கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டத்தில்  உள்ள ஊர் சிறுநெசலூர். இவ்வூரில் உள்ள அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்.1926-ல் வெள்ளையன் ஆட்சியிலேயே போராடி தொடக்கப்பள்ளியை கொண்டு வந்தார்கள் இவ்வூர்மக்கள்.இதனால் இவ்வூரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள்,ஆசிரியர்கள்,நூற்றுக்கும் மேற்பட்டபட்டதாரிகள் உள்ளனர்.2006 தேசியநெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தபோது,சாலையின் கீழ்ப்புறம் ஊரும்,மேற்புறம்பள்ளியும் இரண்டாக துண்டாடப்பட்டது. இவ்வூர் மக்களின் மேம்பால கோரிக்கையை நிராகரித்த தேசியநெடுச்சாலை துறையினரை தமது அலட்சியத்தின் மூலம் மாநில அரசு அதிகாரிகளும் ஆதரித்ததால்,தொடக்கப்பள்ளி பாழடைந்து போனது….

தொடர்ந்து படிக்க

Advertisements

One thought on “கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை

  1. “சமச்சீர்”

    கல்வி “பலமாதிரி” களில் புகட்டப்பட்டும் திணிக்கப்பட்டும் கடைவிரிக்கப்பட்டும் வருவது நடப்பில் அறிவுபெற்றவர் அறிவர்.முதலில் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்றனர்.பின்பு வேலையில்லா நிலை கண்டதும் தொழிற்கல்வி பற்றி எழுதி பக்கம் நிரப்பினர்.பின்பு தாராளமாயம் உலகமயம் என்ற பதம் திணிக்கப்பட்டபோது உலகின் வேகத்திற்கு ஈடு கொடுக்கவும் கல்வியின் உலகத்தரம் பற்றி ஊடக பத்திகளில் பேசினர்.பயன் சற்று இருப்பினும் அனைவருக்கும் இலவசக்கல்வி என்ற பம்மாத்து அரசியல்வாதிகளால் ஓட்டுப்பொறிக்கிகளால் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு இன மத தேச கல்வியும் தன் தேசியத்தை கட்டியமைக்க இட்டுக்கட்டப்பட்டது எனில் மிகையாகாது.தன்மக்களை தனது பூகோளத்திற்கு எந்த ஆபத்தும் தாக்கமும் இல்லாமல் இருக்கவும் வடிவிக்கப்பட்டு மக்களை தனக்கு அவர்களை அறியாமலே அடிமைப்படுத்த விஞ்ஞானம் தொழில்நுட்பம் என்ற பதத்தில் உட்செலுத்தி அதற்கேற்றார்போல் மக்களை மாக்களாக தயாரிக்க திட்டமிட்டு அதனில் வெற்றியும் கண்டுவிட்டனர்.ஆக இன்றைய மக்களால் கொண்டாடப்படும் கல்வி புவியை துண்டாட கருத்துகுருடர்களான கபோதிகளால் பரப்பப்பட்டுவிட்டது.இயற்கையை அறியாத அதனிலிருந்து சிந்தனை பெறாத எக்கல்வியும் மானுடம் தழைக்க உதவாது.மாறாக ஏற்றத் தாழ்வை மேலும் விசாலமாக்கும் என்பதில் மறுப்பதற்கில்லை.ஆகவே மனித சிந்தனைக்கும் அனைத்துலக சமுக போக்கிற்கும் ஏற்றாற்போல் கல்வியை ஒற்றைக் குடையின் கீழ் கொணர வடிவமைப்பது கல்வியாளர்களின் கடமையாகும்.இறுதியாக “சமச்சீர்” அதன் எதிர்ப்பு எல்லாம் ஊடக நாடகமேயாகும்.மக்கள் உஷார்..,
    quranist@aol.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s