எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார், இஸ்லாத்தில் சனநாயகம் இல்லை தோழர் என்று. அதற்கு மேல் வேறு எந்த விளக்கமும் கூறியதில்லை.. அவர் எதையோ மனதில் வைத்து வெளிச்சொல்ல இயலாமல் புழுங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் உணரமுடிந்தது.. அவரது பிரச்சினை என்னவாக இருக்கும் என்பதனை பல நேரங்களில் சிந்தித்து பார்த்ததுண்டு. பொதுவாக எல்லா மதங்களிலுமே சனநாயகம் கிடையாதுதான். ஆனாலும், இந்து மதத்தின் சாதீய கொடுமைகளை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்த எனக்கு அத்தகைய நிலை இஸ்லாத்தில் இல்லை என்பதாகவே எண்ணியதுண்டு.

      கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மக்கட்டி துராப்ஷா என்பவர் இஸ்லாத்தில் இருந்து விலக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி அவர் என்னுடன் விவாதித்த உரையடலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒருநாள், இதைப் படியுங்கள் தோழர் என அவர் கையில் வைத்திருந்த செய்தித்தாளின் கட்டிங் பேப்பர் ஒன்றைக் கொடுத்தார், அதில், கடையநல்லூர் மக்கட்டி துராப்ஷா ’காபிர்’ என அறிவிக்கப்பட்டு இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதான செய்தி இடம்பெற்றிருந்தது. அதை முழுவதுமாக படித்துக்கொண்டிருந்த எனக்கு அந்த வரிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடைய மையித்தை அடக்கம் செய்யக்கூடாது

அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது

இவர் இஸ்லாத்தில் இருந்து விலகி விட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முரிந்துவிட்டது.

      மக்கட்டி துராப்ஷா என்பவர் இஸ்லாத்தின் மூடநம்பிக்கைகளை  விமர்சனத்திற்கு உள்ளாக்கியமைக்காகத்தான் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் என்று புரிகிறது.. ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிரயோகிக்கும் அதே அளவிலான வன்முறைகள். கூடுதலாக அத்தம்பதிகளுக்கிடையேயான திருமண உறவை முறிக்கும் தண்டனை. இந்த முல்லாகளுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுப்பது யார்? நான் நண்பரை ஏறிட்டு நோக்கினேன்.. அவரது கண்களில் ஒருவித அச்சம் பரவியிருந்தது. அவர் என்னை விலக்கி, விட்டத்தை வெறித்தவாரே தொடர்ந்தார்.

      இஸ்லாத்தில் சனநாயகம் இல்லை என்பது எவ்வளவு உண்மையாயிற்று. இந்த துராப்ஷாவின் நிலையைப் பாருங்கள், ஒன்று அவர் முல்லாக்களிடம் சரணாகதி அடையவேண்டும், இல்லையேல் தனது குடும்ப உறவை முறித்துக்கொள்ள வேண்டும் முக்கியமாக தனது மனைவியை பிரியவேண்டும். இப்போது அவர் இந்த இரண்டில் ஒன்றை விரைவில் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். இந்த மணமுறிவு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிணக்கினால் அல்ல, அல்லாவின் பெயரால் இந்த முட்டாள் முல்லாக்கள் தான் முன்னின்று பிரித்துவைக்கின்றனர். இவர்கள் முறித்து வைப்பது விடலைப் பருவ காதலை அல்ல, பல வருட கால வாழ்வின் களிப்பினாலும் அன்பினாலும் உருவான காதலை முறிக்கிறார்கள். ஒரு கணவன் மனைவிக்குமிடையே உள்ள உறவு என்பது உணர்ச்சிப் பண்பாடில்லாத அந்த அல்லாவின் பெயர் கொண்டுதான் பிணைக்கப்பட்டிருக்கிறதா என்ன! இந்த முட்டாள் முல்லாக்களுக்கு காதல் என்பது காமம் என்பதாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது போலும். போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள் எல்லாம் முஸ்லீம்கள் என்றா நினைக்கிறார்கள் இவர்கள்! அவ்வடிமைகளுடன் போர் நடந்த அந்த இடங்களிலேயே அப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனரே!. அது யாரால் என்பது இந்த முல்லாக்களுக்கு தெரியாதா என்ன! அப்பொழுது எங்கே போனது இந்த மத உணர்வும், பத்வாக்களும். இதுதானே 1400 வருடகால வரலாறு. இவர்களது வரலாறே இவர்களை பின்னங்கால் பிடரியில் பட ஓடவைக்கிறது. ஆனால், இதை நாம் அம்பலத்துக்கு கொண்டுவரும்போது மட்டும் நம்மீதே பாய்ந்து பிராண்டுகிறார்கள் இந்த முட்டாள் முல்லாக்கள்.

                பிறிதொரு நாளில் இந்த துராப்ஷா இஸ்லாமியராக மாறி விடவும் வாய்ப்பிருக்கிறது, ஆனால் அப்பொழுதும் கூட இந்த முட்டாள் முல்லாக்கள்தான் இடையில் நிற்பார்கள். விவாகரத்தின் மூலம் இவ்விருவரும் விலக்கப்பட்டுவிட்டால் மீண்டும் இவ்விருவரும் இணைய வேண்டுமானால் அப்பெண்ணானவள் வேறொரு ஆடவனை மணமுடித்து அவருடன் உறவு கொண்ட பிறகு அந்த இரண்டாம் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று அதன் பின்புதான் முதல் கணவரான துராப்ஷாவுடன் இணைய முடியும். இதுதான் இஸ்லாமிய சட்டம். இந்த முட்டாள் தனமான சட்டத்தில் என்ன ஒழுக்கம் இருக்கிறது சொல்லுங்கள். எந்தப் பெண்ணாவது இதை ஏற்றுக்கொள்வாளா?. ஒரு ஆணைப்போல தனது காதலையோ அல்லது காமத்தையோ பலருடன் பகிர்ந்துகொள்வதை எந்த ஒரு பெண்ணும் விரும்புவதில்லை என்பதுதானே உண்மை. 5 மனைவிகளுடனும் ஆத்மார்ந்த காதல் இருப்பதாகக் கூறுவதெல்லாம் சுத்த பொய். பித்தலாட்டம். இப்படித்தான், நானறிந்த பெண்மணி ஒருவர் தனது கணவரைப் பற்றி ஜமாத்தார் ஒருவரிடம் புகார் செய்ய, அவரோ அப்படியா! அவனுடன் நீ வாழ்வது கூடாதம்மா! அவனை தலாக் செய்துவிடு என கூறியிருக்கிறார். அரண்டு போன அந்த பெண்மனி அத்துடன் அந்த பேச்சையே விட்டுவிட்டார். உங்களுக்குப் புரிகிறது என்றே நினைக்கின்றேன். இந்த முட்டாள்தனமான அருவருக்கத்தக்க சட்டங்களைத்தான் இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள் இந்த முட்டாள் முல்லாக்கள். இந்த முட்டாள் முல்லாக்களின் சட்டதிட்டங்களினால்தான் அநேக முஸ்லீம்கள் வெளிப்படையாக இஸ்லாத்தை விமர்சிப்பதில்லை. உறவுகள் சிதைவுக்குள்ளாகும் என்ற அச்சமும் ஒரு காரணமே. இவ்வாறாக தனிமனித வாழ்வுரிமையில் தலையிடும் இந்த முல்லாக்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும். இவர்களது கொட்டத்தை ஒடுக்கவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் கூட இஸ்லாத்தை பரிந்துரைத்தது என்பதும் எவ்வளவு அபத்தமானது தெரியுமா?

நண்பர் இடைமறித்து, “மன்னிக்கவும் தோழர். இந்து மதத்தின் சாபக்கேடான தீண்டாமை என்னும் கொடிய விலங்கிலிருந்து தப்பிக்கவே அவர் அவ்வாறு கூறினார்.”

“ஆமாம் அதுதான் உண்மை, சரி. தோழர் உங்களது நேரத்தை வீணடித்து விட்டேனோ?

“இல்லை. உங்களிடம் இருந்து நான்தான் இஸ்லாம் பற்றி அதிகம் புரிந்து கொண்டேன். நன்றி!”விடைபெற்றுச்சென்றார்.

      மதவாதிகள், தங்களது பழைய நைந்துபோன மதங்களை உயிரோட்டமாக வைத்திருக்க அன்றாடம் வெளிவரும் அறிவியல் தகவல்களை ஒவ்வொரு விநாடியும் தவம் கிடந்து பெற்று சுவீகரித்துக் கொள்வதைப்போல, முந்திய சமுதாய மக்களின் கலாச்சாரத்திற்கேற்ப கூறப்பட்ட சட்டதிட்டங்களை, மாறும் சமுதாய வாழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள தயாரில்லை. இது மதங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என்பதால் ‘பத்வா’ போன்ற அடக்குமுறைகளை கையாளுகின்றனர். அறிவியல் ஒன்றை மெய்பிக்கும்போது அவர்களுக்கு வேறுவழியில்லை என்றாகிவிடுகிறதல்லவா? எனவே, வார்த்தை விளையாட்டுகளில் இறங்கி தங்களது மதப் புத்தகங்களில் நவீன கால சிந்தனை ஓட்டத்திற்கேற்ப புதுப்புது கருத்துகளை இடைச்செருகிக் கொள்கின்றனர். கடந்தகால அறிவியலின் துணைகொண்டு தவறாக விளக்கமளிக்கப்பட்டதற்காக அந்த  முல்லாக்களுக்கு பத்வா வழங்கப்படுவதில்லை, குறைந்த பட்சமேனும் சமுகத்தில் மன்னிப்பும் கோருவதில்லை. ஆனால், நிகழ்காலத்தில் மதங்களின் பிற்போக்குத்தனங்களை நாம் விமர்சனத்திற்கு உட்படுத்தும்போது மட்டும் பத்வாக்கள் உயிர்பெற்று விடுகின்றன. .ஷாபானு வழக்கில் தங்களது மத உரிமைப் பற்றி பேசிய முல்லாக்கள்தான் துராப்ஷாவின் தனிமனித வாழ்வுரிமையில் தலையிட்டு தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

      ஏதோ காரணங்கொண்டு செங்கொடி அவர்கள் தனது வலைத்தலத்தை இடைநிறுத்தியிருப்பதை ’ரியாத்திலிருந்து செங்கொடி தப்பியோட்டம்’ ‘எங்கே செங்கொடி’ என தலைப்பிட்டு அதில் தங்களது மதவெறியைக் கக்கி குதூகலிக்கிறது kadayanallur.org  செங்கொடியின் பதிவுகளுக்கு பதில் கொடுக்க முடியாத தங்களது கையறு நிலைகண்டு ஆத்திரம் கொள்கிறது, செங்கொடியை நோக்கி வன்மம் கொப்புளிக்க கேலி பேசுகிறது kadayanallur.org நாளை உலகம் முழுதும் இஸ்லாமியமயமாக இருந்தால் இவர்களின் மதவெறி எப்படியிருக்கும் என்பதனை இந்த தளத்தின் kadayanallur.org யின் எழுத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

      இந்த முல்லாக்களின் அடாவடித்தனங்களை ஒடுக்க, உலகுக்கே ஜனநாயகம் வழங்கியதாகக் கூறிய ‘பழைய ஜனநாயகவாதிகள்’ விரும்புவதில்லை, மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் எனக் கருதும் ‘புதிய ஜனநாயகவாதிகளால்’ தான் இந்த முல்லாக்களின் கொட்டத்தை அடக்க இயலும்.

வசீகரன்.

Advertisements

16 thoughts on “உறவுகளை சிதைக்கும் இஸ்லாமிய பத்வா!

 1. பெரியார் இஸ்லாமை ஆதரித்தற்கு காரனம் தமிழக இஸ்லாமியர்களிடம் மட்டும் இஸ்லாத்தை பர்த்ததால்.ஆனால் உண்மையில் இஸ்லாமிய நூல்களின் குரான்,ஹதீஸ் தமிழாக்கம் அன்று இல்லை அப்படி இருந்திருந்தால் இந்த வண்டவாளங்கள் தெரிந்து அதை இந்துமதத்திற்கு இனையாக எதிர்த்திருப்பார் என்பதே உண்மை

   1. மத வெறிக்கெதிரன பதிவுக்கு பாராட்டுகள்.
    15 வருடங்களுக்கு முன்பு அரேபிகளின் வகாபி பிரசார நடவடிக்கை நடைபெறவில்லை. அதனால தமிழக இஸ்லாமியர்கள் மத வெறித்தனங்கள் இல்லாம மற்ற மதத்தவர்கள்போல முன்பு இருந்திருக்கலாம் ஆனாலும் இஸ்லாம் ஒரு வன்முறை மிகுந்த சீர்திருந்தங்களை ஏற்காத படு பிற்போக்கான ஒரு மதமாகவே எப்போதும் இருந்துவந்துள்ளது. அப்படிபட்ட இஸ்லாமை பெரியார் எப்படி தீண்டாமயிலிந்து தப்புவதற்காக பரிந்துரைக்க முடியும்? பகுத்தறிவுவாதி என்று சொல்லபடும் அவரின் இந்த செயல் மகா அபந்தம்.

   2. தந்தை பெரியார் பார்வையில் முஸ்லீம்களுக்கும், பார்ப்பணியத்துக்கும் மிக பெரிய வித்தியாசம் இல்லை. முஸ்லீம்களின் சுயரூபம் அறிந்த பிறகு – தந்தை பெரியார் எழுதிய கட்டுரை. 6.3.1962 அன்று விடுதலையில் எழுதிய தலையங்கத்தை வாசியுங்கள்.

    நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ- இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும். இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியாலும் காங்கிரசாலும் மற்றும் அவர்களுக்கு நீதி அல்லது தனிச் சலுகைகள் இன்றுள்ள ஆட்சியும் காட்டி வந்த காரணத்தினாலும் மேலும் அவர்களது செல்வாக்கு காரணமாய் புத்திசாலித்தனமான திறமையான தகுதி உள்ள சமூதாயம் என்று கருதி ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும், நாடு வளர்ச்சி அடையாமலும் மெஜாரிட்டி (நாட்டின் இயற்கையான பெருவாரி ) மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். இந்தத் தமிழ்நாடு இன்றும் சுதந்திரமற்ற அடிமை நாடு என்பது எனது பலமான கருத்து. இதை இந்நாட்டுப் பெருவாரி (மெஜாரிட்டி) சமூதாயம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். காரணம் தமிழனுக்கு சுதந்திரம் என்பது என்ன என்றே தெரியாது.

    ஏன் என்றால் தமிழன் பல பிரிவினனாக ஆக்கப்பட்டவன் ஆனதால் எதையும் கொடுத்து, என்னமும் செய்து பயனடைந்து வந்தவன், இந்தத் தன்மைக்கு ஏதாவது ஒரு மாறுதல் தோன்றிற்று என்று சொல்ல வேண்டுமானால் 1900- ஆண்டுகளுக்குப் பிறகு தான் இதுபற்றி சிந்திக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு சுதந்திரம் ஒருநாளும் இருந்ததில்லை. அவன் சரித்திரமே அடிமைத்தனத்திலும் இழி தன்மையிலும் இருந்தே தான் துவக்கப்பட்டிருக்கிறது. அது எப்படியோ போகட்டும். இனிமேலாகினும் தமிழன் தமிழ்நாடு சுதந்திரத்துடன் சுயமரியாதையுடன் வாழ வேண்டாமா? என்பது தான் இனி சிந்திக்க வேண்டியதாகும். இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிக்கால சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது சுதந்திர உதய நாள் முதல் எனது கருத்து.

    இதற்கு உதாரணம் இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்த வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமே போதுமானதாகும். அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாயமாகிய தமிழனின் பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஏராளமான பொதுத் தொண்டு செய்கிறார்கள். இப்படி இன்னும் பல இருக்கின்றன. 100-க்கு 3- விகிதமுள்ள பார்ப்பன மக்களும் அவர்கள் பெண்கள் பொதுநலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வு வாழ்கிறார்கள். அதுபோலவே 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுமைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.

    இதே போன்ற நிலையிலே தான் இந்நாட்டு தமிழ் ஆண்கள், பெண்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் வேலைக்காரிகளாக இருக்கிறார்கள். முதலாவது இந்த இரண்டு – தர மக்கள் நிலையும் இந்நாட்டுத் தமிழனுக்கு எவ்வளவு இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்? இது அவர்கள் மத தருமம்! மத ஆச்சாரம்! என்றால் யார் நாட்டில், யார் மத்தியில், யாருடைய மத தர்மம், யாருடைய மத ஆச்சாரம், யாரை இந்த நிலையில் இழிவுபடுத்துவது என்பதை சிந்தித்தால் தமிழனின் சுதந்திரம் சுயமரியாதை அளவு விளங்கும்.
    ஜோசியத்தில் வல்லவரான ஒரு மேதாவியானவன் (அமாவாசையில் பிறந்தவன் திருடுவான் என்பது ஜோசியமானால்) தன் வீட்டில் திருடின அமாவாசையில் பிறந்தவரை மன்னித்து விடுவாரா? இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி) அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூமத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி- பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கது ஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.

    இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.

    (06-03-1962- இல் “விடுதலை” நாளிதழில் பெரியார் ஈ.வெ. ரா. தலையங்கம்.)

 2. தாண்டுனா தலைய எடுத்திடுவோம்ல…அப்படித்தான்
  நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்லியிருக்காக……..

 3. இசுலாத்தை விட்டு வெளியேறியவர்களை முகம்மதுவே கொலை செய்த வரலாறு உண்டு. அதனால் தாண்டினால் தலை தப்பாது.

 4. இவர் இஸ்லாத்தில் இருந்து விலகி விட்டதால் இவ ருடைய மனைவி திருமண பந்தம் முரிந்துவிட்டது இந்த ஈனச்செயல்மூலம் அல்லா இல்லை என்பதை இந்த முட்டால் முல்லாக்கலே நிரூபித்துவிட்டார்கள், அல்லாஇணைத்தான் முல்லாபிரித்தான்
  அப்போ….அல்லா..?

 5. விமர்சித்தால் கொலை அல்லது கொலைவெறித் தாக்குதல், விலக நினைத்தாலோ சமூக உறவுகளை பிரித்து விடுவோம் என்று கூறி மிரட்டுதல், இஸ்லாம் நீடித்திருக்கும் காரணங்களில் முதன்மையானவை இவை தாம்.

 6. ஆஹா …..இஸ்லாமிய கும்மி ஸ்டார்ட் ஆயிடுச்சா …..
  லேட்டா வந்துட்டேனே ..சரி சரி பரவாயில்ல ……
  உங்களமாதிரியானவங்க இஸ்லாத்துக்கு எதிர்மறையாக
  ஊள கும்மி போடப்போட தான் இஸ்லாம்
  ஜெட் வேகத்துலே மேல போயிட்டே இருக்குது கவனித்தீர்களா ??!!
  இஸ்லாமின் வளர்சிய யாராலும் கட்டுபடுத்தமுடியாது என்பதை
  மைண்டுல வைத்துக்கொள்ளவும் ……….

  1. ஹாய் நைனா, ஆண்டுக்கு ஆண்டு சபரிமலைக்கு போற கூட்டமும் கூடிக்கிட்டே வருதாம் நைனா. உணமையான கடவுள் அய்யப்பன்தானாம், தெரியுமா !

 7. சாகித்March 13, 2012 at 8:15 pm 32
  பாசித் என்பவன் தவ்ஜீத் ஜமாத்திலிருந்து விலக்கப்படவில்லை. அவன் தான் “வாழவுரிமை’ என்று அவர்கள் பிரச்சார இயக்கம் எடுத்துள்ளதற்கு மணல்மேல்குடி பகுதியில் நிதி மற்றும் அணைத்திற்கும். மூல ஆதாரம். ஆனால் இபுராகிம் கடுமையாக புளுகுகிறார். இந்த புளுகுனிக்கு பதில் அளிப்பதைவீட ………… அதனால் யாரும் இவனுக்கு பதிலளிக்காமல் இருப்பதே நலம்.
  சாஹித் மிகப் பெரிய புளுகர் என்பதற்கு அவரது கூற்றே எண் 32 முழு ஆதாரம் .அவரது கூற்றுபடி அவரது கூற்றை உண்மை என்று நிருபிக்க வேண்டும் .இல்லையெனில் அவற்றை மற்றவர்கள் புறக்கணிக்க வேண்டும் வினவும் புறக்கணிப்பதே சரியாக இருக்கும்.
  வாழ்வுரிமை என்ற பாசித்தின் இயக்கத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்திற்கும் கிஞ்சிற்றும் தொடர்பு இல்லை.எங்ஙனம் திராவிடம் என்ற பெயரில் கட்சி ஆரம்பிப்பவர்களுக்கும் தி.கவுக்கும் தொடர்பு இல்லையோ அது போன்று தவ்ஹித் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யும் மற்றவர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது .மேலும் டிஎண்டிஜெவுக்கு பிரச்சார அமைப்பு என்று தனியான உள் அமைப்புகள் கிடையவே கிடையாது. அதற்கு தலைமையில் எந்த அனுமதியும் கிடையாது .இவாறு பாசித் தனி அமைப்பு வைத்திருப்பதே அவருக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதற்கு இன்னொரு ஆதாரம் .ஆகவே இறைவன் இங்கே உண்மையை சாஹித் மூலமே வெளிப்படுத்தியுள்ளான் .இதுவரை பாசித்தையும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தையும் எவ்வாறெல்லாம் பொய்யான தகவல்களை வினவுக்கு தந்துள்ளார் என்பதையும் புரிந்து கொள்ளலாம் .

  பொய்யரே ! பரயோசையைக் காணோம். வாழ்வுரிமை என்பது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பிரச்சார இயக்கம் என்பதற்கு சாஹித் ஆதாரம் தர வேண்டும் .இல்லையெனில் அவரது அன்பு அண்ணன் செங்கொடியின் ஆலோசனையின் பேரில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் .பரயோசையை முழக்காமல் மவுனம் சாதிப்பது நன்றன்று

  சாஹித் ஒரு பொய்யை உண்மை என்று சொல்லி அதனடிப்படையில் ஒருமையில் எழுதியுள்ளார். தனது கருத்தை கூறி அதனைப்பற்றி உண்மையை தெரிந்து கொள்ளும் முன்பே ஆத்திரப்பட்டு என்னை ஒருமையில் கூறியுள்ளார்.இவர் கொள்கையாளர்கள் மெஜாரிட்டியாக இருக்குமிடத்தில் கம்யுனிசம் பற்றி விமர்சித்தால் என் கதி என்னவாகும் என்பதை பகுத்தறிவாளர்கள் மிக்க வினவுதளம் தான் சொல்லவேண்டும்.இவரைவிட கடையநல்லூர் ஜமாஅத் கார்கள் செய்தது மொள்ளுமாரிதனமா? என்பதை பேரறிஞர் செங்கொடி சொல்லுவார் என்று நம்புகிறேன்

 8. சாகித்March 13, 2012 at 8:15 pm 32
  பாசித் என்பவன் தவ்ஜீத் ஜமாத்திலிருந்து விலக்கப்படவில்லை. அவன் தான் “வாழவுரிமை’ என்று அவர்கள் பிரச்சார இயக்கம் எடுத்துள்ளதற்கு மணல்மேல்குடி பகுதியில் நிதி மற்றும் அணைத்திற்கும். மூல ஆதாரம். ஆனால் இபுராகிம் கடுமையாக புளுகுகிறார். இந்த புளுகுனிக்கு பதில் அளிப்பதைவீட ………… அதனால் யாரும் இவனுக்கு பதிலளிக்காமல் இருப்பதே நலம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s