4 மனைவிகள்- சரியத் சட்டமும் பெண்ணுரிமைகளும்

ஒரு ஆண் 4 பெண்களை ஒரே நேரத்தில். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இசுலாமியச் சட்டம் உள்ளது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்வதை இன்று ஒருபோதும் விரும்புவது இல்லை. பெண்ணின் விருப்பம் ஒரு பக்கமிருக்க ஒரு தந்தையாக, சகோதரனாக. மகனாக உள்ள ஆண்கூட தன் மகளுடைய, சகோதரிவுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பதை இன்று நிச்சயமாக விரும்புவதில்லை. தன் தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்வதை தன் தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்று உணர்கிறான். நடைமுறையில் சமூக இழுக்காகமாறி வழக்கொழிந்து வரும் இச்சட்டத்திற்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அது இன்றைய சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு பக்கபலமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் இச்சட்டத்தில் மாறுதல் தேவை என்பது மறுக்க முடியாததாக உள்ளது.

தொடர்ந்து படிக்க

–சாகித்

13 thoughts on “4 மனைவிகள்- சரியத் சட்டமும் பெண்ணுரிமைகளும்

 1. // சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் போய் பாருங்கள். இரண்டு பெட்டாட்டிகாரர்கள்தான் நிறையபேர் நிற்பர். பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனையில் உடலுறவு கொள்ளும்போது உறுப்பில் ஏற்படும் வலி என்பதைத் தவிர சிட்டுக்குருவி லேகியம் என்ற பிரச்சினையே இல்லை இதனை எளிதில் மருத்துவம் செய்துகொண்டு தீர்துதுவிடலாம். எங்கேயாவது சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் பெண்கள் மருத்தவம் செய்து கொள்வதை பார்த்துள்ளீர்களா? அல்லது சிட்டுக்குருவி லேகிய பெண் மருத்துவரைத்தான் பார்த்துள்ளீர்களா? ஆண்மைக் குறைவுக்கான விளம்பரத்தை பார்க்கும் நீங்கள் பெண்மைக்குறைவுக்கான விளம்பரத்தைப் பார்த்ததுண்டா?//
  சிறப்பான பதிவு
  மிகச் சிறப்பான தர்க்கங்கள்.

  //ஆணுக்குத்தான் காம “சக்கி” கூடுதலாம்//

  இங்கு சக்கி என்பதென்ன ? “சக்தியா” வேறெதுவும் பொருள் தரும் சொல்லா

 2. //ஒழுக்கத்தில் சிறந்தவர் ஆணா பெண்ணா எனும்போது பெண்கள்தான் கண்டதையும் பார்த்து காமவெறிபிடித்து சீரழிந்து போகிறார்கள் என்று கூறுகிறார்கள். //

  யார் கூறுகிறார்கள், நீங்களா? சும்மா காமெடி பண்ணாதீங்க சார்.

  //பெண்கள்தான் சைத்தான்கள். ஆண்களை மயக்கி இச்சையைத் தூண்டி கெடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.//

  அப்போ பெண்களை பார்த்து ஆண்கள் கிளர்ச்சி அடைவதில்லையா? பரவால்லையே, அப்புறம் ஏன் சார் சினிமாவில் பெண்கள் மட்டும் கவர்ச்சி காட்டுகிறார்கள், ஆனால் ஆண்கள் மட்டும் மூடிக்கொண்டு வருகிறார்கள்? அட போங்க சார்.

  // அது சரி. மாதவிலக்கு காலங்களில்கூட தனது மணைவிக்காக உடலுறவுகொள்வதை தவிர்க்க முடியாத விலங்கினமா மனிதன்? 4 மனைவி வைத்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாதவர்கள் தனது மனைவியின் மாதவிலக்கு காலங்களில் விபச்சார விடுதிக்கு போகலாம் என்று சட்டம் போட்டுடலாமா?//

  உங்க ஆசை அது தான் என்றால் எதற்கு இஸ்லாத்தை குறை கூறுகிறீர்கள்?

  //
  ‘நான்கு மனைவி என்பது சட்டமல்ல ஒரு விதிவிலக்கு பொருளாதார வசதிக்கேற்பவே செய்து கொள்ள வேண்டும் என்பதே குர்இன் காட்டும் பாதை’ என்று ஹோட்டல் தொழிலாளிகளின் மனைவிகளை அனுபவித்துக் கொலையும் செய்த இராஜகோபாலன் என்ற முதலாளியின் செயலை கூறுகிறது //

  தன்னுடைய மனைவியுடன் மட்டுமே இன்பம் சுவைக்க இஸ்லாம் அறிவுத்துகிறது, யாருடைய மனைவியுடன் வேண்டுமானாலும் இன்பம் அனுபவிக்கலாம் என்று கூறவில்லை. உங்கள் கூற்றின் படி ஒருத்தியுடன் இன்பம் அனுபவிக்க அவள் “மனைவி” என்ற அந்தஸ்து பெற்றிருந்தால் போதும், அவள் யாருடைய மனைவியா இருந்தாலும் இன்பம் அனுபவிக்கலாம், அப்படியா?

  எழுதுவதற்கு முன் “நன்றாக” யோசிச்சு எழுதுங்க சார்.

  //
  இதைப்போல சம உரிமை என்று பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இசுலாமியர்கள் கூறும் சப்பைக்கட்டுகள்.

  “பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்று அடையாளம் காண முடியாது.’

  மரபணு தொழில் நுட்பம் இன்று எளிமையாகிவிட்டதால் இதுவரை ~தகப்பன் யார்~ என்று எப்படிக் கூறுவது என்று அலறிக் கொண்டிருந்தவர்களின் குரல் சுருதி குறைந்து டொய்ங்…. என்று இழுக்க ஆரம்பித்துள்ளது
  //

  தயவுசெய்து தப்பா நினைக்காதீங்க, உங்களுக்கு புரிவதற்காக மட்டுமே கேட்கிறேன். ஒரு பெண் நான்கு ஆண்களை மணந்து கொள்கிறாள், அந்த நான்கு ஆண்களும் ஒரே நேரத்தில் இன்பம் துய்க்க விரும்பினால் அப்பெண்ணின் நிலை எவ்வாறு இருக்கும்? இந்த வினா நான்கு பெண்களை மணந்த ஆண்கள் விஷயத்தில் எழுவது இல்லை, ஏனெனில், பெண் ஆண்களை போல் உடல் சுகத்திற்க்காக அலைபவள் இல்லை.
  மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து தப்பா நினைக்காதீங்க.

  //
  அனாதை ஆசிரமத்திற்கு செல்வோம். தாய், தகப்பன் யார் என்று கூடத் தெரியாத இலட்சக்கணக்கான பிள்ளைகள். இவர்கள் வளரவில்லையா, படிக்கவில்லையா, சமூகத்தில் வாழவில்லையா? தகப்பன் பெயர் இவர்களுக்கு எதற்கு?
  //
  அதற்காக எல்லோரையும் அப்பன் பேர் அநாதை ஆசிரமத்தில் தெரியாதவர்களாக இருக்க சொல்லுகிறீங்களா, எனக்கு புரியவில்லை.

  //

  அதனல் இசுலாமியப் பெண்களே! உங்கள் கணவர் பிற ஒரு திருமணம் செய்துகொள்ள அனுமதிக்காதீர்கள். அதற்கு நபிவழி நிகழ்சியே உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. பலதாரமணச் சட்டத்தை எதிர்ப்பீர். புகாரி அவர்கள் சொல்வதுபோல தன்மானத்துடன் வாழ்வீர்!
  //

  சார், ஒன்னு நல்லா புரிஞ்சிகோங்க, இஸ்லாத்தில் மறுதாரமணத்திற்கு, முதல்தார மனைவியின் அனுமதி கண்டிப்பாக தேவை. சும்மா நீங்களும் குழம்பி எல்லாரையும் குழப்பாதீர்கள்.

  //
  விவாதத்திற்காக வரட்டுத்தனமாக ஆதரிக்கும் பல ஆண்கள்கூட உண்மையில் 4 திருமணைம் செய்துகொள்ள விரும்புவதில்லை. //

  இஸலாம் மறுதார மணத்திற்கு ஒருசில விதிமுறைகளுடன் அனுமதி மட்டுமே அளித்த்திருக்கிறது, கட்டாயமல்ல. யாருக்கெல்லாம் மறுதார மணம் செய்ய அனுமதி உள்ளது என்று தகுந்த இஸ்லாமிய நூல்களை படித்து தெரிந்துகொள்ளவும், அல்லது உங்கள் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசலின் இமாமிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

 3. // அதாவது நான்கு மனைவி என்பது பணக்காரனாகவும் காம இச்சைக் கூடுதலாகவும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருள். //

  சார், நான் ஒன்னு சும்மா விதண்டா வாதத்துக்கு கேக்குறேன், ஒரு பெண்ணை ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணும்போது எதை பார்த்து பெண் வீட்டார்கள் முடிவு செய்கிறார்கள்? அவன் நல்லவனா, அவனுக்கு வசதி இருக்கிறதா, தன் குடும்பத்தை கவனித்துகொள்ளும் அளவிற்கு சம்பாதிக்கிறானா, இதை தான சார் பாக்குறாங்க. அத தான சார் இங்க சொல்லுறாங்க, நாலு பேர கல்யாணம் பண்ணனுமா, முதலில் அதற்கான காரணம், பின் முந்திய தாரத்தின் அனுமதி, பின் நாலு பேரையும் அவர்களின் பிள்ளைகளையும் கவனித்து கொள்ளும் அளவிற்கு பொருளாதார பலம் இருக்கா (பச்சயா சொன்னா, ஒருத்தியையே வைச்சு ஒழுங்கா கஞ்சி ஊத்த முடியாதவனுக்கு இன்னொன்னு கேக்குதா?), இதை தான சார் பாக்க சொல்லுறாங்க, தப்பா?

 4. // அது சரி. மாதவிலக்கு காலங்களில்கூட தனது மணைவிக்காக உடலுறவுகொள்வதை தவிர்க்க முடியாத விலங்கினமா மனிதன்? 4 மனைவி வைத்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாதவர்கள் தனது மனைவியின் மாதவிலக்கு காலங்களில் விபச்சார விடுதிக்கு போகலாம் என்று சட்டம் போட்டுடலாமா?//

  உங்க ஆசை அது தான் என்றால் எதற்கு இஸ்லாத்தை குறை கூறுகிறீர்கள்?

  அதான் ஏற்கனவே மும்பைல சட்டம் போட்டுட்டாங்களே, இனிமே புதுசா வேற போடணுமா? அப்ப, அங்க உள்ளவுங்கள்லாம் (உங்கள் கருத்துப்படி) விலங்கினமா? அதுக்குதான் கவெர்மேன்ட்ல அங்க மட்டும் விபச்சாரத்திற்கு அனுமதி குடுத்திருக்கங்களா? போங்க சார், வேற எதை பத்தியாச்சும், எழுதுங்க. சும்மா ஹிட்டுக்காக எதாச்சும் தத்துபித்துன்னு எழுதாதீங்க..

 5. //அதாவது நான்கு மனைவி என்பது பணக்காரனாகவும் காம இச்சைக் கூடுதலாகவும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருள்.
  //
  // அது சரி. மாதவிலக்கு காலங்களில்கூட தனது மணைவிக்காக உடலுறவுகொள்வதை தவிர்க்க முடியாத விலங்கினமா மனிதன்? 4 மனைவி வைத்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாதவர்கள் தனது மனைவியின் மாதவிலக்கு காலங்களில் விபச்சார விடுதிக்கு போகலாம் என்று சட்டம் போட்டுடலாமா?//

  “அங்க” போனாலும் காசு வேணுமே, அப்ப காசில்லாதவுங்கல்லாம் இளிச்சவாயர்களானு கேப்பிங்களா? அப்ப “அங்க” போவது காசுள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருளா?

 6. “அங்க” போனாலும் காசு வேணுமே, அப்ப காசில்லாதவுங்கல்லாம் இளிச்சவாயர்களானு கேப்பிங்களா? அப்ப “அங்க” போவது காசுள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருளா?

  அங்க போயி அப்புடி காச செலவு பண்றதுக்கு பதிலாக, யாருக்கு அனுமதி இருக்கிறதோ அவர்கள், இன்னொரு பெண்ணை மணந்து முறைப்படி வாழலாமே. மேற்சொன்ன விபச்சாரியின் நிலையைவிட நிச்சயம் இப்பெண்ணின் நிலை பலமடங்கு உயர்ந்ததாகவே இருக்கும். இதிலென்ன தப்பு?

 7. ஆண்களை பொறுத்தவரை ரெண்டு option தான் சார் இருக்கு. ஒன்னு, அடங்கி ஒருத்தியோட வாழு. இல்லையா, அனுமதி இருக்கும் பட்சத்தில் இன்னொருத்திய முறைப்படி கல்யாணம் பண்ணிக்க. அத விட்டுட்டு நான் ரெண்டாம் கல்யாணமெல்லாம் பண்ணமாட்டேன்னு சும்மா சொல்லிக்கிட்டு இன்னொரு பொண்ணோட திருட்டுத்தனமா குடும்பம் நடத்தி அவளோட வாழ்கையை கெடுக்காதே. அத தான் சார் இஸ்லாத்தில சொல்றாங்க. முறைப்படி ரெண்டாம் திருமணம் செய்ய அனுமதி கொடுக்கலேனா, என்ன பண்றாங்கன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதன் பின்விளைவே மும்பை போன்ற இடங்களில் அரசு அனுமதியுடன் விபச்சாரம். மறுதார அனுமதி இருந்தால் அவன் ஏன் சார் அங்கெல்லாம் போயி அவனும் சீரழிஞ்சு, இன்னொரு பொண்ணோட (விபச்சாரியோட, அவளும் ஒரு பெண் தானே ) வாழ்க்கையையும் சீரழிக்க போறான்?

   1. ஏற்கனவே பதில் சொல்லியாச்சு சார்.
    //தயவுசெய்து தப்பா நினைக்காதீங்க, உங்களுக்கு புரிவதற்காக மட்டுமே கேட்கிறேன். ஒரு பெண் நான்கு ஆண்களை மணந்து கொள்கிறாள், அந்த நான்கு ஆண்களும் ஒரே நேரத்தில் இன்பம் துய்க்க விரும்பினால் அப்பெண்ணின் நிலை எவ்வாறு இருக்கும்? இந்த வினா நான்கு பெண்களை மணந்த ஆண்கள் விஷயத்தில் எழுவது இல்லை, ஏனெனில், பெண் ஆண்களை போல் உடல் சுகத்திற்க்காக அலைபவள் இல்லை.
    மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து தப்பா நினைக்காதீங்க. //

    இன்னும் பச்சையா சொல்லவா, என்னடா இவன் இப்படியெல்லாம் கேக்குறானேன்னு தயவுசெய்து தப்பா நினைக்காதீங்க. உங்கள் ஆசைப்படி அப்படி ஒரு அனுமதி கொடுத்தால் என்னவாகும்? அந்த நான்கு ஆண்களும் ஒரே நேரத்தில் இன்பம் துய்க்க விரும்பினால், என்ன செய்ய இயலும்? அந்த நால்வருக்கிடையில் மல்யுத்த போட்டியா நடத்தி தேர்தெடுக்க முடியும்? SEX க்காக சில ஆண்கள் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அப்படி அவர்களுக்குள் யார் முந்துவது என்று சண்டை ஏற்பட்டால் விளைவு?

    அனுமதி தருவது முக்கியமில்லை சார், அந்த அனுமதி சமூகத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்ந்து அனுமதி தரனும் சார், அது தான் முக்கியம்.

    1. இதே பிரச்சினை ஆண்களுக்கு இல்லையா என நீங்கள் கேட்கலாம். இன்றும் இவ்வுலகத்தில் பலதார மணம் செய்தும் SEX காக மனைவிகளுக்குள் போட்டியில்லை என்பதே இதற்க்கான விடை.

     1. ஏன் இஸ்லாத்தில் பலதார மண முறை வந்தது என்பதற்கு தாங்கள் சொல்லும் பதில் சரியானது இல்லை சகா. அது ஏன் வந்தது என்பதை வரலாற்றுக் காரணங்களோடு ஒரு பதிவில் சந்திக்கின்றேன். நீங்கள் சொல்வது ஆண்களின் இன்பம் துய்க்கவோ, அல்லது பெண்களின் இன்பத்தை ஈடு செய்யவோ இல்லை………….. !!! வேண்டுமென்றால் உங்கள் அருகில் இருக்கும் ஜமாத் பெரியவர் ஒருவரிடம் இதுக் குறித்துக் கேட்டுப் பாருங்கள் நல்லதொரு பதில் கிடைக்கும் பாஸ் !!! உங்களின் பேச்சை விடவும் உங்களின் சிந்தனை இன்னும் பச்சையாக இருக்கின்றது, கொஞ்சம் அவித்து படையலாக்கி பாருங்கள் புலப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s