பேராண்மை

பேராண்மை  துருவன்: நவீனத்துவ சந்தேகவாதப் போராளி!

பேராண்மை-யை ஆதரிப்பதா? கூடாதா? இக்கேள்வியானது படம் பார்த்து முடித்த பலருக்கும் உடனடியாகத் தோன்றியிருக்கலாம். அல்லது படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு குழப்பத்தில் மனநிலையைச் செல்லவைத்திருக்கலாம். இந்தக் கேள்வியே படத்தை சரியாக பார்க்கவிடாமல் மனதைக் குழப்பிவிட்டிருக்கலாம் இன்னும் இரண்டையுமே மனதார ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கலாம்.

— சூரியப்பிரதமண். தொடர்ந்து படிக்க

பேராண்மையின் பேருண்மை : மசாலா
ஹாலிவுட் ஆக்ஷன் படங்களை இந்தியில் அதிரடிப் படங்களாக உருமாற்றம் செய்தபோது அப்படங்களுக்கு இடப்பட்ட பெயர்தான் மசாலாப் படங்கள். எனினும், கரம்மசாலா எனும் காரவகைக்குத்தான் இந்தியில் பெயரைப் பயன்படுத்தினார்களே தவிர சுவீட்மசாலா எனப்படும் இனிப்புவகைப்படங்களுக்கு அந்தப் பெயர்….
–குருசாமி மயில்வாகனன்
தொடர்ந்து படிக்க

2 thoughts on “பேராண்மை

 1. பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை கூறினார் தமிழ் சினிமாவை விமர்சிப்பது யென்பது “சிரங்கை சொறிந்து கொடுப்பதற்கு ஒப்பானது என்று”. உண்மை தான்.
  ஜனநாதன் ஏற்கனவே இயக்கிய இயற்கை மற்றும் ஈ போன்ற திரைப்படங்கள் முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவு மக்களை மையப்படுத்தியே எடுத்திருந்தார். எனவே பேராண்மை படத்தையும் நாம் இவ்விடத்திலிருந்தே அணுகவேண்டியிருக்கிறது.
  அந்த வகையில் ஒரு சிற‌ப்பான விமர்சனமாக சூரியப்பிரதமனின் விமர்சனம் அமைந்திருந்தது.
  //பழங்குடி இனத்தவரான துருவனை நாயகனாகப் பார்த்தவுடனேயே கமலஹாசனின் பாதி உயிர் நின்றிருக்கும்//
  கமலஹாசனுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியாமில்லை. இன்னும் சொல்லப்போனால் கமலை பொருட்படுத்தவே தேவைஇல்லை.
  // பாளையக்காரர்களாக இருந்தாலும் வெள்ளைப் பரங்கியரை வெளியேற்ற மக்களோடு மக்கள் வழிநடந்த கட்டபொம்மன், மருதுவீரர்களை மனதில்கொண்டு.//
  கட்டபொம்முவும், மருதுவும் மக்களுகாக போராடினார்கள் என்று ஒரு பிரமையை எற்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. இவர்களின் போராட்டம் யென்பது ஆட்சி அதிகாரம் தங்களின் கை நழுவி போயிடக்கூடாது என்பதற்காகவே. மற்றபடி மக்களுக்கானது என்பதெல்லாம் சப்பைக்கட்டு.
  // பேராண்மையின் நிலைப்பாடாக நாம் கொள்ளவேண்டியது இதைத்தான். துருவனை நாம் மார்க்சீயவாதியாகக் கொள்ளமுடியாதுதான் இலங்கை அரசுக்குத் துணைபோன இந்திய அரசை எதிர்க்கவில்லை//
  இலங்கை அரசுக்குத் துணைபோன இந்திய அரசை எதிர்த்தால் அவன் மார்க்ஸீயவதியா? மார்க்ஸீயவாதியாக மாறுவதற்கு இவ்வளவு எளிமையான வரைமுறையா? சிரிப்புதான் வருகிறது.

 2. மறுமொழிக்கு நன்றி யோகேஷ்…
  //கமலஹாசனுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியாமில்லை. இன்னும் சொல்லப்போனால் கமலை பொருட்படுத்தவே தேவைஇல்லை.//
  தருணம் அப்படி…
  பேராண்மையும், கமலின் சூப்பர் அந்தஸ்தும் ஒரே காலங்கள். அதனாலேயே அவர் முக்கியத்துவம் பெறுகிறார்.

  //கட்டபொம்முவும், மருதுவும் மக்களுகாக போராடினார்கள் என்று ஒரு பிரமையை எற்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. இவர்களின் போராட்டம் யென்பது ஆட்சி அதிகாரம் தங்களின் கை நழுவி போயிடக்கூடாது என்பதற்காகவே. மற்றபடி மக்களுக்கானது என்பதெல்லாம் சப்பைக்கட்டு.//

  இந்தவாதம் தவறானது… ஆட்சியதிகரப் பற்று உள்ளவர்கள் அல்ல… அவர்கள்., ஆட்சிக்காக வெள்ளையர்களிடம் துரோகிகளாக மாறியிருக்கலாமே! ஏன் மக்களை ஒன்றுபடுத்தி போராடி உயிர்த்தியாகமும் செய்யவேண்டும்???

  //இலங்கை அரசுக்குத் துணைபோன இந்திய அரசை எதிர்த்தால் அவன் மார்க்ஸீயவதியா? மார்க்ஸீயவாதியாக மாறுவதற்கு இவ்வளவு எளிமையான வரைமுறையா? சிரிப்புதான் வருகிறது.//

  மறுபடியும் சொல்வது இதைத்தான்… படம் வெளிவந்திருக்கும் காலம், ஈழத்திற்கு இந்திய இழைத்த துரோகம், அதுவும் இந்தியஅரசை மெய்ச்சும் துருவனுக்காக எழுதப்பட்டது…
  ஏன் துருவனான மார்க்சீயவாதி இந்திய தேசியத்தை எதிர்க்க கூடாத என்ன? நீங்கள் சொல்வதுதான் சிரிப்பாக உள்ளது… (அது பேராண்மை என்ற தமிழ் சினிமாவின் விமர்சனம், மார்க்சியவாத விளக்க கட்டுரை அல்ல)…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s