பசும்பொன் குருபூசை: பகட்டும் பரிதாபமும்

குருபூசை என்ற பெயரில் தேவர் சாதிகும்பல் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்களில் நடத்தும் காலித்தனத்திற்கும், அதனால் அம்மாவட்டங்களின் பொதுமக்கள் படுகின்ற துன்ப, துயரங்களுக்கும் அளவில்லாமல் போய்விட்டது. போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் பிரதான சாலைகள் அனைத்தும் 30.10.09 அன்றும் காலை 06.00மணிமுதல் முற்றாக அடைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்தில் இருந்த பொதுமக்கள் பட்ட சிரமங்கள் சொல்லிமாளாது.
உணவு, தண்ணீர் கிடைக்காமல், குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் துன்பப்படுவதைக் கண்டு மனிதநேயமுள்ள தேவர் சாதியினரே இந்தக் குருபூசைக் கெதிராக கோபப்பட்டனர்.
இவ்வளவுக்குக் காரணம் முதள் நாளே வியாரிகளிடம் போலீசு, நாளைக் கடையை அடைத்துவிடுங்கள் மீறி கடையை திறந்தால் அதனால் ஏற்படும் நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பள்ள உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுக்க முடியாது என மிரட்டியுள்ளது.
யாருக்காக காவல்துறை இருக்கிறது? தங்களுக்கு குடிநீர் கிடைக்காமல், சாலை வசதியில்லாமல், மருத்துவ வசதியில்லாமல் இன்னபிற தேவைகளுக்காக வீதியில் இறங்கி போராடும் மக்களை கண்மூடித்தனமாக அடித்து விரட்டும் போலீசால் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?
போராடும் மக்களை பொதுமக்களளுக்கு இடையுறு செய்வதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளும் போலீசு, தானே போக்குவரத்தைத் தடை செய்து அந்தக் காலிக்கூட்டம் பைக், கார், வேன், லாரி, பேருந்து என போதையில் சாதிவெறிக் கூச்சல்களோடு பவனி வருவதை அனுமதித்து போக்குவரத்திற்குப் பாதை கொடுக்கிறது. சாலையில் போகிற பொதுமக்களை தடியைக் காட்டி மிரட்டி விரட்டும் இந்தக் காவல்துறை காலிகள் மீது எந்த பிரிவில் வழக்குப் போடுவது?

அ.தி.மு.க தேவர் சாதி கட்சி என்று அடையாளம் இருப்பதால் தானும் தேவர் சாதிக் கட்சிதான் என நிறுவ முயலும் கருணாநிதியின் செயலுக்கு போலீசு சிறப்பாக துணை செய்கிறது. இந்தக் காலிக்கூட்டம், வழிநடுக உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் பெண்களை கேலி செய்தும், அடித்தும், வீண் சண்டைக்கு இழுத்தும், சாதி வெறியை துண்டிக் கொள்கின்றனர்.

அவர்களது பிரதான முழக்கங்களும் நமது கேள்விகளும்

1.தேவர் படை பவனி வருது, பள்ளர் படை பதுங்குது.
உசிலம்பட்டி பகுதியில் உள்ள கள்ளர் சாதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் பொய்த்துப் போய், கஞ்சிக்கு வழிதேடி கர்நாடகா, ஆந்திராவிற்கு முருக்கு வியாபாரம் செய்து பிழைக்கப் போகின்றன. இராமநாதபுரம், முதுகுளத்துர், கடலாடி, கமுதி, சாயல்குடி பகுதிகளில் வசிக்கிற ஆப்ப நாட்டு, கொண்டையார் கோட்டை மறவர் பிரிவினர் இதுபோல மதுரை, திருச்சி, சென்னை போன்ற நகர்களில் மூடை துக்கும் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். விவசாயத்தை நசித்த இந்திய அரசின் விவசாயக்கொள்கைக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடமல் எங்கு பவனி போவது?

2. எக்குலமும் வாழட்டும், முக்குலமே ஆளட்டும்:
சாதி,மதம் பாராது சிவகங்கை சீமையை ஆண்டு இந்த மண்ணில் அன்னியன் ஆக்கிரமிக்க அனுமதிக்காமல் தன் குடும்பம் உறவினர்களோடு துக்கிலேறிய மருதிருவர்களை காட்டிக் கொடுத்த விஜயரகுநாத தொண்டைமான் எந்தக்குலம்? அகமுடையார் சாதி பெரியமருது, தேவர் சாதி வேலுநாச்சியாரை திருமணம் செய்து கொண்ட பிரச்சனையை இன்று வரை ஏற்கமறுத்து வண்ணம் காட்டும் மறவர் சாதி எக்குலம். கள்ளரும், அகமுடையாரும் மறவரும் தங்களது வீட்டுப் ஆண்களும், பெண்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் கட்டி வைத்து கொளுத்துவது எக்குலம். முகுகுளத்துர், கீழத்துவல் பகுதியில் மறவர்களுக்குள் புழுக்கை மறவர் என்ற சாதி பிரித்து தாழ்த்தி நடத்தும், நடைமுறையைச் செய்வது எக்குலம். இவைகளுக்கெல்லாம் பதில் கூறாமல் முக்குலமே ஆளட்டும். எனக் கோசம் போடுவது கடையெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா?

3. பனமரத்தில வவ்வாலா? தேவருக்கே சவாலா?
இராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் பார்த்த விவசாயம் செய்த விவசாயிகள் இன்றில்லை. கடும் உழைப்பினால் குறைந்த வசதிகளோடு செய்து வந்த வேளாண் உற்பத்தி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. தன்னுடைய அனைத்து உறவுகளை விட இந்த மண்ணை மிகவும் அதிகமாக நேசித்த உழைக்கும் மக்கள் இந்த மண்ணை விட்டு வெளியேறிய அகதிகளாக வாழும் இந்த அவலநிலைக்குகெதிராக குருபுசையை கொண்டாடுபவர்கள். சவால் விடுவார்களா? காலம் மாறுவதை அது உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தை நெறிக்கும் பரிதாபத்தை சாதியின் பெயரால் பவனி வரும் பகட்டுக் கும்பல் உணர்வது எப்போது?
– நாகராசன்

5 thoughts on “பசும்பொன் குருபூசை

  1. அரவிந்தன் அவர்களே, பொதுவாக அனைத்து தலைவர்களின் பூஜைகளும் தேவர் குருபூஜைபோல் நடப்பதில்லை. இமானுவேல் சேகரன் குருபூஜை ஒரு எதிர் விளைவு. உண்மையிலேயே நீங்கள் சமூக நலம் விரும்பி என்றால் இதைப்பற்றி விரிவாக திறந்த மனதுடன் விமர்சனம் ஒன்றை எழூதுங்களேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s