நித்யானந்தா: அம்பலமாகும் ஆன்மீகம்

அழிவுப்பாதைக்கு ஆன்மீகம்

தனது கவர்ச்சிகரமான பேச்சுத் திறமையைக் குறைந்தபட்ச மூலதனமாகவும், துதி பாடும் ஊடகங்களின் வியாபாரக் குணத்தை அதிகபட்ச மூலதனமாகவும் கொண்டு 2010 பிப்ரவரி 28 வரை தனது எல்லாவிதமான மகிமைகளோடும், புகழோடும், கீர்த்தியோடும், கடந்த இருபது வருடங்களாகப் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மிகவும் பிரபலமடைந்திருந்த, இளம் வயதில் காவி கட்டிய, இந்து ஆன்மீகத் துறவி ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள், நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக மார்ச்-2-ந் தேதியன்று வீடியோப் படங்கள் வெளிவந்ததின் காரணமாக அம்பலப்பட்டு நாறிப் போயிருக்கிறார்.
நேற்றுவரை அவரது பக்தர்களாகவும், சீடர்களாகவும் இருந்தவர்கள்  நேற்றுவரை பக்தர்களாக இன்று அவரது படத்தைச் செருப்பாலடிக்கிறார்கள்; கிழித்துத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள்; அவரது மடமான தியான பீடத்தின் கட்டிடங்களை அடித்து நொறுக்குகிறார்கள். ஸ்ரீபரஹம்ச நித்யானந்தா தலைமறைவாகியிருக்கிறார்.

இது தமிழகத்திற்குப் புதிதானதல்ல. பூசாரியைத் தாக்கினேன். அவன்

நேற்றுவரை பக்தர்களாக

பக்தன் என்பதற்காக அல்ல, பக்தி பகல் வேஷமிட்டதைக் கண்டிப்பதற்காக என்று அனல் பறக்க கருணாநிதி எழுதிய பராசக்தி வசனத்தை ஒரு தலைமுறைத் தமிழர்கள் முழுவதும் நன்கு அறிவார்கள். தமிழ் சினிமாவில் சாமியார்களைக் கேலி செய்யாத நகைச்சுவை நடிகர்களே இல்லை. சமீபத்தில் விவேக் நடித்த பல்பானந்தா சுவாமிகள் நகைச்சுவை மிகவும் பிரபலமான ஒன்று. சாமியார்களை அம்பலப்படுத்தி எள்ளி நகையாடுகிற திராவிட, பகுத்தறிவு இயக்கங்களின் எழுத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு தனி வரலாறே எழுத முடியும்.


நன்றி:வினவு
சாமியார்கள் அம்பலப்படுவதும்,
அடிவாங்குவதும்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அவ்வப்போது நடப்பதுதான். சாய்பாபா, பிரேமானந்தா, தேவநாதன், கல்கி, இன்னும் பிரபலமடையாத குட்டிச்சாமியார்களின் லீலைகள்….இது தவிர வடநாட்டுச்சாமியார்களின் லீலைகள் என ஏராளமாக அம்பலமாகியிருக்கின்றன. இந்து தவிர இஸ்லாமிய, கிறித்தவ மற்றும் பல மதங்களின் சாமியார்களுக்கும் இதே நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் தொடர்ந்து இது போன்ற சாமியார்களின் பின்னால் ஆசி வாங்க அலைந்து கொண்டு தானிருக்கிறார்கள். இது ஏன் என்கிற கேள்வியை எல்லோருமே எழுப்புகிறார்கள். ஆனால் அதற்கான பதிலைத்தான் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆயினும் இது முக்கியமான ஒரு கேள்விதான்.

மக்கள் சாமியார்களின் பின்னால் ஏன் அலைகிறார்கள்? இதில் “மக்கள்  நோகாமல் சொகுசான வாழ்க்கையை தேடும்” என்கிற சொல் யாரைக் குறிப்பிடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். எந்த மக்கள் நித்யானந்தா போன்றவர்களின் பின்னால் போகிறார்கள்? அன்றாடம்

நோகாமல்வாழ்க்கையைத்தேடும்

உழைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மக்களா? நடுத்தர வர்க்கமா? மேல்தட்டுவர்க்கமா?. நிச்சயமாக அவர்கள், மேல்தட்டு மற்றும் upper middle class எனப்படுகிற மேல்மட்ட நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள்தான் என உறுதியாகக் கூற முடியும்.

வீட்டிற்கு வந்து ஆசி வழங்க ஒரு லட்சம் ரூபாய்: வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்து இரண்டு மணி நேரம் ஆசி வழங்க பதினோரு லட்சம் ரூபாய்: தியான வகுப்புகளுக்கான கட்டணம் மூவாயிரம் ரூபாய்: உறுப்பினர் கட்டணமாக ஆயிரம் ரூபாய்: சிறப்புப் பிரச்னைகளுக்கான சிறப்பு வருகை, பிரசங்கம், மற்றும் ஆசீர்வாதங்களுக்குச் சிறப்புக் கட்டணங்கள்: முப்பத்தி மூன்று நாடுகளில் கிளைகள்: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள்: ஏராளமான தகவல் தொடர்பு வலைப் பின்னல்கள்: மாதந்தோறும் பலகோடி ரூபாய்கள் புழங்குகிற நிர்வாகம்: இடைவிடாமல் உயர்ந்துகொண்டே போகும் தியானபீடத்தின் சொத்துமதிப்பு, இவையெல்லாம் நமக்குக் காட்டுவது என்னவென்றால், நிச்சயமாக உழைத்துச் சாப்பிடும் மக்கள் இவர்களது சீடர்களாக, பக்தர்களாக இல்லை என்பதைத்தான்.

மேல்மட்ட நடுத்தர வர்க்கமாகவும் மேல்தட்டு வர்க்கமாகவும் இருக்கிற இந்தச் சீடர்கள் யார்? இந்தப் பட்டியல் நீளமானது. தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு, ராஜசன்னியாச ஜாதகம் கொண்டவன் என்றும், பனிரெண்டு வயதினிலேயே குண்டலினியை ஏற்றிக் காண்பித்தவன் என்றும், தனது ஆன்மீக வியாபாரத்தைத் துவக்கியவனை உலகம் முழுவதும் பரப்பிவைத்த குமுதம் போன்ற பத்திரிகை முதலாளிகள், இவர்களுடைய நண்பர்களான பிற துறை முதலாளிகள், கருப்புப் பணத்திலேயே உயிர் வாழும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், நடிக, நடிகையர்கள், உயர்மட்ட அரசியல்வாதிகள், போலீசு, இராணுவம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட அரசு அதிகாரிகள். இந்த அதிகாரிகளின் மூலமாக ஆதாயங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தரகர்கள், வியாபாரத்துறையினர், ஒப்பந்தக்காரர்கள்- இவர்களும் அதிகாரிகள் தஞ்சம் புகுகிற சாமியார்களிடம்தான் தஞ்சம் புகுகிறார்கள். இவர்களுடைய எல்லாத் தேவைகளையும், பிரச்னைகளையும் சாமியார்கள் மூலமாகவே அதிகாரிகளிடமிருந்து தீர்த்துக்கொள்கிறார்கள். அம்பானியின் குடும்பச்சண்டை நாறியபோது ஜெயேந்திரன் பஞ்சாயத்து செய்யவில்லையா என்ன?

வரிச்சலுகை பெற, வரிமோசடி செய்ய, வரிமோசடி செய்ததை மறைக்க, லஞ்சம் பெற, லஞ்சம் கொடுக்க, லஞ்சம் கொடுத்ததையும்

சமூகவிரோத கூட்டாளிகளாக

வாங்கியதையும் மறைக்க, அரசு ஒப்பந்தங்களைப் பெற, தொழில் கூட்டணி அமைக்க பாலியல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளில் தோன்றும் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ள, மொத்தத்தில் அரசுக்கு எதிரான, சமூகத்திற்கு எதிரான, சட்ட விரோதக் குற்றங்களை யெல்லாம் செயல்படுத்தவும், மறைத்துக்கொள்ளவும், இவர்கள் சாமியார்களிடமே தஞ்சம் புகுகிறார்கள்.

இப்படியான சமூகக் கிரிமினல் கும்பல்களுக்கு ஒரு இணைப்புத் தளமாகத்தான் இத்தகைய சாமியார்கள் இருக்கிறார்கள். இப்படி இணைப்புத் தளமாக இருப்பதன் மூலம் இந்தக்கிரிமினல் கும்பல்களுக்கான பாதுகாப்பு வளையமாகவும் இந்தச் சாமியார்கள்  சமூகவிரோத கூட்டாளிகள் ஆகிவிடுகிறார்கள். அதுபோலவே இந்தக்கிரிமினல் கும்பல்களின் அதிகார பலத்தைக் கொண்டு தனக்கான பாதுகாப்பு வளையத்தையும் இந்தச் சாமியார்கள உருவாக்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட மோசமான சமூக விரோதக்கும்பல்களின் கூட்டாளியாக இருக்கும் சாமியார்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவது எப்பொதென்றால், பாலியல் ஒழுக்கக்கேடுகள் அம்பலப்படும் போது மட்டும்தான். பாலியல் கேட்டைவிடவும் ஆகக்கேடான சமூகக் கிரிமினல் குற்றவாளிகளின் அடைக்கல கர்த்தாவாகவும், கூட்டாளியாகவும் சாமியார்கள் இருப்பதை யாரும் குற்றமாகக் கருதுவதில்லை.
நடிகை ரஞ்சிதாவுடனான தொடர்பிற்காக அவனைக் கைது செய்ய வேண்டுமென்றால், இந்த சமூக விரோதக் கும்பல்களுடான தொடர்பிற்காக அவனைத் தூக்கில் தான் போடவேண்டும்.

ரியல் எஸ்டேட் திருடன், கந்துவட்டிக் கொள்ளைக்காரன், சட்டவிரோதமாய்ப் பணம் சேர்ப்பவன், சமூக விரோதச் செயல்களைச் செய்து பணம் சேர்ப்பவன், சாதி வெறியன், மதவெறியன், மக்களின் பணத்தைச் சூறையாடும் காண்ட்ராக்டர்கள், அரசை ஏமாற்றும் கருப்புப்பணக்காரன், தொழிலாளிகளை ஏமாற்றும் முதலாளி, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதி, அரசையும் மக்களையும் ஏமாற்றும் அரசு அதிகாரி — இவர்களையெல்லாம் பக்தர்களாகவும், சீடர்களாகவும் வைத்திருக்கிறார்களே என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.

ஓய்வில்லாமல் உடல் உழைத்தும்கூட ஒருநாள் உணவினைமுழுமையாகச் சாப்பிடமுடியாமல் நைந்துபோய் வாழும் சாலையோர உழைப்பாளிகளையெல்லாம் காரிலிருந்து வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே போய், வியர்வையின் கசகசப்பைக்கூட உணராத பணக்காரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஆனந்த வாழ்வை வழங்க ஆசி வழங்குகிறார்களே என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை. ஆளும் வர்க்கத்தால் செயற்கையாக உருவாக்கப்படுகின்ற விலைவாசி உயர்வும், வேலையில்லாத்திண்டாட்டமும் நோய்களும் உழைக்கும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கையில் உழைக்காத சோம்பேறிகளுக்காக ஆனந்தத் தீர்த்தம் வழங்குகிறார்களே என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.

அரசுப் பொது மருத்துவமனைகளிலே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், மருத்துவர்களும், மருத்துவக்கருவிகளும், மருந்தும் இன்றி மடிந்து கொண்டிருக்க, பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் வெறுங்கையால் தலையைத் தொட்டே கேன்சரையும் குணமாக்குகின்றராரே, ஏன் இவர்கள் இதை ஏழைகளுக்குச் செய்யமாட்டேனென்கிறார்கள் என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.

ஒன்றுமில்லா ஏழை மக்களுக்கு இவர் நித்யானந்த ரகசியத்தையும் ஆசியையும் வழங்க மறுக்கிறாரே என்பதற்காக இந்தச் சாமியார்கள் மீது யாரும் கோபம் கொள்வதுமில்லை, குற்றவாளியாகப் பார்ப்பதுமில்லை.

இந்தக் காரணங்களுக்காகவெல்லாம் கோபப்பட்டிருந்தால், படங்களைக் கிழித்து, ஆசிரமங்களை அடித்து நொறுக்கியிருந்தால் இப்படிப்பட்ட சாமியார்களின் பின்னால் ஆசி வாங்க யாருமே அலைந்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் இப்படிப்பட்ட சமியார்களே உருவாகியும் இருக்க மாட்டார்கள்.
ஆனால் அவ்வாறு யாரும் நினைப்பதில்லை. காரணம் அவைகளெல்லாம் குற்றங்கள் என யாரும் இப்போது கருதுவதில்லை. ஆன்மீகம் போதிப்பவனுக்கு அக்கவுண்ட் எதற்கு? துறவிக்குப் பங்களா எதற்கு? சொகுசு வாழ்க்கை எதற்கு? என இவர்கள் சிந்திப்பதேயில்லை. ஏனென்றால் இவர்களின் வாழ்க்கை முறையும், வாழும் விருப்பமுமே அப்படிப்பட்டதுதான். அதனால்தான் மாட்டிக் கொள்ளாத வரைக்கும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள். மாட்டினால் கீழே போட்டு விட்டு ஓடுகிறார்கள். ஒரு சாமியார் அம்பலமானால் இன்னொரு சாமியாரிடம் போவதற்கு இந்த மனோபாவமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
பாலியல் ஒழுங்கீனமில்லாமல் சாமியார்களால் இருக்கவே முடியாது. உயிரினத் தேவைகளில் ஒன்றான பாலியல் என்பதையே ஒழுங்கீனம் என ஆன்மீகப் பிரச்சாரம் என்ற போர்வையில் பொய் பேசுகிற இந்தச் சாமியார்களெல்லோரும் மனித சமூக நாகரிகத்தையே இழிவு செய்கிற குற்றவாளிகள். ஒழுங்கீனம் என்று பிரச்சாரம் செய்வதின் மூலமாக பாலியல் உணர்வுகளைத் தடுத்து விடமுடியுமா?
சாமியார் யாரோடு படுத்துக்கிடந்தார் என்பது அல்ல அளவுகோல். சாமியார் யாரோடெல்லாம் பழகுகிறார், தொடர்பு வைத்திருக்கிறார், என்ன செய்கிறார், என்ன சொல்கிறார்? என்பதுதான் அவன் குற்றவாளியா, இல்லையா என்பதற்கான அளவுகோல். கடவுள் சாராத ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொள்கிற இந்தச் சாமியார்கள் என்ன சொல்லுகிறார்கள்?

நித்யானந்த வாழ்விற்கு துறவறமும், பிரம்மச்சர்யமும் வேண்டுமென்று சொல்கிறார்கள். அப்படியானால் குடும்ப வாழ்க்கையென்ன கொடூரமானதா? அதில் ஆனந்தமில்லையா? எவ்வளவோ துன்பங்கள் துயரங்கள் இருப்பினும் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியைத்தான்  மனிதர்கள் எப்போதுமே விரும்புகிறார்கள்.  குடும்ப வாழ்க்கையை அறியாத,  குடும்ப வாழ்க்கைக்குப் பயப்படுகிற ஒரு சாமியாருக்கு அதன் இன்ப துன்பங்கள் மட்டும் எப்படித்தெரியும்? இவர்களிடம் போய் குடும்ப வாழ்க்கை வாழ்பவர்கள் ஏன் ஆசி வாங்க வேண்டும்? இதையும் யாரும் சிந்திப்பதில்லை.
பிரம்மச்சர்யம் என்பது மோசடித்தனமானது, சிலர் அதை உண்மை என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சரி, நம்பட்டும். ஆனால் ஐந்து லிட்டர் பாலை ஒரு லிட்டராக சுண்டவைத்து அதில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போட்டுக் குடிப்பது, அசல் துபாய் பேரீச்சைகளை தேனில் ஊற வைத்து மென்று தின்பது, (போதுமென்று நினைக்கிறேன்.) இது தவிர, பெண் சிஷ்யைகளோடு பூஜை, யோகா செய்வது, ரஞ்சிதாவின் கையால் வயாகரா சாப்பிடுவது, இப்படி சொகுசாக வாழும் நித்யானந்தா போன்றவர்கள் பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நம்புவது ஏமாளித்தனமில்லையா?  சகல வசதிகளோடும் வாழுகின்ற சாமியார்கள் பிரம்மச்சர்யத்தைப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த மோசடித்தனமில்லையா? ஒரு சாதாரணமான மனிதனாக இருந்தே பிரம்மச்சர்ய பிரச்னையைப் புரிந்துகொள்ள முடிகிறபோது, அதே பிரச்னை சாமியார்களுக்கும் இருக்காதா? யதார்த்த வாழ்விற்குப்

நாய் பிழைப்பு

பொருந்தாத, பொய்யான கருத்துக்களை ஆன்மீகம் எனும் பெயரில் செய்யும் வியாபாரமும், கிரிமினல் பணக்காரர்களோடு கூட்டாளியாக உள்ள குற்றமும் சாமியார்களிடம் பகிரங்கமானதாகவே இருக்கிறது.

சாமியார்கள் அந்தரங்கமாகச் செய்கிற தவறுகளைத்தான் பத்திரிக்கைகள் எழுதுகின்றன, படம் போடுகின்றன ஆனால் பகிரங்கமாகச் செய்கிற குற்றங்களைப் பற்றி எழுதுவதுமில்லை. படம் போடுவதுமில்லை. இவர்களின் பகிரங்க சமூக விரோதச் செயல்களுக்காக எப்போது அம்பலப்படுகிறார்களோ, அப்போதுதான் இவர்களைப்போன்ற கிரிமினல் சாமியார்கள் உருவாவதையும் அவர்கள் பின்னால் சென்று மக்கள் ஏமாறுவதையும் தடுக்க முடியும்.
ஸ்ரீ பரஹம்ச நித்யானந்தா அம்பலமானதால் யாருக்கெல்லாம் லாபம்?
சன்டி.வி, தினகரன், பக்கம் பக்கமாய்க் கலர்ப் படம் போட்டு ஏழுரூபாய் நக்கீரனை முப்பது ரூபாய்க்கு வித்துக் காசு பார்த்த கோபால், இந்த மானங்கெட்டதுக்கு தந்தை பெரியார் விருது கொடுத்திருக்கிறது தமிழக அரசு. தூ!

இன்று நித்யானந்தாவின் ஆபாசம் அம்பலமாகியிருக்கிறது. ஆனால் அவனது  ஆன்மீகம் ஏற்கனவே  அம்பலமாகியிருப்பதை நாம் மக்களிடம் சொல்லியாக வேண்டும்.

குருசாமிமயில்வாகனன்

2 thoughts on “நித்யானந்தா: அம்பலமாகும் ஆன்மீகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s