• எமது வெளியீடுகள்

  • பிஜேவின் கனவு

  • ஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய

  • வெளியீடு 2

  • Blog Stats

    • 88,138 பார்வைகள்

மே நாள் சூளுரை ஏற்போம்


இன்று மே தினத்திற்கு 125 ஆம் ஆண்டு.

“மே தினம்” தொழிலாளர்களின் எழுச்சி நாளில் சூளுரை ஏற்ப்போம் என்று தலைப்பு இருப்பதே சரியானதாகும். எனது தவறுக்கு சுய விமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். இதனை செங்கொடி வலைத்தளத்தில் சுட்டிக்காட்டிய தோழர். தமிழ் அவர்களுக்கு நன்றி.
மேலும், தோழர் காதர் அவர்களின் கருத்தும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

”ஹெமர்கட் சதுக்க துக்கத்தை மறப்பவன் துரோகி !!
ஹெமர்க்கெட்டில் கொல்லப்பட்ட தோழர்களை நினைவு கூர்வதே மே தினமாகும்.
இது ஒரு துக்க மற்றும் போராட்ட நினைவு நாளாகும். ஆனால் 8 மணி நேர வேலையே பெற்று தந்ததால் கொண்டாட்டமும் ஆகும்”

உண்மையான! விடுதலை கிடைத்தப் பிறகு இது கொண்டாட்ட நாளாக மாறும். அது வரை அந்த தியாகத்தை நெஞ்சிலேந்தி அவர்கள் வழிநடப்போம் என்று உறுதி ஏற்கும் எழுச்சிநாள்தான் “மே தின விழா”  (மே தினம் என்ற தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.)

அடிமைகளின் எழுச்சி! ரோமானிய கனவான்கள், பிரபுக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ரோமானியப் பேரரசு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகளை சிலுவைகளில் அறைந்து, உயிரோடு சித்திரைவதை செய்து, நரமாமிசத்தினை தின்று தீர்த்தாலும் நிம்மதியாக தூங்கவில்லை. நித்தம் கனவில் அடிமைகளின் உரமேறிய கைகள். எத்தனை நாளைக்குத்தான் செத்து செத்து பிழைப்பது ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த சொர்ணபுரியின் கனவான்கள் அதை எளிதில் இழக்க விரும்புவார்களா? ஆனால் காலம் அதை தொடராக அனுமதித்துதான் விடுமா? ஆண்டைகள் விரும்பித்தான் ஆகவேண்டும். அடிமைகள்! இனியும் அவர்களை அடிமைகளாக இருத்துவது தமக்குத்தாமே தோண்டிக் கொள்ளும் சவக்குழிகள் என்பதை உணர்ந்தனர். எழுச்சியுற்ற அடிமைகள் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர். தமது உழைப்பை கூலிக்கு விற்று வயிறு வளர்த்தாலும் இன்று அவர்கள் சுதந்திரமானவர்கள். ஓரளவு தமது விருப்பத்தின் அடிப்படையில் தமது வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரமானவர்கள். உழைப்பிற்கு, உற்பத்திக்கு கூலி கொடுக்கவேண்டிய நிலையானாலும் “உயிர் பயமற்ற” நிம்மதி கனவான்களை முதலாளியாக மாற்றியது. கிடைப்பது சொற்பமே என்றாலும் சுதந்திரத்தை சுவாசித்த அடிமைகள் முதளாலிகளின் பக்கம் திரண்டனர். எச்சசொச்ச நில பிரபுக்களும், அவர்களின் மன்னர்களும் முதலாளித்துவ மாற்றத்தால் தாம் இற்று விழுந்து கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் திணறித் தவித்தனர். காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றுவது முடியாத காரியமல்லவா! உலகை உருவாக்கும் உற்பத்தியின், உழைப்பின் மூலமான அந்த உழைப்பாளி இன்று முதலாளிகள் பக்கம். மன்னரகள் முதலாளிகளின் அரசாங்கங்களாக மாறினர். மாறாதவர்கள் முதலாளிகளின் படைகளால் துடைத்தெரியப்பட்டனர். அதுபோல மதங்களின் மூடநம்பிக்கைகளும் தகர்க்கப்பட்டு அறிவியல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 1000, 1500 ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ எழுச்சிகள் இந்தியா போன்ற கீழைநாடுகளில் 200, 300 ஆண்டுகளுக்கு முனபுதான் தலைகாட்டத் தொடங்கியது. இங்கு அடிமைகளின், குடியானவர்களின் எழுச்சிகூட ஏற்படவில்லைதான். மேற்கத்திய முதலாளிகள், தங்களின் சந்தைக்கான தேடலில் உலகையே தமது ஆளுகைக்கு கீழ் அடிபணியச் செய்ய ஆசைப்பட்டது, கீழை நாடுகளிலும் முதலாளித்துவத்தை கொண்டுவந்தது. அதன் வளர்ச்சி தரகு முதலாளிகளையும் ஏகாதியபத்தியங்களையும் உருவாக்கியது. கூடவே 500, 1000 ஆண்டுகளுக்குப் பின் தங்கியிருந் கீழை நாடுகளையும் 20ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகில் இணையாக நிறுத்தியது. இது முதலாளிதுவத்தின் மிகப் பெரும் சாதனைதான். இவ்வுலகம் தங்களின் சொர்க்க பூமியாக காலங்காலத்திற்கும் நிலைக்கும் என்பது முதலாளிகளின் கனவு. முதலாளித்துவ புரட்சியின் வளர்ச்சியினூடாக எகிரிப்பாய்ந்த அறிவியல் வளரச்சி, எந்திரங்களின் வரவு, தவிர்க்க இயலாத முதலாளித்துவத்தின் பொருளாதார விதி, தன்னை வாழவைத்த, தன்னை நம்பிவந்த பாட்டாளி வர்க்கத்தை கழித்துக்கட்டத் தொடங்கியது. வேலையில்லா பட்டாளத்தை உருவாக்கியது. முதலாளித்துவத்தின் தோற்றம் முதல், தொழிலாளிகளை 16 மணிநேரம் கசக்கிப் பிழிந்தனர். அதற்கு எதிரான போராட்டங்களில் தன்னுயிரை தியாகம் செய்த அமெரிக்க பாட்டாளிகள் தமது வாரிசுகளுக்கு 8 மணி நேரவேலையை பரிசாகத் தந்தனர். இன்று அதற்கு 125 ஆம் ஆண்டு. இந்த நூற்றாண்டில், உலகை உருவாக்கும் தொழிலாளர்களின் எழுச்சி குறிப்பாக பிரான்ஸ், ருஷ்யா, போன்ற நாடுகளில் நடந்த எழுச்சிகள் அக் கனவையும் கலைக்கத் தொடங்கியது. அலறினர். சதி செய்தனர். மதங்கள் மற்றும் நிலபிரபுக்களுடனும் கைகோர்த்துக்கொண்டு பிற்போக்காளர்களின் பிரதிநியாக மாறினர். அந்தோ பரிதாபம்! மதங்களுக்கும் சதிகளுக்கும் பலியானான் தொழிலாளி. 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யமாட்டேன் என்று போராடிய தொழிலாளி, இன்று “எவ்வளவு நேரவேண்டுமானாலும் வேலை செய்கிறேன். வேலை கொடு. கூலியைக்கூட உன் விருப்பம்போல் கொடு” என்று முதாளிகளிடம் மண்டியிடும் அவலங்கள். கணிணித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் இதை நிறையவே காண்கிறோம். ஏன் இந்த அவலம்? அன்று அவர்கள் கல்வியறிவற்ற அடிமைகள். ஆனால் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதை விரும்பினார்கள். இன்று இவர்கள் சுதந்திரமானவர்கள். கல்வியறிவில் உச்சானிக் கொம்புகள். ஆனால் எதையும் நுகரத்துடிக்கும் மண்புழுக்கள். இன்றைய இவர்களின் இந்த வாழ்க்கை பலரின் தியாகத்தில் விளைந்த கனிகள் என்பதை அறிந்தும் சமூக அக்கறையற்ற சுயநலமிகள். தான், தான்மட்டும், தனது திறமை என்ற மாயையில் வாழும் இவர்கள் அந்த மாயையிலிருந்தும், அதனை போதிக்கும் மதங்களின் கோரப் பிடியிலிருந்தும் விடுபடாதவரை, விடுவிக்கப்படாதவரை தொழிலாளி வரக்கத்தின் விடுதலை என்பது கானல்நீர்தான். மண்ணை தனியுடமையாக்கினோம். நிலத்தை இழந்தோம். கடலையும், நீரையும்கூட தனியுடமையாக்க துணை போனோம். அதனையும் இழந்துகொண்டிருக்கிறோம். காற்றையும் தனியுடமையாக்கி காசுக்கு விற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதனால்…

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருவோம் !

புரட்சி செய்வோம்.!

மடமையில் ஆழ்த்தும் மதங்களை ஒழிப்போம்!

இருப்பது அனைத்தையும் பொதுவிலாக்குவோம் !

எல்லாமும் எல்லோருக்கும் என்ற புது உலகைப் படைப்போம் !

—சாகித்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: