மற்றுமொரு துரோகி உலா வருகிறான்

நாடகம் என்னவோ பழசுதான். நடிகர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனர். சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்ற கற்பனை ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட போதும்கூட இந்த நாடகம் மக்களிடம் செல்லுபடியாகிக் கொண்டே இருக்கிறது. மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய அறியாமை நடிகர்களை புதுப்புது வேடம்கட்ட தூண்டிக்கொண்டே இருக்கிறது. மக்களும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். தனது உறவுகள் பாலிடாலினால் செத்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றுக் கொண்டிருந்தும் கூட மக்களும் அவர்களை வாழ்த்திக்கொண்டே இருக்கின்றனர், திடீரென்ற பிரவேசம், எதிர்பாராத கட்டிப்பிடித்தல், கைகுலுக்குதல், டான்ஸ் ஆடுதல், படுத்துறங்குதல், உடன் பயணம் செய்தல், தொப்பி போடுதல் மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிடுகிறது. வர்க்க எதிரியானவன்

நண்பானாக காட்சியளிக்கிறான். இல்லை உறவினராகவே மாறிவிடுகிறான். ஒழித்துக்கட்டப்பட வேண்டியவன் வாழ்த்தப்படுகின்றான்.

“மகராசன் நல்லாயிருக்கனும்!”

தற்போதைய எதிர்க்கட்சிகளால் பச்சா (குழந்தை) என்றழைக்கப்படும், காங்கிரசின் பட்டத்து இளவரசரான ராகுல்தான் தற்போதைய நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர். இவர் நாடு முழுமைக்குமான ஒரு நடிகராக பரிணமித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரசின் எதிர்கால பிரதம வேட்பாளராக இவர் முன்னிறுத்தப்படவிருப்பதால் தன்னை மக்கள் நலனில் அக்கரைக் கொண்டவர் என்ற பிம்பத்தைக் கட்டியமைக்க அண்மைக்காலங்களாக பெருமுயற்சி செய்து வருகிறார். நியம்கிரி மலைவாழ் மக்களிடம் சென்று ‘’நான் தில்லிக்கு நெருக்கமானவன்’’ என வசனம் பேசி அருந்ததிராய், ஹிமான்சுகுமார் போன்ற மனிதவள மேம்பாட்டு ஆர்வலர்களை ஓரம் கட்ட முயற்சிக்கிறார்,  இவர் தனது செயல்களை எதிர்பாராவிதமாக நடைபெறுவதாகவே அமைத்துக்கொள்கிறார்.. எவரும் எதிர்பாராவண்ணம் திடீரென்று இரயிலில் பயணம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென்று பாதுகாப்பு வளையத்தை கங்காருகுட்டி போல் தாண்டுகிறார். குடிசை வாழ் மக்களிடம் சென்று கைகுலுக்குகிறார். பள்ளிவாசலுக்குள் சென்று தொப்பி போடுகிறார். இவ்வாறாக மக்களிடம் உலா சென்று அவர்களின் இன்னல்களை கண்டும், கேட்டும், பலவித அனுபவங்களுடன் திரும்பிய இவர் 2ம் தேதி அன்று கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஏழை மக்களை முன்னேற்றம் செய்வதற்குண்டான ஒரு பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை முன்மொழிகிறார். இக்கூட்டத்தில்கூட இவர் பேசுவதாக இல்லையாம். திடீரென்றே அழைப்பு விடுக்கப்படுகிறதாம்.

ஏழை எளிய சாமானிய மக்களால் மட்டுமே இந்தியாவை முன்னேற்றம் அடையச் செய்யமுடியும்” என்பதுதான் முதல் அம்சம்.. ஏழை மக்களை நாம் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்றால் நமது பிரதமரின் கொள்கையான பொருளாதார வளர்ச்சி அவசியம்”. –ராகுல்

அதாவது இந்தியாவின் முன்னேற்றம் என்பது ஏழைஎளிய மக்களை முன்னேற்றம் அடையச் செய்வதில் தங்கியுள்ளது. அது பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார வளர்ச்சியின் மூலமே சாத்தியமாகும். எனவே, மன்மோகனின் பொருளாதாரக் கொள்கைகள் அவசியம் என்று கூறுகிறார்

மன்மோகனின் அந்த அவசியமான பொருளாதாரக் கொள்கைதான் என்ன?

போபால்கள் நடக்கலாம் அதற்காக நாடு முன்னேறாமல் இருக்கமுடியாது என்பது !  உணவின்றி பலர் செத்தாலும் கிடங்குகளில் மக்கிமண்ணாகும்  உணவுத்தானியங்களை மக்களுக்கு இலவசமாகவோ, பொதுவிநியோக முறையிலோ வழங்க முடியாது என்பது! எத்தனை பழங்குடியினர் செத்தாலும் பரவாயில்லை. அவர்களின் வாழ்வாதாரங்களை  பன்னாட்டு, தரகு முதலாளிகளிடம் ஒப்படைத்தே தீரவேண்டும் என்பது!  திருத்தப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களின் உறுதுணையால் எத்தனை அம்பிகாக்கள் செத்தாலும் பரவாயில்லை, நோக்கியாவின் கொள்ளையே தேசிய வளர்ச்சி என்பது!

மக்களை வறுமையில் தள்ளி ஒழித்துக்கட்டுவதன் மூலம் முதலாளிகளின் இந்தியாவை வேகமாக முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்பதுதான் மன்மோகனின் பொருளாதாரக் கொள்கை.

இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளும் வரித்தள்ளுபடிகளையும், கடன் தள்ளுபடிகளையும் அளித்தும், ஆன்லைன் வர்த்தகம் மூலமும்  அவர்களின் வேகமான கொள்ளைக்கு துணைபோகும் மன்மோகன், மக்கும் உணவுப்பொருட்களை வறுமையில் உழலும் ஏழைமக்களுக்கு கொடுக்கமுடியாது என்று பகிரங்கமாகவே அறிவிக்கிறார். இந்திய தரகு முதலாளிகளின் முன்னேற்றமே இந்தியாவின் முன்னேற்றம், அதற்கு ஏழைஎளிய சாமானிய மக்களை பலிகொடுப்பது என்பது தவிர்க்கமுடியாதது என்பதே இருவருடைய கொள்கைகளும்.

இந்த மக்கள் விரோத பாசிஸ கொள்கையைத்தான் ஏழை மக்களுக்கு அவசியம் என்று மக்களிடம் நல்லவனாக நடித்துக்கொண்டே சர்கரையில் நஞ்சை கலந்து ‘’இதுதான் வல்லரசு இந்தியாவின் சுதந்திரத்தின தேசிய இனிப்பு’’ என்று ராகுல், அரசியல் அறிவற்ற மக்களிடம் வழங்குகின்றார். மக்களும் நண்பன் யார் துரோகி யார் என்று அறியாது ராகுல் போன்ற துரோகிகளை, ’மகராசன் நல்லாயிருக்கனும்!’ என்று வாழ்த்துகின்றனர்.

ஏழைஎளிய சாமானிய மக்களுக்கு எவ்வாறு துரோகமிழைக்கலாம் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவே இவரது சுற்றுப்பயணம். மாறாக அவர்களை முன்னேற்றுவதற்கு அல்ல. சாமானிய மக்களிடம் இத்துரோகிகளை அம்பலப்படுத்தி, அவர்கள் புரட்சிகர இயக்கங்களின் பின்னே அணிதிரள அவர்களை வென்றெடுப்பது நமது கடமையாகும்.

3 thoughts on “மற்றுமொரு துரோகி உலா வருகிறான்

  1. ///மக்களை வறுமையில் தள்ளி ஒழித்துக்கட்டுவதன் மூலம் முதலாளிகளின் இந்தியாவை வேகமாக முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்பதுதான் மன்மோகனின் பொருளாதாரக் கொள்கை.///

    உங்களுடைய எழுத்து நடை இயல்பாக இருக்கிறது தொடர்ந்து பதிவுகளை இடுங்கள்

  2. நீங்கள் ராகுலை புரிந்துகொல்ல(!)வில்லை. சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான். இந்தியா முன்னேற ஏழைகள் முக்கியம்.அதுனாலதான் ஏழைகளின் எண்ணிக்கையை முன்னேத்துற(ஏழைகளின் வாழ்க்கைய இல்ல)மன்மோகன் சிங் இந்தியாவுக்கு முக்கியம்.

    1. சரியாகச் சொன்னீர்கள் வானம்.. எல்லோரும் பணக்காரர்களாகிவிட்டால் வேலை செய்ய எப்படி ஆள் கிடைக்கும்? அதனால் இந்தியாமட்டுமல்ல. உலகமே முன்னேற ஏழைகள் நிறைய பெருகவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s