2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் நாடு முழுக்க நாறிக்கொண்டிருக்கிறது. “பிழைக்கத் தெரிந்தவன்”, “முதல் போட்டவன் இலாபம் சம்பாதிக்கத்தானே செய்வான்” என்றெல்லாம் முதலாளிகளின் திருட்டுக்கு நியாயம் கற்பிக்கும் மேட்டுக்குடியும், அரசு அதிகார வர்க்கமும் 1,76,000 கோடி ஊழல் என்றதும் சற்று கலக்கம் அடைந்துவிட்டது. சாவு விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது தொழிலாளிகள்தானே என்று தனியார்மயம், தாராளமயத்தை உச்சிமுகர்ந்து கும்மாளமிட்ட இவர்கள் அடுத்த இலக்கு தாம்தான் என்பதை புரிந்துகொண்டதும் வழி தெரியாது விழிபிதுங்கி நிற்கின்றன. முதளாளிகளின் பகற்கொள்ளைகளால் சலுகைகளையும் உயர் சம்பளங்களையும்  அனுபவித்த இவர்கள் 2ஜி போன்ற கொள்ளைகளால் தாமும் சக்கையாக்கப்பட்டு துப்பப்படுவோம் என்பதை உணரத் தலைப்பட்டுள்ளனர். காரணம் தகவல் தொடர்பு நுகர்வை ஒரு தொழிலாளியைவிட இவர்களே அதிகம் பெறுகின்றனர்

சலுகை விலையில் தொலைதொடர்பு அலைக் கற்றைகளை கொள்ளையடித்த முதலாளிகள் தாம் பெற்ற அதே சலுகைவிலையில் இவர்களுக்கு சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர். 1,76,000 கோடி ஊழல் என்றால் குறைந்தபட்சம் அதில் பாதித் தொகையாவது ராஜா, மன்மோகன் வகையராக்களுக்கு இலஞ்சமாக முதாலளிகள் கொடுத்திருப்பார்கள் என்பதை ஒரு கிராமத்தின் படிப்பறிவில்லாத சாதாராணமானவர்களே நம்பும்போது படித்த மேதைகளான இவர்கள் எளிதாகவே புரிந்து கொள்கின்றனர். 400 கோடிக்கு அலைக் கற்றையை வாங்கிய ரத்தன் டாடா, 12000 கோடிக்கு டொகோமோவிடம் விற்று 11600 கோடியை சில தினங்களில் கொள்ளையடித்துவிட்டார். அதுவும் முதல்போடாமல் அரசுடமை வங்கிகளிடம் கடன் பெற்றே அலைக் கற்றைகளை அள்ளிச் சென்று விற்றுள்ளனர்.

இந்த ஊழலால் பலனடைந்திருக்கும், டாடா, அனில் அம்பானி, மித்தல் போன்றவர்கள் தாங்கள் கொடுத்த இலஞ்சத்தையும் அதற்கான இலாபத்தையும், “பாக்கெட் டேட்டா” என்றும், “பார்த்துகொண்டே பேசலாம்” (Video call) என்றும் இவர்களின் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு திருடத்தான் போகிறார்கள் என்பதை உணர்கின்றனர். ஆனாலும் இந்த நிதிமன்றங்கள் என்ன எழவாவது செய்து தம்மை காப்பாற்றிவிடாதா என்று மயிரைப்பிளக்கும் விவாதங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைத் தண்டித்துவிட்டால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழாது என்று நம்புகின்றனர். இலஞ்சம் வாங்கியவனை தண்டிக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இலஞ்சம் கொடுத்தவனை என்ன செய்வது? ரேஷன் கார்டுக்கும், பிறப்புச் சான்றிதழுக்கும் இலஞ்சம் கொடுப்பதுபோலவா இது? 2ஜி ஊழல் கார்ப்பரேட்டுகள் தொடங்கிவைத்ததுதானே. ஊழலின் ஊற்றுக் கண்ணைப் பிடுங்காமல் ஊழலை ஒழிக்கமுடியுமா?

உள்ளூர் நீதி மன்றங்கள் முதல், உச்ச நீதி மன்றம்வரை இலஞ்ச ஊழலில் நாறுவதை சொல்லித் தெரிய வேண்டிதில்லை. அதுபோல சிபிஐ அதிகாரிகளின் இலஞ்ச லாவண்யங்களும் மக்களுக்குப் புரியாத புதிர் அல்ல.

எனவேதான் தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்டிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகி அமைப்புகள் ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை, கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! கார்ப்பரேட் கொள்ளையர்க்கெதிராக கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களை பறித்தெடுப்போம்! என முழக்கமிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் கூடுமிடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பல இடங்களில் பொதுக்கூட்டமும் நடத்தி வருகின்றனர்.

பாரதீய ஜனதா, அதிமுக போன்ற எதிர்கட்சிகள் இது திமுக, காங்கிரஸ் கட்சிகளின் ஊழல் என்ற அளவில் மட்டுமே நின்றுகொண்டு தமக்கு கிடைக்காத பங்கிற்காக நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு குரைக்கின்றதையும், ஊழலின் ஊற்றான கார்ப்பரேட்டுகள் பற்றி வாய் திறக்க மறுப்பதையும், அதன் மூலம் திமுகவையும், காங்கிரசையும் கவிழ்துவிட்டு தாங்கள் அரியணையில் அமர்ந்து  சுகமனுபவிக்கலாம் என்பதைத் தவிர இவர்களிடம் மக்களின் நலன் என்ற சிந்தனை எதுவும் இல்லை. இதனையும் அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த தேர்தல் பாதையும், நீதிமன்றமும் மக்களை கொள்ளளை அடிப்பதிலிருந்து தடுத்துவிட முடியாது என்பதால் ஒரு சமூக மாற்றத்தின் மூலம் மக்கள் நீதி மன்றங்களைக் கட்டியமைத்து தண்டிப்போம் என்று அறைகூவல் விடுக்கின்றனர்.

பகற்கொள்ளையர்களான கார்ப்பரேட் முதலாளிகளை இவ்வமைப்புகள் அம்பலப்படுத்துவதைக்கண்டு, முதலாளிகளுக்கு தனதுவாலை விசுவாசமாக ஆட்டி எலும்புத்துண்டுகளை பொறுக்கித் தின்று பழக்கப்பட்ட தினமலர் என்ற பார்பனீய ஏடு, இவ்வமைப்புகள்மீது புளுகுகளை கட்டவிழ்துவிட எத்தனிக்கிறது. 15-02-2011 கோவை மற்றும் புதுவை பதிப்பு தினமலரில் “ஊழலை தண்டிக்க நக்சல்பாரி பாதை வேண்டும், ஆவேசத் துண்டுப் பிரசுரம்வினியோகம்” என்று தலைப்பிட்டு இவ்வமைப்புகள் இரகசியமாக மலைவாழ் மக்களிடமும், இளைஞர்களிடமும் பயங்கரவாதத்தை தூண்டுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

நக்சலைட்டுகள், நக்கசல்பாரிகள் என்றாலே மலைப்பகுதிகளில் தலைமறைவாக வாழும் பயங்கரவாதிகள் என்று தோற்றம் தருமாறும், எங்கு கொலை, கொள்ளை, குண்டுவெடுப்பு நடந்தாலும் நக்சலைட்டுகள் அட்டூழியம் என்று தலைப்பிட்டு மக்களின் கவனம் புரட்சியாளர்களின் பக்கம் திரும்பிவிடாமலும் சேவை செய்து வருகின்றவைதான் பார்ப்பன பத்திரிக்கைகள். கொஞ்சம் காலமாக இந்த கயமைத்தனம் இசுலாமியர்களின் பக்கம் திரும்பி இருந்தது. இன்றும் அதே தந்நிரத்துடன் நாடுமுழுக்க நடத்துவரும் இப்பரச்சாரத்தை பொள்ளாச்சி, உடுமலைப் பகுதியில் மட்டும் நடப்பதுபோல் அதாவது மலைப்ப பகுதி ஊர்களில் மட்டும் நடப்பதாக கூறுகிறது.

இவ்வமைப்புகள் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் அவ்வமைப்புகள் பெயர் உள்ளதை முன்பத்தியில் குறிப்பிட்டுள்ள தினமலர்,  செய்தியின் இறுதியில் இப்பிரச்சுரத்தை வடிவமைத்தது யார் என்ற தகவல் ஏதும் இல்லை என்றும், இப்பத்திரிக்கை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள பிரசுரத்தில், தொடர்புக்கான முகவரி உள்ளதை பொருட்படுத்தாது தொடர்புக்கான தகவலோ ஏதும் இல்லை என்றும் விஷத்தை கக்குகிறது. நுனிப்புல் மேயும் நடுத்தர, மற்றும் மேட்டுக்குடி வாசகனின் மண்டையில் கடைசியாக என்ன படித்தானோ அது மட்டுமே கவனத்தில் இருக்கும். அவசரகால உலகத்தில் இருக்கும் இவர்கள் தலைப்பையும் இறுதியையும் படித்துவிட்டு உலகம் இருண்டுவிட்டது என்று கண்ணை மூடிக்கொண்ட பூனையைப் போன்றவர்கள். அவர்களின் இந்த பழக்கத்தை பயன்படுத்தி செய்தியின் இறுதியில் இப்படி எழுதுவதன் மூலம் இவ்வமைப்பினர் இந்த அரசுக்கும் உளவுத் துறையினருக்கும் தெரியாது காடுகளில் தலைமறைவாக வாழும் பயங்கரவாதிகள் என்று மக்களிடையே பயபீதியூட்டிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

ஆனால் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்லாது இஸ்ரோ ஊழலும் 2 இலட்சம் கோடிக்கு நடந்துள்ளதை அறியும் மக்கள் இவ்வமைப்புகளுக்கு தமது ஆதரவை அதிகமாகவே வெளிப்படுத்துகின்றனர். தினமலர் போன்ற முதலாளிகளுக்கான கோயபல்சு புழுகுகளை அவிழ்தும் விடும் பத்திரிகைகளையும் மக்கள் துடைத்தெரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

—சாகித்

One thought on “தினமலரின் கார்ப்பரேட் விசுவாசத்தை திருத்தமுடியுமா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s