ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? நாம உழைத்தால்தான் நமக்கு சோறு! இது சாதாரணமாக அனைத்து தரப்பு உழைக்கும் மக்கள்களும் சொல்லுகின்ற பதில்.

இந்த பதில் சாதாரணமாக ஏன் எழுகிறது? அரசியல்வாதிகள் என்றால் தன்னை பெரும்பான்மையான மக்களுக்காக அர்பனித்து சேவை செய்வதற்கானவர்கள் என்று நம்பிய காலம் போய், மாறாக அரசியல் ஒரு பெரிய தொழில்கூடம் அதில் யார் அதிக முதலீடு செய்து பதவிக்கு வருகிறார்களோ அவர்கள் பெருத்த லாபம் அடையளாம் என்ற எண்ணத்துடன் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை அப்பட்டமாக சாதாரண உழைக்கும்  நடுத்தர மக்களும் புரிந்து கொண்டதால், இன்று இவர்கள் பெரும் அரசியல் வியாதிகளாகவே தெரிகிறார்கள்!

மக்களின் அரசியல் கண்ணோட்டம்

சென்ற முறை  கருணாநிதி இலவசத்தை கொடுத்து நாட்டையே சோம்பேறியாக்கிவிட்டார்; இதை பற்றி எஸ்எம்எஸ் கூட இவ்வாறு வருகின்றது, “ இலவச அரிசி வாங்கி,  இலவச கிரைண்டரில் அரைத்து,  இலவச கேஸ் அடுப்பில் சமைத்து, இலவச மிக்ஸியிலே சட்னி அரைத்து, இலவச வீட்டில் இலவச பேன் காற்றில் இலவச டிவியை பார்த்து கொண்டு ஹாய்யாக     சாப்பிட்டுவிட்டு,  இலவசமாக வரும் வியாதிக்கு இலவச காப்பீட்டு திட்டத்தில்  இலவச  சிகிச்சை எடுத்துகொண்டு  உல்லாசமாக வாழும் வாழ்கை வேறு எங்கு கிடைக்கும்! இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் வல்லரசாக ஆகிவிட்டது” என்று கேலியாக SMS அனுப்புகின்றனர்.

இன்னும் சிலர் கருணாநிதி நல்லது செய்தார்தான், ஆனால் மற்ற பொருட்களின் விலை அதிகமாகிவிட்டது. இந்த முறை அம்மா வந்தால் எல்லாவற்றையும் மாற்றிவிடும். அந்த அம்மா முன்பு சரியாக செய்யாவிட்டாலும் இப்போது கடைசி காலத்தில் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக நல்லது செய்யும். அதனால் இப்போது அம்மா வருவதுதான் நல்லது; ஏனென்றால் விஜயகாந்த் கூட கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த முறை வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்றும் இலவசத்தினையே மெச்சுகின்றனர். இப்படிப்பட்ட சிந்தனைகள் மட்டும் தோன்றுகின்ற அளவிற்கு தான் இந்த போலி ஜனநாயக அரசியல் மக்களை வளர்த்து எடுத்து இருக்கின்றது!.

அரசியல் கட்சி ஓட்டு பொறுக்கிகள், ஓட்டு பொறுக்க வரும் பொழுது மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள், எப்படி இந்த அரசியல் கட்சிகளில் யோக்கிதை தெரியாமல் இவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று பார்த்தால் அவர்கள் தொண்டு நிறுவனங்களில் கட்டுபாடுகளில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள். ஒவ்வொரு தொண்டு நிறுவனங்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் பணத்தை வாங்கி கொண்டு அவர்களிடம் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை கட்டாயமாக வரவழைத்து அல்லது பணத்தை கொடுத்து வரவழைத்து அங்கு கூட்டத்தை காண்பிக்கின்றனர். அதை போல் ஆண்களும் இப்படி தான் ஆண்கள் சுய உதவிக் குழுக்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் உண்மையான உணர்வோடு அங்கு வருவதில்லை . ஊருக்கு ஊரு ஆள்பிடிக்க அலைந்ததுகூட காரப்பரேட் தொழிலாக மாறிப்போச்சு. சுய உதவிக் குழுக்கள் ஆள்பிடிக்கும் நிருவனமாச்சு.

இப்படி அழைத்து வரப்பட்ட மக்கள் மத்தியில் ஜெயலலிதா பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் காரின் மேல் கூரையில் கண்ணாடி கூண்டு அடைத்து அதில் குளிர்சாதன வசதியமைத்து பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் மக்கள் வேகாத வெயிலில் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா வருவதற்கு நேரமானதால் வெகு நேரம் காத்திருந்த மக்கள் ஜெயலலிதா வந்து பேசிக் கொண்டு இருக்கையில் வெயில் தாங்க முடியாமல் ஜெயலலிதா கண் முன்னே மயங்கி விழுகின்றனர். அதை பார்த்துக் கொண்டே கொஞ்சமும் பொருட்படுத்தாரல் அந்த அம்மா தான் எழுதி வைத்த காகிதத்தை படித்துக் கொண்டு இருக்கிறார். மக்களின் இந்த அவல நிலையை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த பக்கம் விஜயகாந்த் 24மணி நேரமும் போதையிலேயே பேசிக் கொண்டு இருக்கிறார். தன் வேட்பாளரின் பெயரை மாற்றிச் சொன்னதால் வேட்பாளர் தன் உண்மையான பெயரை சொல்ல, அது எனக்கு தெரியும் என்று வேட்பாளரையே  அடித்து  உதைக்கிறார். இப்படி குடி போதையிலே உளறிக்கொண்டு இருக்கிறார் விஜயகாந்த். இப்படிபட்ட அரசியல் வாதிகள் இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்?.

களத்தில் உள்ள கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அணி பல லட்சம் கோடிகளை  செலவு செய்து தேர்தலை ஒரு தொழில் களமாக மாற்றி போலீஸ், இராணுவத்தின் துணையுடன் கட்டாய  ஓட்டு வாங்கி,  திருமண நிகழ்சிகளில் எச்சி இலைக்காக அடித்துக் கொள்ளும் நாய் போல்,  சண்டை போட்டு ஆட்சி கட்டிலிலே அமர்வது மக்களுக்கு சேவை செய்வதற்கா? அல்லது தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனர்களுக்கும் புரோக்கர் வேலை பார்க்கவா?

பன்னாட்டு முதலாளிகள் தரகு முதலாளிகளுக்கு விவசாய நிலங்களையும் அரசு பொது சொத்துக்களையும். தாரை வார்த்துக் கொடுத்து, அவர்களுக்கு மக்களின் வரி பணத்தில் பிற சேவைகளை செய்து வருகின்றனர். சில கோடிகளுக்கு ஆசைபட்டு பொது சொத்துக்ளை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க உதவி  செய்கின்றனர்.

அரசு அங்கீகாரத்தோடு மணல் எடுக்கும் அரசியல் வாதிகளும் முதலாளிகளும்  ஒரு ஆற்றையே சில ஆயிறம் மட்டும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு, இயந்திரங்கள் மூலம் மணலை அள்ளி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பல கோடிகளை கொள்ளை அடித்து திடீர் பணக்காரர்களாக மாறி திமிராக வளம் வருகின்றனர்.

மணல் ஆழமாக அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், நீர் மாசுபடுதல் வறட்சி, விவசாயம், குடிநீர் பாதிக்கப்படுதல். தண்ணீர் இல்லாமல் பல கிராமங்களும் மக்களும் பெரிதும் பாதிக்கபடுவதுடன் பசி, பட்னி, நோய், பஞ்சம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த  நிலமைகளை புரிந்து கொள்ளாத சாதாரண மக்கள் மேற்கண்ட நிகழ்வுகள் எதார்தமாக நடப்பது போலவும், கிரகம் சரி இல்லை; அந்த குல தெய்வம் கோவிலுக்கு போனால்  சரியாகிவிடும் என்று ஆறுதலுக்காக அங்கும் இங்கும் அழைந்து சீரழிந்து நிற்கின்றனர்.

மக்களின் வாழ்வாதாரங்களை மொட்டையடித்த அரசியல் வாதிகள் , அரசு அதிகாரிகள்,  முதலாளிகள்,  மக்கள் தலையையும் கோவில் கோவிலாக சென்று மொட்டையடிக்க வைக்கின்றனர். இதற்காக மதவாதிகளையும் தொலைக்காட்சியில் வரும் ஆன்மீக வழிபாட்டுத் தளங்கள், அதிஷ்ட கல் மோதிரங்கள், பத்திரிக்கையில் வரும் இராசி பலன்கள் இவைகளை திட்டமிட்டே ஊடகங்கள் மற்றும் மீடியாக்கள் ஊக்குவித்து நடத்துகின்றன. இந்த குறுக்கு வழியை பயன்படுத்தி மக்களின் சிந்தனையை திசை திருப்பி மேற்கண்ட கொள்ளை கூட்டம் கொள்ளையடிக்கின்றது.

இப்படிப்பட்ட நிலமை மாற வோண்டுமென்றால் பொது சிந்தனை உடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக போராடும் பொது உடைமை சித்தாந்தத்தை சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய முறையில் கற்பிக்கும் அரசியில் திறன் கொண்டவர்களை உருவாக்கவேண்டும்.  மக்களுக்கு விஞ்ஞான ரீதியான கல்வி அளிப்பதன் மூலமும் அரசியல் அறிவை ஊட்டுவதன் மூலமும் தான் தற்போது உள்ள ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளை இனம் கண்டு துரத்தி அடிக்கமுடியும். இந்த முறையை நாம் கடைபிடிக்கத் தவறினால் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? நாம் உழைத்தால் தான் நமக்கு சோறு என்ற பதில் தான் வரும்.

—வேப்பங்காய்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s