்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கம் போது, சுனாமி போன்ற ஒரு பேரலை தாக்கினால் என்ன செய்வார்? “ஐயகோ. எம் மக்களுக்கு இயற்கை அன்னை பாதகம் செய்து விட்டாள்” என்று கவி நயத்துடன் கதறியழுவார்.

கண்மூடித்தனமாக விடுதலை புலிகளை ஆதரிக்கும் வைகோவும். கண்மூடித்தனமாக விடுதலை புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதாவும் எப்படி கூட்டணியாக செயல்பட முடியும்? அதுபற்றியெல்லாம் கேட்காதீர்கள். அது வேறு, இது வேறு என்று சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் இல்லாமல் வேறு என்ன?

கூட்டணி சீட்டு சிக்கலில் இறுதி நேரத்தில் வைகோ அ,தி,மு,க, கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக சொல்லியுள்ளார். இது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, நாளைக்கே. அன்புச் சகோதரியுடன் ஒரே மேடையில் வைகோ  காட்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேறு போக்கிடமும் இல்லை.

வி.சி.க. :

தின்னியத்தில் மலம். திண்டுக்கல்லில் சிறுநீர். தென்மாவட்டமெங்கும் தனிக்குவளை. பாப்பாபட்டி – கீரிப்பட்டியில் அரசாங்க முத்திரை பெற்ற தீண்டாமை,,, தலித் மக்களுக்கு ஜெயலலிதா (2001- 2006) அருளிச் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்துவிட்டு 2006 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிட்டவர் தான் அண்ணன் திருமா அவர்கள்,

தின்னியம், திண்டுக்கல், தென் மாவட்டங்கள் எல்லாம் இப்போது மாறிவிட்டனவா என்றால். நிச்சியமாக இல்லை, ஆனால். இது பற்றியெல்லாம் வாயே திறக்காத அண்ணன், மேடைக்கு மேடை “ஸ்பெட்ரம் ஒரு ஊழலே இல்லை துஜிபி.” என்று தி.மு.க.வின் கொள்கைபரப்பு செயலாளர் போலவே பேசிவருகிறார்,

2009-ல் நடந்த நான்காம் ஈழப் போரின் போது, பதைபதைப்போடு அண்ணன் திருமா கொடுத்த பத்திரிகை பேட்டிகள் எல்லாம் வெறும் பசப்பு வார்த்தைகள் என்பதை ராஜபக்ஷேவிடம் கைகுலுக்கியதிலிருந்து ஈழமும். தமிழகமும் நன்கு அறியும்.

பா.ம.க. :

எவ்வளவுதான் பூசி மொழுகினாலும். குறிப்பிட்ட ஒரு சாதியின் நலனுக்காகவே செயல்படும் கட்சிதான் மருத்துவர் அய்யாவின்   பா,ம,க, சந்தர்ப்பவாதத்திற்கு 200% பொருந்தும் ஒரே தமிழக கட்சியும் இதுதான். ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.. அ.தி.மு.க.   என்று மாறி மாறி கூச்சப்படாமல் கூட்டணி சேர்வதில் “அய்யாவை” அடித்துக்கொள்ள தமிழகத்தில் ஆளே இல்லை,

வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றிய போது. “அதிகாரம் சார்ந்த எந்தப் பதவியிலும் நான் என்றும் அமர மாட்டேன்; என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையும் அரசியல் வாரிசாக வளர்க்க மாட்டேன். பொதுவாழ்வில் ஒரு செப்புக் காசையும் சேர்க்கமாட்டேன்” என்று சொன்ன அய்யாவுக்கு, இப்போது ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துகள் இருக்கின்றன. அவருடைய மகன் அன்புமணியை மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சராக ஆக்கி அழகு பார்த்த அய்யா, மகனின் அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரி ஜிப்பமர் மருத்துவமனையை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்றி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் நாடறிந்ததே. இத்தனை “சிறப்புகள்” மிகுந்த அய்யாவை அப்பழுகற்றவர் என்று எப்படி சொல்ல முடியும்?

சி.பி.ஐ.

சொல்லில் கம்யூனிசம், செயலில் முதலாளித்துவம் என்ற நடைமுறையை பின்பற்றுபவர்கள்தான் இந்த இடது (சி.பி.ஐ.) வலது (சி.பி.எம்.) கம்யூனிஸ்டுகள். தங்களது கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லாத தி.மு.க. – அ.தி.மு.க. என்ற இரண்டு முதலாளித்து கட்சிகளுடன் திரும்ப திரும்ப கூட்டணி வைத்து கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் கயவர்கள்தான் சி,பி,ஐ,யும். சி,பி,எம்,மும். செங்கொடிக்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., தே.மு.தி.க.,போல் பத்தோடு பதினொன்றாக கட்சி நடத்த முடியாது. நடத்தவும் கூடாது,

 

ஆனால். இவர்களோ. நாங்கள் அவர்களையும்விட கேவலமானவர்கள் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்கள், சி.பி.ஐ.-ன்  மாநில செயலாளர் தா.பா-வின் கொள்கைபிடிப்பையும், நேர்மையையும் தெரிந்து கொள்ள அதிகம் வேண்டாம். சில ஆண்டுகள் பின்னோக்கி போனாலே போதும்,

தனது மாணவர் பருவத்தில் இருந்தே சி.பி.ஐ.க்காக “உழைத்து வருவதாக பெருமை பேசும் தா.பா., சில ஆண்டுகளுக்கு முன் திடீரென்று சி,பி,ஐ,-ல் இருந்து விலகி தனிக் கட்சியை தொடங்கினார். கைய காலப்புடிச்சி காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து மத்திய சென்னை தொகுதியில் “கை” சின்னத்தில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டார். அவருடைய கட்சி தமிழக மக்களிடத்தில் பெய்ர் என்னவென்று தெரிவதற்குள், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருவாரூரில் நடந்த சி,பி,ஐ,-ன் மாநில மாநாட்டில். தோழர் நல்லக்கன்னு முன்னிலையில் சி,பி,ஐ,-யை மீண்டும் கைபற்றி, நான் தான் மாநில செயலாளர் என்று அறிவித்தார்.

ஓவ்வொரு முறையும் தா.பா. ஜெயலலிதாவுன் கூட்டணியில் இருக்கும் போது, அ,தி,மு,க,வின் அதிகாரபூர்வ கொள்கைபரப்பு செயலாளர் போலவே தான் செயல்படுவார்.

சி.பி.எம். :

முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அதற்கு கம்யூனிச சொற்களால் விளக்கமளிக்க வேண்டும் என்ற தேவை உலகில் எந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காவது இருந்தால், அவர்கள் உடனடியாக இந்தியாவின் சி.பி.எம்,-ஐ தொடர்பு கொள்ளலாம்,

முதலாளித்துவத்தை கம்யூனிச சாயலில் நடைமுறைபடுத்துவதில் ஜகஜால கில்லாடிகள் மாக்சிஸ்டுகள். ஆனால் பாவம் சிங்கூரிலும், நந்திகிராமிலும் இவர்களின் பாட்சா பலிக்காமல் போய், பெரிய அண்ணன் ரத்தன் டாடாவிடம் கொடுத்த வாக்குறுதியை (1000 ஏக்கர் விளை நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி தருகிறேன் என்ற வாக்குறுதியை) நிறைவேற்ற முடியாமல் நானித்தான் போனர் காம்ரேடு புத்ததேவ்,

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் 1979-ல் இருந்து தமிழகத்திற்கான நியாயமான பங்கை தராமல் ஏமாற்றி வரும் கேரள சி.பி.ஏம். அரசை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாத நியாயவான்கள் இவர்கள். தமிழகத்தின் ஐந்து தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதிக்கும் இந்த பிரச்சனைக்காக கேரள அரசை எதிர்த்து ஒரு போராட்டத்தையும் நடத்தாத இவர்களுக்கு, மாவட்டத்திற்கு மாவட்டம் விவசாய சங்கம் வைத்துக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது?

சிறுதாவூரில் தலித் மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமித்து, ஆடம்பர சொகுசு பங்களா கட்டிக்கொண்ட ஜெயலலிதாவை எதிர்த்து பல போரட்டங்களை நடத்தியும். அவர்மீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனுவும் கொடுத்த இவர்கள், ஜெயலலிதாவை “சிறுதாவூர் சீமாட்டி” என்றே விளித்து வந்தனர்.

நேற்று சிறுதாவூர் சீமாட்டியாக காட்சியளித்த ஜெயலலிதா, இன்று கூட்டணியை காக்க வந்த “ஸ்ரீதேவியாக” காட்சியளிக்கிறார். ஜெயலலிதா எவ்வளவு தான் அசிங்கப்படுத்தினாலும், கழற்றிவிட நினைத்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், வெட்கப்படாமல் அம்மாவுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என்று தெருவாசலில் தவமோ தவமிருந்து அடம்பிடிக்கும் மார்க்சிஸ்டுகளின் கொள்கைகளை என்னவென்று சொல்வது?

பா.ஜ.க. :

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து அந்த பாசிச கும்பல் செய்திருக்கும் துரோகங்களை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை, அயோத்தியிலும், குஜராத்திலும் இவர்கள் அரங்கேற்றிய அட்டூழியங்கள் உலகுக்கே தெரியும். ஆனாலும், இவர்களை பற்றி இப்போது நாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில். தமிழகம் பெரியாரின் மண். இங்கு இவர்களின் பாட்சா எந்தக் காலத்திலும் பலிக்காது.

************

இந்த கட்சிகள் போக. மேலும் பல சில்லறை கட்சிகளும் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் “நல்லது செய்வோம் என்று கெஞ்சுகிறார்கள். கொங்கு நாடு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பார்வர்டு பிளாக், புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி,  மூனு சீட்டுக்கு மனிதநேய மக்கள் கட்சி, 3.5% இட ஒதிக்கீட்டிற்க் தமிழ்நாடு தவ்ஹீத்,  சமத்துவ மக்கள் கட்சி. இந்திய குடுடியரசு கட்சி, கொங்குநாடு இளைஞர் பேரவை என்று இந்த பட்டியல் பெட்டி வாங்க நீளுகிறது.

கட்டுரை நீண்டுவிடும் காரணத்தால் இவர்களின் துரோகங்களை நாம் எழுதாவிட்டாலும் இவர்களின் துரோகங்கள் தியாகங்களாக மாறிவிடப்போவதில்லை.

அதனால் விட்டுவிடுவோம்,

************

இந்த 64 இண்டுகளில் இந்தியாவை, தமிழகத்தை, புதுச்சேரியை ஆட்சி செய்த, ஆட்சி செய்ய விரும்பும் எந்த கட்சியும் மக்களுக்கானது அல்ல என்பதற்கு இதற்குமேலும் சாட்சியங்களும். நிரூபனங்களும் தேவையில்லை. அதனால். இந்த மக்கள் விரோத. தேச விரோத கட்சிகளையும், அவர்களின் துரோக வேட்பாளர்களையும் அரசியலிலிருந்தே அகற்றவும், அவர்கள் நம் போன்ற இளைஞர்களை தங்களின் கொள்ளைக்கு மூலதனமாக பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்.

=== அர்ஷத்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s