முத்துக்குமார்

தியாகி முத்துக்குமாருக்கு இது முதலாம் ஆண்டு.

மக்கள் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை.

இசுலாமிய பிற்போக்காளர்களிடமும் சொல்லிக் கொள்வோம்

ஈழ மக்களின் விடுதலைக்காக தன்னுரை தீயிட்டு மாய்த்துக்கொண்ட தியாக தீபம் முத்துக்குமாருக்கு 29. ஜனவரி இன்று முதலாம் ஆண்டு நினைவுநாள். இவரின் மரணம் தமிழக அரசியலின் துரோகங்களை அடையாளம் காட்டி பிழைப்புவாதிகளின் முகத்திரையைக் கிழித்தது. முத்துக்குமார் இட்ட தீ, இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் நிச்சயம் பரவும். உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடுங்கோலர்கள் இன்று வெற்றியடைந்திருக்கலாம். ஆனால் வரலாறு என்றும் மன்னித்தது இல்லை. அவர்கள் துடைத்தெரிப்படாமல் நிலையாக இருந்ததும் இல்லை. புரட்சியாளர்கள் என்றும் அவரது தியாகத்தை நெஞ்சில் ஏந்துவார்கள்.

இலட்சோப இலட்ச அடிமைகளையே தனது உழைப்புக் கருவியாக்கொண்டு கொழுத்த ரோமானிய சாம்ராஜியம் இன்று பல்லு பிடுங்கப்பட்ட பாம்பாக ரோம் நகர் என்ற பெட்டகத்துக்குள் அடக்கமாகிவிட்டது. கண்ணில்படும் செவ்விந்தியர்களை எல்லாம் படுகொலை செய்த கொலம்பஸின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யவெறி இன்று அருங்காட்சியகத்தில். உலக ரவுடியாக மகுடம் சூட்டிக்கொள்ளலாம் என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கனவு, வியட்நாமில் பட்ட அடியாலும், ஈரக்கில் புலிவாலை பிடித்த கதையாகவும் கானல் நீராகியது. ஈழ மக்களின் மீதான ராஜபக்சேயின் வெற்றி எம்மாத்திரம்? அம் மக்கள் சரியான அரசியல் வழியை அறிந்துகொள்ளாமலும், துரோகிகளால் ஏமாற்றப்பட்டதை புரிந்துகொள்ளாமலும் இருந்துவிட முடியாது. புரிந்துகொள்ளும் அந்நாள் தமிழ் சிங்களம் என இன வேறுபாடற்ற உழைக்குமக்களின்  உண்மைப் போராட்டமாக மலறும். அன்று ராஹபக்சே வகையரா சிங்கள இன வெறியர்கள் கழுவிலேற்றப்படுவார்கள்.

முத்துக்குமாரின் நினைவுநாள் தொடர்பான வினவின் பதிவுக்கு தமது விமர்சனங்களைப் பகிர்ந்துக் கொண்ட இசுலாமியர்களின் ( குறிப்பாக தவ்ஹீது ஜமாத் என்ற இசுலாமிய அமைப்பினுடைய ஆதரவாளர்களின்) விமர்சனங்களை படித்தபோது மனவருத்தமும் ஆற்றாமையுமே ஏற்பட்டது. இசுலாமியக் கோட்பாடு தற்கொலையை ஆதரிக்கவில்லைதான். தற்கொலை செய்துக் கொள்பவன் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் நரகத்துக்கே போவான் என்பதும் அவர்களின் கோட்பாடுதான். ஆனால் அறிவியல் பூர்வமானது எங்கள் மதம் என்று கூறும் இவர்கள், காலச் சூழ்நிலைக்கேற்ப ஆளும் வர்க்கத்திற்காக பலவற்றை திருத்திக்கொள்ளும் இவர்கள், இன்றும் உழைக்கும் மக்களுக்கான மற்றும் பெண்களுக்கான பிரச்சனைகளில் மட்டும் பழைமைவாதத்தை தூக்கிக்கொண்டு வந்து முத்துக்குமாரின் மரணத்தையும், அதனை போற்றுபவர்களையும் கொச்சைப்படுத்தி தங்களது அறிவு மேதாவித்தனத்தை ( இந்த தளத்தில் காணலாம் ) வெளிப்படுத்தியுள்ளது எம்போன்று இசுலாமியர்களின் மத்தியில் வாழும் பலருக்கும் மன வருத்தத்தையே தருகிறது.

இன்று மட்டுமல்ல. காலம் காலமாக தொடரும் இவர்களின் இச் செயலால் பல கொடுமைகள் நடக்கின்றன. எத்தனையோ இசுலாமியப் பெண்கள் வரதட்சனை, மாமியார் மாமனார் கணவனின் கொடுமைகளால் தீயிட்டும், தூக்கிட்டும் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். அவர்களின் இத் தற்கொலையை இசுலாமிய மதவெறியர்களால் குறிப்பாக அமைப்பு வழித் திரண்டவர்களால், இமாம்களால் கொச்சைப்படுத்தப்படுகிறது. போஸ்மாடம் பண்ணிணால் சொர்கத்துக்கு உடலுறுப்புகள் கிடைக்காது என்ற மூட நம்பிக்கையைத் திணித்து வழக்குக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டுவிடுகிறது. இதன் மூலம் அப் பெண்களுக்கு மரணத்திற்குப் பிறகும் நீதி கிடைக்காமல் தடுத்துவிடுகின்றனர். தற்கொலைக்குக் காரணமான சமூக்க் குற்றங்களோ எகத்தாளமாக தொடருகிறது. பல நிகழ்வுகளில் தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் அழுகி மண்ணில் கரையப்போகும் உடலுறுப்புகளை போஸ்ட்மாடம் பண்ணினால் ஒன்றம் ஆகாது. அப்பொழுதுதான் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும் என்று கூறினாலும் “ஜமாத்” கட்டுப்பாடு” அவர்களை மிரட்டுகிறது.

விபத்துகளையும், இயற்கை பேரழிவுகளையும் எடுத்துக்காட்டாக கூறினாலும் இவர்கள் “போன உயிர் திரும்பி வரவா போகிறது” என்று தனக்குத்தானே சமாதானமடைந்து கொள்கிறனர். வெற்றி பெறுவது இசுலாமிய மதவெறியர்களே. எனக்கு மிஞ்சியது வெறுமை கலந்த வெறுப்பு மட்டுமே.

இந்த குழந்தை இந்த தகப்பனுடைய இரத்தத்தில் பிறந்தது என்பது அறியப்பட வேண்டும் என்று, ஸ்கேன் வந்த காலத்திலும் “இத்தா”வை பெண்கள்மீது திணிக்கும் இவர்கள் இரத்ததான முகாம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு தற்கொலை பெரும்பாலும் கண நேரத்தில் முடிவெடுக்கப்படுவதில்லை. கொடுமைகளை, துன்பங்களை, அவமானங்களை, பசி பஞ்சங்களை தொடராக அனுபவித்து வரும் ஒருவர் “வாழ்வதைவிட செத்து தொலைந்துவிடலாம்” என்ற சிந்தனைக்கு ஆட்படுகிறார். ஒரு முறை அல்ல. பல முறை இச் சிந்தனைக்கு ஆட்படுகின்றனர். தீக்குச்சியின் சுடர் கையில் இலேசாக பட்டாலே ஏற்படும் வெப்பத்தாக்குதலின் வலியையும், தன் உடம்பிலுள்ள எந்த ஒரு பாகத்தையும் கைறுகளால் இருக்கப்படுவதால் ஏற்படும் வலியையும் உணராதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அப்படியிருக்க தன் உடல் முழுவதும் தீயில் எரிவதால், குரல்வளை இறுக்கப்படுவதால் ஏற்படும் வலியை உணராதவர்களாக அவர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. பல நேரங்களில் தன் துன்பத்தை எப்படியாவது தீர்த்துவிடலாம்  என்று நம்பும் இவர்கள் மூச்சு முட்ட ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியாமலேயே தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர்.

வெந்துகிதக்கும்....

பன்னாட்டு நிறுவனங்களின் காய்க்காத பயிர்களை கந்து வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்டு போண்டியாகிப்போன ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். புதிய பொருளாதாரக் கொள்கையால் நூற்றுக் கணக்கான குறுந்தொழில் உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களெல்லாம் தம்போன்றவர்களாவது அல்லது தன் குடும்பமாவது நெருக்கடியிலிருந்து மீளும் என்றே தங்களை மாய்த்துக்கொள்கின்றனர். அடுத்து எப்படி போராடுவது என்று வழி தெரியாத இவர்கள் போன்றவர்களை, அதற்கான காரணங்களை களையாமல் காப்பாற்றமுடியாது. தற்கொலைக்கான காரணங்களை கண்டுபிடித்து களைவதற்காக போராடாமல், நெத்தியடி முகம்மது, ஷாஜஹான், அத்திக்கடையார் போன்றோர் பழமை வாதத்தை தூக்கிக் கொண்டுவந்து விமர்சனம் செய்வது அவர்களின் வக்கிர மனநிலையைத்தான் காட்டுகிறது.

இசுலாமிய வன்முறையாளர்களின் தற்கொலைத் தாக்குதல்களை தாமோ, தமது அமைப்போ ஆதரிக்கவில்லை என்று இவ்வமைப்பினர் கூறுவது அப்பட்டமான பொய். அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் அந்த “ஜிகாத் போராளிகளை” பாராட்டவே செய்கிறார்கள். அதிகாரபூர்வமாக அறிவிப்பதால் எற்படும் பின் விளைவுகளை அறியாத அப்பாவிகளா இவர்கள்?.

கம்யூனிஸ்ட்களின் முற்போக்கு வேடத்தை கிழிக்கப்போகிறார்களாம். இவர்களின் உண்மைமுகம் என்னவென்று பிஜே தன் வாயாலேயே கூறுவதை இந்த வீடியோவில் பாருங்களேன்.

4 thoughts on “தியாகதீபம் முத்துக்குமார்

  1. இஸ்லாத்தை சற்று தூர ஒதுக்கி வைத்து விட்டு தர்க்க ரீதியாக ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக போராடாமல் தற்கொலை புரிதல் என்பதையே ஒரு போராட்டமாக செய்தல் என்பது அறிவுடைமையாகுமா என்பதை சற்று சிந்திக்கவும்.

    உதாரணமாக,

    முதலாளித்துவத்துக்கு எதிராக தனக்கு முதல் எதிர்ப்பு ஏற்பட்ட உடனேயே லெனின் (டாஸ் கேபிடல் புத்தகம் எழுதுவதற்கெல்லாம் முன்னால்) முதலாளித்துவத்துக்கு எதிராய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் இதே சாதனையையும் புரட்சியையும் செய்து புகழ் பெற்றிருப்பாரா அல்லது உலக கம்யூனிஸ்டுகளின் புகழ்ச்சிக்கு உரியவராய் ஆகி இருப்பாரா?

    தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய உடன், இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்துக்கு எதிராய் வெள்ளையனுக்கு எதிராய், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அன்றே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருந்தால், கத்தி இன்றி ரத்தம் இன்றி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா அல்லது காந்தி நம் நாட்டு மகாத்மாவாக தேசத்தந்தையாக ஆகி இன்று எல்லா ரூபாய் நோட்டுகளிலும் சிரித்துக்கொண்டிருந்து இருப்பாரா?

    ஹிந்தி திணிப்புக்கு எதிராய் அப்போதே திருக்குவளை மு.கருணாநிதி தீக்குளித்து தற்கொலை செய்து செத்திருந்தால் இன்று தமிழ்நாட்டின் மூன்று தலைமுறை மக்களுக்கு ஹிந்தி தெரியாமல் போயிருக்குமா? அல்லது கலைஞர் என்று இன்று அவர் அடைந்துள்ள அந்த புகழ் மற்றும் அவர் இதுவரை செய்த சாதனைகள் அவருக்கு கிட்டி இருக்குமா? அல்லது அவர்தம் பரம்பரை இன்றுள்ளதுபோல சிறப்பாக வாழ்ந்திருக்குமா?

    இஸ்லாம் மீதுள்ள காண்டை ஓரமாய் ஒதுக்கி வைத்து விட்டு தற்கொலைபுரிதல் என்ற ஒன்றை சற்று நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து பார்க்கவும்.

    லெனினாக அல்ல, காந்தியாக அல்ல, கலைஞராக அல்ல, ஒருவேளை இதே முத்துக்குமார் பிற்காலத்தில் சுதந்திர தனி ஈழத்தின் அதிபராகக்கூட வந்திருக்கலாம்…! பிரபாகரனைவிட விவேகமாகவும், நெடுமாரனைவிட வீரமாகவும் திருமாவலவனைவிட தீரமாகவும் வைக்கோவைவிட உக்கிரமாகவும் அவை அனைத்தையும் கலந்தும் போராடவேண்டியது மட்டுமே பாக்கி. தன் முட்டாள்த்தனத்தால் இன்று ‘தியாகி’ மட்டும் ஆகி விட்டார், என்பதாவது புரிகிறதா?

    தற்கொலை செய்து கொள்வது தியாகமா?
    தற்கொலை செய்து கொள்வது தியாகமா?
    தற்கொலை செய்து கொள்வது தியாகமா?

    இனப்படுகொலை நிகழ்த்தியவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்தோருக்கும் எதிராய் எவ்வகையிலேனும் புஜம் காட்டி வெற்றி கிட்டும் வரை போராடுதல் வீரம் அல்லவா? அதில் தன் உடமை, சொந்தம், இன்னுயிர் துறந்தால் அதுவன்றோ தியாகம்.?
    &
    அது முடியவில்லை எனில், உயிருடன் இருந்து ஆக்கப்பூர்வமாக தன் இலட்சியம் மெய்ப்படவேண்டி அல்லும் பகலும் அயராது தன் சொல்லால்-எழுத்தால் வெற்றி கிட்டும் வரை பாடுபடுதல் விவேகம் அல்லவா? அதில் தன் உடமை, சொந்தம், இன்னுயிர் துறந்தால் அதுவன்றோ தியாகம்.?

    இவற்றை புரட்சி என்று அனைவருக்கும் அறைகூவல் விடுத்து எல்லாரையும் பின்பற்ற எடுத்துரைக்கலாம். அணிதிரட்டி புரட்சி செய்யலாம்.

    ஆனால்….

    முந்தையதை(தற்கொலை) செய்ய அனைவருக்கும் அறைகூவலிட முடியுமா? அவ்வளவு ஏன்? அச்செயலை வீரமாகவும் விவேகமாகவும் சிலாகிக்கும் வாய்ச்சொல்வீரர்கள் தாங்களும் அதே போன்ற ‘வீர-விவேக தியாகத்தை’ செய்ய முன்வருவார்களா? இதை தியாகம் என்று சொல்லும் நீங்கள் எதற்காக இந்த ‘உயர்ந்த தியாகத்தை’ செய்ய முன்வரவில்லை?

    //முத்துக்குமாருக்கு 29. ஜனவரி இன்று முதலாம் ஆண்டு நினைவுநாள்//

    —முட்டாள்த்தனமாய் தன் இன்னுயிர் எனும் உயிராயுதத்தை இழந்து அநீதி தலைதூக்க விட உதவி செய்யும் தமிழனை தற்கொலை செய்துகொள்ளாமல் வேறுவழியில் ஆக்கப்பூர்வமாக செயல் பட சிந்திக்க வைத்த பொன் நாள்தான் அது…!

    மக்களின் அகக்கண்ணை திறந்த நன்நாள்தான் அது..!

    ஒரு முட்டாள் பலரை அறிவாளியாக்கிய நாள் அது…!

    1. தற்கொலை செய்து கொள்பவர்களின் நோக்கத்தைப் பொருத்து அதனை தியாகம் என்று போற்றுவதும் துன்பத்திலிலிருந்து விடுபட தற்கொலை செய்துக் கொள்பவர்களுக்காக இரக்கப்படுவதும் என்பது “தற்கொலைதான் தியாகம, தற்கொலைதான் தீர்வு” என்று கூறுவதாக பொருளாகாது.

      கட்டுரையில்

      ##அடுத்து எப்படி போராடுவது என்று வழி தெரியாத இவர்கள் போன்றவர்களை, அதற்கான காரணங்களை களையாமல் காப்பாற்றமுடியாது. ##
      என்று அவர்களின் இப்படிப்பட்ட முடிவை அவர்களது அறியாமை என்றும், வெறுமனே “அய்யோ பாவம்” என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு ஒதுங்கிடவோ, “தற்கொலை எனபது இழுக்கு” என்று கொச்சைப்படுத்திவிட்டு கண்ணை மூடிக்கொள்ளவோ முடியாது என்பதையும்

      ##தற்கொலைக்கான காரணங்களை கண்டுபிடித்து களைவதற்காக போராடாமல்##

      என்று கட்டுரையில் குறிப்பிட்டே உள்ளோம்.

      தங்களின் விமர்சனம், இக் கருத்து அழுத்தமில்லாமல் கட்டுரையில் பதிவாகி உள்ளதை உணரச் செய்துள்ளது.
      அதற்காக உங்களுக்கு நன்றி!

      1. முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும்

        முத்துக்குமார் – ஷோக்குகளும் ஷேக்குகளும்

        அன்புள்ள ஷேக்’sssss,

        உங்களுக்கு எல்லாம் வல்ல பேரருளாளன் அறிவு,செல்வம், வசதி, எல்லாவற்றையும் கொடுத்திருக்கலாம் ஆனால் தன் மானத்தை கொடுத்தாரா?

        போராட்டக்குணத்தை கொடுத்தாரா? ஆனால் எங்களுக்கு செல்வத்தை கொடுக்காத “கடவுள்” தன்மானத்தை கொடுத்துவிட்டான் என்ன செய்வது. எங்கும் போராட்டம் வன்முறையின்றிதான் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம்தான். ஆனால் ஆளும் வர்க்கம், அதிகாரம் எங்கள் “மர”மண்டையை பிளக்கும் போது குர்ரானையோ, பைபிளையோ, கீதையையோபடிக்கும் அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்லை. அது அவசியமும் இல்லை. உங்களுடைய பொறுமை அது ஆளும் வர்க்கத்தின் நல்ல மண்டையில் உதித்தது.

        எல்லாவற்றுக்கும் இறைவன்தான் காரணமென்று உழைக்கும் மக்களால் இருக்க முடியாது, கடவுள் இருக்கிறான் என்றாலும் அவன் தானாய் உணவு தரமாட்டான் என்றுதான் உழைப்பில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இறைவன் தான்இதை செய்தான் என்று தெரிந்தும் யாராவது பாதிக்கப்படும் போது கண்ணீர் விடுகிறார்கள்.

        முத்துக்குமாரை படைத்த அல்லா அவனை ஏன் தற்கொலை செய்து கொண்டு சாகவைத்தான்? அவனின் தற்கொலைக்கு காரணமாக ஏன் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தான்? கடவுள் முக்கியமாக உங்கள் அல்லா இருப்பது உண்மை எனில் உலகமக்களை கொன்று குவித்த அவன்தான் முதல் குற்றவாளி. இதனால் தான் உங்கள் அல்லா மட்டும் அல்லது இந்து, கிறித்துவமத சாமிகளைக்கூட தூக்கியெறிய சொல்கிறோம்.

        ஷேக் உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் இப்படி ஏறுகிறதே உங்கள்அல்லா ஏதாவது ஸ்பெஷலாக உங்களுக்கு படி அளக்கிறாரா? அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு? நாங்களோ அதற்கும் அல்லாவுக்கும் ஏனைய சாமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறோம்.

        ஒரு வர்க்கத்தின் தேவைக்காக இன்னொரு வர்க்கம் கசக்கிபிழியப்படுகிறது என்கிறோம். உங்கள் அல்லாவை நீங்களே இப்படி குற்றவாளி ஆக்கிவிட்டு நாங்கள் நிந்திப்பதாக கூறுவது சரியா?

        1. kalagam,

          Don’t be emotional in your arguments. Could you dare to challenge the below article from the brother hamza?

          http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html

          I really appreciate if you could come up with some logic and intelligence…

          For more info: http://hamzatzortzis.blogspot.com/

          http://www.facebook.com/h.a.tzortzis

          I suggest u to see his debate videos with promenient athesit is UK and US , which will be available in this website.

          http://hamzatzortzis.blogspot.com/2009/07/debate-on-religion-logic-of-submissio.html

பின்னூட்டமொன்றை இடுக