தோழர் லெனின்

நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்

இடம்: சிவகங்கை

கடுமையான உழைப்பிலும், வறுமையிலும், பட்டினியிலும் சிக்கிச் செத்துக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கமானது, நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்கிற கேள்வியை வரலாறு நெடுகிலும் கேட்டுக் கொண்டே வந்தது.
அந்த கேள்விக்கு பதில் கிடைத்த நாள் தான் நம்பர் 7-1917. பதில் கிடைத்த இடம் ரஷ்யா. பதில் சொல்லியவர்கள், ரஷ்ய பட்டாளி வர்க்கமும், கம்யுனிட்டுக் கட்சியும். சொன்ன பதில் சோசலிசம்.

மாணிக்கம்

இந்தநாளை ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. சிவகங்கையில் ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளின் சார்பாக இவ்விழா நடைபெற்றது.  வந்தவர்களை வரவேற்று, தலைமையை முன்மொழிந்தார், காரைக்குடி

கல்யாணக்குமார்

பு.ஜ.தொ.மு தோழர் மாணிக்கம். கருத்தரங்கை தலைமையேற்று நவம்பர் 7ஐ நினைவு கூர்ந்தார் காரைக்குடி பு.ஜ.தொ.மு தோழர் கல்யாணக்குமார்.

பின்னர், ஈழம்: பிணம் தின்னும் கழுகுகள் என்ற தலைப்பில், சிங்கள இனவெறி, இந்திய

ஆனந்த்

அரசின் மேலாதிக்கம், இந்திய தரகு முதலாளிகள், மற்றும் பன்னாட்டு முதலாளிகள் ஆகிய பிணம் தின்னும் கழுகுகள் ஈழத்தை பிய்த்துத்தின்றதை உணர்வுப் புர்வமாக விளக்கி பேசினார், பரமக்குடி பு.ஜ.தொ.மு தோழர் ஆனந்த்

அடுத்து, நேபாளம்: கழுகுகளை விரட்டும் மக்கள் என்ற தலைப்பில்,

ஜான்

அமெரிக்க மேல்நிலை வல்லரசு, இந்திய மேலாதிக்க அரசு, பார்ப்பன இந்துத்துவக் கும்பல்கள் பிணம் தின்னிக் கழுகுகளாக நேபாளத்தில் பிய்த்துத்தின்ன துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதை முறியடித்த நேபாளமக்களின் போராட்டத்தை விவரித்துப் பேசினார், எஸ்.பி.பட்டிணம் பு.ஜ.தொ.மு தோழர் ஜான்.

சாகித்

அதன் பின்னர் நவம்பர் 7-1917 என்ற தலைப்பில் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி என்னவெல்லாம் சாதித்தது என்பதை முன்னிறுத்தி இந்தியாவிலும் ஒரு நவம்பர்7 விரைவில் வர நாம் பாடுபடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார், தொண்டி பு.ஜ.தொ.மு தோழர் சாகித்.

பிறகு அரசு நலத்திட்டப் பணிகள்: ஒரு

கணேசன்

மோசடி என்ற தலைப்பு, பல்வேறு திட்டங்கள் என்னும் பெயரிலேயே மோசடித்தனமாக கொள்ளையடிக்கும் அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திப் பேசினார், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் கணேசன்.

ராதிகா

அதன்பிறகு வாழ்க்கைக்கு வழிகாட்டி யார்? என்ற தலைப்பில், மன்மோகன் சிங்கிற்கு 5000 ரூபாய்க்கு டி.டி எடுத்து அனுப்பி என்னைக் கேட்காமல் இனிக் கடன் வாங்காதே என செருப்பால் அடித்ததைப் போல செயல்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தி திருச்சியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துராமலிங்கம் போன்றவர்களையே நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என பார்வையாளர்களின் கரஒலியைப் பெற்று பேசினார், தோழர் ராதிகா.

அடுத்ததாக ஹிட்லரை வீழ்த்திய தளபதி: ஸ்டாலின் எனும் தலைப்பில்

ஜமீல்

உலகிற்கு மிகப் பெரும் ஆபத்தாக விளங்கிய ஹிட்லரை வீழ்த்தியதன் மூலம் ரஷ்யச் செம்படைக்கும் அதன் தளபதியான தோழர் ஸ்டாலினுக்கும் உலகம் முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளது. என்று உணர்ச்சியோடு விளக்கினார். தொண்டி பு.ஜ.தொ.மு தோழர், ஜமீல்.

நாகராசன்

பிறகு, இன்றைய உலகம் என்னும் தலைப்பில், மனிதகுலம் தோன்றி பின்னர் அரசுகள் தோன்றி இன்று பல்வேறு நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் இற்று விழும் தருவாயில் இருப்பதை படம் பிடித்தார், கீழசேவல்பட்டி பு.ஜ.தொ.மு தோழர், நாகராசன்.
கருத்தரங்கின் இடையிடையே புரட்சிகர பாடல்களை தோழர்கள் பாடினார்கள். நேரமின்மை, மழை காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த விவாத அரங்கினை ஒரு சுற்று உரையோடு முடித்துக் கொள்ளப்பட்டது.

விவாதப் பொருள், இந்தியா வல்லரசு ஆக வேண்டுமா? ஆக வேண்டாமா?

பேராசிரியர் முருகேசன்

காரைக்குடியைச் சேர்ந்த பொறியியற் பேரராசிரியர், ஆ.முருகேசன், அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்கவும், அனைவருக்கும் சிறந்த இலவச மருத்துவம் கிடைக்கவும், அனைவரும் வேலை கிடைக்கவும் மொத்தமாக அனைத்து நன்மைகளும் மக்களுக்கு கிடைக்க இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் எனக்கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தோழர் குருசாமிமயில்வாகனன் இந்தியாவின் இன்றைய பிரச்சனைகளுக்குக் காரணமே இந்தியா

குருசாமி மயில்வாகனன்

தன்னை வல்லரசாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நினைப்புதான். எனவே இந்திய மக்களுக்கு வல்லரசு தேவையில்லை. ஒரு சோசலிச அரசு தான் வேண்டும். அதை இந்திய உழைக்கும் மக்கள் சாதிப்பார்கள் எனக் கூறினார்.
நடுவர்களாக இருந்த தோழர் நாகராசனும், தோழர் சாகித்தும் விவாதமாக நடத்த இயலாத காரணத்தினால் இருவரின் கருத்துக்கள் மூலமாக வல்லரசு வேண்டுமா? சோசலிச அரசு வேண்டுமா? என்பதை பார்வையாளர்கள் பரிசீலனை செய்து கொள்ளுமாறு முடித்துவைத்தார்.
புரட்சி நாளை கொண்டாடும் வகையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொண்டி பு.ஜ.தொ.மு தோழர் ஷஃபி. நன்றியுரை ஆற்ற விழா முடிவுற்றது.

பாடல்கள் பாடியத்தோழர்கள்

நவம்ர் 7 ரஷ்ய புரட்சி நாள் ஓங்குக

தொடர்புப் பதிவுகள்

வினவு>

———————-ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ—————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s