முதலாளித்துவம் தீயிட்டும் கொல்லும் : AMRI மருத்துவமனை தீ விபத்து.

       எதற்கெடுத்தாலும் முதலாளித்துவமும், முதலாளிகளும் தான் காரணம் என்று கூறுவதைத் தவிர கம்யூனிஸ்ட்களுக்கு வேறு வேலையில்லை, ஒரு விபத்தைக்கூட முதலாளியத்துவத்தின் கேடு என்று எப்படிச் சொல்ல முடியும்? இது பொதுவான மக்களின் கருத்தாகவும் முதலாளியத்துவ ஜனநாயகவாதிகளின் குற்றச்சாட்டாகவும் உள்ளது. கொல்கத்தாவில் உள்ள AMRI மருத்துவமனையில் 96 பேர்களின் உயிரை பறித்தும், பலருக்கு காயங்களும் ஏற்படுத்தியுள்ள இந்த தீ விபத்து ஒரு துரதிருஷ்டம் அல்லது கவனக்குறைவு என்பதற்கு மேல் இவர்கள் சிந்திக்க விரும்புவதில்லை. அதிகபட்ச ஆய்வுக்கு உட்படுத்தினால், அந்த நிர்வாகத்தினை மட்டும் குற்றப்படுத்தி விட்டு தன்னுடைய பங்கை இவர்கள் மறைக்கின்றனர். விபத்து ஏற்பட உடனடி  காரணாமக இருந்தவர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் தொடர்கதையாக உள்ள இது போன்ற கொடூரங்களுக்கு அது மட்டுமா காரணம்?

    இந்த விபத்துக்கான காரணங்கள் என்னென்ன? இது விதியல்ல. விதியை மீறியதால் நடந்த விபத்து. விபத்து இல்லை கொலை. வரையறுக்கப்பட்ட கட்டிட அமைப்பு, பாதுகாப்பு கருவிகள் நிறுவுதல், இடர்பாடுகளுக்கான அவசர உதவி போன்ற அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன.  இவ்விதி மீறலை அங்கீகரித்த அதிகாரிகளின் ஊழல், ஊழலிலேயே புழுத்து நாறும் அரசாங்க அமைப்புகள், அரசியல்வாதிகள், இவர்களுடன் இந்த அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் தமது நலனுக்கானது என்று வரிந்துகட்டிக்கொள்ளும் மக்கள், மக்களின் சிந்தனையை மயக்கி கொள்ளையிடும் முதலாளித்துவம், இப்படி ஒன்றன் பின் ஒன்றான சங்கிலித் தொடர் இதற்கு காரணங்களாக உள்ளன.


    முதலாளித்துவக் கொள்கை தரம் பற்றி பீற்றிக் கொள்கிறது. பல ஆய்வுகள் அறிவியலின் அடிப்படையில் பாதுகாப்புக் குறித்து அழகாகவே வரைபடம் வரைகின்றனர். ஆனால் நடைமுறையில்? அப்பட்டமாக அதை அவர்களே மீறுகின்றனர். அந்த மீறலுக்கு சிலரின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமா காரணம்? இல்லை. முதலாளித்துவ விதிதான், இவ்விதி மீறலுக்கு காரணமாக இருக்கிறது.. ஒரு முதலாளியின் நோக்கம் என்ன? இலாபம். மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை தேவைகளான உணவு என்றாலும் மருத்துவம் என்றாலும் முதலாளிகளுக்குத் தேவை இலாபம் மட்டுமே. இலாபமற்ற எந்த செயலையும் அவர்கள் செய்யமாட்டார்கள். எடுத்துக்காட்டாக அரசாங்க கிடங்குகளில் உள்ள அரிசி அழுகி புலுத்துப் போய் கடலில் கொட்டினாலும் அதனை விலையின்றி மக்களுக்கு வினியோகிக்க மறுத்துவிட்டது இந்திய அரசாங்கம். இது மன்மோகனின் தனித்தேர்வு மட்டுமல்ல. முதலாளித்துவத்தின் விதி. மன்மோகன் அதன் எடுபிடி அவ்வளவே. அரிசி மட்டுமல்ல, பாலும் இவ்வாறு கொட்டப்பட்டுள்ளது., கொட்டப்படுகிறது. அமெரிக்க அரசுகூட பல இலட்சம் டன் கோதுமையை கடலில் கொட்டியுள்ளது.. காரணம் என்ன?

    அது விலையின்றி வினியோகிக்கப்பட்டால் அடுத்துள்ள சில காலங்களுக்கு வெளிச்சந்தையில் உள்ள முதலாளிகளின் இருப்பு தேங்கும். இலாபத்தை இழப்பர். இருப்பு கெடத்தொடங்கினால் மீண்டும் விலையின்றி வினியோகிக்க வேண்டும். இது தொடர்கதையானால் முதலாளிகளின் இலாபம் பறிபோவதுடன், முதலாளித்துவத்திற்கே அடிவிழும். அதனால்தான் மன்மோகன் மறுக்கிறார். இலாபமே குறிக்கோளாக உள்ள முதலாளிகளுக்கு, மருத்துவமனை என்றாலும் செலவினத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியோமோ அவ்வளவுக்கவ்வளவு குறைப்பதே முதலாளித்துவத்தின் வெற்றி இருக்கிறது. அது உயிருக்கான பாதுகாப்பனதாக இருந்தாலும் சரியே.

       இலாபம் மட்டுமல்ல. சந்தை விதியும், வியாபாரப் போட்டியும் இதற்கு காரணமாகிறது. பாதுகாப்பு வசதிகளை கூட்டினால் செலவினம் கூடும். அதன் மூலம் மருத்துவ செலவு அதிகரிப்பதனால் முதலாளிகளுக்கு என்ன கேடு, நோயாளிகளிடம் கறந்துவிட வேண்டியதுதானே என நீங்கள் கருதலாம். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் வரம்பிடப்பட்டு ஆகப் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே மருத்துவத்தை விற்பனை செய்ய வேண்டிவரும். இது இலாபத்தை குறைக்கும். அதுபோல விற்பனைப் போட்டியில் விலை கூடுதல் பிறரிடம் தோற்றுவிடச் செய்யும். போட்டியை குறைக்க விலை குறைப்பு வேண்டும். விலை குறைக்க பாதுகாப்பு, ஊதியம் உட்பட செலவினத்தை கைகழுவிடவேண்டம். இது முதலாளித்துவத்தின் இலாபத்துக்கான விதி. அனைத்து மருத்துவமனைகளும் உபயோகப்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கப்பட்டே அழிக்கவேண்டும் என்பது சட்டம். அரசாங்கமே இதற்கு ஒரு நிருவனத்தை நிறுவி குறைந்த செலவில் செய்து கொடுத்தாலும் இவர்கள் எவரும் அப்படிச் செய்வதில்லை என்பதுதான் உண்மை. இதற்கு இன்னொரு உதாரணம் சாயப்பட்டறைகள். கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற மறுக்கும் சாயப்பட்டரை முதலாளிகள். அப்படிச் செய்தால் அமெரிக்காவிற்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய முடியாது. கல்லா கட்டவும் முடியாது.

இதற்கான ஒரு தொழிலாளின் பங்கு என்ன என்பது பற்றிப் பார்ப்போம். தொழிலாளர்களைப் பொருத்தவரை ‘இலாபம்’ போல், எங்கு ஊதியம் அதிகம் கிடைக்கிறதோ அங்கே விருப்பத்துடன் பணிபுரிகின்றனர். அவர்களும் முதாலாளித்துவ விதிக்குள் வாழ்பவர்களே. அவர்களை ‘விலைவாசி’ நெட்டித் தள்ளுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான வேலையைக்கூட விருப்பத்துடன் ஏற்கச் செய்கிறது. இன்னொரு பக்கம் ஆபத்தில்லை என்று ஏமாற்றப் பட்டும் பணிபுரிகின்றனர்.

“ஏகாதிபத்தியம், தான் அடித்த கொள்ளை இலாபத்தை, ஏகாதிபத்திய நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியை ஊழல்படுத்தப் பயன்படுத்துகிறது. எனவே இப் பகுதி (தொழிலாளர்கள்) தன் சொந்த நலன்கள் ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் சந்தர்ப்ப வாதத்தின் வளர்ச்சிக்கு இதுதான் அடிப்படையாகும்” என்று ஆசான் லெனின் கூறுகிறார். சிறப்பான ஊதியத்தால் ஊழல்படுத்தப்பட்டவர்கள் எல்லாவிதமான ஆபத்துகளையும் மறைத்து சக தொழிலாளிகளை ஏமாற்றுகின்றனர். மருத்துவம், கல்வியைக்கூட முதலாளிகள் காசுக்கான பண்டமாக்கிவிட்டனர். விலைவாசி ஏற்றமும் அளவு கடந்து நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில் இவர்களும் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து தற்போது மீள முடியாது. மீள்வதற்கு தியாக உள்ளம் வேண்டும்.

     
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலில் மாற்றம் இல்லை அப்படியிருந்தும் இது போன்ற விபத்துக்கள் நடக்கும் போது அரசாங்கங்களின் மீது ஒப்புக்கு குற்றம் சாட்டும் மக்களும், ஜனநாயகவாதிகளும் தேர்தல் என்று வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு, சிறு முனுமுனுப்புக்கூட இல்லாமல் ஓட்டுப் பெட்டியின் பின்னால் ஓடுகின்றனர். மக்களின் ஆயுதம் ‘ஓட்டுச் சீட்டு’ என்று பீற்றிக்கொண்டாலும் தேர்தல் காலங்களில் இதுபோன்ற கொடூரங்களுக்கு எதிராக ஒரு உறுதிமொழியைக்கூட
எந்த வேட்பாளரிடமும் கேட்பதில்லை. மாறாக இந்தக் கட்சி சரியில்லை அந்தக் கட்சி, அந்தக் கட்சி சரியில்லை இந்தக் கட்சி என்று மாற்றி மாற்றி ஓட்டுப்போடுவதை மட்டும் இவர்கள் நிறுத்தவே இல்லை. பிறகெப்படி இந்த ஓட்டுச்சீட்டு கட்சிகள் இவர்கள் மீது அக்கரைக் கொள்ளும்?

ஒரு கம்யூனிஸ்டு என்பவர் சமூக அக்கறை கொண்டவர். அதனால் ஒரு சிலரின் தனிப்பட்ட தேர்வுமட்டுமே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என்று குற்றம் சுமத்துவதுடன் மட்டும் வரம்பிட்டுக் கொள்ளாமல் அதன் சமூக காரணங்களையும் ஆய்வு செய்பவர். அதனால்தான் விபத்து என்பதும் முதலாளித்துவத்தின் பரிசு’ என்று கூறுகிறார். ஆனால் போலி கம்யூனிஸ்ட்கள் (சிபிஎம்) இந்த விதி மீறலுக்கு துணைபோய்விட்டு ‘திருடியவனே “அதோ ஓடுரான் பாரு திருடன்” என்று மக்களுடன் சேர்ந்து கொண்டு திருடனை பிடிக்க ஒடியகதையாக’ இத் தீவிபத்தைக் குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் கம்யூனிஸ்ட்களே இல்லை. அதனால்தான் அவர்களை போலி கம்யூனிஸ்ட் என்கிறோம். இந்தி அரசும் அவர்களையே கம்யூனிஸ்டு என்று சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாலும் நாங்கள் அவர்களை போலிக்கம்யூனிஸ்ட் என்கிறோம்

எந்த ஒரு பண்டமும் விலையை இழக்கத் தொடங்கும் வரை இது போன்ற கொடூரங்கள் தொடரவே செய்யும். அதனால் நாம் மார்க்ஸியத்தின் வழி நடப்போம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s