யார் நமது தலைவர்?

தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், புதுவை மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தலைவர்கள் யார்?, தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் திடமான கொள்கைகளும் பிரச்சாரங்களும் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைவர் என்பவர் எப்படி இருப்பார்?

பொதுவுடமைப் பாதையில் உள்ள தலைவர்:

இவர், தன் தனிப்பட்ட நலன் என்பதும் சமூக மக்களின் நலத்துடன் பிணைக்கப்பட்டதொன்று என்பதை புரிந்துகொண்டு முதலில் ஒரு சமூகத் தொண்டனாக மக்களின் நலனுக்காக மக்களிடையே பணியாற்றுகிறார். அதன் வழியே தன்னுடன் பலரையும் இணைத்துக்கொண்டு பணியாற்ற முயற்சிக்கிறார். பிற தோழர்கள் மத்தியில் மக்களுக்கான பணியாற்றுவதில் சளைக்காமல் முதன்மையானவராக பணியாற்றுகிறார். அதன் வெற்றி அவரை அக்குழுவிற்கு தலைவராக்குகிறது. சமூகத்துடனான பிரச்சனைகளின் பரிமாணங்களைப் புரிந்துகொண்டு அவர் தீர்வுகளை முன்வைப்பதால் மக்களும் அவரின் தலைமைப் பொறுப்பை அங்கீகரிக்கின்றனர். அவர் தனது பணியை விரிந்த பரப்புக்குள் நாடுமுழுவதும் செயலாற்றும்போது ஒரு தேசிய தலைவராகுகிறார்.

இவரது மூலதனம் சமூகப்பணி. இவருக்கான இலாபம் சமூக நலன், மக்களின் மகிழ்சியான வாழ்வு.

முதலாளித்துவ பாதையில் உள்ள தலைவர்:

ஒரு ஜமீன்தாரராக, பெரும் பணக்காரராக, ஆலையின் முதலாளியாக, அல்லது ஏதுமற்றவராக இருந்தாலும் இவர்களின் பிரதிநிதியாக இருப்பார். இவர்களுக்கு மக்களின் நலன் என்ன என்பதுப் பற்றி அக்கரையில்லை. இவர்கள் எந்த மக்களிடையேயும் மக்கள் நலன் பணியில் பணியாற்றியதில்லை. ஏதுமற்றவராக இருந்தாலும் முதலாளிகளின் பிரதிநிதியாக இருப்பதால் முதலாளிகளின் நலனையே மக்களின் நலன் என்று கூறுவார். இலவசங்கள் போதும். அது மக்களை வாழவைக்கும் என்று அதிகார திமிரில் இருப்பார்.

இவர்களின் மூலதனம் பணம். அவர்களது இலாபமும் பணம். இந்தப் பணம் என்பது இவர்களுக்கான அதிகாரத்தையும் சொகுசான வாழ்க்கையை வழங்குவதாகும்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s