நித்யானந்தா: அம்பலமாகும் ஆன்மீகம்

நித்யானந்தா: அம்பலமாகும் ஆன்மீகம்

தனது கவர்ச்சிகரமான பேச்சுத் திறமையைக் குறைந்தபட்ச மூலதனமாகவும், துதி பாடும் ஊடகங்களின் வியாபாரக் குணத்தை அதிகபட்ச மூலதனமாகவும் கொண்டு 2010 பிப்ரவரி 28 வரை தனது எல்லாவிதமான மகிமைகளோடும், புகழோடும், கீர்த்தியோடும், கடந்த இருபது வருடங்களாகப் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மிகவும் பிரபலமடைந்திருந்த, இளம் வயதில் காவி கட்டிய, இந்து ஆன்மீகத் துறவி ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள், நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக மார்ச்-2-ந் தேதியன்று வீடியோப் படங்கள் வெளிவந்ததின் காரணமாக

குருசாமிமயில்வாகனன்

தொடர்ந்து படிக்க

Advertisements

4 thoughts on “நித்யானந்தா: அம்பலமாகும் ஆன்மீகம்

  1. குறிப்பிட்ட காலம் இடைவெளிவிட்டு சாமியார்கள் அம்பலமாவதும் அதனால் பக்தர்கள் கொதிப்பதும் பின்பு தணிவது என்பதும் வழமையாகிவிட்ட நிகழ்வுகளில் ஒன்று. இங்கு பக்தன், சாமியார்கள் பாலியல்ரீதியாக அம்பலமாகும் பொழுதுமட்டுமே உணர்ச்சிகொள்கின்றான்.
    பக்தன் இப்பொழுதுதான் சாமியார்களைப் பற்றி முதன்முதலாக தெரிந்துகொள்கிறானா? இல்லை. சாமியார்களைப் பற்றிய மதிப்பீடு பக்தன் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான். பக்தனும் அம்மோசடிகளின் கலவைதான். இங்கு நித்யானந்தாவின் பள்ளியறை லீலைகள்கூட கிசுகிசுவாக வெளிப்பட்டிருந்தால் பக்தனுக்கு கவலையில்லை. பதறியிருக்கமாட்டான். அதை ரசித்திருப்பான். பகிரங்கமாக சன் டிவியில் வெளிப்பட்டதுதான் பிரச்சினை. சாமியார்களின் ஏமாற்று,பொய்,பித்தலாட்டம், போன்ற மோசடிகள் தெரிந்திருந்தும் பக்தன் ஆவேசம் கொள்வதில்லை. பதறுவதுமில்லை,கோபப்படுவதும் இல்லை. காலில் விழுவதும் தொடர்கிறது. ஏனென்றால் இன்றைய சமூகமே இம்மோசடிகளால் நிறைந்தவைதான். எனவே இதனால் பக்தனுக்கும் பிரச்சினையில்லை. பாலியல் ரீதியாக சாமியார்கள் அம்பலமாகும்போதும் கூட தான் இதுகாறும் நம்பியிருந்தது ஒரு ஸ்திரீலோலனைத்தானா என்று பதறுவதில்லை. ஒரு ஆணும் பென்ணும் பேசிக்கொண்டிருப்பதையே (அது எந்த வயதினராயினும் சரியே) பாலியல் குற்றமாக கருதுகிற இச்சமூகத்தில, சாமியாரின் காலில் விழுந்ததன் மூலம் தன்னைப் பற்றிய மதிப்பீடுகள் சரிந்துவிடுமே என்ற கவலைதான் பக்தனை சாருவைப் போல அவசரவசரமாக கல்லெறிய வைக்கிறது. கல்லெறிந்த கையுடன் நக்கீரன் தளத்தில் நித்யானந்தாவின் வீடியோப் பதிவை தனியறையில் பார்ப்பதிலிருந்து பக்தனின் ஆவேசத்தைப் புரிந்துகொள்ளமுடியும். ஒருவேளை பாலியல் தவறுகளை இச்சமூகம் செறித்துக்கொண்டால் சாமியார்களுக்கும் பிரச்சினையில்லை பக்தர்களுக்கும் பிரச்சினையில்லை. ஏனென்றால் முதலாளித்துவம்தான் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் எல்லா ஒழுக்க்க்கேடுகளையும் நியாயப்படுத்துகிறதே.

  2. விரல் தேய நீர் கட்டுரை பிரசுரித்தாலும், மத வெறியில் தோய்ந்து மதி தேய்ந்த சமூகம் மற்றுமொரு நித்தியானந்த‌ நகலோடு பிரசங்க சாக்கடையில் மூழ்கி காலம் கழிப்பது இயல்பே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s