மேற்கோள்கள்

ஒரு கத்தோலிக்க குருவின் மரணசாசனம்.       

    ஜீன் மெஸ்லியரின் மரணசாசனம் எல்லாம், கிறித்து மதத்திற்கு மட்டுமல்ல. எல்லா மதங்களுக்கும் பொருத்தமானவைகளாகும். ஜீன் மெஸ்லியர் ஆத்திக குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, ஆத்திகத்தின் ஆணிவேராக இருந்து, ஆத்திகத்தை பிறருக்கு ஊட்டியவர். அதன் பிறகு தனது தவறுகளை உணர்ந்து, மத நம்பிக்கையை விட்டு, மனித மன உணர்ச்சி எழிச்சியடைந்து சாகுந்தறுவாயில் தன் மனசாட்சி உறுத்த, மனதில் தோன்றிய உண்மைகளை கொட்டிய பெரியார் ஜீன் மெஸ்லியர். தனது தவறுகளை உணர்ந்து அவைகளை ஒப்புக் கொள்பவனே மனிதன். தான் செய்த தவறுகளுக்கு தத்துவார்த்த விளக்கம் கூறித் திருப்திபடுகிறவன் பிறரை ஏமாற்றுபவன் என்பதோடு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்பவனும் ஆவான்.

        இனி அவரது கூற்றுகளைப் பாரப்போம்.

1, அற்புதங்கள் கட்டுக்கதையே.

        கடவுள் அருளிய வேதங்களில் அறிவையோ, நலத்தையோ, நீதியையோ காணமுடிவதில்லை. ஆகவே கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே நிற்கும் பாதிரிமார் சொல்லுவதெல்லாம் வெறும் புரட்டு என்றால் கடவுள் செய்த அற்புதங்களைச் சுட்டிக்காட்டி ‘வேதங்கள் கடவுள் வார்த்தைகள்’ என்று உண்மைப்படுத்த பாதிரிமார் முயல்கிறார்கள்.  ஆனால் வேதங்கள் கடவுள் வார்த்தைகள் என நிருபிக்க கடவுள் ஏன் அற்புதங்களைச் செய்ய வேண்டும்? கடவுளே நேருக்கு நேர் நான் தான் வேதங்களை அருளினேன் என்று ஏன் சொல்லலாகாது? அற்புதங்களை ஆராய்ந்து பார்த்தால், கடுகத்தனையாவது உண்மையைக் காணவில்லை. அசம்பாவிதங்களே அவைகளில் நிறைந்திருக்கின்றன. அற்புதங்கள் எல்லாம் மெய் என்று நம்பினால் யாருக்கு இன்பமோ அவர்களே இந்த அற்புதக் கட்டுக்கதைகளை கட்டியிருக்க வேண்டும். இந்த அற்புதங்கள் உண்மை என்று நிரூபிக்க அழைக்கப்படும் சாட்சிகள் யார்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிரோடு இருந்த பாமரமக்களையே சாட்சிகளாகக்  காட்டுகிரார்கள். அவர்கள் எல்லாம் பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டவர்களே. அற்புதங்கள் எல்லாம் வேதப்புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவை மிகப் பழமையானவை என்றும், எனவே, உண்மையானவை என்றும் மற்றும் சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் அவைகளை வேதங்களில் குறித்து வைத்தது யார்? அந்த அற்புத நூல்கள் அழியாமல் பாதுகாத்து வைத்திருந்தது யார்? இந்த அற்புதக் கட்டுக்கதைகளை உண்டு பண்ணியவர்களே அவைகளை பாதுகாத்து வைத்து நம்மை ஏமாற்றி வருகிறார்கள். எனவே மத விஷயங்களில் மதங்களால் வயிறு பிழைக்கும் கூட்டத்தாரின் சாட்சியம் ஒப்புக்கொள்ளக்கூடியதே அன்று.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s