கோழிச்சண்டை

கோழிச் சண்டை

எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும்.

அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா?

எவ்வளவு?

500 லிரா.

1000_மாகத் தருகிறோம். நாளை மாலை நடைபெற வேண்டும்.

சுற்றி பாதுகாவலர்களுடன் வேலியிடப்பட்ட அரங்கத்தின் நடுவிவில், திரண்ட தோள்களும் அகன்ற மார்புகளும் உடைய திரேசியனும் கோரு இனத்தினனும் இடைகச்சை மட்டும் கட்டிக் கொண்டு உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து பளபள என்று நின்றிருந்தனர்.

ஆண்டையின் மனதில் எவரொருவரை இழந்தாலும் அடுத்தடுத்த நல்ல சண்டைகளுக்கு தன்னிடமுள்ள இருவரில் ஒருவரை இழக்கப் போகிறோம் என்ற கவலை .

காட்சியினை காண வந்த ரோமானிய கோமான்களின் இளங்காதலர்களுக்கு “சபாஷ் சரியான ஜோடிகள்” என்ற அளவிலா மகிழ்ச்சி.

“நண்பனே, உன்னை நான் கொல்லாவிட்டால் நான் உயிருடன் இருக்க முடியாது, மன்னித்துவிடு தோழா” திரேசியனும் கோரு இனத்தினனும் தங்கள் மனதிற்குள்ளே பேசிக்கொண்டார்கள். இருவர் கைகளிலும் கூர்தீட்டப்பட்ட குத்துவாள்கள்.

அடிமைகளின் அற்புதமான சண்டை அரங்கம் ஆர்பரித்தது.

ஒருகனம்… ஒரே ஒரு வினாடி அந்த இருவரும் பேசிக்கொண்டார்கள். “கோமான்களின் கேளிக்கைக்காக நாம் இருவரும் சாகவேண்டுமா” திசை திரும்பியது விதி.

அந்த முகம் தெரியாத திரேசியனின் எழுச்சியால் அரண்டோடியது அரங்கம். ஐரோப்பியா முழுவதும் எழுச்சி கொண்டது. ஆராயிரம் அடிமைகள் சிலுவையில் அறையப்பட்டார்கள்.

அடுத்த சில நூற்றாண்டுகளில் தாங்கள் விரும்பியோ விரும்பாலோ அவர்களின் மூளை அடிமை என்ற சொல்லையே மறந்தது.

ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் சாதி அடிமைகளாக தொடரும் நம் சமூகம்…

நம்ம சனநாயக அறிவு ஜீவிகளின் போதாமை…

என்ன செய்வது தோழரே! மதம் மக்களிடம் இருக்கிறதே!

ஆம்! இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கற்கால மனிதர்கள் நாம்.

1 thoughts on “கோழிச்சண்டை

  1. பிங்குபாக்: கோழிச்சண்டை – TamilBlogs

பின்னூட்டமொன்றை இடுக