முல்லைப் பெரியாறு அணையின் தமிழக மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதையும் கேரளாவின் அத்துமீறலையும் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அதனைப்பற்றி ஒரு மீள்பர்வையை சிறிது பார்ப்போம்.

1. இவ்வணை கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது 1985 ஆம் ஆண்டு. அன்றிலிருந்து அணையில் 152 அடிவரை நீர்தேக்கப்பட்டு தமிழக விவசாயிகளுக்குப் பயன்பாட்டுக்கு வந்தது.  84 ஆண்டுகள் 152 அடி நீர்மட்டம் தேக்கப்பட்டு வந்தது.

2. 1976-ல் கேரள அரசு இடுக்கி என்னுமிடத்தில் முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரிய அளவில் மின் உற்பத்தி செய்வதற்காக அணை ஒன்று கட்டியது.  கேரளாவின் புவியியல் அமைப்பு இவ்வாற்றினை விவசாயத்திற்கு பயன்படுத்த ஏற்றதாக இல்லை என்பதால் இவ்வணையால் எவ்வித பயன்பாடும் கேரள விவசாயிகளுக்கு கிடையாது. மின் உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாகக் கட்டப்பட்ட அணை இடுக்கி அணை. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காகக் கட்டப்பட்ட அணை. மின் உற்பத்திக்குப் பிறகு இவ்வாற்றின் நீர் வீணே கடலில் கலக்கும். முல்லைப் பெரியாறு அணையைத் தாண்டி இவ்வணைக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. அதனால் கேரள அரசியல்வாதிகள் சதி வேலையில் இறங்கினர்.

3. 16-10-1979 அன்று மலையாள மனோரமா என்ற பத்திரிக்கை “அணை பலவீனம் அடைந்து விட்டது, அது எந்த நேரமும் உடையலாம்,  அதன் ஆற்றோரத்தில் உள்ள மக்கள் அழிய நேரிடும்” என்ற பயபீதியை பரப்பியது. இதற்கு அப்பத்திரிக்கை அச்சமயம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பயன்படுத்திக்கொண்டது.

4. மலையாள மனோரமா மூலம் வதந்தியைப் பரப்பிய கேரள அரசும் அரசியல் வாதிகளும் முதல் கட்டமாக மத்திய அரசின் நீர்வள ஆணையத்தை வலியுறுத்தினர். அப்பொழுது மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸ் என்பவர் அணையைப் பார்வையிட்டு “அணை பாதுகாப்பாக உள்ளது” என்று அறிவித்தார். ஆனால் அதன் பிறகு கேரளா சென்றவர் பல்டி அடித்து அணையைப் பலப்படுத்த வேண்டும்; அதுவரை 136 அடிவரை நீரைத் தேக்கிக்கொள்ள வேண்டும் என்று தன்னிச்சையாக அறிவித்தார். இவர்களின் சதிக்கு உட்பட்டு அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் நீர் தேக்க அளவை 136 அடியாகக் குறைத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்து கேரள அரசுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அதன் படி அணையில் சில பழுதுபார்ப்புப் பணிகள் செய்துவிட்டு 145 அடிவரை நீரைத்தேக்கிக் கொள்ளலாம். மேலும் பலப்படுத்துவது, அதன் பிறகு 152 அடிவரை நீரைத்தேக்கிக்கொள்வது என்று முடிவானது.

5. பலப்படுத்தும் பணி 1981 –ல் தொடங்கப்பட்டு 1984-ல் முடிவடைந்தது. ஆனாலும் ஒப்பந்தத்தை கேரள அரசு கழிப்பரைக் காகிதமாக்கிவிட்டு “நீர் மட்டத்தை 136 அடி குறைத்தது குறைத்ததுதான். உயர்த்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று சண்டித்தனம் செய்தது.  அதுமட்டுமல்லாது முல்லைப் பெரியாறு அணையின் துணை அணையான ‘பேபி டேம்’ என்ற சிறு அணையைப் பலப்படுத்தும் பணி தொடங்கப்பட்ட போது கேரள வனத்துறையினரைக் கொண்டு தமிழக பொதுப் பணித்துறையினரை திட்டமிட்ட தாக்குதல்கள் தொடுத்து தடுத்தது. பல பொய் வழக்குளைப் போட்டது.

6. இதற்கிடையே தமிழக அரசு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தமக்கிருந்த மீன் பிடிக்கும் உரிமையையும் உல்லாச சுற்றுலாப் படகு நிலையத்தின் உரிமையையும் கேரள அரசுக்கு தாரை வார்த்தது. அதன் உச்சக்கட்டமாக அணையின் பாதுகாப்புப் பணியையும் 1980-ல் அப்பொழுதிருந்த எம்.ஜி.ஆர் அரசு கேரள அரசிடம் ஒப்படைந்தார்.

7. தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தெடுத்தது. உடனே, கேரள அரசும் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதனால் இவ்விரு வழக்குகளும் உச்ச நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. பேச்சு வாரத்தை, வல்லுனர் குழு ஆய்வு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக விவசாயிகளின் உரிமையை சவ்வாக இழு இழு என்று இழுத்து ஒருவழியாக 27-02-2006 அன்று உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன் சாரம்:

      அணை பாதுகாப்பாகவே உள்ளது. அணையில் உடனடியாக 142 அடிவரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம். மேலும் மீதியுள்ள பேபிடேம் பலப்படுத்தும் பணிகள் முடிவடைந்ததும் 152 அடிவரை நீரைத்தேக்கிக் கொள்ளலாம். கேரள அரசு எந்தவகையிலும் பலப்படுத்தும் பணி உட்பட எந்தப் பணிகளையும் தடுக்கக் கூடாது.

8. 18-03-2006 அன்று கேரள சட்டமன்றத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, 2003ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நீர்பாசன சட்ட மசோதாவில் திருத்தம் செய்து அணை பாதுகாப்பு ஆணையம் என்ற ஒன்றை அமைத்தது. அதன்படி கேரள எல்லைக்குள் இருக்கும் அனைத்து ஆறுகளுக்கும் அணைகளுக்கும் இவ்வாணையம் விதிக்கும் கட்டுப்பாட்டுக்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சட்டப்பதிவு செய்தது. இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் கழிப்பறை காகிதமாக்கியது கேரள அரசு. இதற்கு கேரளத்திலுள்ள எந்த கட்சியும் வேறுபாடில்லாமல் ஆதரவளித்தன.

      உச்சநீதிமன்றத்திற்கு இந்த விவகாரர் மீண்டும் கொண்டு சென்றபோது தன்னுடை பழைய தீர்ப்பையே வாசித்துவிட்டு “பேசித்தீர்துக்கொள்ளுங்கள்” என்று அதிகாரமற்ற அமைப்பாக கீழே விழுந்தது. மீசையில் மண் ஒட்டியதா இல்லையா என்று இனிமேல் தான் அது சொல்லனும்.

      இடுக்கி அணையினால் எவ்வகையிலும் இரு மாநில விவசாயிகளுக்கும் பலனில்லை. அது வெறும் நுகர்வோர் கலாச்சாரத்திற்கான பண்ட உற்பத்தியை மையப்படுத்தி, ஏகாதிபத்திய முதாலளிகளின் மின் தேவைக்காக உருவாக்கபட்டதே. ஆனால் பெரியாறு அணயால் கேரள மக்களின் வழ்வாதாரம் பறிக்கப்படுவது போல் ஒரு மாயையை உருவாக்கி இந்த ஆளும் வர்க்க அடிவருடி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் வதந்திகளை பரப்புகின்றனர். உழைக்கும் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி மோதிக்கொள்ளச் செய்கின்றனர். கேரளாவிலிருந்து 500க்கும் மேற்பட்ட உழைப்பாளிகளை அடித்து துரத்திய சம்பவம் இவர்களின் ஓநாய் வெறிக்கு ஒரு அத்தாட்சி.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

      சட்டம், புனிதம், நேர்மை, மனசாட்சி என்று அடுக்கிக்கொண்டே போகப்படும் ஒழுக்கங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை. நாமும் சட்டவாதம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இனி நாமும் சட்டமீறலையே நமது போராட்டமாக மாற்ற வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்த தமிழக அரசை நிர்பந்திக்கவேண்டும். அதனை மறுக்கும்போது தமிழக அரசை பதவியிறக்கம் செய்ய போராட வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல் எம.எல்.ஏ., எம.பிக்கள், அமைச்சரகள் அனைவரையும் போராட்டக்கலத்திற்குள் இழுக்கவேண்டும். மறுப்பவர்களை பதவி விலகச் செய்யவேண்டும். நாமே தன்னிச்சையாக கேரளாவிற்கான பொருளாதார தடையை நடைமுறைப் படுத்த வேண்டும். இதனால் இழப்பு ஏற்படும் என்று துரோகமிழைக்கும் வர்த்தக சூதாடிகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். இது ஒன்றே தீர்விற்கான வழியாகும்.

 -சாகித்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s