மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! -கருத்தரங்கம்

மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! பாடம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்! என்ற தலைப்பின் கீழ் நடைபெறும் கருத்தரங்கிற்கு வருமாறு தோழர்கள் அழைத்திருந்தனர். கருத்தரங்கம் 5.30 மணிக்கு ஆரம்பமாவதாகக் கூறினர். ஆனால், என்னால் அவ்விடத்திற்கு 6 மணியளவில்தான் சென்றடைய முடிந்தது. இருந்தாலும் நிகழ்ச்சி நான் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகுதான் ஆரம்பமானது. அரங்கில் சுமார் 25 பெண் தொழிலாளர்கள் உட்பட 300 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் தோழர். லோகநாதன் என்பவர் மாருதி கார் தொழிலாளர்களின் போராட்டத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தலைமையுரையாற்றி கருத்தரங்கை துவக்கம் செய்தார்.. பின்னர் மாருதி தொழிலாளர்களின் போராட்டம்,  வால்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் பற்றி இணையத்தில் எடுத்த வீடியோ பதிவுகள் காண்பிக்கப்பட்டன. அதைப் பற்றி        தோழர் சுப.தங்கராசு தனது உரையில் விளக்கிப் பேசினார். அவரின் உரையிலிருந்து….

ஒரு ஷிப்டில் சராசரியாக 600 கார்களை உற்பத்தி செய்கின்ற அரியானா மாருதி தொழிலாளர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18% உற்பத்தியை அதிகரித்திருக்கின்றனர்.. தொழிலாளர்கள் மீது, தான் விதித்திருக்கும் நன்னடத்தை விதிகள் மூலமே இந்த பிரம்மிக்கதக்க உற்பத்தி சாத்தியமாவதாக இந்நிறுவனத்தின் மேலாளர் கூறுகிறார். ஆனால் நன்னடத்தை என்ற போர்வையில் தங்களை கொத்தடிமைகளாக்கும்  நிர்வாகத்திற்கு எதிராக அரியானா மாருதி தொழிலாளர்கள்  மானேசரில் தங்களின் போராட்டத்தை தொடங்கினர். பிற நிறுவனங்களில் பணிபுரியும் மற்ற தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து 33 நாட்கள் போர்க்குணத்துடனும் உறுதியுடனும் போராடி வெற்றி பெற்று இருக்கின்றனர். பின்னர் போராட்டத்தின் முன்னனியாளர்கள் 30 பேர் நிர்வாகத்தால் விலை பேசப்பட்டு தங்களின் தகுதிநிலைக்கு ஏற்றார் போல் 30, 20 லட்சங்கள் வாங்கிக்கொண்டு வேலையை விட்டு சென்ற நிகழ்வும் போராட்டம் வெற்றி பெற்ற பின்னர் நடந்திருக்கிறது. இப்போராட்டத்தில் ஒப்பந்த மற்றும் நிரந்தரத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடியதும், மற்ற ஆலைத் தொழிலாளர்களை திரட்டியதும் மேலும் போராடத்திற்கு ஆதரவாக மாணவர்களை திரட்டியதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இங்கு மாருதி தொழிலாளர்களுடன் மற்ற ஆலைத் தொழிலாளர்களும் இணைந்ததானது அந்தந்த ஆலை முதலாளிகளின் நலனையும் பாதிப்பதாக அமைந்தது. இதன் காரணமாக அவர்கள் மாருதி நிர்வாகத்தை விரைவாக பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கின்றனர்..

     அடுத்ததாக அவர் வால்ஸ்ட்ரீட் போராட்டம் பற்றி உரையாற்றினார். அமெரிக்காவில் தொடங்கிய கார்பரேட் முதலாளிகளுக்கு எதிரான வால்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டமும் பல நாடுகளுக்கும் பரவியது. இப்போராட்டத்தில் முதலாளித்துவம் பகுதியளவு தாக்குதலுக்குள்ளானாலும் அதற்கு மாற்றுத் தீர்வு கம்யூனிசம்தான் என்பதை அப்போராட்டக்காரர்கள் அறியவில்லை என்பதினால் அப்போராட்டமானது கார்பரேட் முதலாளிக்கு எதிரானதாக மட்டும் சுருங்கிக்கொண்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் மீதான அவதூறும் பயமுறுத்தலுமே அம்மக்களின் கம்யூனிசம் பற்றிய அறியாமைக்கான காரணங்கள்.. அமெரிக்காவில் பதவியேற்கும் ஒரு செனட் தனது பதவியேற்கும் உறுதிமொழியின் இறுதியில் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல என்று கூறவேண்டும். இதிலிருந்து கம்யூனிசம் மீதான வெறுப்பையும் பய உணர்சியையும் மக்களிடம் எந்த அளவிற்கு புகுத்தியிருப்பார்கள் என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

இவ்விரு போராட்டங்களிலும் இருந்து, உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கமாக ஒன்றினைவதன் மூலம் தங்களது விடுதலையை சாதிக்க முடியும் என்பதையும் அவர்கள் தங்களது நலனைப் பாதுகாக்கும் ஒரு உறுதிமிக்க கம்யூனிச தலைமையின் கீழ் அணிதிரள்வதன் மூலம் தொழிலாள வர்க்கம் இவ்வுலகின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதையும் நமக்குக் கற்றுத் தருகிறது, எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தோழர். கே. லோகநாதன்  பு.ஜ.தொ.மு. உறுப்பினர் நன்றியுரையாற்றினார். கருத்தரங்கின் இடையிடையே புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது. பாடல்களைப் பாடிய தோழர் பிரகாஷின் குரலின் கம்பீரம் புதுவையில் ஒரு புரட்சிப்பாடகர் உருவாவதை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. இறுதியாக தோழர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த போது பிற சங்க தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டதாக கூறிய செய்தி மிகவும் வியக்கத் தக்கதாக இருந்தது.

–கலை

Advertisements

2 thoughts on “மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! -கருத்தரங்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s